PDA

View Full Version : செம்மொழித் தமிழ் உயராய்வு மையம் -



மீனாகுமார்
10-12-2007, 04:54 PM
இச்சுட்டியை ஏற்கனவே அறிவீரானால் மன்னிக்கவும்.

செம்மொழித் தமிழ் உயராய்வு மையம் -

http://www.ciil-classicaltamil.org/default.html

என் கருத்து- இவர்களும், அரசியலில் உள்ளவர்களும் சேர்ந்து ஆற்ற வேண்டிய கடமைகள் எண்ணிலடங்காமல் உள்ளன. அவையெல்லாம் செய்யாமல் தம் பெருமைக்காக மட்டும் புகைப்படங்களையும் விருதுகளையும் போட்டுக்கொண்டு உறங்குகிறது இத்தளம்.

Project Madurai உருவாக்கிய நூல்கள் போன்றும், தமிழ் வழி உயர்கல்வி என்று எவ்வளவோ செய்ய வேண்டியது உள்ளது...... விழுமின்.. எழுமின்...

அறிஞர்
10-12-2007, 10:18 PM
மீனாக்குமாரின் ஆதங்கம் புரிகிறது...

தமிழை செம்மொழியாக்கினோம் என அரசியல்வாதிகள் பெருமைப்பட்டுக் கொண்டனர்.

அதன் பின் என்ன செய்தார்கள், செய்கிறார்கள் என யாருக்கும் தெரியவில்லை...

தாங்கள் சொல்வது... தமிழ் அறிஞர்களும், அரசியலில் உள்ளவர்களும் இணைந்து செயல்படவேண்டும்... ஆனால் அக்காலம் எவ்வளவு தொலைவில் இருக்கிறது என்பதை காலம் தான் சொல்லவேண்டும்.

ஓவியன்
11-12-2007, 02:01 AM
உண்மைதான் செம்மொழித் தமிழ் உயராய்வு மையத் தளமே ஆங்கிலத்தில் இருக்கிறதே, :frown:
ஆங்கிலம் முக்கியம் தான்....
அதற்காக இப்படியா.......?!