PDA

View Full Version : திக் திக் இரவு



மதி
10-12-2007, 12:32 PM
ஏன் தான் இப்படி நடக்கிறதென்று தெரியவில்லை. உங்களில் பலருக்கு இந்நேரம் தெரிந்திருக்கலாம். நேற்றிரவு நான் "கல்லூரி" படம் பார்த்தேன். ஆனால் அதன்பின் நடந்த சம்பவங்கள் அப்பப்பா...

அதிசயமாய் நேற்று வீட்டில் ஒருவனைத் தவிர எல்லோரும் இருந்தோம். வீட்டிலே சமைத்து சாப்பிவோமென்று 2 மணிக்கு மேல சமைக்க ஆரம்பித்து எல்லோரும் குளித்து சாப்பிட உட்கார 4 மணிக்கு மேலாச்சு. டி.வியில் நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டே நேரத்தை ஓட்டிக்கொண்டிருந்தோம். அப்போது ஒருவன் தூங்க ஆரம்பித்தான். நமக்கு தான் யார் தூங்கினாலும் புடிக்காதே?

"டேய்..எந்திரிடா. எங்கியாச்சும் வாக்கிங் போலாம்"

"டேய் இப்போ தான் தூங்க போறேன். நானே என்னிக்கோ தான் சரியா தூங்கறேன். இப்ப போய்..."

"விளக்கு வைக்கிற நேரத்துல என்ன தூக்கம்.. எந்திரி போலாம்.."

வேண்டாவெறுப்பா எழுந்தான். ஒருவழியா எல்லோரையும் உசுப்பேத்தி கிளம்ப வச்சு ஃபோரம் மாலுக்கு போவதாய் முடிவாயிற்று. நண்பனை பார்க்க சென்றிருந்த இன்னொரு நண்பனும் போன் பண்ணினான். அவனை ஃபோரம் மாலில் சந்திப்பதாய் முடிவாயிற்று.

கிளம்பும் முன் சட்டைக்கு சண்டை போட்டு இரண்டு பாட்டுக்கு குத்தாட்டம் போட்டுட்டு மேக்கப் எல்லாம் பண்ணி கிளம்பியாச்சு.

நண்பனை டிரான்சிட்டில் சந்திப்பதாய் சொல்லி அங்கு சென்றோம். மேலே ஏறிக் கொண்டிருக்கும் போது அங்கு தொங்கிக் கொண்டிருந்த போஸ்டர்களை பார்த்தோம். எனக்கும் பார்த்திபனுக்கும் ஒரு ஐடியா. 'ஏதாவது படத்துக்கு போனால் என்ன?'

டிக்கெட் கிடைக்கிறதா என்று பார்த்துவருவதாய் சொல்லி ஓடோடி சென்று டிக்கெட் வாங்கினோம். ஞாயிறு இரவென்பதால் டிக்கெட் சுலபமாக கிடைத்தது. அப்போது தெரியவில்லை இது சொந்த செலவில் சூன்யம் என்று.

---தொடரும் (கொஞ்சம் மூச்சு வாங்கிக்கறேன்)

சிவா.ஜி
10-12-2007, 12:55 PM
நேத்துதான் ஒரு படம் பாத்தீங்க அதுக்குள்ள இன்னொன்னா......
அதுசரி...இப்ப எந்த சூன்யத்தை சொந்த செலவுல வெச்சுக்கிட்டீங்க மதி?
சீக்கிரம் சொல்லுங்க...(யாராவது மாட்டிக்கிட்டு முழிக்கறதைப் பாக்கறதுக்கு என்னா ஆர்வம்ப்பா)

அமரன்
10-12-2007, 01:10 PM
அப்புறம்.. என்னாச்சு?:mad::mad:
(திக் திக் இரவுக்கு இப்படித்தான் உணர்ச்சியை காட்டவேண்டுமாம். திரைப்படங்கள் பாடம் சொல்லின)

மதி
10-12-2007, 01:17 PM
டிக்கெட் வாங்கியது மத்த மூணு பேருக்கும் தெரிய வேண்டாமென்று எண்ணி அமைதியாய் சென்று டிக்கெட் கிடைக்கவில்லை என்றோம். அப்போது தான் மருது குண்டை தூக்கி போட்டான்.

"டேய் நான் ஏதும் சாப்பிடலை. வீட்டுக்கு போய் யோகா முடிச்சுட்டு தான் சாப்பிடுவேன்"

இனியும் மறைச்சு புண்ணியமில்லை என்று டிக்கெட் எடுத்த விவரத்தை சொன்னோம்.

"சரி. அப்போ நீங்க சாப்பிடுங்க. நான் வேணா வீட்டுக்கு போய்ட்டு பத்து மணிக்கு வந்துடறேன்"

"என்னவோ பண்ணு"

மத்த எல்லோரும் போய் ஆளாளுக்கு வேண்டியதை வாங்கிட்டு வந்தோம். என் தம்பியின் பிறந்தநாள் ட்ரீட் என்று அனைவரும் அனத்தியதால் நானே அழவேண்டியதா போச்சு. சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது மருதுவிடமிருந்து போன்.

வழக்கம் போல தான். ஆர்வக் கோளாறில் வீட்டு சாவி எடுத்துட்டு போக மறந்துட்டான். கணேஷ் போய் வருவதாய் கூறி சென்றான். அவனிடம் ரெண்டு டிக்கெட்களையும் குடுத்து அனுப்பிட்டோம். அவங்களுக்காக யாராவது ஒருத்தன் ஏன் காத்திருக்கணும்.

அதுக்குள்ள வீட்டுக்கு பேசின விஜய் படத்தோட கிளைமாக்ஸை தெரிஞ்சிகிட்டு சொல்லிட்டான். அவனை அடிக்காத குறை.

வழக்கத்துக்கு மாறா மருதுவும் என் தம்பியும் ஒன்பதே முக்காலுக்கே வந்துட்டாங்க. அதுவும் என் வண்டியில். மருது மட்டும் சாப்பிடலை. உள்ளே போய் ஏதாவது வாங்கிக்கலாம்னு சொல்லி சமாதானப் படுத்தி தியேட்டர் உள்ளே சென்று கார்டை நீட்டினால்.

"கார்ட் நாட் அக்ஸெப்டெட் சார்"

அடப்பாவத்தே.. டிக்கெட்டுக்கும் சாப்பாட்டிற்கும் எல்லோரிடம் இருந்த பணம் போயிருந்தது. மிச்சம் இருந்த பணத்தையெல்லாம் திரட்டி அவனுக்கு வாங்கி கொடுத்தோம்.

படம் பார்த்தாயிற்று. (பார்க்க கல்லூரி - விமர்சனம்)

சுத்தமாய் தூக்கம் கலைந்து நான், பார்த்தி, விஜய் மூவரும் நடக்க ஆரம்பித்தோம். மடிவாலாவில் தான் வீடு. படத்தைப் பற்றி எங்கள் பார்வைகளையும், விமர்சனங்களையும் பேசிக்கொண்டு சரிவாய் இருந்த அந்த ரோட்டில் நடக்க ஆரம்பித்தோம். கொஞ்சம் இருட்டாயிருந்தாலும் அவ்வப்போது கார்கள் சென்று வந்துக் கொண்டிருக்கும் சாலை அது. மேலும் பேச்சு சுவாரஸ்யத்தில் எதைப் பற்றியும் கவலைப்படாமல் நடந்து கொண்டிருந்தோம். வீட்டை நெருங்கும் தருணத்தில் தான் அந்த கார் கண்களுக்குத் தென்பட்டது. அதில்....

----தொடரும் (இன்னிக்குள்ள முடிச்சுடறேன்)

மதி
10-12-2007, 01:18 PM
அப்புறம்.. என்னாச்சு?:mad::mad:
(திக் திக் இரவுக்கு இப்படித்தான் உணர்ச்சியை காட்டவேண்டுமாம். திரைப்படங்கள் பாடம் சொல்லின)

அன்பு...
எப்படி பில்டப் குடுப்பதென்று முயற்சி செய்து பாக்கிறேன்.. :D:D:D:D

மலர்
10-12-2007, 01:45 PM
அப்புறம்.. என்னாச்சு?:mad::mad:



அன்பு...
எப்படி பில்டப் குடுப்பதென்று முயற்சி செய்து பாக்கிறேன்.. :D:D:D:D

ஆகா ...
மதி என்னாச்சி உங்களுக்கு...
உங்களிடம் சொன்னது அன்பு இல்லை அமரு..

மதி
10-12-2007, 03:09 PM
ஆகா ...
மதி என்னாச்சி உங்களுக்கு...
உங்களிடம் சொன்னது அன்பு இல்லை அமரு..
ஒன்னுமில்லை..
இங்க ஆபிஸ்ல பேசிக்கிட்டே தப்பா டைப் பண்ணிட்டேன்..

சரி.. ரொம்ப நேரமாச்சு.. மீதிய நாளைக்கு சொல்றேன்.. :eek::eek:

ஷீ-நிசி
10-12-2007, 04:01 PM
சீக்கிரம் கிளைமாக்ஸுக்கு வாங்கப்பு!

பூமகள்
10-12-2007, 04:33 PM
கல்லூரி படத்துக்கு போகையிலேயே இத்தனை அட்டகாசமா??
இதை முதலில் சொல்லாம... படத்தினை விட சுவாரஸ்யமா இருக்கே மதி அண்ணா!!!
அப்புறம்.. அந்த காரில் யார் இருந்தா?? சொல்லவே இல்ல...!!
சீக்கிரமா சொல்லுங்க..!!
பூவு வெயிட்டிங். :)

அன்புரசிகன்
10-12-2007, 05:37 PM
என்னமோ ஆகப்போகிறது என்று மட்டும் புரிகிறது...........

மலர்
11-12-2007, 01:07 AM
வீட்டை நெருங்கும் தருணத்தில் தான் அந்த கார் கண்களுக்குத் தென்பட்டது. அதில்....
----தொடரும் (இன்னிக்குள்ள முடிச்சுடறேன்)
முடிக்கலைன்னா... நாங்க முடிச்சிருவோம்..
கதையை சொன்னேன்ப்பா...:D:D

அதில்...
என்னாச்சி..
அந்த காருக்குள்ள யாருமே இல்லையா...??:eek::eek:

மதி
11-12-2007, 02:48 AM
ஆபிஸிக்கு போய் மீதிய எழுதறேன்..

யவனிகா
11-12-2007, 03:05 AM
முடிக்கலைன்னா... நாங்க முடிச்சிருவோம்..
கதையை சொன்னேன்ப்பா...:D:D


கரீட்டா சொன்ன தங்காச்சி...சமயத்துக்கு நீ கூட ஷோக்காப் பேசறியே....

பூமகள்
11-12-2007, 06:23 AM
ஆபிஸிக்கு போய் மீதிய எழுதறேன்..
ஓ.... அப்போ ஆபிஸ் வேலை சைடில் நடக்குதோ..!:rolleyes: இது தான் மெயினா நடக்குறாப்ல இருக்கே மதி அண்ணா??:aetsch013:

எப்படியோ எங்களுக்கு சுவையான பதிவு கிடைத்தால் சரி தான்..!:icon_b:

மதி
11-12-2007, 08:30 AM
அது ஒரு சின்ன ஹோட்டல். இரவு நெடு நேரமாயிருந்ததால் பூட்டியிருந்தது. அதற்கு

முன் ஒரு கார். வெள்ளஒ நிறம். ஓரமாய் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. விளக்கு

அனைத்தும் அணைக்கப்பட்டு இருட்டாயிருந்தது. அதன் வெளியே ஒருவன்

நின்றிருந்தான். அரைக்கால் டிரவுசர். டி-சர்ட். அவனைத் தாண்டி நான் போய்விட்டேன்.

யாரோ கூப்பிட்ட மாதிரி இருந்ததால் சட்டென திரும்பிப் பார்த்தேன். அவன் தான்.

பின்னால் வந்த பார்த்தி நின்றிருந்தான்.

அவன் பேச ஆரம்பித்தான் ஆங்கிலத்தில்.
"என்கிட்ட 60-70 ரூபாய் தான் இருக்கு. பக்கத்தில இருக்கற பெட்ரோல் பங்க் வரைக்கும் போக பெட்ரோல் இருக்கு.."

என்ன சொல்ல வர்றானே புரியல. பார்த்திகிட்ட நான்,
"என்னடா சொல்றான்?"

"தெரியலடா.."

அப்போது தான் கவனித்தேன். அந்த கார்க்கு சற்று தள்ளி இன்னொரு கார் இருட்டில் நின்றிருந்தது. அதில் டிரைவர் சீட்டில் ஒரு உருவம் உட்கார்ந்திருந்தது. எல்லா க்ரைம் நாவல்லேயும் வர்ற மாதிரி நடுமுதுகில் சில்லிட்டது. கொஞ்சம் நேரத்துக்கு இதுவரை படிச்ச க்ரைம் நாவல் கதைகளும் இமெயிலில் வந்த ஃபார்வேர்ட் மெயில்களும் கண் முன்னால் ஓடியது. இதற்கிடையில் பார்த்தி காரின் அந்தப் புறம் நின்றிருந்தான். விஜய் காரின் முன்னால். நான் காரின் வலப்புறம். பரவலாய் நின்றிருந்தோம். அப்போது அவன்,

"கார் ஸ்டார்ட் ஆக மாட்டேங்குது. கொஞ்சம் தள்ளி விடறீங்களா?"

இப்போது நன்றாய் புரிந்தது. ஆள் செம போதையில் இருக்கான். தள்ளாடிக்கிட்டே இருந்தான்.

"சரி... தள்ளிவிடறோம். கார ஸ்டார்ட் பண்ணுங்க.."

அந்த நேரம் எதிர் திசையில் இருந்து ஒரு மஞ்சள் கலர் கால் டாக்ஸி வந்தது. எங்கள் அருகில் வந்தவுடன் கொஞ்சம் நிதானித்து பின்னாடி இருந்த காரின் பக்கத்தில் நின்றது. அதில் இருந்து இரண்டு மூன்று பேர் தட தடவென்று இறங்கினர். மனசுக்குள்ளே பக்..பக்..

--- தொடரும்.. ( வேலை செய்ய சொல்லி மனித உரிமை மீறல் நடப்பதால் சாயந்திரம் தொடருகிறேன்)

அமரன்
11-12-2007, 08:33 AM
ம்கூம்.... நல்லாக் கிளப்புறாங்கப்பா (பீதியை)எதிர்பார்ப்பை..!

சிவா.ஜி
11-12-2007, 08:35 AM
அடப் பாவி..வேலை செய்யறதே மனித உரிமை மீறலா.....நல்லாருக்குப்பா...சம்பவத்தைச் சொன்னேன்.....வேலையை முடிச்சிட்டு சட்டு புட்டுன்னு வாங்க மதி.

அன்புரசிகன்
11-12-2007, 08:42 AM
நல்லா மீறினாங்கள் உங்க உரிமைய.... திகில் கதை பொல கொண்டுபோறீங்க...

மதி
11-12-2007, 08:51 AM
அடப் பாவி..வேலை செய்யறதே மனித உரிமை மீறலா.....நல்லாருக்குப்பா...சம்பவத்தைச் சொன்னேன்.....வேலையை முடிச்சிட்டு சட்டு புட்டுன்னு வாங்க மதி.
என்ன பண்றது வாங்குற சம்பளதுக்கு வேலை பார்க்க சொல்லி ஒரே அம்(ன்)புத் தொல்லை..

தாமரை
11-12-2007, 08:55 AM
ஆயிரக்கணக்கான பேர் உங்களை குறிவச்சு ஆப்படிக்க அலையறதாக் கேள்வி.. ஜாக்கிரதையாவே இருங்க மதி,,

மதி
11-12-2007, 09:06 AM
அவர்கள் கையில் பெட்ரோல் கேன். இறங்கி நேரே பின்னாடி இருந்த காருக்கு அருகில் வந்தனர். இதயத் துடிப்பு கன்னாபின்னாவென எகிறிக் கொண்டிருந்தது. மூவரும் பார்த்தோம். ஏதாவது நடந்தால் ஓட முடியுமான்னு யோசிக்க ஆரம்பிச்சுட்டேன். 'எனக்கே கால் இப்போ தான் சரியாயிருக்கு. இதுல ஓட முடியுமா?'

அவர்களுள் என்னவோ பேசிக்கொண்டனர். இந்த கார்காரனைத் திரும்பிப் பார்த்தால் இவன் என்ன பண்றானே தெரியல. எடுத்து வந்திருந்த பெட்ரோலை பின்னாடி இருந்த காரில் நிரப்பினர். சற்று நேரத்தில் அந்த கால் டாக்ஸி புறப்பட்டது. மனம் சற்று நிம்மதியானது. பின் இருந்த காரில் இருந்தவன் காரை ஸ்டார்ட் பண்ணி மெதுவாக கிளம்பினான். எங்களைக் கடக்கும் போது வித்தியாசமாய் ஒரு பார்வை வீசி சென்றான்.

'அப்பாடா.. காரில் பெட்ரோல் தீர்ந்து போய் தான் காருக்குள்ளே இருந்தானா? அநேகமா எங்களைப் பார்த்து பயந்து போய் காருக்குள்ளே உட்கார்ந்திருந்தான் போல'

இவன் பக்கம் கவனம் திரும்பியது. எதையோ தேடிக்கிட்டு இருந்தான். விஜய் அவனிடம்,

"ஹலோ..கார எடுங்க.. நாங்க தள்ளறோம்"

"பாஸ்..அது வந்து சாவி எங்க போச்சுன்னு தெரியல. கொஞ்சம் நேரம் முன்னாடி ஒருத்தன்கிட்ட சண்ட போட்டேன். அதுல கீழ விழுந்து இங்க பாருங்க காயம்"

கையில் இருந்த காயத்தை காட்டினான். காலெல்லாம் ரத்த திட்டு. பெரிய கைகலப்பு நடந்திருக்கும் போல. போதையில் காரை வேற வண்டியில் இடிச்சிருக்கான்னு தோணுச்சு.

"பாஸ்.. நீங்க கொஞ்சம் காருக்குள்ள போய் சாவி எங்கன்னு எடுத்து தர்றீங்களா?"

விஜய் கொஞ்சம் உஷாரானான். இப்போது அவன் காருக்குள் விளக்கு போட்டிருந்தான். வெளியிலிருந்தே காருக்குள் குனிந்து பார்த்து விஜய்

"அங்க பாருங்க கார் சீட்டிலேயே சாவி இருக்கு"

"ரொம்ப தாங்க்ஸ்.."

தள்ளாடிகிட்டே வண்டிக்குள் ஏறப் போனான். அப்போது அவன் செல்போன் சிணுங்கியது..

---தொடரும்.. ( இன்னிக்கு அவங்களா நானான்னு பாத்துடறேன். வேலை பாக்க சொல்றங்களாம்...வேலை.. மனித உரிமை கமிஷனுக்கு மனு போட வேண்டியது தான்)

மதி
11-12-2007, 09:07 AM
ஆயிரக்கணக்கான பேர் உங்களை குறிவச்சு ஆப்படிக்க அலையறதாக் கேள்வி.. ஜாக்கிரதையாவே இருங்க மதி,,

நல்லாவே புரியுது.. அதான் கொஞ்சம் ஜாக்கிரதையாவே இருக்கேன்..

மதி
11-12-2007, 10:45 AM
போனில் அவன் அம்மா போல்.
"அம்மா..நான் ஒரு இடத்துல மாட்டிகிட்டு இருக்கேன்.. பெட்ரோல் தீர்ந்திடுச்சு..சீக்கிரம் வர்றேன்..."

"...."

"ஐயோ..இல்லம்மா.. சத்தியமா சொல்றேன்.. நான் ஒன்னும் பண்ணில.."

"..."

"இல்லேம்மா... சத்தியமா. காரில ஒரு பொண்ணும் இல்லை. வீட்டுக்கு வந்து எல்லாத்தையும் சொல்றேன்"

'அடங்கொப்புறானே.. சரியான தண்ணிப் பார்ட்டின்னு தான் நினைச்சோம். இது வேறயா..?

நல்ல ஆளுக்கிட்ட தான் மாட்டிக்கிட்டோம்.'

ஒரு வழியா பேசி முடிச்சு,

"சாரி, ஏத்தம். பின்னாடி இருந்து தள்ள கஷ்டம். நீங்க முன்னாடி இருந்து தள்ளுங்க. நான் ரிவர்ஸில் ஸ்டார்ட் பண்ணிக்கறேன்"

போதையில் வேற இருக்கான். ரிவர்ஸ்னு முதல் கீர் போட்டுட்டானா நமக்கில்லை சங்கு. என்ன தான் நடக்குது பாக்கலாம்னு. முன்னாடி இருந்து மூணு பேரும் தள்ள ஆரம்பிச்சோம்.
ஹ்ம்ம்..
நேரம். தள்ளின வேகத்துல காரோட ஒரு வீல் பிளாட்பாரத்துல ஏறி சிக்கிகிச்சு. அவ்ளோ பலமா தள்ளிட்டோம். அவன் வெளியே வந்துட்டான். அவனை முன்னாடியே வண்டிய எடுக்க சொன்னோம்.

"இல்லை..பாஸ்..நான் வேணா..யூ டர்ன். எடுத்துடட்டுமா?"

'என்ன எழவோ பண்ணித் தொலை.'

அடுத்து யூ டர்ன் முயற்சி. திறமைசாலியான அவன் என்ன சொல்லியும் கேட்காமல் வெளியில் இருந்தே வண்டி ஸ்டீரிங்கை திருப்பினான். நேரம் நல்லா இருந்துச்சு. அது வேற சரிவுங்கறதால வண்டி அது இஷ்டத்துக்கு போக ஆரம்பிச்சுது.

ஹ்ம்.. ஒரு அஞ்சு நிமிஷம். வண்டி முன்னாடியும் பின்னாடியும் ஓடி எங்கேயும் இடிக்காமல் தடுத்து திருப்பறத்துக்குள்ள நல்லா வேர்த்திருச்சு. ஒருத்தர ஒருத்தர் திரும்பி பார்த்தோம்.

"தாங்கஸ் பாஸ். நீங்க வேணா சொல்லுங்க. உங்கள வீட்டுல டிராப் பண்ணிடறேன்"

"ஒன்னும் வேண்டா. முதல்ல வண்டிய எடுத்துட்டு பெட்ரோல் பங்க் போ. நாங்க நடந்தே போய்க்கறோம்"

வண்டியில் ஏறி உட்கார்ந்தான். மீண்டும் தள்ளும் முயற்சி. படம் பார்த்த ஃபீலிங்கே சுத்தமா போச்சு. கொஞ்ச தூரத்திலேயே வண்டி ஸ்டார்ட் ஆச்சு. தடுமாறி விழாமல் நின்றோம்.

முன்னாடி போனவன் வண்டிய நிறுத்தி,

"வாங்க உங்கள வீட்டுல விட்டுடறேன்"

வண்டி இப்போ ஆஃப் ஆச்சு. 'ஒழுங்கா வீட்டுக்கு போய் சேர மாட்டே போலருக்கு'

"பரவாயில்லை. வண்டி கிளம்பினதுக்கு அப்புறம் நிக்காம போய்கிட்டே இருங்க.. நாங்க எங்க வீட்டுக்கு போய்க்கிறோம்"

"சரி.."

தள்ள ஆரம்பித்தோம். தூரத்தில் போலிஸ் வண்டியில் வருவது தெரிந்தது. நாங்க தள்ள ஆரம்பிக்க வண்டி எங்கள் அருகில் வந்தது. சரியா அந்த சமயத்தில் வண்டி ஸ்டார்ட் ஆகி கிளம்பிட்டான்.

போலீஸ் அங்கிள் எங்களை சந்தேகப்பார்வை பார்த்தவாறே..

"யார் வண்டி அது?"

"எங்களுக்குத் தெரியாது. வண்டி ஓனர் தான் ஓட்டிட்டு போறான். அவன்கிட்டேயே போய் கேளுங்க"

மறுபேச்சு பேசாமல் அந்த வண்டியை துரத்த ஆரம்பித்தனர். ஒருத்தொருக்கொருத்தர் பார்த்து புன்னகைத்த வாறே வியர்வையை துடைத்து விட்டு.. மறுபடி படக்கதை பேசியபடி

வீட்டினுள் நுழைந்தோம்.

பி.கு: போலீஸ் மட்டும் அவனை அந்த பெட்ரோல் பங்கில் பிடித்திருந்தால் குடித்து வண்டி ஓட்டுவதற்காக கண்டிப்பாய் மாட்டி இருப்பான்.

பி.பி.கு: ஏதாவது எழுதணும் என்ன எழுதுவதுன்னு யோசிச்சப்போ இது தான் ஞாபகத்துக்கு வந்தது. இதைப் பற்றி சொன்னவுடன் நலம்விரும்பிகளிடமிருந்து கன்னாபின்னாவென திட்டு. எதுக்கு ராத்திரியில போய் வேண்டாத வேலையெல்லாம் இழுத்து போட்டுகிட்டு செய்யறேன்னு.

அன்புரசிகன்
11-12-2007, 11:14 AM
அட இவ்வளவு தானா??

இதுதான் சொல்றது. நைட்ல படம் பார்க்க கூடாதுன்னு... :D :D :D

தாமரை
11-12-2007, 11:26 AM
போலீஸ் அங்கிள் எங்களை சந்தேகப்பார்வை பார்த்தவாறே..

"யார் வண்டி அது?"

"எங்களுக்குத் தெரியாது. வண்டி ஓனர் தான் ஓட்டிட்டு போறான். அவன்கிட்டேயே போய் கேளுங்க"

மறுபேச்சு பேசாமல் அந்த வண்டியை துரத்த ஆரம்பித்தனர். ஒருத்தொருக்கொருத்தர் பார்த்து புன்னகைத்த வாறே வியர்வையை துடைத்து விட்டு.. மறுபடி படக்கதை பேசியபடி

வீட்டினுள் நுழைந்தோம்.

.

மொக்கை போலீஸா இருக்கே!! உங்களை ஜீப்பில் ஏத்திகிட்டு துரத்தி இருந்தா எவ்வளவி நல்லா இருக்கும்..:rolleyes:.சே! திரில்லே இல்லை.:icon_p:

மதி
11-12-2007, 11:39 AM
அட இவ்வளவு தானா??

இதுதான் சொல்றது. நைட்ல படம் பார்க்க கூடாதுன்னு... :D :D :D

ஹி.ஹி..
இப்படி ஒரு மொக்கையான விஷயத்தை எப்படி சொல்லணும்னு தெரியல...
அதான்... :D:D:D:D:D:D:D

யவனிகா
11-12-2007, 11:58 AM
ஹி.ஹி..
இப்படி ஒரு மொக்கையான விஷயத்தை எப்படி சொல்லணும்னு தெரியல...
அதான்... :D:D:D:D:D:D:D

அதுதான் சொல்லி முடிச்சாச்சல்ல...ஆனாலும் தலைப்பு உங்களுக்கே ஓவராத் தெரியல?

என்ன சொன்னாலும் உரிமை மீறல் விசயத்தில நானும் உங்க கட்சிதான்.படைப்புகள் பல படைத்து தமிழ் வளர்க்கும் உங்களை மாறி சிறந்ததொரு படைப்பாளியை....வேலையைப் பாருன்னு சொன்னது யாரு...இப்பவே சொல்லுங்க...ஆட்டோ அனுப்பலாம்.

மதி
11-12-2007, 12:02 PM
அதுதான் சொல்லி முடிச்சாச்சல்ல...ஆனாலும் தலைப்பு உங்களுக்கே ஓவராத் தெரியல?

என்ன சொன்னாலும் உரிமை மீறல் விசயத்தில நானும் உங்க கட்சிதான்.

ஆனாலும் சாதிச்சுட்டோமில்ல... இப்ப எங்க டீமில நாங்க வருத்தப்படாத வாலிபர் சங்கம் வேற ஆரம்பிச்சுட்டோம். :D:D:D

அதுலேயும் என்னைய போய் வேலை பாக்க சொல்லிட்டாங்களேன்னு இன்னிக்கு ஓஓஒன்னு ஒரே அழுகை...நான் தான். அவங்களுக்கு ஆட்டோல்லாம் வேண்டாம்.. பாவம்... :icon_ush::icon_ush::icon_ush:

யவனிகா
11-12-2007, 12:04 PM
ஆனாலும் சாதிச்சுட்டோமில்ல...

எங்க*ளை சோதிச்சிடீங்க*ல்ல...

மதி
11-12-2007, 12:08 PM
எங்க*ளை சோதிச்சிடீங்க*ல்ல...

:D:D:D:D:D:D:D
எப்பவுமே ஃபீலிங் சம்பவங்களா தான் எழுதறோம். மொக்கத் தனத்தை காமிக்க சரியா சந்தர்ப்பம் அமையலியேன்னு யோசிச்சப்ப ( மூளையே இல்லை எப்படி நீ யோசிப்பன்னு நீங்க முணுமுணுக்கறது புரியுது. ஒரு ஃப்ளோல வந்துட்டு) வந்தது தான் இது.. முழுக்க முழுக்க உண்மை சம்பவமாதலால் கடைசில மொக்கையா முடிஞ்சுடுச்சு. இத நாங்களே எதிர்பார்க்கல.. :icon_ush::icon_ush:

அமரன்
11-12-2007, 02:38 PM
உங்களைப் பார்த்தும் பயந்திருக்காங்களா? ஆச்சரியாமா இருக்கே?
எழுதுவதுக்கு யார்கிட்டயாவது டியூசன் எடுத்துக்கிட்டீங்களா? அல்லது நீங்களே இப்படித்தானா? நல்லா இருக்குங்க எழுத்து..

மதி
11-12-2007, 02:44 PM
உங்களைப் பார்த்தும் பயந்திருக்காங்களா? ஆச்சரியாமா இருக்கே?
எழுதுவதுக்கு யார்கிட்டயாவது டியூசன் எடுத்துக்கிட்டீங்களா? அல்லது நீங்களே இப்படித்தானா? நல்லா இருக்குங்க எழுத்து..

இந்த நக்கல் தானே வேணாங்கறது... ஏற்கனவே இதயம் போட்டு வாங்கிட்டாரு.. அதுக்கு தாமரை வேற வழிமொழிஞ்சாச்சு.. இந்த வஞ்சகப் புகழ்ச்சி அணி எதுக்கு..? :traurig001::traurig001::traurig001::traurig001:

மலர்
11-12-2007, 04:12 PM
நைட் படம் பாக்க போனீங்களா...
ம்ம் தேவைதான்..:icon_rollout:
வேற என்ன சொல்ல...:D:D:D

ஆனா அந்த போலிஸ் உங்களை அப்படியே விட்டுட்டு போனது தான் ரொம்ப வருத்தமா இருக்கு....:eek::eek:

தாமரை
11-12-2007, 04:20 PM
நைட் படம் பாக்க போனீங்களா...
ம்ம் தேவைதான்..:icon_rollout:
வேற என்ன சொல்ல...:D:D:D

ஆனா அந்த போலிஸ் உங்களை அப்படியே விட்டுட்டு போனது தான் ரொம்ப வருத்தமா இருக்கு....:eek::eek:


போலீஸ் வேஷத்தில சில போலி -ஸ்களும் உலவறாங்களாம்.. ஜாக்கிரதை

மலர்
11-12-2007, 04:28 PM
தொடரும்.. ( வேலை செய்ய சொல்லி மனித உரிமை மீறல் நடப்பதால் சாயந்திரம் தொடருகிறேன்)

தொடரும்.. ( இன்னிக்கு அவங்களா நானான்னு பாத்துடறேன். வேலை பாக்க சொல்றங்களாம்...வேலை.. மனித உரிமை கமிஷனுக்கு மனு போட வேண்டியது தான்)
ம்ம்ம் என்ன கொடுமை ஓவியன் இது.........???
இருங்க நான் உங்களை மாட்டிவிடுறேன்...
மதி....
உங்க மேனேஜர் அலைபேசி எண் கிடைக்குமா...

தாமரை
11-12-2007, 04:31 PM
ம்ம்ம் என்ன கொடுமை ஓவியன் இது.........???
இருங்க நான் உங்களை மாட்டிவிடுறேன்...
மதி....
உங்க மேனேஜர் அலைபேசி எண் கிடைக்குமா...


அவரும் பக்கத்தில உட்கார்ந்துகிட்டு தமிழ் தட்டச்சு பழகறாராம்.:lachen001:

மதி
12-12-2007, 02:00 AM
அவரும் பக்கத்தில உட்கார்ந்துகிட்டு தமிழ் தட்டச்சு பழகறாராம்.:lachen001:
:D:D:D:D
உண்மையிலேயே பாவம் அவர்... ரொம்ப கஷ்டப்படறார்..

ஓவியன்
15-12-2007, 01:25 PM
ஆபிஸிக்கு போய் மீதிய எழுதறேன்..

ஆஹா, அந்த ஆபிசிலே எனக்கு ஒரு வேலை கிடைக்காதா......??? :D:D:D

ஓவியன்
15-12-2007, 01:34 PM
ஒரு சம்பவத்தை திகில், நகைச்சுவை, உதவும் பண்பாடு, பயம் என எல்லாவற்றையும் கலந்து மதி கையாண்ட விதம் அருமை...!!:icon_b:

பாராட்டுக்கள் மதி இப்படி அடிக்கடி சாமத்திலே வெளியே போய் மாட்டி நிறைய, நிறைய பதிவுகளாகக் கொடுங்க...

அடுத்த பதிவு "பக் பக் இரவு தானே...??" :)

ஓவியன்
15-12-2007, 01:37 PM
ம்ம்ம் என்ன கொடுமை ஓவியன் இது.........???

அம்மா தாயே, உங்க பதிவிலே இருக்கிறது என்னோட பெயர் தானா?..
ஆமென்றால் ஏன் இந்த வில்லத்தனம்..........?? :confused:

மயூ
15-12-2007, 02:22 PM
என்னாா ஒரு பில்டட்ப்பு!!!
அப்பு... நீங்க பெரிய பில்லாப்பா!!! :)

மதி
15-12-2007, 04:28 PM
ஒரு சம்பவத்தை திகில், நகைச்சுவை, உதவும் பண்பாடு, பயம் என எல்லாவற்றையும் கலந்து மதி கையாண்ட விதம் அருமை...!!:icon_b:

பாராட்டுக்கள் மதி இப்படி அடிக்கடி சாமத்திலே வெளியே போய் மாட்டி நிறைய, நிறைய பதிவுகளாகக் கொடுங்க...

அடுத்த பதிவு "பக் பக் இரவு தானே...??" :)

அட..நீங்களுமா ஓவியன்... எனக்கென்னமோ எல்லோரும் இத கேலி பண்ற மாதிரியே தெரியுது...:eek::eek::eek::eek:

மதி
15-12-2007, 04:32 PM
ஆஹா, அந்த ஆபிசிலே எனக்கு ஒரு வேலை கிடைக்காதா......??? :D:D:D

ரெஸ்யூம் அனுப்பி வைய்யுங்க.. முயற்சி பண்றேன்.:D:D:D:D:D:D:D:D

மதி
15-12-2007, 04:32 PM
என்னாா ஒரு பில்டட்ப்பு!!!
அப்பு... நீங்க பெரிய பில்லாப்பா!!! :)

:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D

அமரன்
15-12-2007, 04:43 PM
அட..நீங்களுமா ஓவியன்... எனக்கென்னமோ எல்லோரும் இத கேலி பண்ற மாதிரியே தெரியுது...:eek::eek::eek::eek:
அப்படி இல்லை மதி.. எல்லாரும் அணி சேர்ந்து வஞ்சகமில்லாமல் புகழ்கின்றோம்

மதி
15-12-2007, 04:50 PM
அப்படி இல்லை மதி.. எல்லாரும் அணி சேர்ந்து வஞ்சகமில்லாமல் புகழ்கின்றோம்

ஓஓஓஓ... புரியுது...:eek::eek: