PDA

View Full Version : தமிழ் தாய்



mdjmeeran
10-12-2007, 10:16 AM
மருகன் பேசியது படித்தது
எல்லாமே தமிழில் தான்
உலக சரித்திரத்தில் அவன் பங்கு
இருப்பதாக ஒரு கற்பனை அவனுக்கு
தமிழ் வளர்த்தது தான்

காலப் பயணம் அவனுக்கு இளங்கலை
பொறியியல் பட்டம் வழங்கியது
பட்டயம் கையில் கொடுக்கப்பட்டது
படித்ததற்க்கு சான்றாக

சாதித்த உற்சாகத்தில்
சாரை சாரையாக
பணிக்கு விண்ணப்பம்

முடிவாக ஒரு பணி
ஜப்பானிய நிறுவனத்தில் வந்தாகிவிட்டது
நல்ல வேலை நல்ல சம்பளம்
நல்ல மாப்பிள்ளை
திருமணமும் அழகாக நடந்தது

புதிய வாழ்வோடு சந்தோசத்தின் வரவாக
மழலைச் செல்வங்கள்
கழிந்து கொண்டிருக்கின்ற நாட்கள்
வயதையும் கரைத்து நடுத்தர
வயோதிகர் என்ற அடையாளம் தந்தது

மருகனுக்கு கூடுதல் அங்கிகாரம்
தொடர்ச்சியாக ஒரே நிறுவனத்தில்
பணி புரிந்த காரணத்தால்
வாழ்க்கை இவ்வாறாக கரையும் பொழுது
தமிழில் பொறியியல் கல்வி, மருத்துவ கல்வி
என்ற பத்திரிகை விமர்சனம் சிறிது
சலனத்தை பெருக்கியது அவனிடத்தில்

சில சமயங்களில் தன்னோடு கூடிய
சக ஜப்பானிய ஊழியர்கள் தொழில் நுட்பங்களை
தங்கள் தாய் மொழியிலேயே பகிர்ந்து கொள்வது
வியப்பு ஏற்படித்தியதும் நினைவுக்கு வர

வியப்பு "எப்படி" என கேள்வியாக பீறிட
கேள்வி அவனை பின்னோக்கி இழுத்துச் சென்றது

சரித்திரத்தில் அவன் பங்கு?
தமிழ் வளர்த்த பங்கு
உணர்ச்சி பூண்டவனாய் செய்வதறியாமல்
காதல் கவிதை எழுதினான் காலம் தாழ்த்திய செயலாய்
தமிழுக்கு செய்யும் தொண்டு என்றெண்ணி

முடுக்கி விட்ட காரணத்தால் உறக்கம்
அவனிடத்தில் உறங்கிப் போயிருந்தது
கலங்கிய கணவனின் அகமறிந்து
அவதாரப் பத்தினி ஆலோசித்தாள்

பொறியியல் வல்லுணர்க்கும் கவிதையை தவிற
வேறு காரியம் தெரியாதோ தமிழ் குடி உயர்த்த

"தமிழ் அறிவியல் மன்றம்" அமைக்கலாமே என
முனுமுனுத்தாள் மெல்லிய குரலில்
அடுக்கு மொழி பேசுதலும் கவிதையும்
மட்டுமல்லவே தமிழுணர்ச்சி என பறை சாற்றினாள்

வரம் பெற்றவனாய் ஊர் ஊராக சென்று
தமிழ் அறிவியல் மன்றம்
தொடங்கும் பணியில் அழகான மருகன்
மருகன் அழகானவன் - மருகனின் மனைவி தமிழ் தாய்

நன்றி

மீரான்

சுகந்தப்ரீதன்
12-12-2007, 02:05 PM
நன்றாக இருக்கிறது நண்பரே.. கவிதையாக எண்ணாமல் உரைநடைவடிவில் உள்ளத்தில் உதித்ததை உதிர்த்தது.. வாழ்த்துக்கள்..!

அமரன்
12-12-2007, 03:33 PM
மங்காத்தமிழுக்கு ஒரு தங்கக்கவிதை.. இன்னும் புடம் போட்டிருக்கலாம்.. தொடருங்கள். வாழ்த்துகள்.

சாம்பவி
12-12-2007, 04:12 PM
உண்மை தமிழ் தம்பதியினருக்கு.... !
அநேகக் கோடி நமஸ்காரங்கள்.... !

அவர் தம் பயணம்
மென்மேலும் தொடர*
வாழ்த்துக்கள்... !

வேளை வரும் வேளை
வெளிச்சமிட்டால்
அறியும் ஆவலுடன்.... !

ஆதி
13-12-2007, 07:09 AM
கவிதையைப் படித்த உடன் எனக்கு கவிஞர் காரைமைந்தன் தான் நினைவுக்கு வந்தார் அவர் கவிதைகளும் இப்படித்தான் இருக்கும்..

நல்ல கரு.. தமிழ் வழி மருத்துவம், தமிழ் வழி பொறியில் என தமிழ் வழிக் கல்வியைப் பற்றிப் பேசும் கவிதை.. கதை வடிவில் தந்த கவிச் சிறப்பு.. கருத்து கடினப்படாமல் படிப்பவர் உள்ளங்களில் பத்திரமாய் தங்கிவிடும்..

வார்த்தைகளை இன்னும் கொஞ்சம் செதுக்கி இருக்கலாம்..

சின்னக் கவிதைக்குள் எண்ண வேண்டிய விடயங்கள் எத்தனையோ உள்ளன..

வாழ்த்துக்கள் மீரான்..

-ஆதி