PDA

View Full Version : வேண்டுமோர் மாளிகை!!!



சிவா.ஜி
10-12-2007, 09:22 AM
நிலவுக்கு அருகில்
இன்னொரு நிலவாய் ஓர்
வெள்ளை மாளிகை வேண்டும்!

நீல வானம் கூரையாய்
வின்மீனெல்லாம் விளக்குகளாய்
நீர் சுமந்து வரும்
கார்மேகம் சிறு குளமாய்
வெண் மேகம் தரையாய்
அம் மாளிகை அமைய வேண்டும்!

பலகனியில் நின்று
பயணம் போகும்
தேவரைக் காணவேண்டும்!
தேவ நர்த்தகிகள்
ஒவ்வொருவராய்
நடனமாட அழைக்க வேண்டும்!

வின்வெளிப் பயணம் வரும்
இந்நிலத்தார் இளைப்பாறும்
இடமாயிருக்க வேண்டும்!
போகும்போது அவர்களுக்கு
மாசில்லாக் காற்றை
காசில்லாமல் கட்டித் தர வேண்டும்!

சூரியத் தேரின் சக்கர ஓசையில்
நித்திரை கலைந்து எழ வேண்டும்!
உடை அலச மழைவேண்டும்,
அதை உலர்த்தும் கொடியாய்
வான வில் வேண்டும்

சுற்றி வரும் கிரகங்களுக்கு
சுற்றுலா செல்ல வேண்டும்
ஓய்வு தினத்தில்
பால் வீதியில்
பந்து விளையாட வேண்டும்!

நிகழ்வை படம்பிடிக்க
ஒளி உதவிக்கு மின்னல் வேண்டும்
எப்போதும் பூமி பார்க்க
ஒரு திறந்த ஜன்னல் வேண்டும்!

யவனிகா
10-12-2007, 09:51 AM
மாளிகையில் ஒரு அறை அட்வான்ஸ் புக்கிங் யவனிகாக்கு...

ஆதி
10-12-2007, 10:22 AM
புத்தம் புது
பூமி வேண்டும்..
நித்தம் ஒரு
வானம் வேண்டும்
தங்கமழைப் பெய்ய வேண்டும்
தமிழில் குயில் பாட வேண்டும்
- வைரமுத்து - திருடாத் திருடா


தூய நிறத்தினதாய்
ஒரு மாளிகை வேண்டும்

- பாரதி - கானி நிலம் வேண்டும்

இந்த வரிசையில் நமது கவியும் இடம் பெற்றுவிட்டார்


நிலவின் அருகில்
வெள்ளை மாளிகை வேண்டும்

- சிவா.ஜி

பாராட்டுகள் சிவா.ஜி அவர்கட்கு

சிவா.ஜி
10-12-2007, 10:26 AM
மாளிகையில் ஒரு அறை அட்வான்ஸ் புக்கிங் யவனிகாக்கு...

சரி சரி சம்மதம்....போனாப்போகுது மச்சானையும் கூட்டிட்டு வாங்க.

சிவா.ஜி
10-12-2007, 10:26 AM
பாராட்டுக்கு மிக்க நன்றி ஆதி.

இதயம்
10-12-2007, 10:31 AM
அழகான கவிதை.. வாய்ப்பு இருந்தா உங்க மாளிகையில் ஒண்ட ஒரு இடம் கொடுங்க சிவா..!!


மச்சானையும் கூட்டிட்டு வாங்க.
என்ன சிவா.. தெரிஞ்சு சொல்றீங்களா.. தெரியாம சொல்றீங்கள..? அதுக்கப்புறம் அந்த மாளிகை வெளங்குமா..??:D:D

சிவா.ஜி
10-12-2007, 10:35 AM
அழகான கவிதை.. வாய்ப்பு இருந்தா உங்க மாளிகையில் ஒண்ட ஒரு இடம் கொடுங்க சிவா..!!
----------------------------------------------------------------------
நன்றி இதயம் ஒண்ட என்ன, ஒன்றாகவே இருப்போம்...
----------------------------------------------------------------

என்ன சிவா.. தெரிஞ்சு சொல்றீங்களா.. தெரியாம சொல்றீங்கள..? அதுக்கப்புறம் அந்த மாளிகை வெளங்குமா..??:D:D

அதுக்கில்லீங்க நேரம் போறதுக்கு இவருதான் சரியான ஆள்.அதுக்குத்தான்.

அக்னி
10-12-2007, 10:36 AM
அழகிய கவி...

சுத்தக் காற்று கட்டித்தந்தால்,
அணுவாயுதங்கள் குறி வைக்கும்
மாளிகையை...

சுற்றி வர செய்மதிகள்,
படம்பிடிக்க,
நிலவும் தனிமை தேடி,
மறைந்தோடுகின்றதே ஒரு நாள்...
எங்கே ஒளியும் உங்கள் மாளிகை?

வெள்ளை மாளிகை விட்டுவைக்குமா,
உங்கள் வெள்ளை மாளிகையை..?

பூமியிலேயே,
உங்கள் கனவில் பலர்...
எல்லையில்லாத வதிவிடவாதிகள்...

இதயம்
10-12-2007, 10:38 AM
அதுக்கில்லீங்க நேரம் போறதுக்கு இவருதான் சரியான ஆள்.அதுக்குத்தான்.
அடடே.. மாளிகைய கட்டுறதுக்கு முன்னாடியே அதுக்கு வாட்ச்மேனை தயார் பண்ணிட்டீங்க போலிருக்கு...?? எதுக்கும் வீட்டுல விலையுயர்ந்த பொருட்கள் வைக்காம இருங்க..!! யாரையும் நம்பமுடியல..!!:D:D

அக்னி
10-12-2007, 10:38 AM
மாளிகையில் ஒரு அறை அட்வான்ஸ் புக்கிங் யவனிகாக்கு...
கேட்டு வாங்குறீங்களே... இப்படி அப்பாவியா நீங்க..?

அக்னி
10-12-2007, 10:39 AM
அடடே.. மாளிகைய கட்டுறதுக்கு முன்னாடியே அதுக்கு வாட்ச்மேனை தயார் பண்ணிட்டீங்க போலிருக்கு...??
அப்போ சிவா.ஜி வாட்ச்மேனுக்கு முன்னாடியும் கைகட்டித்தான் நிப்பார்
என்று சொல்ல வாறீங்களா?

சிவா.ஜி
10-12-2007, 10:40 AM
அழகான பின்னூட்டம்,ஆதங்க கேள்விகள்...இதையெல்லாம் விட்டு விலகியிருக்கத்தானே மனம் இந்த மாளிகையை நாடுகிறது.....நாடுபிடிக்கும் வல்லோர்கள் தேடி வந்தால் எங்கே ஓடுவது...?
நன்றி அக்னி.

வசீகரன்
10-12-2007, 10:49 AM
படிக்கும்போதே.... மனதில் விரிந்த
அந்த காட்சிகளே.... எத்தனை அழகாக இருந்தது....!
கற்பனைக்குதிரயில்
நன்றாகவே பயணித்திருக்கிறீர்கள் சிவா அண்ணா....!
மெய்மறக்க வைத்த
கவிக்கு..... எனது பாராட்டுக்கள் அண்ணா...!

சிவா.ஜி
10-12-2007, 10:51 AM
படிக்கும்போதே.... மனதில் விரிந்த
அந்த காட்சிகளே.... எத்தனை அழகாக இருந்தது....!


நன்றி வசீகரன்.நிஜங்களால் நெருக்குதலுக்கு உள்ளாகும்போது சிறிது கற்பனையிலும் வாழ்ந்து புத்துணர்ச்சி பெறவேண்டியுள்ளது.

ஷீ-நிசி
10-12-2007, 04:41 PM
செமயா இருக்கு சிவா....

அதிலும் இந்த வரிகள்.....

வின்வெளிப் பயணம் வரும்
இந்நிலத்தார் இளைப்பாறும்
இடமாயிருக்க வேண்டும்!
போகும்போது அவர்களுக்கு
மாசில்லாக் காற்றை
காசில்லாமல் கட்டித் தர வேண்டும்!

சூரியத் தேரின் சக்கர ஓசையில்
நித்திரை கலைந்து எழ வேண்டும்!
உடை அலச மழைவேண்டும்,
அதை உலர்த்தும் கொடியாய்
வான வில் வேண்டும்
சுற்றி வரும் கிரகங்களுக்கு

சுற்றுலா செல்ல வேண்டும்
ஓய்வு தினத்தில்
பால் வீதியில்
பந்து விளையாட வேண்டும்!

மிக அற்புதமான கற்பனை.... அப்படியே அம்மாளிகையில் உலாவந்த உணர்வு.. வாழ்த்துக்கள்!

சிவா.ஜி
10-12-2007, 05:12 PM
மிக்க நன்றி ஷீ.நான் விரும்பி எழுதிய வரிகளையே மேற்கோள் காட்டியிருக்கிறீர்கள்.

இளசு
10-12-2007, 08:21 PM
மாசில்லாக்காற்று
மழையில் சுத்திகரிப்பு
சூரியச்சக்கரச் சத்த விழிப்பு..
விண்வீரருக்கு உபசரிப்பு..

புதிய தலைமுறையின் எல்லை விரிந்த கனவுக்காட்சி..

ஒரு கணம் நானும் அங்கே குடியிருந்த மனதிருப்தி..

பிரம்மாண்ட பாராட்டுகள் சிவா!

சிவா.ஜி
11-12-2007, 03:19 AM
மிக்க மகிழ்ச்சி இளசு.கவிதையின் சாரத்தை சில வரிகளில் பிழிந்துதரும் சூத்திரம் கண்டு ஆச்சர்யத்துடன் மனம் நிறைந்த நன்றிகள்.

jpl
11-12-2007, 03:42 AM
ஏன் சிவா.ஜி வானவில்லை கரைத்து ஏழு வர்ணங்களால் வெள்ளையடிக்காமல்
வெள்ளை நிறம்?
யவனிகா அக்காவிற்கும் மச்சானுக்கும் சண்டை வந்தால் எல்லாம் பறந்து பறந்து சுவர் அழுக்காகி விடாதா?
நல்ல யோசனை செய்து கொள்ளுங்கள்...ஒரு முறைக்கு பல முறை...
(நான் 2 தினங்கள் எஸ்கேப்.ஏதாவது வீசப்பட்டால் அது சிவா.ஜிக்குத்தான்..சமாளியுங்கள் சிவா.ஜி..சமாளியுங்கள்.)

jpl
11-12-2007, 03:46 AM
இதை படிக்கும் போது "காணி நிலம் வேண்டு பராசக்தி"
பாடலே நினைவுக்கு வருகிறது.அவர் அவர் வசதிக்கு
தேவைப்பட்டதைக் கேட்டார்.
சிவா.ஜி யும் அவர் வசதிக்கு இப்படித்தான் கேட்பாரோ....
இருந்தாலும் கவிஞர்களுக்கு வசமாகா வானமா?
இதோ சிவா.ஜி க்கு வானம் வசப்பட்டு விட்டது....

சிவா.ஜி
11-12-2007, 05:42 AM
மிக்க நன்றி லதா மேடம்.மாசுகளை இங்கேயே களைந்துவிட்டு மாசில்லா மாளிகையில் வாழும் விருப்பம் வந்த பிறகு வெள்ளை தானே நல்ல வர்ணம்.(மச்சானைக் கொஞ்சம் அடக்கி வாசிக்கச் சொல்லனும்...என்னமா பேரக் கெடுத்து வெச்சிருக்கார்)

பூமகள்
11-12-2007, 06:19 AM
சூப்பர் சிவா அண்ணா...!
மெய் மறந்து உங்க வெள்ளை மாளிகையை பார்த்த வண்ணம் வெகு நேரம் கற்பனையில் இருந்தேன்...!
என்னமா எழுதியிருக்கீங்க..! நான் மேற்கோள் காட்ட நினைத்தவற்றை ஏற்கனவே ஷீயும் இளசு அண்ணாவும் காட்டிவிட்டதால் அதையே நானும் வழிமொழிகிறேன். :)

உங்களுக்கு நம் பிரபஞ்ச மொத்த அளவு பாராட்டுகளும் வாழ்த்துக்களும்..!!

இன்னும் இப்படியான கற்பனைகள் வானம் தொடட்டும்..! :)
உங்கள் வசப்படட்டும்..!

சிவா.ஜி
11-12-2007, 06:25 AM
மிக்க நன்றிம்மா.அருமையான பின்னூட்டம்.ரொம்ப உற்சாகத்தைத் தருகிறது.

அமரன்
11-12-2007, 08:01 AM
மராட்டிமன்னன், நடிப்புலகச்சக்கரவர்த்தி வரிசையில் நமது கவிராஜர் சிவா.ஜி..

நிலவுக்குப் பக்கத்தில் நிகரான "வெள்ளைமாளிகையில்",
விண்ணுலகத்தை தன்னாட்சியின் கீழ்கொணர விரும்பும் மக்களாட்சியையும்,
உப்பரிகையில் நின்று வேடிக்கை பார்க்கும்,
தேவலோக நடன நங்கைகளின் நளின நாட்டியத்தில் களித்திருக்கும்
மன்னராட்சியையும் கலந்து கொடுக்கும் ஒரு அரசுக்கட்டில்..

"மிதக்க"வைக்கும் கற்பனைக் கவிதை..

கவிதையில்
உயிர் வருடும் சாமரம் இருந்தாலும் ,
உயிர் நெருடலாக மரமின்மை....
பாராட்டுகள் சிவா...

சிவா.ஜி
11-12-2007, 08:04 AM
கற்பகத்தருவையும் முற்றத்தில் நிறுத்தத்தான் முயன்றேன் அமரன்,தேவர்கள் கதறியதால் விட்டு விட்டேன்.
மிக்க நன்றி அமரன்.

தாமரை
11-12-2007, 09:20 AM
நீங்கள் மாளிகையில் இருந்து
மக்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்
நான்
மக்களோடு இருந்து கொண்டு
மாளிகையைக் கவனித்துக் கொண்டிருக்கிறோம்

சிவா.ஜி
11-12-2007, 09:37 AM
கவனிப்பு அவசியம்.அதுவும் ஒட்டுமொத்த மக்களின் கவனிப்பென்றால் ஸ்பெஷல்.

சுகந்தப்ரீதன்
12-12-2007, 08:53 AM
கலக்கல் கவிதை அண்ணா..! இப்படியொரு மாளிகை கிடைத்தால் எத்தனை சந்தோசமாயிருக்கும்...

எப்போதும் பூமி பார்க்க
ஒரு திறந்த ஜன்னல் வேண்டும்!

உங்களுக்கு நன்றியுணர்வு கொஞ்சம் அதிகம்தான் அண்ணா.. அருமையான வரிகள் இறுதியில்.. வாழ்த்துக்கள்..!

சிவா.ஜி
12-12-2007, 09:01 AM
நன்றி சுகந்த்.என்ன இருந்தாலும் நாம பிறந்த பூமியை மறக்க முடியுமா...கற்பனையில் கூட வேண்டாமென்பதால்தான் அப்படி எழுதினேன்.