PDA

View Full Version : முரளி கௌரவிக்கப்பட்டார்

IDEALEYE
10-12-2007, 04:17 AM
உலகசாதனை வீரன் முத்தையா முரளிதரனுக்கு இலங்கை ஜனாதிபதி 8 மில்லியன் ரூபாய் பெறுபதியுள்ள கார் ஒன்றினை பரிசளித்துள்ளார், அத்துடன் முரளியின் படம் பொறிக்கப்பட்ட தபால் தலைகளும் உடனடியாக வெளியிடப்பட்டுள்ளன, தனது மண்ணிலேயே உலக சாதனை நிகழ்த்திய எமது சாதனை வீரனுக்கு எமது தேசம் வழங்கிய கௌரவம் இது.
ஐஐ

அன்புரசிகன்
10-12-2007, 04:24 AM

தபால் முத்திரை வெளியிட்டது. நல்ல விடையம். வரவேற்கிறேன்.

கார் அன்பளிப்பு செய்தது.... அதை அரசு வழங்கியிருந்தால் வரவேற்க்கத்தக்கதே. ஆனால் நான் கேள்விப்பட்டது சற்று வித்தியாசம்.

துடுப்பாட்டத்தில் அனைத்துலக சாதனை புரிந்த முத்தையா முரளிதரன் என்ற முரளிக்கு சிறிலங்கா அரச தலைவரான மகிந்த ராஜபக்ச அன்பளிப்பாக வாகனத்தின் சாவியை வழங்கும் புகைப்படங்கள் அனைத்து ஊடகங்களிலும் வெளியாகி இருந்தது.ஒரு நாட்டின் விளையாட்டு வீரருக்கு ஒரு அரசாங்கத்தின் உயர் பொறுப்பில் உள்ளவர் இத்தகைய அன்பளிப்புக்களை வழங்கும் போது பொதுவாக அரசாங்கம் வழங்கியதாக கருதப்படுகிறது.
அந்த வகையில் மகிந்த ஏதோ சொந்தப் பணத்திலோ அல்லது மகிந்த அரசாங்கத்தின் அமைச்சரவை கூடி தீர்மானித்தோ இதனை வாங்கிவிடவில்லை என்ற குட்டு அம்பலப்பட்டு நிற்கிறது.
கண்டி அஸ்கிரிய விளையாட்டரங்கில் 8.5 மில்லியன் ரூபா மதிப்புள்ள அந்த வாகனத்தை வழங்க "கார்மார்ட்" நிறுவனம் அனுப்பியிருந்தது. அதை அறிந்த மகிந்த வாகனத்தை தனது அலரி மாளிகைக்கு கொண்டுவரச் சொல்லி தானே வாகனத்தை வழங்கி புகழ் தேடிக் கொண்டார் என்று சிறிலங்காவின் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தை சிறிலங்கா நாடாளுமன்றத்திலும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ எழுப்பிவிட மகிந்த ஆதரவாளர்கள் "கொந்தளித்துப் போய்" சபைக் குறிப்பிலிருந்தே அதனை நீக்க வேண்டும் என்று கூறினர்.
ஆனாலும் ஜோன்ஸ்டனோ, தனது குற்றச்சாட்டில் உறுதியாகவே இருந்தார்.
இது தொடர்பில் அந்த வாகனத்தை வழங்கிய "கார்மார்ட்" நிறுவனத்தின் முகாமை இயக்குநர் சேனக அமரசிங்கவை கொழும்பு ஊடகவியலாளர்கள் தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர் ஜோன்ஸ்டனின் கருத்தை மறுக்கவும் இல்லை. தான் கருத்து எதனையும் தெரிவிக்கவும் இல்லை என்றும் கூறியதோடு மட்டுமில்லாது வெள்ளிக்கிழமை நடக்கப் போவதைப் பாருங்கள் என்றும் கூறியுள்ளார்.
அவர் கூறியபடியே வெள்ளிக்கிழமை மாலை "கார்மார்ட்" நிறுவனம் வழங்கவிருந்த வாகனத்தை முரளிக்கு மகிந்த கொடுத்த நிகழ்வு அரங்கேறியது.
"கடைத்தேங்காயை எடுத்த வழிப்பிள்ளையாருக்கு உடைத்தல்" என்ற மொழியெல்லாம் தெரிந்து வைத்திருக்கிறாரே....மகிந்த ராஜபக்ச, தமிழில் நன்கு புலமை பெற்றவர் போல்.!

செய்தி: புதினம் இணையத்தளம்.

தெரிவிக்கப்பட்டிருப்பது இதுதான். மீதியை தீர்மானிக்கப்படவேண்டியது வாசிப்பவர்கள்.

அவ்வாறு வழங்குவதற்கு சற்று சில தினங்களுக்கு முன்னர் கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் வசித்த மலையக மக்கள் கைது செய்யப்பட்டதும் முரளியை கெளரவிக்கத்தானோ? அல்லது அனைத்து மலையக மக்களும் விடுதலைப்புலிகள் என்ற எண்ணமோ?

ஆண்டவனுக்குத்தான் அத்தனையும் வெளிச்சம்.

IDEALEYE
10-12-2007, 04:40 AM
அன்புரசிகன் அவர்களுக்கு,
தயவு செய்து இங்கும் இனப்பிரச்சினை விவகாரத்தை கல்க்கமலிருப்போமா, வெளிப்படையான் உண்மைகள், நிகழ்வுகளை மட்டும் பார்ர்போமா
முரளி ஒரு தமிழன், ஒரு இலங்கையர் என்றும் இந்தியத்துணைக்கண்டத்தில் தன் துணைவியைத்தேடிக்கொண்டவர் என்பதும் எமக்கும் அவருக்கும் உள்ள உறவினை தீர்மானிக்கப்போதுமானவை....
பணிவுடன்
ஐஐ

அன்புரசிகன்
10-12-2007, 04:48 AM

மீண்டும் மன்னிக்க வேண்டும். உங்கள் பதிவின் தொனியில் ஒரு மகிந்தவின் பக்கச்சார்பு எனக்கு தெரிந்தது.

நீங்கள் செய்தியை வெளியிடும் முன்னர் அவற்றின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தப்படவேண்டியது உங்களின் கடமை. வெறுமனே செய்தியை வெளியிட்டதற்கு வந்து வாசிப்பொர் இதனை வெறும் செய்தியாக மட்டும் பார்ப்பார்கள்.

ஆனால் உண்மையில் ஜனாதிபதி செய்தது கெளரவமே அல்ல. அவர் முரளியை கேவலப்படுத்தியிருக்கிறார். இதனை வாசிப்பவரும் தெரிந்து வைக்க வேண்டும் என்று கருதியே பதித்தேன்.

பிரச்சனை என்றும் என்பக்கத்திலிருக்கவில்லை. இதனை உமது முதலாவது திரியிலிருந்து நீரே அவதானிக்கலாம்.

பதிவுகளின் நம்பகத்தன்மையை கொடுக்கவேண்டியது பதிபவரே அன்றி வேறொருவரும் அல்ல.

தீபன்
10-12-2007, 04:56 AM

பிரச்சினைகளுக்குள் முழுகிப்போய் இருப்பவர்கள் நாங்கள். எங்கும் எதிலும் அதன் சாயல் தென்படத்தானே செய்யும் நண்பரே..?

எம்மவரில் பலர் முரளியின் சாதனையை பூசா சிறையிலிருந்துதான் கொண்டாடினார்கள். அரசாங்கம் கொளரவிப்பதும் அரசியல் நலனோடுதானே... (தனியார் ஒருவர் வழங்கிய பரிசை தாம் வழங்கியதாக சொல்வதுதானா உங்கள் தேசம் வழங்கிய கொளரவம்..?). அப்போ அதுபற்றிய செய்தியை நீங்கள் சொல்லும்போது அதற்கு பதிலைமட்டும் எப்படி பிரச்சினை கலக்காமல் எழுத் முடியும்...?

முரளியின் சாதனையில் எமக்கும் பெருமைதான். ஆனால், அதையும்தாண்டி எங்கள் இருப்பே சோதனைக்காளாகும்போது பொறுமை போவது இயல்புதானே..

தீபன்
10-12-2007, 05:02 AM
மீண்டும் மன்னிக்க வேண்டும். உங்கள் பதிவின் தொனியில் ஒரு மகிந்தவின் பக்கச்சார்பு எனக்கு தெரிந்தது.

நீங்கள் செய்தியை வெளியிடும் முன்னர் அவற்றின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தப்படவேண்டியது உங்களின் கடமை. வெறுமனே செய்தியை வெளியிட்டதற்கு வந்து வாசிப்பொர் இதனை வெறும் செய்தியாக மட்டும் பார்ப்பார்கள்.

ஆனால் உண்மையில் ஜனாதிபதி செய்தது கெளரவமே அல்ல. அவர் முரளியை கேவலப்படுத்தியிருக்கிறார். இதனை வாசிப்பவரும் தெரிந்து வைக்க வேண்டும் என்று கருதியே பதித்தேன்.

பிரச்சனை என்றும் என்பக்கத்திலிருக்கவில்லை. இதனை உமது முதலாவது திரியிலிருந்து நீரே அவதானிக்கலாம்.

பதிவுகளின் நம்பகத்தன்மையை கொடுக்கவேண்டியது பதிபவரே அன்றி வேறொருவரும் அல்ல.

என் பதிலை பதிந்தபின்னர்தான் பார்த்தேன், உஙள் பதிலும். சரிதான். முரளியை வைத்தும் அரசியல் பண்றாங்க...

IDEALEYE
10-12-2007, 07:12 AM
தீபன், மன்றத்தில் எனக்குகிடைத்த நல்ல கருத்துப்பறிமாற்ற நண்பன் என்றே நினைக்கின்றேன், எனென்றால் அவர் மண்வாசமும் என் மண்வாசமும் நேர்கோட்டில் சந்திப்பதாய் உணர்கின்றேன்....
முரளி விடயத்தில் உள்ள அரசியலை ஒருபக்கம் வைத்துவிட்டு முரளியின் சாதனை மற்றும் அதற்கு வழங்கப்பட்டுள்ள கௌரவம் என்பன பொதுவாக ஏற்கக்கூடியதாகவே இருக்கின்றது,
1999ல் இலங்கை வீரர்கள் உலகக்கிண்ணக்கோப்பையை வென்ற போது அதனை வே.பிரபாகரனும் கொண்டாடினார் வாழ்த்துசெய்தி அனுப்பினார் என்ற போது என்மனம் குளிர்ந்தது, அதேபோன்று இன்று முரளியும் கௌரவிக்கப்படும் போது அதே உணர்வு எழுகின்றது.

எமது அரசியலும் எமது விளையாட்டும் போதுமான அளவு தள்ளிவைத்து நோக்கப்படுவது சிறப்பானதாகும். குறித்த கார் குறித்த சர்ச்சை புதினம் இணையத்தளம் தவிர்த்து வேறு எங்கும் காணக்கிடைக்கவில்லை. அதுமட்டுமல்ல எமது நாளாந்த பிரச்சினை குறித்து தனியான திரியில் ஆராய்வோம் தீபன்.. முரளிவிடயத்தை அப்படியே அரசியலுக்குள் செல்லாமல் அவருக்கு வழங்கப்பட்ட கௌரவத்தை நாமும் ஏற்று முரளியின் வெற்றிக்கும் சாதனைக்கும் மானசீகமாக வாழ்த்துச்சொல்வோம்.

ஐஐ

தீபன்
10-12-2007, 07:52 AM

நண்பரே. முரளிக்கு வாழ்த்து சொல்வதிலும் அவரது சாதனைகளை மதிப்பதிலும் மன்றத்தில் எவருக்கும் மாற்றுக்கருத்தே இல்லை... அதை நீங்கள் முதலில் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும்.

ஆனால், இந்த திரியை நீங்கள் தொடங்கியபோது தனியே முரளியின் சாதனைகளை பாராட்டுவதுடன் நின்றிருந்தால் இங்கு அரசியலை கலக்கவேண்டி வந்திராது. முரளிக்கு 8மில்லியன் பெறுமதியான காரை கொடுத்து நமது அரசு கெளரவப்படுத்தியதாக சர்ச்சையான விடயத்தை உறுதியான செய்திபோல பிரதானப்படுத்தியபடியால்தான் இங்கும் அரசியல் நுளைந்தது.

மேலும் 1999போலல்ல இப்போதய நிலமை. அன்றைய கால கட்டங்களில் இலங்கை அணி பிரபல்யமாகாதிருந்தது. அதனால் அரசியல்வாதிகள் அணிக்குள் தலையிடவில்லை.. அணியும் அரசியலில் ஈடுபடவில்லை.

ஆனால், அண்மைக்காலமாக அணிக்குள் அரசியல் கொள்கைகள் பலவாறாக அடிபடுகிறது. பல வீரர்கள் ஓய்வை பெற்றபின் அரசியல் கட்சிகளுடன் சேர்ந்து இயங்குகின்றனர். தங்கள் செல்வாக்கை உயர்த்த இப்போதைய அணியையும் அரசியலில் பயன்படுத்துகின்றனர்.

இதனால்தான் அண்மையில்கூட இலங்கயணி வெளிநாடொன்றில் விளையாடும்போது மனித உரிமைகள் அமைப்புக்கள் இலங்கைக்கெதிரான கவன ஈர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டன. புலம்பெயர் தமிழர்களும் மைதானத்துள் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தனர். இன்று விளையாட்டுள் அரசியல் நுளைந்து விட்டதால் தனித்து நோக்குவதற்கு இயலாததாகிவிட்டது.

(பிரபாகரன் வாழ்த்து சொன்னது அவரின் இனவாதமில்லா சிந்தனையையே காட்டுகிறது. அதை இலங்கையணி சரிவர பேணிக்கொள்ளாதது அணியின் தப்புத்தானே... உதாரணத்திற்கு உலகக்கோப்பையை வென்றால் வரும் நிதியில் பாதியை தமிழரை கொன்று குவிக்கும் பாதுகாப்பு படைக்கு கொடுப்போமென சொன்ன மகேல ஜெயவர்த்தன தலைமையிலான அணியில் இருந்த முரளி அப்போது எந்த கருத்தும் சொல்லவில்லை.)

மேலும் மேற்படி செய்தியை புதினத்தில் மட்டுமே வந்ததென கூறி அது பொய்யானதென காட்ட முயல்வதும் தப்பு. இதுவரை புதினம் அவ்வாறான செய்திகளை வெளியிட்டதாக என் அறிவுக்கு படவில்லை... (இலங்கை அரச செய்தித்துறையினரைப்போல..). அத்துடன் இது பாராளுமன்றத்தில் சிங்கள நாடாளுமன்ற உறுப்பினரொருவரால் சொல்லப்பட்ட செய்தி.

அதனால் முரளிக்களிக்கப்பட்ட கெளரவத்தை அப்படியே ஏற்று என்ற உங்கள் கூற்றை ஏற்கவியலாது. மற்றபடி நாமும் வாழ்த்துகிறோம்.

அக்னி
10-12-2007, 12:10 PM
மேலும் விவாதங்களைத் தவிர்க்கும் நோக்குடன் இத்திரி பூட்டப்படுகின்றது...

பொறுப்பாளர்
~அக்னி