PDA

View Full Version : ஏனிந்த தண்டனை..?!!இதயம்
10-12-2007, 03:59 AM
நேற்றிரவு எனக்கு கிடைத்த துன்ப மனநிலை, அதை ஆற்றிக்கொள்ள நான் தேடிய ஜீவனை மனதில் நினைத்து எழுதியது இது. இதை கவிதை என்று நான் ஒத்துக்கொள்ள மாட்டேன். ஆனால், இந்த வரிகளுக்குப்பின்னால் சொல்ல முடியா சோகம் உறைந்து கிடக்கிறது என்பது மட்டும் உண்மை. ஆறுதல் தேடி வந்திருக்கிறேன். அரவணைப்பீர்களா..?

அன்பை பெறவே உனை நாடினேன்-உன்
துன்பம் தரும் முடிவால் வாடினேன்.!

உன்னிடம் என்னை தந்தது தவறோ..?- இப்படி
என்னையே இழந்தது தான் உண்மை உறவோ.?!!

உன்னை காண என் மனம் சொல்லுகிறது-ஆனால்
உன் மௌனம் என்னை கொல்லாமல் கொல்லுகிறது

சொல்வதற்கு என்னிடம் ஒன்றுமில்லை-அவை
சொல்லில் அடங்கும் உணர்வுகளில்லை..!!

ஊண், உறக்கம் தொலைந்து போனது-பெண்ணே
உன்னால் என் கனவு கலைந்து போனது

என்ன நினைத்து என்னிடம் வந்தாயோ.?-மனதால்
என்னை கொல்ல தான் உன் அன்பை தந்தாயோ..??

கவிக்கும் எனக்கும் காத தூரம் நீ அறிந்தது..!-இனி
பாவி எனக்கு உன்னால் இனி அதுவும் பக்கம்..!!

பிரிவு அன்பை என்றும் பிரிப்பதில்லை - என்
பரிவு உன் மேல் என்றும் மரிப்பதில்லை

கண்ணின் இமையாய் நான் இருப்பேன்-என்
பெண்ணின் மனதை புரிந்து நடப்பேன்..!!

கலங்காதே கண்மணி.. காத்திருப்போம் - நம்மை
காலம் ஒன்றாய் கரை சேர்க்கும் வரை..!!

இரணத்துடன்,
இதயம்.

சிவா.ஜி
10-12-2007, 04:10 AM
முதலில் ஆறுதல் தேடி வந்த உள்ளத்துக்கு ஆறுதலோடு அரவணைப்பும் இங்கு கிட்டுமென்பதை மனமார சொல்லிக் கொள்கிறேன்.ஏற்பட்ட வேதனை எழுத்துக்களாய் பிரசவிக்கப்பட்டுவிட்டதால்...சுமை கொஞ்சம் குறைந்திருக்கும்.
காதல் மனது எப்போதுமே மிக மென்மையானது,சிறிய கீறலும் பெரிய வலியுண்டாக்கும்.ஆனால்....கடக்கும் மேகங்களாய் அதுவும் கடந்து போகும்.ரணப்படுத்தியதே, குணப்படுத்தும்.ஆறுதல் வேண்டி இங்கு நீங்கள் அளித்தக் கவி வலி சொல்கிறது.விரைவில் சரியாகுமென்று என் மனம் சொல்கிறது.

IDEALEYE
10-12-2007, 04:10 AM
வரிகளில் தங்களின் மனவேதனைகளும்
கலந்துவிட்டதால்
ஒருவித தள்ளாட்டம் தெரிகின்றது நண்பரே....
மனது எப்போதும் திடமாக இருந்தால்
சாதனைகள் வேலியுடைத்துப்பொறுவது
ஒன்றும் கஷ்டமில்லை....
ஐஐ

பூமகள்
10-12-2007, 06:59 AM
சேர்ந்த காதல் தொலைவில் உறவுகள்..!
வலி சொல்ல முடியா இதயம்..!
துடிப்பினுள்ளும் துணையின் நினைவு
துவண்டு அழுகையில்
தட்டிக் கொடுக்க இரவு மட்டும்
துணையாக..!

தூரங்கள் தொலைத்து
உயிர் அங்கிருக்க,
உடல் மட்டும் இங்கு
தொலைதூர மண்ணில்..!

காத்திருக்கும் காலம்
கரைந்துவிடும் நாளில் - நிச்சயம்
அன்பானவள் அருகிருப்பாள்.

கவலை மறந்து
கண்ணுறக்கம் கொள்ள
காதல் துணையிருக்கும்..!

ஆஹா... இதயம் அண்ணா...!
கலக்கலான கவிதை..! இத்தனை நாள் இந்தத் திறமையைத் தான் ஒளித்து வைத்துக் கொண்டிருந்தீங்களா??

வலி சொல்லும் வரிகள்..!
செதுக்கிய விதம் அருமை. வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள் இதயம் அண்ணா.

இன்னும் பல கவிதைகள் படையுங்கள். படிக்க காத்திருக்கிறேன் உங்கள் தங்கை பூ.:icon_b:

ஷீ-நிசி
11-12-2007, 02:59 PM
ரொம்ப பிரமாதம்...

அதிலும் இவ்வரிகள்..

கவிக்கும் எனக்கும் காத தூரம் நீ அறிந்தது..!-இனி
பாவி எனக்கு உன்னால் இனி அதுவும் பக்கம்..!!

பிரிவு அன்பை என்றும் பிரிப்பதில்லை - என்
பரிவு உன் மேல் என்றும் மரிப்பதில்லை


இதயம் இந்தக் கவிதை படித்தபின் எனக்கு சில வரிகள் தோன்றியிருக்கிறது. விரைவில் வடிவத்தில் இடுகிறேன்...

நன்றிகளும்! வாழ்த்துக்களும்!

அமரன்
11-12-2007, 03:31 PM
துடிக்கும் உங்கள் ஜீவனுக்கு மடியாக எங்கள் ஜீவன் இருக்கும் இதயம்..
கவிதையைப் படித்ததும் நிறைய தோன்றியது. ஏனோ சொல்ல முடியவில்லை..

மனோஜ்
11-12-2007, 03:37 PM
பிரிவுகள் என்று நிலைப்பதில்லை
நிலைத்த அன்பு மாறுவதில்லை
மாறும் காலம் மாற்றங்கள்நிகழ்த்தும்
மாறிவரும் துன்பம் காத்திருந்தால்
மாறாது வரும் அன்பு

காத்திருங்கள் நினைத்த அனைத்தும்நடக்க வாழ்த்துக்கள்

சுகந்தப்ரீதன்
13-12-2007, 07:46 AM
உன்னை காண என் மனம் சொல்லுகிறது-ஆனால்
உன் மௌனம் என்னை கொல்லாமல் கொல்லுகிறது

சொல்வதற்கு என்னிடம் ஒன்றுமில்லை-அவை
சொல்லில் அடங்கும் உணர்வுகளில்லை..!!
.
அன்பின் ரணத்தை அழகாய் சொன்ன வரிகள்... கலக்கல் இதயம் அண்ணா.. இது கவிதை அல்ல..காவியம்..இதயத்தின் ஓவியம்... வாழ்த்துக்கள் அண்ணா..!