PDA

View Full Version : தண்ணீர் பால் நினைவுபடுத்திய சம்பவம்...........

leomohan
09-12-2007, 04:54 PM
Full Cream பால் வாங்குவது தான் வழக்கம். அதாவது வாங்கினால். இல்லையென்றால் Powder பால் தான். காரணம் bachelor lifeல் அவர்கள் சொல்லும் expiry dateக்குள் முழு litreஐயும் குடிப்பது சாத்தியம் அல்லவே. Full Cream பால் கொழுப்பு தான் என்று சொல்வது காதில் விழுகிறது. காரணம் சுவைக்காக மட்டுமல்ல. மீண்டும் அதில் தண்ணீர் தான் கலக்கப்போகிறேன். இருந்தாலும் தண்ணீர் பாலில் அதாவது skimmed milkல் சுவையே இல்லை. வெறும் சுடுநீரில் காபி கலந்தது போல் இருக்கும்.

இன்றும் மாலை அலுவலகம் விட்டு வந்தவுடன் பாலை தண்ணீரில் கலந்து சுடவைத்து ஒரு காபி கலந்தேன். சே, நிறைய தண்ணீர் கலந்துவிட்டேன் போலிருக்கிறது. இதுபோல தண்ணீர் காபி நான் டிரெயினிலும் குடித்ததில்லை. கடைசியாக எப்போது இதுபோல தண்ணீர் காபி குடித்தேன் என்று யோசித்தபோது இந்த சம்பவம் என்னை பல ஆண்டுகளுக்கு பின்னால் கொண்டு சென்றது.

அப்போது நான் 11வது வகுப்பில் இருந்தேன். நாகப்பட்டினத்தில் படித்து வந்தேன். எல்லா இளைஞர்களை போல தேசப்பற்று, புரட்சி, ஏழ்மையை கண்டால் எழுச்சி, நாட்டிற்கு நல்லது செய்யும் எண்ணம், அடிமட்டத்து மக்களை உயர்த்த வேண்டு்ம் என்ற எண்ணம் எல்லாம் இருந்தது. சிறுவயதில் எல்லோருக்கும் இருப்பது தானே. பெரியவர்கள் ஆன பிறகு தானே சுயநலம் தொற்றிக் கொள்கிறது.

வீட்டிற்கு அருகில் ஒரு சிறிய குடிசை. அதன் முன்னால் ஒரு பெட்டிக் கடை. பெரிய பொருட்கள் எதுவும் கிடைக்காது. ஏதாவது சிறிய சிறிய பொருட்கள் கிடைக்கும். எப்போதும் அங்கு செல்வது கிடையாது. எப்போதாவது சிறிய சிறிய சமையல் பொருட்கள் வேண்டும் என்றால் வீட்டில் அனுப்புவார்கள்.

அவ்வாறு ஒரு முறை சென்ற போது 10 ரூபாய் நீட்டி ஏதோ கேட்டேன். அங்கு ஒரு பாட்டி இருப்பார். அன்று சில்லறை இல்லை போலும் தன் மகளை சில்லறை வாங்க அனுப்பினார். வெயில் அதிகமாக இருந்ததால் குடிசைக்குள் வந்து நின்றுக் கொள்ளும்படி கூறினார். அருகாமை இடங்களுக்கு செருப்பு போடாமல் சென்ற காலம் அது.

குடிசைக்குள் நின்ற நான் அந்த பாட்டியின் பேரன் புத்தகங்களை வைத்து படித்துக் கொண்டிருந்ததை பார்த்தேன். நம் சிறுவயதில் நோட்டு புத்தகங்களின் ஓரங்கள் சுருண்டு கிழிந்திருக்கும் அல்லவா. அதுபோல அவனுடைய புத்தகங்களும் இருந்தது. ஐந்தாவது படித்துக் கொண்டிருந்தான். நான் பெரியவன் இல்லையா. புத்தகங்களை எப்படி பராமரிப்பது என்று ஒரு இலவச ஆலோசனை தந்தேன்.

அந்த பாட்டி கவனித்துக் கொண்டிருந்தார். தன் மகளை மாப்பிள்ளை விட்டுவிட்டதாகவும் இந்த குடிசை தவிர வேறு ஒன்றுமே அவர்களுக்கு சொத்து இல்லையென்றும் அவருடைய மகள் சில வீடுகளில் வீட்டு வேலை செய்வதாகவும் அவர்கள் இருவரும் வாழ்வதே இந்த சிறுவனை படிக்க வைக்கத்தான் என்பதையும் சோகமாக சொன்னார். நேரம் கிடைக்கும்போது அவனுக்கு படிப்பு சொல்லிக் கொடுத்தால் மிகவும் நன்றியுடையவராக இருப்பார் என்றும் சொன்னார்.

நானும் அந்த சிறிய தொண்டு செய்யும் வாய்ப்பு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சியடைந்தேன். நான் பலமணி நேரம் படிக்கும் வழக்கம் கொண்டிருந்தால் முன்னும் பின்னும் நேரம் ஒதுக்குவதில் ஒன்றும் பிரச்சனையில்லை என்று நினைத்து ஏற்றுக் கொண்டேன். வாரம் மூன்று முறை அந்த சிறுவனுக்கு பாடம் சொல்லித் தருவேன்.

அந்த சிறுவன் அரசாங்க பள்ளியில் படித்ததாலோ என்னவோ ஆங்கிலம் குறைவாகவே அறிந்திருந்தான். நானும் அராசங்க பள்ளித்தான் இருந்தாலும் ஆங்கிலம் விருப்பமான பாடம். கணிதம் நமக்கு வீக். இருந்தாலும் அவனுடைய பாடம் சொல்லித் தருவதில்லை ஒன்றும் பெரிய கஷ்டம் இல்லை.

குடிசைக்குள் சென்று அமர்ந்து அவர்கள் வாழும் வாழ்கையை அருகாமையில் பார்த்து பாதிப்படைந்ததெல்லாம் ஒரு காலம். மிகவும் குனிந்து சென்றால் தான் உள்ளே நுழைய முடியும்.

ஒவ்வொரு முறை நான் பாடம் நடத்த வரும்போதும் ஒரு பால் ஒரிரு கடலை உருண்டைகள் தருவார். நான் எத்தனை மறுத்தாலும் இவையிரண்டும் கட்டாயம் உண்டு. காசு கொடுப்பதற்கு பதிலாக தன்னால் முடிந்ததை செய்ய வேண்டும் என்று நினைத்தார் போலும் அந்த பாட்டி. நானும் அவர்களுடயை அன்புக்கு கட்டுப்பட்டு அதை ஏற்றுக் கொள்வேன்.

பால் என்று அவர்கள் நினைத்துக் கொள்வார்கள் போலும். மீன்களை விட்டால் நீந்தும் அளவிற்கு தண்ணீர் தான். ஒரு சொட்டு பாலிற்கு ஒரு டம்பளர் தண்ணீர் ஊற்றுவார்கள் போலும். வீட்டிற்கு வந்து கெட்டிப்பாலில் காபி குடிக்கும் போது அந்த நிஜத்தை மனம் ஏற்றுக் கொள்ள மறுக்கும். ஒரு புறம் மாடமாளிகையும் மறுபுறும் தரையை தட்டும் குடிசைகளும் ........யாரை குற்றம் சொல்வது.

இன்று தண்ணீர் பால் குடித்ததும் அந்த ஞாபகம் வந்து என் நெஞ்சை அடைத்துக் கொண்டது. கணினியை இயக்கி உங்களுடன் பகிர்ந்துக் கொள்ளத் தோன்றியது.

ஓவியன்
09-12-2007, 06:18 PM
மோகன் நீங்கள் என்னதான் கெட்டிப் பால் எத்தனை டம்ளர் குடித்தாலும் அன்று அந்த ஏழைச் சிறுவனுக்கு கல்வி புகட்டி அவர்தம் மனம் மகிழ்ந்து தந்த அந்த தண்ணீர் பாலுக்கு ஈடாகதல்லவா...?!!

அந்த பாலில் பாலினளவு குறைந்திருக்கலாம் ஆனால், அன்பு, உழைப்பு, வந்தோரை வரவேற்ற்கும் தமிழ் பண்பு என நிறைந்து காணப்படுகிறதே....

அதனை பருகக் கிடைத்த நீங்கள் கொடுத்துவைத்தவரே, அந்த குடும்பத்தின் வாழ்த்துக்களே போதும் உங்களை வாழ்க்கையில் உயர வைக்க...

நல்ல மனிதாபிமானமிக்க நல்ல நண்பருடன் சேர்ந்து இந்த மன்றில் பயணிப்பதில் எனக்கும் கொள்ளை மகிழ்சி மோகன்...!! :icon_b:

மனோஜ்
09-12-2007, 06:30 PM
வாழ்த்துக்கள் மோகன் சார் சில வேலைகளில் சில மனநிலைகள் மாறிய வாழ்க்கை மனதில் நிழலிடும் அதை பகிந்தது அருமை நன்றி

leomohan
09-12-2007, 06:39 PM

ஆம் ஓவியன். தானாக வாங்கி தங்கத் தட்டில் உண்டாலும் பிறர் உவந்து மண் தட்டில் தரும் உணவின் சுவையே அதிகம்.

leomohan
09-12-2007, 06:40 PM
வாழ்த்துக்கள் மோகன் சார் சில வேலைகளில் சில மனநிலைகள் மாறிய வாழ்க்கை மனதில் நிழலிடும் அதை பகிந்தது அருமை நன்றி

நன்றி மனோஜ். இறந்த காலம் இறந்து போவதில்லை. நம்மை இழுத்து இழுத்து நிகழாகிக் கொண்டிருக்கும் நினைவுகள்.

செல்வா
09-12-2007, 07:59 PM
மனப்பால் குடிக்காதே கேட்டிருக்கிறோம்..... இது மனதை விட்டு அகலாத பால்....

ஷீ-நிசி
10-12-2007, 03:06 AM
ஒரு பால் உங்களின் நினைவுகளை பின்னோக்கி இழுத்துச் சென்றிருக்கிறது.

இறைக்கிற கிணறு சுரக்கும்..
அன்று பள்ளி பாடங்களை நீங்கள் கற்றுக்கொடுத்தீர்கள்...
வாழ்க்கை பாடங்களை கற்றுக்கொண்டீர்கள்..

எங்கள் மனமும் ஒருகணம் இலேசானது!

நன்றி மோகன் ஜி!

சிவா.ஜி
10-12-2007, 03:55 AM
ஒரு வேளை உணவுக்கே கஷ்டப்படும் குடும்பத்தார்,உதவிசெய்ய வந்தவருக்கு ஏதாவது கொடுத்தே ஆக வேண்டுமென்ற உயர்ந்த எண்ணம் கொண்டிருந்தது நெகிழவைக்கிறது.எத்தனை பெரிய உதவி செய்தாலும்,அதையெல்லாம் மறந்து சுயநலத்தோடு வாழும் கூட்டத்தினரிடையில் வாழும் நமக்கு....இந்த அன்பு உள்ளம் ஆறுதலிக்கிறது.பகிர்ந்துகொண்ட சம்பவம் படிப்பினை தருகிறது.நன்றி மோகன்.

IDEALEYE
10-12-2007, 04:27 AM
கதையில் பாடங்கள் உள்ளன.....
பாடங்களில் படிப்பினைகள் உள்ளன
நன்றி பால் கதைக்கு மோகன்
ஐஐ

lolluvathiyar
10-12-2007, 05:49 AM
இளம் வயதில் உங்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து இருக்கும் அருமையான அனுபவம், அது ஏதாவது ஒரு சந்தர்பத்தில் நினைவில் வந்து விடுகிறது. உங்களுக்கு சின்ன வயதிலேயே சேவை உனர்வு இருந்திருப்பது கேட்க சந்தோசமாக இருகிறது.

எல்லா இளைஞர்களை போல தேசப்பற்று, புரட்சி, ஏழ்மையை கண்டால் எழுச்சி, நாட்டிற்கு நல்லது செய்யும் எண்ணம், அடிமட்டத்து மக்களை உயர்த்த வேண்டு்ம் என்ற எண்ணம் எல்லாம் இருந்தது. சிறுவயதில் எல்லோருக்கும் இருப்பது தானே. பெரியவர்கள் ஆன பிறகு தானே சுயநலம் தொற்றிக் கொள்கிறது.

மிக சரியாக சொன்னீர்கள், பெரியவர்கள் ஆனதும் நாம் சேவை செய்வதை நிறுத்தி விடுவதற்க்கு இன்னொரு காரனமும் உன்டு, சேவை என்பது கடலில் கறைக்கபடும் பெருங்காயம் என்பதையும் உனர ஆரம்பித்து விடுகிறோம்.

அன்புரசிகன்
10-12-2007, 05:58 AM
நல்ல பகிர்வு மோகன்... வாழ்க்கைக்கு தேவையான பாடம் ஒன்று உங்கள் பகிர்வில் உள்ளது. நன்றி.

leomohan
10-12-2007, 07:50 AM
மனப்பால் குடிக்காதே கேட்டிருக்கிறோம்..... இது மனதை விட்டு அகலாத பால்....

நன்றி செல்வா.

leomohan
10-12-2007, 07:52 AM
ஒரு பால் உங்களின் நினைவுகளை பின்னோக்கி இழுத்துச் சென்றிருக்கிறது.

இறைக்கிற கிணறு சுரக்கும்..
அன்று பள்ளி பாடங்களை நீங்கள் கற்றுக்கொடுத்தீர்கள்...
வாழ்க்கை பாடங்களை கற்றுக்கொண்டீர்கள்..

எங்கள் மனமும் ஒருகணம் இலேசானது!

நன்றி மோகன் ஜி!

ஆம் ஷீநிசி. நம் மனம் ஒரு கன்னி வெடி போல. எதை தொட்டால் பழைய நினைவுகள் வெடிக்கும் என்பது தெரியாது.

கண்ணியா கன்னியா. சொற்பிழை இருக்கிறதா?

leomohan
10-12-2007, 07:53 AM
ஒரு வேளை உணவுக்கே கஷ்டப்படும் குடும்பத்தார்,உதவிசெய்ய வந்தவருக்கு ஏதாவது கொடுத்தே ஆக வேண்டுமென்ற உயர்ந்த எண்ணம் கொண்டிருந்தது நெகிழவைக்கிறது.எத்தனை பெரிய உதவி செய்தாலும்,அதையெல்லாம் மறந்து சுயநலத்தோடு வாழும் கூட்டத்தினரிடையில் வாழும் நமக்கு....இந்த அன்பு உள்ளம் ஆறுதலிக்கிறது.பகிர்ந்துகொண்ட சம்பவம் படிப்பினை தருகிறது.நன்றி மோகன்.

ஆம் இருக்கும் போது கொடுக்கும் குணம் இருப்பதும் இல்லாத போது கொடுக்கும் குணம் இருப்பதும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று.
நன்றி சிவா.

leomohan
10-12-2007, 07:56 AM
கதையில் பாடங்கள் உள்ளன.....
பாடங்களில் படிப்பினைகள் உள்ளன
நன்றி பால் கதைக்கு மோகன்
ஐஐ

நன்றி நண்பரே.

leomohan
10-12-2007, 07:57 AM
மிக சரியாக சொன்னீர்கள், பெரியவர்கள் ஆனதும் நாம் சேவை செய்வதை நிறுத்தி விடுவதற்க்கு இன்னொரு காரனமும் உன்டு, சேவை என்பது கடலில் கறைக்கபடும் பெருங்காயம் என்பதையும் உனர ஆரம்பித்து விடுகிறோம்.

ஆம் வாத்தியார். நீங்கள் சொல்வது சரிதான். சில நேரத்தில் மக்கள் நம்முடைய உதவி செய்யும் எண்ணத்தை தவறாக பயன்படுத்தும்போது வருத்தம் தருகிறது.

leomohan
10-12-2007, 08:00 AM
நல்ல பகிர்வு மோகன்... வாழ்க்கைக்கு தேவையான பாடம் ஒன்று உங்கள் பகிர்வில் உள்ளது. நன்றி.

நன்றி அன்புரசிகன். நல்ல எண்ணங்கள் நீராவி போல. விரைந்து மறைந்துவிடுகிறது. தீய எண்ணங்கள் புகை போல படர்ந்து நிரந்தரமாகிவிடுகிறது. இதன் நடுவில் தான் போராட்டமே.

பூமகள்
10-12-2007, 05:48 PM
அருமையான சேவை அண்ணா..!
உங்களின் இந்த செயல் என்னையும் கொஞ்சம் என் பழைய நினைவுகளுக்கு இட்டுச் சென்றது.
இது போல், நான் செய்த ஏதேனும் ஒரு நல்ல காரியம் நினைவிருக்கிறதா என்று யோசிக்க வைத்து விட்டீர்கள்.
நல்லதொரு பகிர்வு. பாராட்டுகள்.
அனைத்தையும் மறக்காமல் பதித்ததற்கு நன்றிகள் அண்ணா. :)

மலர்
11-12-2007, 01:14 AM
நல்ல பகிர்வு மோகன் அண்ணா...
இப்போதெல்லாம் உங்களை அடிக்கடி காணோமே ..
ஏன்.??