PDA

View Full Version : ஏக்கத்துடன் காதலி



mdjmeeran
09-12-2007, 01:34 PM
அவள் யாரையும் காதலிக்க தயார்
வயது வரம்பு விதி விலக்கு
அவள் இளமை குறைவதே இல்லை
சாதி மத பேதம் இல்லாத காதலில் அவள்

ஆசையோடு அறிமுகமானால்
அவள் ஒரு சிறந்த அனுபவம்
நீந்தி திரிய ஒரு வற்றாத ஜீவ நதி அவள்

ரசிக்க கொட்டிக்கிடக்கிறது நிறைய விசயங்கள் அவளிடம்

அவளின் காதல் வெள்ளத்தில் மூழ்கி
புறன்ட காதலன் புதுமை பெறுகிறான்
விடாது கரம் பிடித்த காதலனை
உலகில் பறை சாற்றாமல் விட்டதில்லை அவள்

அவள் இளமையின் வலிமை
அவள் காதலனையும் வலிமையாக்குகிறது
காதலித்தவனோடு சங்கமமாகி
காதலுக்கு பெருமை சேர்க்கிறாள் அவள்

தன் காதலனை தன் நிலையிலிந்து
உயர்த்திய தன் காதல் பலத்தினால்
காதல் கீதல் என்ற அடைமொழிக்கு
அப்பார்பட்டவளாய் அவள்

பழி விமர்சனம் பரிகாசம் அத்தனையையும்
மிரன்டு அதிசயக்க
தன் காதலனின் குலத்தையும் உயர்துகிற
வலிமையில் சிறிதும் கலங்காமல் அவள்

யார் தான் அவள், அவளைக் காதலிக்க
அவள் தேவை, அவள் காதல் தேவை


அவளை காதலிக்க கடிதம் கூடவா தேவை இல்லை!

புன்னகைத்தவளாய், அலங்காரமாய், புதுமையாய்
தன்னை அரிமுகப்படுத்தினாள் அவள் பெயர்

"அறிவியல்" என்று........

தமிழ் குடியில் காதலனை தேடிய ஏக்கத்தோடு அவள்

நன்றி
ஏக்கத்தோடு.......
தமிழ் குடியில் அறிவியல் மேதாக்களை எதிர்பார்த்தவனாய்

மீரான்

பகுருதீன்
09-12-2007, 02:10 PM
படிக்கிறதுக்கு நல்லாதான் இருக்கு ஆனா அர்த்தம்தான் புரியல

ஆதி
10-12-2007, 04:03 AM
அப்துல் கலாம் போன்ற நல்லக் காதலர்களை அவள் பெறாமல் இல்லை..

வாழ்த்துக்கள் மீரான்..

-ஆதி