PDA

View Full Version : அறிவியலும் தமிழும்



mdjmeeran
09-12-2007, 08:39 AM
அறிவியலும் தமிழும்
அறிவியல், எங்கும் அறிவியல், எதிலும் அறிவியல். வாழ்க்கையே அறிவியல்.

அறிவியலின் இலக்கணத்தை நோக்கும் பொழுது "அறிவியல் என்பது ஒரு ஒழுங்கு முறைப் படுத்தப்பட்ட வழியில் அல்லது ஆராய்ச்சியின் அடிப்படையில் அறிவை பெறுவது அல்லது பெருக்குவது எனக் கொள்ளப்படும்". ஆகவே அறிவியலுக்கு அடித்தளமே ஆராய்ச்சி தான்.

ஆராய்ச்சியின் அவசியத்தை உணர்ந்து அதைப் பற்றி அறிய முற்படும் பொழுது, "ஆராய்ச்சி என்பது மனிதன் சில விசயங்களை புரிந்து கொள்ளவோ, கண்டுப்பிடிக்கவோ, கண்டுபிடித்த சில விசயங்களை திருத்தி அமைக்கவோ, மேம்படுத்தவோ ஒரு குறிப்பிட்ட வழியில் முயற்சி செய்வது" எனலாம். மனித அறிவின் அடையாளத்தை, வலிமையை மனிதனுக்கு உணர்த்தும் செயலாக ஆராய்ச்சி உள்ளது. இதை காலம் தொட்டே முயன்று வரும் சமுதாயங்கள் இன்று அறிவியல் உலகில் சிறந்து விளங்குகின்றன.

இத்தகைய அறிவியல் ஆராய்ச்சியில் தமிழர்களான நமது நிலை என்ன? என்ற அடிப்படை உண்மையை உணர வேன்டிய கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம். நாம் நினைவு கொள்ளும் பொருட்டு எத்தனை தமிழ் அறிவியல் மேதாக்கள் உள்ளனர் என எண்ணிப் பார்தல் விரல் விட்டு எண்ணும் அளவிற்கே பட்டியல் உள்ளது. குறிப்பாக சொல்லப் போனால், சுப்பிரமனியம் சந்திரசேகர், அப்துல் கலாம், சர் சி வி ராமன், சீனிவாச ராமானுஜம், கஸ்தூரி ரங்கன் மற்றும் சில பெருமாக்கள்.

மனதினுள், உலகில் மிகப் பழம்பெரும் சமுதாயமக நினைக்கும் நமக்கு இந்த சில அறிவுப் பெருமாக்கள் போதுமா என்ற கேள்வி எழுந்திருக்க வேன்டும் அல்லது அறிவியல் வேட்கை நம்மிடையே தணிந்திருக்க வேன்டும். இதில் ஏதோ ஒன்று உண்மை. அறிவைச் சார்ந்த அறிவியல் இன்று பொருளதார வளர்ச்சிக்கு இன்றியமையாததாக இருக்கின்றது.

நாம், நமது பொருளாதர வளர்ச்சிக்காக நாடு விட்டு, கண்டம் நிட்டு எங்கெல்லாமோ சென்று உழைத்துக் கொண்டிருக்கின்றோம். இந்த நிலை மாறாதா? மாற்றத்திற்கான ஏற்பாடு தான் என்ன? என்ற ஏக்கம் நமக்கு மன அளவில் இருக்கத்தான் செய்கிறது.

யாரல் இந்த மற்றம்? எப்படி ஏற்படும்?

நாம் தான் இந்த மற்றத்திற்கான படிக்கற்கள். நாம் செய்ய வேன்டிய கடமைகள் அதிகமாக உள்ளது. இது ஒரு சமுதாய தொன்டு. இந்த தொன்டு செய்ய நாம் பணமோ, நன்கொடையோ தரத் தேவையில்லை.
முதல் கட்டமாக, நமது பிள்ளைகளை சிறந்த முறையில் படிக்க வைக்க வேன்டும். அறிவியல் தாகத்தை அவர்களிடம் ஏற்படுத்த வேன்டும். அவர்களுடைய அன்றாட விசயங்களில் கலந்துரையாட வேன்டும். அறிவியல் குழுமங்கலை ஊர் ஊராக அமைக்கும் பணியில் முயற்சி செய்ய வேன்டும். எந்த விசயங்களைப் பற்றி பேசினாலும் அதை அறிவியலோடு இணைத்துக் கூற வேன்டும். உலகிலுள்ள மேம்பட்ட அதி நவீன தொழில் நுட்ப சாதனங்கள் கிடைத்த பெருமையில் இளைய தலைமுறையினர் இருந்து விடாமல் பார்த்துக் கொள்ளவேன்டும். வெறும் உபயொகிகளாக மட்டுமில்லாமல் அதை கன்டுப்பிடிப்பதினால் ஏற்படும் ஆக்கபூர்வமான சமுதாய வளர்ச்சியைப் பற்றி எடுத்து கூற வேன்டும். இப்படியாக நமது முயற்சி காலம் தொட்டு நமது சமுதாயத்திடம் தொடர வேன்டும்.

இதை செய்ய ஒரு குறிப்பிட்ட நாள் தேவையில்லை. படிக்கும் இளைய தலைமுறையினரை அவர்கள் சிறந்த முறையில் அதிகமாக படிக்க தூண்ட வேன்டும். அவர்களுக்கு தேவைப்படும் மேல் கல்வி வழி நடத்தலை மேற்கொள்ளவேன்டும். எத்தனை துறைகள் இருக்கின்றது, எதை தேர்ந்தெடுக்கலாம் என்பதை கூட தெரியாமல் நிறைய மாணவர்கள் உள்ளனர். அவர்களுக்கு சிறிய அளவிளாவது வழி காட்டலாம். குறைந்த பட்சம் ஊக்கமாக பெசலாம்.

இதை மனதளவில் உறுதி பூன்டு உடனே செயல் பட வேன்டும். இதை செம்மையோடு செய்வோமானல் நமது தமிழ் சமுதாயமும் உலகில் சிறந்து விளங்குவதோடு மட்டுமல்லாமல் அறிவியலும் தமிழும் வேறல்ல என்ற நிலையும் உருவாகும் என நம்பிக்கை கொள்ளலாம்.

எதிர் வரும் உலகில் நாமும் செழித்த குடி.

நன்றி
எதிர்பார்ப்புடன்

மீரான்.

ஆன்டனி ஜானி
12-12-2010, 03:04 AM
அறிவியல் என்பது ஆராய்ச்சிக்கும் மட்டும் தான்
என்பது குறிப்பிடதக்கது
மன்றத்தில் இணைந்து இன்னும் படையுங்கள் .......

வாழ்த்துக்கள் .........

கௌதமன்
12-12-2010, 08:25 AM
தத்துவங்களேஅறிவியல் உண்மையாக அரிஸ்டாட்டில் காலத்தில் இருந்தது.
கலிலியோ அதை ஆராய்ச்சிகள் செய்து அரிஸ்டாடிலின் பெரும்பான்மையான தத்துவங்களை மறுத்தார். கலிலியோவின் தொடர்ச்சியாக நியூட்டன் கணித்தின் அறிவால் சூத்திரங்கள் மூலம் அறிவியல் உண்மைகளை மெய்ப்பித்தார். ஐன்ஸ்டீன் அதனினும் மேம்பட்ட பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றியக் கருத்துக்களை வெளியிட்டார்.

தெளிவானக் கல்வியும், புதியச் சிந்தனையும், ஆராய்ச்சியுமே உண்மைகளைக் கண்டறியும்.

அதனால் தான் வள்ளுவர் ‘கற்க கசடற’ என்கிறார்.

Hega
12-12-2010, 09:00 AM
சிந்திக்க வேண்டிய விடயம் என்ன வென்றாலும் உலகின் தொன்மையான மொழியென போற்றப்படும் தமிழில் நம் முன்னோர்களால் சாஸ்திரம் சம்பிரதாயம் என சொல்லபட்ட பல அரிய விடயங்கள் அறிவியல் ரிதியாக ஒத்து போனாலும் அதை அறிதியிட்டு சொல்ல யாரும் முன்வராததனாலேயே பல அறிவியல் விடயங்கள் நமக்குள் தெளிவில்லாமல் இருக்கிறது..

அறிவியல் என்பது ஆராய்ச்சிக்கு மட்டுமல்ல.. ஒவ்வொரு மனிதனும் அறிய வேண்டியது.. ஏன் எதற்கு எப்படி என தாம செய்யும் ஒவ்வொரு செயலையும் ஆராய்ந்தறிந்த தனிமனிதனை கொண்ட சமுதாயம் தனனை மட்டுமல்ல தன் நாட்டையும் உயர்த்தும்.



நான் தெளிவாக சொல்வேன் அறிவியல் என்பது நமக்கு தெரியாமல் நமக்குள் மறைந்துள்ளதே..

உங்களுக்கான சிறிய விளக்கத்தோடு மேலும் தொடர்வேன்....

Hega
12-12-2010, 09:09 AM
கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என் நம் முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள் அது ஏன்....

கூடிய மழை வீழ்ச்சியுள்ள காலங்களில் இடி விழும் கவனம் எனக் கூறுவர். இதன் காரணம் என்ன தெரியுமா. ......




அறிவியல் விளக்கத்தோடு...

இடி என்பது இரும்புத்துண்டு போல் விழும் பொருள் அல்ல. அதாவது மேகங்களில் சேர்ந்*திருக்கும் ஆயிரக்கணக்கான கிலோவோல்ட் மின் சக்தி பூமியில் உயரமான பொருளுடன் கடத்தப்படுவதையே இது குறிக்கும்.

மின்னல் என்பதே மின்சாரத்தைக் குறிப்பதே...அடர் ஈர மேகங்களில் மின்சாரம் உலவிக் கொண்டே இருக்கும். அந்த மின்சாரம் உள்ளுக்குள்ளே மேலும் கீழுமாக அசையும். பொதுவாக மேகத்தின் மேல்பகுதியில் நேர் மின்சாரமும் (பாசிடிவ்), கீழ் பகுதியில் எதிர் மின்சாரமும் (நெகட்டிவ்) இருக்கும்.


http://i705.photobucket.com/albums/ww55/nishanthi_04/nishanthi/800px-LightningOverMiramareDiRimini.jpg



நேர் எதிர் மேகங்கள் அருகருகே வரும்போது மேகங்களுக்கிடையே மின்னல் உருவாகுவதனால் தான் மழைக்காலங்களில் மின்னல் மேகங்களுக்கிடையில் மின்னி மின்னி மறைகின்றது.. மேகத்தில் இருக்கும் மின்சாரம் பூமிக்கு வர வேண்டுமானால் மேகத்தின் கீழ்பகுதியில் இருக்கும் எதிர்மின்சாரத்தை பூமியிலிருக்கும் ஏதேனும் நேர் மின்சாரம் ஈர்த்தால் மட்டுமே மின்னல், இடி எல்லாம் உருவாகும்

http://i705.photobucket.com/albums/ww55/nishanthi_04/nishanthi/Lightnings_sequence_2_animation.gif




நிஜத்தில் வானத்திலிருந்து மின்னல் பூமிக்கு வராமல் பூமியிலிருந்தே வானத்துக்குச் செல்கிறது இந்த மின்சாரகடத்திலின் போது ஏற்படும் வெப்பத்தால் காற்றில் ஏற்படும் மாற்றம் துளையையும் அதிர்வையும் உருவாக்க்குவதால தான் இடிச்சத்தம் உருவாகின்றது.

பூமிக்கும் வானுக்கும் ஒரு நேர் மின் தொடர்பு கிடைக்காவிட்டால் மின்னலோ இடியோ உருவாகாது. ஆனாலபூமியில் இருக்கும் மின்சார கொடிக்கம்பம் அல்லது ஏதாவது ஒருபெரிய மரம பூமியிலிருந்து மின்சாரத்தை வானுக்கு கடத்தி விடும. அதைதொடர்ந்தே மின்னல் மூலம் மின்சாரம் பூமிக்கு கடத்தப்படும்.


http://i705.photobucket.com/albums/ww55/nishanthi_04/nishanthi/400px-Lightning_over_Oradea_Romania.jpg



அதனால் தான் பெரிய பெரிய கட்டடங்களில் மேல் இடி தாங்கி வைத்து கட்டுவதற்கு அறிவுறுத்தப்படுவார்கள். இடிதாங்கி மேகத்திலிருந்து வரும் மின்சாரத்தை அருகிலுள்ள பகுதிகளில் விழாமல் பாதுகாப்பதோடு பூமிக்கு அடியில் அதைக் கடத்தியும் விடும்


இடியும் மின்னலும் ஒரே நேரத்தில் உருவானாலும் ஒளியானது ஒலியை விட வேகமாய் பயணிப்பதால் தான் வெளிச்சம் முதலில் தெரிகிறது, ஒலி பின்னால் வருகிறது. ஒளியின் வேகமான வினாடிக்கு 186,000 மைல்கள் எனும் வேகத்துடன் ஒப்பிடுகையில் ஒலியின் வேகம் நத்தையின் வேகம் தான்



இடி தாங்கி குறித்தும் கோயில்களில் ஏன் இடி தாக்குவதில்லை என்பது குறித்தும் அடுத்த பதிவில் காண்போம்...

Hega
12-12-2010, 09:29 AM
இடி தாங்கி அல்லது மின்னல் கடத்தி (lightning conductஒர்) எப்படி செயல் படுத்தப்படுகின்றது என்பதை இங்கே
காணலாம்.


[COLOR="Blue"][B]இச்சாதனம் இடிதாங்கி அல்லது மின்னல் கடத்தி (lightning conductor) என்று அழைக்கப்படுகிறது. இது மேல்பக்கம் கூர்மையான வடிவில் அமைந்த ஓர் உலோகத்தண்டு (metal rod). அடிப்பாகம் தரையில் புதைக்கப்பட்டு, மேல் பகுதி விண்ணை நோக்கி அமையுமாறு, கட்டடத்தின் கூரைப்பகுதியில் இது பொருத்தப்பெறும்


http://i705.photobucket.com/albums/ww55/nishanthi_04/aktif_paratoner_tesisat_semasi_poli.jpg?

Hega
12-12-2010, 09:34 AM
ஒரு கட்டடம் அமைக்கப்படும் போது



http://i705.photobucket.com/albums/ww55/nishanthi_04/nishanthi/paratoner_tesisat_semasi_1.jpg


http://i705.photobucket.com/albums/ww55/nishanthi_04/nishanthi/forend_paratoner_tesisat.jpg

Hega
12-12-2010, 09:35 AM
உயர்ந்த கட்டடங்களில் அமைக்கப்படும் இடி தாங்கி

http://i705.photobucket.com/albums/ww55/nishanthi_04/nishanthi/faraday_uygulamasi.jpg



http://i705.photobucket.com/albums/ww55/nishanthi_04/paratoner_tesisat_semasi_camiler_ic.jpg?

Hega
12-12-2010, 09:41 AM
மின்னூட்டம் பெற்ற மேகக்கூட்டம் உயர்ந்த கட்டடங்கள் மீது செல்லும்; அப்போது மேகங்களிலிருந்து வெளிப்படும் மின்சாரம் கட்டடத்தின் மேலுள்ள மின்னல் கடத்தி அல்லது இடிதாங்கி வழியே பூமிக்குக்குச் சென்று விடும்; இதனால் மின்தாக்குதலில் இருந்து கட்டடம் காப்பாற்றப்படுகிறது


http://i705.photobucket.com/albums/ww55/nishanthi_04/nishanthi/aktif_paratoner_tesisat_semasi.jpg

Hega
12-12-2010, 09:42 AM
இடிதாங்கி எவ்விதத்தில் வேலை செய்கிறது? ஆகாயத்தில் உள்ள மேகங்களின் அடிப்பரப்பில் நேர்மின் (+) தோன்றுவதாக உதாரணத்துக்கு வைத்துக் கொள்வோம். அப்போது தரையில் எதர்மின் (-) தோன்றும். இந்த மின்னானது கூர்மையாக உள்ள பகுதிகளில் திரண்டு நிற்கும் தன்மையுடையது. கூர்மையான பகுதிகளில் காற்று துகள்கள் படும்போது அவற்றிலிருக்கிற மின்கள் கூர் முனை விளைவு என்ற முறையில் அடித்து செல்லப்பட்டு விடும். இதனால் தரையிலுள்ள் மின்னின் வீ¡¢யம் குறைந்து விடும். அப்படி மேலே போகிற மின், மேகத்திலுள்ள நேர்மின்னின் வீ¡¢யத்தையும் குறைத்துவிடும். இதனால் தான் இடிதாங்கிகளின் மேல்முனைகள் கூர்மையாக அமைக்கப்படுகின்றன. அதையும் மீறிய அளவில் மின்கள் தோன்றி இடி விழுகிற நிலை ஏற்பட்டால், இடியிலுள்ள மின்சாரம் சுலபமாகக் கடந்து செல்லக் கூடிய உலோகப் பொருள்களைத் தேடிப்பிடித்து இறங்கும். அதற்காக இடிதாங்கியில் ஒரு செப்புக் கம்பியை இணைத்துத் தரையில் புதைத்து விட்டால் இடி மின்சாரம் கட்டடத்துக்கு வெளிப்புறமாக உள்ள அந்தக் கம்பியின் வழியாகப் பாய்ந்து தரையிலிறங்கிவிடும். கட்டடத்துக்குச் சேதம் ஏற்படாது.


கோயில்களுக்கு சென்றால் இடி தாக்காது என்பார்களே....


அதன் அறிவியல் காரணம் என்ன என்பதை இனி பார்ப்போம்.....

Hega
12-12-2010, 09:44 AM
நம் ஊரில் கோயில் இல்லாத ஊரில் குடி இருக்க வேண்டாம் என சொல்வார்கள் ஏன் தெரியுமா..

முற்காலங்களில் ஒவ்வொரு ஊரிலும் சாதாரண வீடுகளை விட மிக உயரமாக கோயிகளை அமைத்து அதை விட உயரமாக கோயில் கோபுரங்களை கட்டி விடுவார்கள்...

கோயில் கோபுரத்தை விட உன் வீடு உயர்ந்தால் உன் வீடு நாசமாகி விடும் என்பதும் கிராமிய வழக்கமே .. ஏன் இதன் விஞ்ஞான பூர்வமான காரணங்கள் என்ன...

நான் இன்று நாம் முன்னோர் விட்டுச்சென்ற பல பழக்க வழக்கங்கள் நடைமுறைகளை ஆராய்வோமானால் அவை அனைத்துக்கும் அரிய காரணங்கள் இருப்பதை அறியலாம் . அது என்ன .......

ஏனோ படிப்பறிவில்லாத மக்கள் சாமியை காரணம் காட்டி சொன்னால் இலகுவில் நம்பி கடைப்பிடிப்பார்கள் என்பதனால் சொல்லப்பட்ட பல விஷயங்களில் இந்த கோயில் இல்லாத ஊரில் குடியிருக்காதே என்பதும் ஒன்று அது ஏன் என்பதை நாம் இங்கே காண்போம். ... தொடர்வேன்....



அக்காலத்தில் இடி,மின்னல் ஏற்பட்டால் அதை தாங்குவதற்கு எந்த வித வசதியும் இல்லை. கோயில்களில் வைக்கப்படும் கொடிமரத்தை தேக்கு மரத்தால் செய்து அதன் மேல் தாமிர தகடு வைத்து மூடியிருப்பார்கள். இதில் இடியோ மின்னலோ பட்டால் அது அப்படியே பூமிக்குள் ஈர்க்கப்பட்டு விடும். அத்துடன் கொடிமரத்தின் கீழ் நேர்த்திக்கடனுக்காக உப்பு கொட்டுவார்கள். இதனால் அந்த கொடிமரத்தின் ஈர்ப்பு சக்தி அதிகமாகும். இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு இடி,மின்னலினால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது. ஆனால் கோயிலோ,கொடிமரமோ இல்லாவிட்டால் இதன் பாதிப்பு அப்படியே மக்களைப்பாதிக்கும் கோயில் கொடிமரத்தில் மேல் இருக்கும் தாமிரத்தக்டு தான் அன்றைய இடி தாங்கி...

இக்காலத்தில் கோயில்களின் உயரமான கோபுரங்களையும் அதில் கலசங்களையும் காணும் போது என்ன தோன்றும்... மேலே பார்த்து கும்பிடத்தோன்றும். ஆம் அவைகளை வணங்கத்தான் வேண்டும் ஏன் தெரியுமா...

அவைகள் இடி மின்னலிலிருந்து உங்களைக்காக்கும், உங்கள் உயிரைக்காக்கும் கவசங்கள்.. அடிப்படையில் கோயில் கலசங்கள் இடிதாங்கிகளாகவே அமைக்கப்படுகின்றன..

ஒரு ஏரியாவில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அதுதான் முதலில் எர்த் ஆகும். கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் அடைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாக்காமல் காக்கப்படுவார்கள். அதாவது சுமார் 7500 சதுர மீட்டர் பரப்பில் இருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள்.

தஞ்சாவூர் பெரியகோயிலின் 59 மீட்டர் உயரமுள்ள விமானக் கோபுரத்தில் இடிதாங்கிதாராசுரத்தில் உள்ள ஐராவதீஸ்வரர் கோயிலின் 25 மீட்டர் உயரமுள்ள கோபுரத்தின் இடி தாங்கியும் கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள 56 மீட்டர் உயரமுள்ள கோபுரத்தின் இடி தாங்கியும் 200 மீட்டர் சுற்றளவிற்கு பாதுகாப்பளிக்கும் சக்தி உடையதாம்



கோயில் இல்லாத ஊரில் குடி இருக்க வேண்டாம் என இதற்காகவும் சொல்வார்கள்..

Hega
12-12-2010, 09:48 AM
இப்போ நான் சொல்வது சரிதானே

நம் முன்னோர் நாள் கோள் பார்த்து நட, என சொன்ன ஒவ்வொரு காரியத்துக்கும் அறிவியல் காரணிகள் இருக்கும்...

அபோ அறிவியல் என்பது ஆராய்ச்சிக்கு மட்டுமல்ல நம் வாழ்விலும் அறிந்திட வேண்டியதே....

Hega
12-12-2010, 10:04 AM
இந்த மாதிரி இடியிலிருந்து நம்மை தற்காத்து கொள்ள நான் என்ன செய்யலாம்...

கௌதமன்
12-12-2010, 11:02 AM
இப்போ நான் சொல்வது சரிதானே

நம் முன்னோர் நாள் கோள் பார்த்து நட, என சொன்ன ஒவ்வொரு காரியத்துக்கும் அறிவியல் காரணிகள் இருக்கும்...

அபோ அறிவியல் என்பது ஆராய்ச்சிக்கு மட்டுமல்ல நம் வாழ்விலும் அறிந்திட வேண்டியதே....

ஆராய்ச்சி என்பது அறிவியல் காரணிகளைக் கண்டறிவதே. கண்டுப்பிடிப்புகளை அறிவியல் கொள்கைகளோடு விளக்கிச் சொல்வதும் அவசியம். இல்லையென்றால் போலிகளையும், மூடத்தனங்களையும் கண்டறிவதுக் கடினம்.

இத்தருணத்தில் புத்தர்க் கூறியதைக் குறிப்பிடுவது அவசியமாகிறது.

முன்னோர்கள் சொன்னார்கள் மதம் சொல்லுகிறது ரிஷிகள், மகான்கள் சொல்லுகின்றனர் என்று கருதாமல், தாராளமாக அறிவுக்கும்ஆராய்ச்சிக்கும்வேலை கொடுத்து உன் புத்தி சொல்லுகின்றபடி நட - புத்தர்

srivinoth
21-12-2010, 05:08 PM
மிகக் குறுகிய காலத்தில் மேற்கில் இவ்வளவு பெரிய அறிவியல் முன்னேற்றம் ஏற்படும் ஆனால் 2000 வருடத்திற்கு மேற்பட்ட வரலாறு கொண்ட தமிழர்களிடம் அறிவியல் சார்ந்த எண்ணங்கள் கண்டிப்பாக வளர்ந்திருக்கும். ஆனால் அவை அதிகளவு வெளிப்படாமல் இருந்தமைக்கு காரணம் விடயம் தெரிந்தவர்கள் அதை இரகசியமாகபேணியமைகாகும் என நினைக்கிறேன்.

சொ.ஞானசம்பந்தன்
22-12-2010, 05:14 AM
[QUOTE=mdjmeeran;309374]அறிவியலும் தமிழும்

சிறப்பான கருத்துகளையும் ஆலோசனைகளையும் வழங்கிய உங்களுக்கு என் பாராட்டும் வாழ்த்தும்.