PDA

View Full Version : கா(த்திருத்)தல்



Tamilvasan
09-12-2007, 07:09 AM
பெண்ணே இன்னும்
கொஞ்ச நேரம் -என்னை
காத்திருக்க வை
உன் நினைவுகளை-நான்
காதலிக்க வேண்டும்!!!

சிவா.ஜி
09-12-2007, 07:12 AM
அப்ப அந்த பெண்ணை எப்போ காதலிக்கப் போறாரு கவிதையின் நாயகன்?
வாழ்த்துகள் தமிழ்வாசன்.

ஆதவா
09-12-2007, 07:29 AM
பெண்ணே இன்னும்
கொஞ்ச நேரம் -என்னை
காத்திருக்க வை
உன் நினைவுகளை-நான்
காதலிக்க வேண்டும்!!!

காத்திருத்தல்...

இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல்
பைதல்நோய் செய்தார்கண் இல்.

காதலன் காத்திருக்கிறான், காதலி வரவிற்கு. அவளோ வரவில்லை... காதலன் நெஞ்சமோ காதலியைச் சேராமல் அவனிடமே இருக்கிறது... காதலன் ரொம்பவே வருத்தப்படுகிறான்.... காதலிக்கு அவன்மேல் இரக்கமில்லை..

இதன் ஆப்போஸிட்...

காத்திருக்கவிடு.... நினைவுகளோடு காதலிப்பேன் என்பது...

காதலி வந்தால் நினைவுகள் கூடும். காத்திருத்தலின் காரணம், காதலியின் வருகை/// நினைவுகளோடு கூடுவதற்கு காதலி எதற்கு?? கற்பனை போதாமோ?

ஆற்றில் குளிப்பதில் இருவகை

ஆற்றுக்குள் நுழைந்து குளிப்பது -
ஆற்றின் கரையில் குளிப்பது...

இரண்டாம் வகை உம்முடையது..
காத்திருத்தலின் அவசியத்தை எதிராகக் கூறும்போதும், அவசியத்தின் ஆழம் உணரப்படவில்லை.

தொடர்க...... இன்னும்......

ஆதவா
09-12-2007, 07:30 AM
அப்ப அந்த பெண்ணை எப்போ காதலிக்கப் போறாரு கவிதையின் நாயகன்?
வாழ்த்துகள் தமிழ்வாசன்.

ஹாஹா... பத்து வரிகளில் சொல்லவந்ததை இரண்டே வரிகளில் சொன்ன உங்களின் பின்னுட்டம்... அருமை.

அமரன்
10-12-2007, 02:21 PM
பின்னை வினைக்கு முன்னோட்டமோ.
வாழ்க வளர்க.

பூமகள்
10-12-2007, 03:02 PM
"நான் காத்திருந்தால் காதல்
இன்னும் நீளூமில்லையா....!
தண்ணீரில் தீ வளர்த்துக் காத்திருக்கிறேன் - உன்
காலடித் தடத்தில் நான் பூத்திருக்கிறேன்..!"

வைரமுத்துவின் வைர வரிகளை நினைவு படுத்தும் கவி...!
பாராட்டுகள் தமிழ்வாசன். :)

Tamilvasan
15-12-2007, 06:06 AM
அனைவருக்கும் நன்றி!!!
--தமிழ்வாசன்

Tamilvasan
15-12-2007, 07:05 AM
கா(த்திருத்)தல் -1
பெண்ணே இன்னும்
கொஞ்ச நேரம் -என்னை
காத்திருக்கச் செய்
தமிழில் பல வார்த்தைகள்
கவிதையாக
காத்திருக்கின்றன!!!

Tamilvasan
15-12-2007, 07:06 AM
கா(த்திருத்)தல் -2
மொட்டிலிருந்தே
உனக்காக
காத்திருந்த
உன் கூந்தல்
ஒற்றை ரோஜா சொன்னது
அவளுக்காக
காத்திருப்பது சுகமானது!!!!

Tamilvasan
15-12-2007, 07:08 AM
கா(த்திருத்)தல் -3
உன்னை
காதலிப்பதால்
காத்திருக்கிறேன்
காத்திருப்பதையும்
காதலிக்கிறேன்!!!

தம்பி
15-12-2007, 07:08 AM
கா(த்திருத்)தல் -1
பெண்ணே இன்னும்
கொஞ்ச நேரம் -என்னை
காத்திருக்கச் செய்
தமிழில் பல வார்த்தைகள்
கவிதையாக
காத்திருக்கின்றன!!!

சபாஷ். வாசன்.

வசவு வார்த்தைகளையும்
நெசவு செய்யும் வல்லமை
காத்திருக்கும்
காதல் கணங்களுக்குண்டோ?

தம்பி
15-12-2007, 07:11 AM
கா(த்திருத்)தல் -2
மொட்டிலிருந்தே
உனக்காக
காத்திருந்த
உன் கூந்தல்
ஒற்றை ரோஜா சொன்னது
அவளுக்காக
காத்திருப்பது சுகமானது!!!!

கவிதை கவிதை..

காயும் குழல்களில்
காய்வதுக்காகத்தான்
பூத்துக் காத்திருந்தனவோ
ராஜா வீட்டு ரோஜாக்கள்.

தம்பி
15-12-2007, 07:13 AM
கா(த்திருத்)தல் -3
உன்னை
காதலிப்பதால்
காத்திருக்கிறேன்
காத்திருப்பதையும்
காதலிக்கிறேன்!!!

காத்திருப்பதிருக்கும் காலங்களிலே
காத்து இருப்புக் காலங்களை
கரைத்து விட முடிவெடுத்துவிட்டீர்...
காலமும் முடியை எடுக்கும்..
அப்போதும்
காத்திருப்பை காதலியும்..

Tamilvasan
15-12-2007, 07:41 AM
காலமும் முடியை எடுக்கும்..
அப்போதும்
காத்திருப்பை காதலியும்..

காலம்
முடியை எடுக்குமோ
முடிவை எடுக்குமோ-அனால்
காதலில் காத்திருப்பது சுகம் தானே!!

தம்பி
15-12-2007, 09:59 AM
காலம்
முடியை எடுக்குமோ
முடிவை எடுக்குமோ-அனால்
காதலில் காத்திருப்பது சுகம் தானே!!

வழுக்கைத் தலைகளை தடவிக்கொண்டு
வாழ்க்கைக்காகப் பலர் காத்திருப்பது
கண்டதில்லையோ தாங்கள்..

தாங்கள் தங்கல் அமெரிக்கா என்பதால்
இக்கவலை உங்களுக்கு தேவை இல்லை..

பழியை பனிமேல் போடலாம்.

Tamilvasan
15-12-2007, 07:38 PM
அய்யய்யோ
நான் அவ்வளவு நாள் காத்திருக்கறது பத்தி சொல்ல வரல....
சும்மா சுண்டல் சாப்பிட்டுகிட்டு ,சில மணி நேரம் காத்திருக்கறது பத்தி சொன்னேன்......

பின்னூட்டத்திற்க்கு மிக்க நன்றி!!!!