PDA

View Full Version : மிக அதிக நபர்களைச் சிறையிலடைத்து அமெரிக்பகுருதீன்
09-12-2007, 06:50 AM
உலகிலேயே மிக அதிகமான நபர்களைச் சிறையில் அடைத்து கொடுங்கோன்மையில் முதல் இடத்தை அமெரிக்கா பிடித்துள்ளது என மனித உரிமைக் கண்காணிப்புக் கழகம் (Human Rights Watch) தெரிவித்துள்ளது. அமெரிக்க அரசின் நீதித்துறையின் புள்ளிவிவரம் வெளியிட்ட அறிக்கையைச் சுட்டியே மனித உரிமைக் கண்காணிப்புக் கழகம் இக்குற்றச்சாட்டை வெளியிட்டுள்ளது.

2006 ஆம் ஆண்டு இறுதிவரை 2.25 மில்லியன் நபர்களை அமெரிக்க அரசு ஏதேனும் ஒரு குற்றச் சாட்டின் அடிப்படையில் சிறையில் அடைத்துள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதன்படி ஒரு லட்சம் அமெரிக்கர்களில் 751 நபர்கள் சிறையில் இருப்பது தெரியவந்துள்ளது. இது உலகிலேயே மிக அதிக எண்ணிக்கை ஆகும். "அரசியல் காரணங்களுக்காகக் கண்மூடித் தனமாகச் சிறையை நிரப்பும் சீனாவை விட இது மிக அதிகம்" என்று HRW-வின் அமெரிக்கப் பொறுப்பாளர் டேவிட் ஃபாதி தெரிவித்தார்.ஓர் ஒப்புமைக்காக மேலும் சில தகவல்களை HRW அளித்துள்ளது. அதன்படி ஒரு லட்சம் நபர்களில் லிபியாவில் 217 பேரும், ஈரானில் 212 பேரும், பிரிட்டனில் 148 பேரும், சீனாவில் 119 பேரும், கனடாவில் 107 பேரும், பிரான்சில் 85 பேரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.இதைவிட அதிர்ச்சி தரும் செய்தி என்னவெனில் மனித உரிமைகளின் தாயகமாகவும் சமூக நீதியின் தொட்டிலாகவும் சித்தரிக்கப்படும் அமெரிக்காவில் 30க்கும் 34க்கும் இடைப்பட்ட வயதுடைய கறுப்பின அமெரிக்கர்களில் 8 விழுக்காட்டினர் ஏதேனும் ஒரு காரணத்திற்காகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் எனவும் இது வெள்ளையினத்தினரை விட ஆறரை மடங்கு அதிகம் என்றும் இந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பது தான்.இது தவிர கணக்கில் காட்டப்படாத ஐரோப்பாவின் ரகசியச் சிறைகள், குவாண்டனாமோ, அபூகிரைப் போன்ற சிறைகளில் இருப்பவர்கள் குறித்து இந்த அறிக்கையில் எதுவும் கூறப்படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

நன்றி:சத்தியமார்க்கம்.காம்
(http://www.satyamargam.com/index.php?option=com_content&task=view&id=692&Itemid=51)

lolluvathiyar
09-12-2007, 08:37 AM
அமெரிக்கா தீவிரவாத பயத்தில்லேயே வாழ்கிறது. மெட்டீரியலிசம் காரனமாக குற்றவாளிகளும் பெருகிவிட்டனர். உன்மையில் குற்றும் செய்யாத அமெரிக்கனை பார்பது கடினம். உலக நாடுகளின் பனம் புலங்குவதால் அது அங்கு சகஜமாக இருகிறது.

மேலும் சந்தேக அடிபடையில் நிரைய பேரை சிரையில் தள்ளி இருகிறார்கள், இதில் அதிகமானவர்கள் ஆசிய நாடுகளை சேர்ந்தவர்களாக தான் இருப்பார்கள். ரகசிய சிரைசாலை இதைவிட பல மடங்கும் இருகிறது. மொரிசியஸில் கூட ஒரு தீவில் அமெரிக்க விமான படையினரால் இயங்கி வரும் மிகபெரிய சிரைசாலை சமீபத்தில தான் வெளியானது. உலக நாடுகளுக்கு சுத்தமாக தெரியாமல் இயங்கி வந்தது.

நுரையீரல்
09-12-2007, 08:49 AM
அமெரிக்காவைப் பத்தி செய்தி வெளியிடலேனா செய்தித்தாள்களே விற்காது போல. எந்த நாடு வல்லரசாக வேண்டுமானாலும் இப்படித் தான் செய்ய வேண்டும். ஆனால் உலக வரலாற்றை உற்று நோக்கினால் எந்த நாடும் நிரந்தரமாக வல்லரசா இருந்ததில்லை.

இந்தியாவின் கொள்கைகளை உற்று நோக்கினால் அது எக்காலத்திலும் உலக வல்லரசாக முடியாது.

நாமெல்லாம் வெறும் அமெரிக்க எதிர்க் கோஷம் போடத்தான் லாயக்கு.

ஜெயாஸ்தா
09-12-2007, 09:29 AM
நாமெல்லாம் வெறும் அமெரிக்க எதிர்க் கோஷம் போடத்தான் லாயக்கு.
வாஸ்தவம்தான்...! ஆனால் அமெரிக்காதான் இன்னும் 50 வருடங்களுக்கு வல்லரசு என்பதில் எந்த சந்தேகமுமில்லை. அதை எதிர்த்து செயல்படும் துணிச்சல் இன்னும் ஒரு நாட்டிற்கு கூட வரவில்லை. தென்கொரியா மற்றும் ஈரான் அமெரிக்காவை எதிர்ப்பது போல் பாவ்லா செய்கிறார்கள்.

lolluvathiyar
10-12-2007, 06:08 AM
இந்தியாவின் கொள்கைகளை உற்று நோக்கினால் அது எக்காலத்திலும் உலக வல்லரசாக முடியாது.


இந்தியா ஜனதொகையில் பெரிய நாடு, வல்லரசு என்பதற்க்கு அர்த்தம் தவறாக கனிக்க பட்டதால் அமெரிக்கா போன்ற நாடுகள் வல்லரசாக தெரிந்தது. ஆனால் உன்மையில் விவசாயம் கையில் இருக்கும் நாடுதான் வல்லரசாக இருக்கும்.

சமீபத்தில் இந்தியாவில் விவசாயம் பாதிக்கபடுகிறது ஆகையால் குரைந்து வருகிறது. இந்த தொழிற்சாலைகள், கனினி, அரசாங்கம், ஆடம்பரம் எல்லாம் வெறும் 20 சதவீத மக்களை தான் வாழ வைக்க முடியும். ஆனால் தானியங்கள் இறக்குமதி செய்யும் காலம் என்று ஏற்படுகிறதோ அன்று நாம் அடிமைதனத்தை நோக்கி செல்ல போகிறோம். 2025 ஆம் ஆண்டில் இந்தியா சீனாவிடமிருந்து தானியங்கள் மற்றும் காய்கறிகள் இறக்குமதி செய்யும் நிலை வர போகிறது.நாமெல்லாம் வெறும் அமெரிக்க எதிர்க் கோஷம் போடத்தான் லாயக்கு.

எதுக்கெடுத்தாலும் அமெரிக்காவை பாரு என்று சொல்கிறார்கள், அதற்க்காக தான் அங்கும் நாத்தம் பிடிச்சது தான் என்று காட்ட செய்திகள் தருகிறோம். இது எதிர் கோஷம் அல்ல