PDA

View Full Version : ஒருத் துளி கடல்

ஆதி
08-12-2007, 05:42 PM
ஒருத்துளிக் கடல்போல வழிகின்ற
உன்கண்ணீர் எதற்காக ?; இதயத்து
பெருவீட்டில் குடிவைத்த உறவை
பிரிவு புணர்ந்ததற் காகவோ ?
சிறுபூம் பாதத்து கொலுசும்
சிந்துகிற ஒலியில் உன்குமுறல்
இருந்து நெஞ்சத்தைப் பிளக்கிறது
என்ஆணி வேரைப் பேர்க்கிறது..

ஒல்லியஉரு கறுப்புத் தான்நான்
ஊதுபத்திப் போலநறு மணப்பது
தெள்ளியஉன் நினைவைதான்; இவ்விதியா
திரித்துவிடும் நம்புரிதலைக் ; கையில்
அள்ளியநீராய் ஒழுகியா தீரும்நம்
அன்பு ?; ஆதாமே பிறக்க
வில்லை என்றாலும் நம்பு,என்
எலும்பால்தான் படைக்கப் பட்டவள்நீ!

-ஆதி

தீபன்
09-12-2007, 03:07 AM
இதயத்து
பெருவீட்டில் குடிவைத்த உறவை
பிரிவு புணர்ந்ததற் காகவோ ?

அருமையாக சொல்லியுள்ளீர்கள் பிரிவின் துயருக்கு ஆறுதலை.
உறவைத்தான் புணர்வென்போம். உறவில்லையேல் பிரிவென்போம். இங்கோ, உறவை பிரிவு புணர்வதாக முரண்பட்ட சொற்களைக்கொண்டே சொல்லவந்த விடயத்தை அழகாக சரம் தொடுத்துள்ளீர்கள். நல்லாருக்கு நண்பரே.

ஆதி
09-12-2007, 04:31 AM
அருமையாக சொல்லியுள்ளீர்கள் பிரிவின் துயருக்கு ஆறுதலை.
உறவைத்தான் புணர்வென்போம். உறவில்லையேல் பிரிவென்போம். இங்கோ, உறவை பிரிவு புணர்வதாக முரண்பட்ட சொற்களைக்கொண்டே சொல்லவந்த விடயத்தை அழகாக சரம் தொடுத்துள்ளீர்கள். நல்லாருக்கு நண்பரே.

சொல்லளந்து பின்னூட்டம் தந்தமைக்கு நன்றி நண்பரே..

-ஆதி