PDA

View Full Version : வேன(ணி)காலம்



jpl
08-12-2007, 02:30 PM
"அத்தை பசிக்குது..."
என்ற பூரணியின் குரல் கேட்டு தூணில் சாய்ந்திருந்த வேணி, ,கன்னத்தில்
வழிந்த கண்ணிருடன்,கண்களை திறந்து சுற்றும் முற்றும் பார்த்தாள்.
அம்மா,அண்ணன்,மதினி எல்லோரும் அவரவர் இருந்த இடத்திலேயே
படுத்து உறங்கிக் கொண்டிருந்தனர்.
வாரிச் சுருட்டி எழுந்தவள்,இதோ ஒரு நிமிடம் என்றவள் வேகமாக அடுப்பாங்கடைக்குள் நுழைந்தாள்.பூசனம் பூத்த குழம்பும்,கெட்டுப் போன சோறும்,பொரியலும் வாடை உள்ளே நுழையும் போதே குமட்டியது.நாலைந்து
நாளாக துடைக்காம கொள்ளாம இல்லாமல்,அடுப்பு காய்ந்து போய் வறவற என்றிருந்தது.அலமாரியில் டப்பா ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்தாள்.ஒரு டப்பாவில் ரவை இருந்தது.

ஒரு அடுப்பில் தண்ணிரைக் கொதிக்க வைத்தாள்.மற்றொரு அடுப்பில்
இரும்புச் சட்டியில் ரவையைக் கொட்டி வறுத்தாள்.அதே அடுப்பில் கடுகு,உளுத்தம் பருப்பு,வெங்காயம் எல்லாவற்றையும் போட்டு தாளித்தாள்.கொதித்த தண்ணீரை தாளித்தவற்றில் ஊற்றி ரவையை போட்டு
கிண்டி, இறக்கி, வட்டிலில் உப்புமாவைப் போட்டு ஃபேனடியில் ஆறவைத்தாள்.
"பூரணி அத்தை வாயில தரவா"
"இல்லை அத்தை நானே சாப்பிட்டுக்கிறேன்"

சரி சாப்பிடு என்று கூறிய வேணி, அடுப்பாங்கடைக்குள் சென்று கெட்டுப் போன சோறுக் குழம்பு எல்லாவற்றையும்,கொல்லையில் உரக்குழியில் கொண்டு போய் கொட்டி,சாமானைக் கழுவப் போட்டாள்.
மாட்டுக்காடியில் மாடு தாகத்தால் கத்தும் குரல் கேட்டு,மாட்டிற்கு தண்ணீர் காட்டினாள்.நாலைந்து நாளாக கழுவாத மாட்டுக்காடி அவளது கவனத்தை ஈர்த்தது.குழாயில் ட்யூப்பை மாட்டி அந்த இடத்தை நன்றாக கழுவினாள்.பாவம் மதினி வயித்துப் பிள்ளைக்காரி,ஒத்தையில கஷ்டப்படுவாள் என்று நினைத்தபடி வேகமாக வேலைகளை முடித்தாள்.
ஹாலில் வந்து பார்த்தவள்,மேடிட்ட வயிறுடன்,முகம் சோகையால்
வெளிறி,கண்ணைச் சுற்றி,கருவளைத்துடன்,கண்கள் குழிவிழ படுத்து உறங்கிய மதினி தேவியை பார்த்தவுடன் பாரிதாபம் தோன்றிற்று.
உப்புமா,ஜீனி,தண்ணீர்,வட்டில் என எல்லாவற்றையும் எடுத்து வந்து ஹாலில்
வைத்து "மதினி எந்த்திரிச்சி சாப்பிடுங்க"என்று எழுப்பினாள்.
அப்படியே அண்ணனையும்,அம்மாவையும் எழுப்பினாள்.
எழுந்து பார்த்த தேவி"உன்ன யார் இதெல்லாம் பண்ண சொன்னது"
என்று கத்தினாள்.

பூரணி பசிக்குதுன்னு சொன்னா,என்று வேணி முடிக்கும் முன்பே
"யாராவது பார்த்து அண்ணே பெண்டாட்டி கொடுமைக்காரி இப்பவே
வேலைவாங்கற பாரு சொல்லறதுக்கா?என்னை எழுப்பிவிட வேண்டியது தானே?
சரிசரி விடு என்றான் மகேந்திரன்.

அதற்குள் கொல்லைப் பக்கம் போன மகமாயி,"மாட்டுக்காடியை நீ தான் கழுவுனியா"என்று கேட்டபடி உள்ளே வந்தாள்.
மதினி ஒத்தையில கஷ்டப்படுவாங்களேனுதான் என்று இழுத்தவளை
மகேந்திரனின் சரிமா சாப்பிட வா என்ற வார்த்தை நிறுத்தியது.
இல்லண்ணே எனக்கு பசிக்கல நா அப்புறம் சாப்பிட்றேன் என்றவளை
தேவி," இப்ப சாப்பிட உட்காரப் போறியா இல்லையா?,அத்தை
நீங்களும் உட்காருங்க,ஏங்க நீங்களும் உட்காருங்க "என அதட்டினாள்.
மூவரும் சாப்பிட உட்கார்ந்தார்கள்.

உடலெங்கும் புழுதி அப்பியபடி பூரணி உள்ளே வந்தாள்.அவளைப்
பார்த்து "நாளைகாவது ஸ்கூலுக்குப் போகனும்,நோட்டு,புத்தகமெல்லாம்
எடுத்து வைச்சையா?வீட்டுப் பாடமெல்லாம் முடிச்சியா?ட்ரஸ்யெல்லாம் ஒரே
புழுதி யார் துவைக்கிறது?என அதட்டியபடியே "வா தலை சீவுறேன்"என்றாள் தேவி.
கிட்டப் போனால் அடி நிச்சயம் என்று நினைத்தவள்,"போங்க மா நா
அத்தையிடம் சீவிக்கிறேன்" என்றாள் பூரணி.
அத்தை அடிக்காமல் படிப்புச் சொல்லிக் கொடுப்பாள்,தலைபின்னி விடுவாள்
என்பதால் சந்தோஷத்துடன் கேட்டாள்.

"அத்தை,மாமா சாமிக்கிட்ட போயிட்டாதால இனிமே நீங்க இங்கதானே
இருப்பீங்க?
-தொடரும்-

ஆதவா
08-12-2007, 03:03 PM
வேணி காலம் - அர்த்தம் என்னங்க அம்மா?

jpl
08-12-2007, 03:39 PM
வேன காலம் என்றால் வெய்யில் காலம்...
வேனில் என்பதன் வழக்குச் சொல்.
வேணி இக்கதையின் கதாநாயகி.
ஒரு விதவைப் பெண்ணின் இறுக்கமான காலம் தான் கதையின் கரு.
அவ்வளவு தான் தலைப்பிற்கு விளக்கம் ஆதவா.....

யவனிகா
08-12-2007, 03:41 PM
வெப்ப காலம் என்று நினக்கிறேன்...நம்ம ஊருப் பக்கம் வேனற்குறு வந்திருக்கு அப்படின்னு சொல்லிச் சொல்லி வேனக்காலம்னு மரூவியிருக்குமோ?கதாசிரியர் தான் விளக்கனும்.

jpl
08-12-2007, 04:08 PM
ஆம் யவனிகா..வெய்யில் காலம் என்றால் கோடை காலம்.
வேனல் என்ற வழக்குச் சொல் தென் தமிழ்நாடு பகுதிகளில் வழங்கப்படும்.

மலர்
09-12-2007, 02:21 AM
இது..
வேணியின் வெய்யில் காலமோ..

தொடரும். .. ஹீ தொடருங்கள்.
ஆவலோடு

lolluvathiyar
09-12-2007, 05:53 AM
சபாஸ் குரைந்த இடைவெளியில் அடுத்த கதை ஆரம்பித்து விட்டீர்கள். இறுதி வாக்கியத்தில் கனவனை இழந்து பெற்றோர் வீட்டில் இருக்கிறாள் நாயகி என்று முடித்து இருகிறீர்கள். அதுவும் அன்னியும் இருக்கும் போது நிரைய சங்கடங்கள் வரும், கதையை தொடர்ந்து படிப்போம்.

jpl
09-12-2007, 02:22 PM
நன்றி மலர்,வாத்தியார்...

ஓவியன்
09-12-2007, 02:32 PM
வேணி...!!
சமுதாய சம்பிரதாயங்கள், நடைமுறைகளினால் சாயம் போன அல்லது போக்கப் பட்ட ஒரு அபலையாக மனதை உறுத்த தொடங்கிவிட்டாள்....

சீரான நடை, எழுத்துக்கோர்பினால் செவ்வனே செல்கிறது கதை...
மனதாரப் பாராட்டுகிறேன், தொடர்ந்து எழுதுங்கள்........!! :icon_b:

பூமகள்
09-12-2007, 02:35 PM
அப்பப்பா.. முதல் பாகத்திலேயே எத்தனை கதாப்பாத்திரங்கள்..! அந்த வீட்டினை நாமும் எட்டிப் பார்க்க வைத்த எழுத்து வன்மை அசர வைக்கிறது.
எதார்த்தமான கதை நகர்ந்த பாங்கு நன்றாக இருக்கிறது. எல்லா விவரிப்புகளையும் கற்பனை செய்து கதையினூடே வர முடிகிறது.
பாராட்டுகள் அக்கா.
அடுத்த பாகத்தை நோக்கி ஆவலோடு காத்திருக்கிறேன். :)

ஓவியன்
09-12-2007, 02:35 PM
ஆம் யவனிகா..வெய்யில் காலம் என்றால் கோடை காலம்.
வேனல் என்ற வழக்குச் சொல் தென் தமிழ்நாடு பகுதிகளில் வழங்கப்படும்.

ஆமாம், நம்மூர்(ஈழத்தின் வட பகுதி) வழக்கப்படி கோடைகாலம் என்பதை, "வெக்கைக் காலம்", "வெயில்காலம்" என்றே பேச்சு வழக்கில் பாவிப்போம்....

jpl
09-12-2007, 03:17 PM
நன்றி ஓவியன்.பூமகள்..
இதோ பூ மகளின் விருப்பம் நிறைவேற்றப்படுகிறது...

jpl
09-12-2007, 03:19 PM
கண்களில் கண்ணீர் மல்க,"மூஞ்சையும்,முகரையும் பாரு,நாளைக்கு ஸ்கூலுக்குப் போறதுக்கு,நோட்டுப் புத்தகத்தை எடுத்து வையினா வெட்டிக் கதையா பேசற"என்று பூரணியை தேவி துரத்தினாள்.
"மதினி சின்னப்பிள்ளை அவளுக்கு என்ன தெரியும்,விடுங்க மதினி என்று கன்னத்தில் நீர் வழிந்தோட பூரணியை பிடித்து தன் பக்கம் இழுத்துக் கொண்டாள்.

இதைக் காண சகிக்காதவனாக மகேந்திரன்,ஆசாரத்தி*லிருந்த சைக்கிளை எடுத்துக் கொண்டு ரோட்டுக்கு வந்தான்.
அஞ்சலையும்,கற்பகமும் "சின்ன ஐயா"என்று சத்தமாக கத்த ஆரம்பித்தனர்.
"எ அம்மா உள்ளே இருக்காங்க"என்று சுருக்கமாக பதிலளித்து விட்டு சென்றான்.

"ஏந் தாயீ என்று ஆரம்பித்து,நாலு மாசத்துக்கு முன்னாடி தானே பிள்ளையை கல்யாண கோலத்தில பாத்தோம்"ஓப்பாரியை தொடர்ந்தார்கள்.

அந்த பாவி என்னை நடுத்தெருவுள்ள விட்டமாதிரி என் மகளயும் தெருவுக்குக் கொண்டு வந்துட்டான் என்று எப்போதே செத்துப் போன புருஷனைத் திட்டித் தீர்த்தாள் மகமாயி.

அஞ்சலையும் தன் பங்குக்கு"பெரிய அய்யா இருந்த இப்படியெல்லாம் ஆயிருக்குமா",என்று பிலாக்கணத்தை பெரிதாக்கினாள்.
என்னவோ எமன் இவர்கள் பேச்சைக் கேட்டுத்தான் எல்லாம் செய்வது போல.

மூஞ்சைச் சுருக்கிய மகமாயி,"மாட்டுக்காடியில சாணியை மட்டும் அள்ளிட்டு,கழுவவே இல்லையில்லே நாலு நாளா?"என்று காரியத்தில் கண்ணானாள்.அவளுக்கு வயக்காட்டுல வேலை பார்க்கும் பொம்பளையெல்லாம்
தனக்கு சக்களத்தி என்ற எண்ணம்.

இரண்டு பெரிய ட்ம்பளரில் கருப்பட்டிக் காப்பியைக் கொண்டு வந்து கொடுத்தாள் தேவி அந்த இருவருக்கும்.
"காப்பிய குடிச்சிட்டு,சாமானைக் கழுவிட்டு,வீட்டை அலசணும்" என்று உத்திரவிட்டாள் மகமாயி.
குனிந்து காப்பியைக் கொடுத்து நிமிர்ந்த தேவி நிறக முடியாமல் தடுமாறி சரிந்தாள்.
தேவி என்று பதறியபடி,அவளை மூன்று பேரும் சேர்ந்து தாங்கி,மகமாயி தன் மடியில் கிடத்திக் கொண்டாள்.
வேணி என்று கத்தினாள்.வேணியும் என்னவோ ஏதோ என்று ஓடி வந்தாள்.
முகத்தில் தண்ணீர் தெளித்து சுயநினவிற்குக் கொண்டு வந்தாள் வேணி.
நாடி பிடித்துப் பார்த்தவள் "லோ பிபி தான் பயப்பட வேண்டாம் எதுக்கும் அண்ணே வந்தவுடன் ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போகச் சொல்லுவோம்"
என கூறியவள்,
"மெதுவா எந்திருச்சு வாங்க மதினி,ரெஸ்ட் எடுத்தா கொஞ்சம் நல்லாயிருக்கும்"

தேவியை கட்டிலில் படுக்க வைத்துவிட்டு மெதுவான குரலில் தன்மையாக "மதினி யார் யார் தலையில என்ன எழுதியிருக்கோ யாருக்குத் தெரியும் சொல்லுங்க,வயித்துல இருக்கிற பிள்ளய பாதிச்சிட போவுது மதினி.
கவலைப் படாதீங்க. போதும் மதினி.ஏற்கனவே சரியா தூங்கமா கொள்ளமா
இருக்கீங்க நல்லா ரெஸ்ட் எடுங்க"என்றாள்.

வாஞ்சையுடன் வேணியின் கையை எடுத்து தன் கன்னத்தில் வைத்துக் கொண்டாள் தேவி.

ஹாலில் பேச்சுக் குரல் கேட்கவே ஹாலுக்கு வந்துப் பார்த்தாள். சித்தி.
"வந்தவ,போனவ, ன்னு கண்டவகிட்டேயெல்லாம் நம்ம பிள்ளையை பேச்சுக் கேட்க வைச்சுட்டானே""நம்ம பிள்ளைக்கு நம்மள விட்ட யாரிருக்க,ஆரம்பத்திலயே கரெக்டா இருந்துரு,எவளயும் ஒரு சொல் சொல்ல விட்டறத அக்கா"

இதே கேட்ட வேணிக்கு கோபம் வந்தது.

*ஆசாரம்-வீட்டின் முன் பகுதி.வரண்டாவிட பெரியதாக இருக்கும்.

-தொடரும்-

jpl
11-12-2007, 12:00 AM
கேதம் கேட்க அக்கம் பக்கதிலுள்ளோர் மாறி மாறி வந்தனர்.
வந்தவர்கள் எல்லொரும் சொல்லி வைத்த மாதிரி ஜாடமாடையாக
தேவியைப் பற்றி, பற்ற வைப்பதில் தேர்ந்தவர்களாக இருந்தார்கள்.

மகமாயியும்,தங்கமும் ஆளுக்குத் தகுந்த மாதிரி பதில் சொல்லி
அனுப்பினார்கள்.

அரை மணி நேரம் படுத்திருந்த தேவியால் அதற்கு மேல்,
படுத்திருக்க முடியாமல்,எழுந்து ஹாலுக்கு வந்தாள்.
சின்ன மாமியார் தங்கத்தைப் பார்த்து,"வாங்க அத்தை"என்றவள்
"பூரணி,பூரணி"என்று கத்தினாள்.
"இங்கிட்டுத்தான் எங்கியாவது இருப்பா,உனக்கு உடம்புக்கு இப்பொழுது
பரவாயில்லையா"என்று தங்கம் கேட்டாள்.
ம்ம்ம் பரவாயில்ல அத்தை,என்றவளுக்கு பூர்ணியின் குரல்
கொல்ல பக்கம் கேட்கவே பின்பக்கம் சென்றாள்.

வேணியும் அவளும் புளிய மரத்தடியில் உட்கார்ந்து பாடம் படித்துக்
கொண்டிருந்தனர்.
தேவியைப் பார்த்த வேணி "நீங்களும் உட்காருங்க மதினி,காத்தோட்டமா
இருந்தா கொஞ்சம் நல்லாயிருக்கும்"என்றாள்.

சிறிது நேரதில் "மகமாயி,தேவி,வேணி டீச்சர் வந்திருக்காங்க வாங்க உள்ள"
என்று அழைத்தாள்.
பரிமளா டீச்சர் அதே தெருவில் தான் குடியிருந்தாள்.தேவி,வேணி இருவரும்
பரிமளாவின் பழைய மாணவிகள்.

டீச்சரை அறைக்குள் அழைத்துச் சென்று நாற்காலில் அமரச் செய்தனர்.
"நீங்களும் உட்காருங்க பிள்ளைகளா"
இருவரும் தரையில் உட்கார்ந்தனர்.
"கட்டிலில் உட்கார வேண்டியதுதானே"என்றபடியே வேணியின் தலையை
மென்மையாக தடவி கொடுத்தாள்.

தேவியிடம் டேட் என்னைக்குமா கொடுத்திருக்காங்க என்று விசாரித்துத்
தெரிந்து கொண்டாள்.
"ந்ல்ல சத்தான ஆகாரம் சாப்பிடு,கால்சியம்,அயர்ன் மாத்திரை எல்லாம்
கரெக்டா சாப்பிடிறீயா?"என்றும் வினவினாள் பரிமளா.

"வேணி கல்யாணம் மட்டும்தான் வாழ்க்கையில்லை.வாழ்க்கை இன்னும் இருக்கு.
மனசு ஒடிஞ்சு போகதே,மேக்கொண்டு படி.எதான நான் பண்ணுனா சொல்லு"
என்று வேணியைப் பார்த்து பேசிய பரிமளா,
தேவி இவளைப் பாத்துக்கோ" என்றபடி எழுந்தாள்.

எழுந்து நின்ற மகமாயியின் கைபிடித்து அழுத்தியபடி,ஒன்றும் கூறமால்
பரிமளா சென்று விட்டாள்.

"மதினி சித்தி இங்கதான் இருக்கப் போறங்க போல ராத்திரிக்கு சோறு
ஆக்கனுமில்ல"
"நான் பாத்துக்கிறேன்.நீ செஞ்சேனா யாராவது எதாவது சொல்லுவங்க"

"இல்ல மதினி என்றவள் தயங்கியபடி ஒத்தல இருக்க ஒருமாதிரி
இருக்கு மதினி என்றாள் துக்கத்தை அடக்கியபடி.

தேவியின் மனசை பிசைய,"சரி வா"என்றாள்.

ரசம் வைத்து உருளைக் கிழங்கு வதக்கி விடலாம் என்ற தீர்மானத்தின்படி
வேணி உருளைக் கிழங்கை அறுக்க ஆரம்பித்தாள்.
தேவி வேணி விட பெரியவள்.ஓரே பள்ளியில் படித்தவர்கள்.

இருவரும் பள்ளி நினைவுகளில் ஆழ்ந்தவர்கள்,டீச்சர்களுக்கும்,வாத்தியர்களுக்கும்
வைத்த பட்டப் பெயர்களை நினைவுக் கூர்ந்தார்கள்.

ஓவியன்
11-12-2007, 02:15 AM
வேணியும், தேவியும் சமூகத்தின் வார்த்தைகளால் படும் துன்பம் நெஞ்சை உலுக்குகிறது.....!!

யதார்த்தமான ஒரு பிரச்சினையை கையாளும் விதம் அருமை....

யவனிகா
11-12-2007, 03:17 AM
கதை சீராக போய்க்கொண்டிருக்கிறது...எல்லாப் பேச்சு வழக்குகளும் பிழையின்றி சரளமாக வசப்படுகிறது...தொடருங்கள்...முழுவதும் படித்து விட்டு பின் பின்னூட்டம் இடுகிறேன்.

jpl
11-12-2007, 03:31 AM
நன்றி ஓவியன்,யவனிகா.........

lolluvathiyar
11-12-2007, 05:26 AM
எந்த பென்னும் அன்னியுடன் அவ்வளாக ஒட்ட மாட்டாள், அதுவும் கல்யானம் ஆன் பின் அதிகமாகும். வேனிக்கு கனவன் இழந்தபின் அன்னி மீது ஒட்டுதல் குரைவாகும் இதுதான் நிரைய இடங்களில் நடப்பது. ஆனால் உங்கள் கதையில் அந்த தூரத்தை குரைத்து இருவர் ஒற்றுமையாக இருக்கும்படி எழுதி வருவது சந்தோசமாக இருகிறது. தொடர்து எழுதுங்கள்

மலர்
13-12-2007, 04:02 PM
கதை அழகா போயிட்டிருக்கும்மா...
தொடந்து எழுதுங்க...:icon_b:

ஆவலோடு...:D

ஓவியன்
16-12-2007, 02:05 AM
என்ன வேணியின் அடுத்த பாகத்தைப் பார்க்க ஓடி வந்தால், காணலையே....??? :frown:

jpl
17-12-2007, 02:08 AM
இல்லை ஓவியன் ஊருக்குச் சென்று விட்டதால் தாமதமாகி விட்டது...
இதோ..........

jpl
17-12-2007, 02:14 AM
"வாங்க சித்தி"மகேந்திரன்.
"என்னப்பா தம்பி"
"சாப்பிட்டீங்களா"
நீ சாப்பிடு முதலில், நாங்க அப்புறமா சாப்ட்டுகிறோம்.

கவலை தோய்ந்த,இருண்ட முகத்தைப் பார்த்த தேவி
"என்னங்க,ஏ எப்படியோ இருக்கீங்க?"
"ஒன்னுமில்ல லேசா தலைவலி"
தேவிக்கு நம்பிக்கை இல்லை என்பதை அவள் முகம் காட்டியது.
அதை மகேந்திரன் கண்டு கொள்ளதவனாக "சாப்பாடைப் போடு."
என்றான்.

ஒரு விவசாய வீட்டின் அடையாளப்படி காலை 4.30 மணிக்கே
வேணியின் வீடு விழித்துக் கொண்டது.வேணியும்,தேவியும் ஆளுக்கு ஒரு பக்கமாக முன்பக்கமும்,பின் பக்கமென வாசல் தெளித்தனர்.

வேலயில் கவனமாக இருந்தாலும் தேவியின் கவனம் மகேந்திரனின் மீதே இருந்தது.அவனும் ஒன்றும் சொல்லாமல்
எதையும் கவனிக்காமல் காப்பியைக் குடித்து விட்டு,வயக்காட்டுச்
சென்று விட்டான்.

மகமாயியும்,தங்கம் இங்கிட்டு,அங்கிட்டு போயிருந்த சமயத்தில்
தேவியிடம் மெதுவாக விசாரித்துப் பார்த்தாள்.
"எம்மா தம்பியை எதாவது சொன்னியா?"
"இல்ல அத்த எனக்கும் ஒன்னும் தெரியல,நானே உங்கிட்ட செல்லனும் நினைச்சுக்கிட்டு இருந்தேன்"என்றாள்.

ஒன்பது மணிக்கு மதினி என்று அழைத்தபடி,தேவியின் அம்மாவும்,
அவளின் தங்கை நிர்மலாவும் வந்தனர்.
வாங்க மதினி என்று மகமாயியும்,தங்கமும் வரவேற்றனர்.
"நேத்து மருந்துக் கடையில தம்பிய உங்க அண்ணாச்சிப் பார்த்துட்டு
வந்து சொன்னங்க,தேவி மயக்கம் போட்டு விழுந்துட்டன்னு"அதான்
வந்து பாத்துட்டு போலாம் வந்தோம் மதினி என்றாள்.

அது வேறு ஒன்னுமில்ல மதினி சரியா சாப்பிடாம,தூக்கமா இருந்தது லேசா தலசுத்திருச்சுப் போல என்றால் மகமாயி.
அதற்குள் நிர்மலா அக்கா,அக்கா என்று தேவியை தேடி
போனாள்.

வேணியும்.தேவியும் கொல்லைப்புறத்தில் பாத்திரத்தைக் கழுவிக்
கொண்டு இருந்தனர்.
வேணியும் நீங்க "போங்க மதினி நான் சாமனையெல்லாம் மின்னுக்கி எடுத்தறேன்" என்றாள்.
தேவியும் கைக் கழுவிக்கொண்டு நிர்மலாவைப் பார்த்தபடி.
"வா நிம்மி,நீ மட்டுமா வந்திருக்க"என்று கேட்டபடி வரவேற்றாள்.
"இல்லக்கா,அம்மாவும் கூட வந்திருக்காங்க"என சிட்டாக வீட்டிற்குள்
ஓடினாள்.

"ஏய் நிர்மலா"என அதட்டியபடியே பின் தனது அறைக்குள்
அழைத்துச் சென்றாள்.
"என்ன பண்ணுது உனக்கு" என்றவளை
"இப்ப ஒன்னுமில்லம்மா" வேகமாக இடைமறித்தாள் தேவி.
"ஹூம்,ஒத்த பிள்ள பிக்கல் பிடுங்கல் இருக்காதுன்னு பாத்துக்
கொடுத்தோம்.இப்ப எல்லாம் உன் தலையெழுத்து,உன் தலையில விழுந்துருச்சி"என்று முணுமுணுக்க ஆரம்பித்தாள்.
"சும்மா இருங்க யார் காதிலாவது விழுந்திடப்போது"
என்று தேவி தன் தாயை அடக்கினாள்.
நிர்மலாவும் தன்பங்குக்கு,"எனக்காவது,அக்காவுக்காவது இப்படி ஆச்சுனா எங்களை வீட்டில சேத்துக்க மாட்டிங்கீளா?"
என்று கோபமாக கேட்டாள்.
அதற்குள் "தேவி வந்தவளுக்கு ஏதாவது குடிக்க கொடுத்தீயா?"
எனறபடி ரூமின் வாசலில் வந்து நின்றபடி கேட்டாள் மகமாயி.

இதோ அத்த என்ற தேவியுடன்,நிர்மலாவும் அடுப்பாங்கடைக்குப் போய் விட்டாள்.
பட்டாம் பூச்சிபோல் ஓடியவளைப் பார்த்த மகமாயி,
"என்ன மதினி பிள்ளைக்கு பாத்திட்டீங்களா,இல்ல ஏதாச்சும்
மேல,கீல படிக்கப் போறளா?
"நல்ல இடமாம வந்த முடிச்சிடன்னும் தான் உங்க அண்ணாச்சியும்
சொல்றாங்க,இந்த கழுத படிக்கப் போறேனு ஒத்தக் கால நிக்கற.
எ பேச்சு எங்க எடுபடுது?"
"ஆமா மதினி இப்ப காலத்திலதா பொம்பளப் பிள்ளைகளுதான்
பெரிய படிப்பெல்லாம் படிக்கிதுகள்ள"

காப்பியுடன் வந்த நிர்மலா"நல்ல சொல்லுங்க அத்த எங்கம்மாவுக்கு"
'ஏய் என்ன பெரியவுங்க சின்னவங்க மரியாத இல்லம்மா"நிர்மலாவை அடக்கினாள்.
"எங்கத்தை கிட்ட தானே பேசுறேன்" "இல்ல அத்த"
என்று கல கல வென சிரித்து மகமாயியும் சிரிக்க வைத்தாள்.
மார்கெட் சென்று வந்த தங்கம்,"என்ன சிரிப்பாணி"
என்று கேட்ட படி உள்ளே வந்தாள்.
"அய்,சின்ன அத்தை"என்றவளின் உற்சாக வரவேற்பு தங்கத்தையும் தொற்றிக் கொண்டது.
நிர்மலாவின் அம்மா"தப்பா எடுத்துக்காதீங்க மதினி
இன்னும் சின்ன பிள்ளையவே இருக்கா."என்றாள்.
"இதென்ன மதினி நீங்க வேத்தாளா?எல்லாம் ஒன்னுக்குள்ள
ஒன்னுதான.உங்க தாத்தாவும்,எங்க ஆச்சி வீட்டப்பாவும்,
"ஐயோ அத்த,எங்கம்மாதான் இப்படின்ன நீங்களுமா?
நான் எஸ்கேப்"என்றபடி பின் பக்கம் ஓடினாள்.

சிரித்தபடி"எந்த மகராஜனுக்குக் கொடுத்து வைச்சிருக்கோ?"என்று
பெருமூச்சு விட்டாள் தங்கம்.
"ஏன் உன் பையனுக்கு கேட்கலாமின்னு பாக்கிறீயா?"என்று தூண்டினாள் மகமாயி.
"எங்கக்கா,இந்தப் பிள்ள ஏதோ பெரிய படிப்புள்ள படிச்சிருக்கு.
படிடா சொன்னா எங்க கேட்டான்"என்று தன் பிள்ளைப்
பற்றி குறைபட்டுக் கொண்டாள் தங்கம்.
சாவு வீட்டில் தான் கலயாணம் நிச்சயமாகும் என்று
அவர்களை அவர்களே சமாதானப்படுத்திக் கொண்டு
யார் வீட்டில் பையன் இருக்கின்றான் என்று பட்டியலிட ஆரம்பித்னர்.

தீடிரென நினைவு வந்தவளாக "ஐய்யோ மதினி நேரமாச்சி
தம்பி வந்தா கேட்டதாக சொல்லுங்க மதினி" என்றவள்
"நிர்மலா"என்றழைத்தாள்.
மகமாயி"பிள்ள இருந்துட்டு போகட்டும் மதினி.வேணிக்கும்,
தேவிக்கும் கொஞ்சம் துணைக்கு இருந்த மாதிரி
இருக்கும்" என்று வேண்டினாள்.

உண்மையில் நிர்மலா வந்து,இங்கும்,அங்குமாக ஓடி,சிரித்தது
வீட்டின் இறுக்கமான சூழலை மாற்றிருந்தது.
நிர்மலாவும் அக்காவுடன் இருக்க போறேன்
என்று கூறிவிட்டாள்.

வேணியும் நிர்மலாவின் அண்மையை விரும்பினாள்.

lolluvathiyar
17-12-2007, 12:28 PM
இப்பதான் மற்ற உறவுகள் அறிமுகமாகிறார்கள். கடை எதார்த்தமான முரையில் நகர்கிறது. பென்களை சுத்தியே இருகிறது. சாவு வீட்டில் தான் கல்யானம் நிச்சயமாகும் மிக உன்மை. அதில் தவறு இல்லை, நமக்கு அப்படி ஒரு அருமையான பன்பாடு கிடைத்திருகிறது

செல்வா
17-12-2007, 01:05 PM
நன்றாக...எழுதுகிறீர்கள் சின்ன சின்ன உரையாடல்கள் .. சாதாரண வழக்குடன் அருமையாக செல்கிறது... கதையின் போக்கைப் பார்த்து என் விமர்சனத்தை தருகிறேன்...

jpl
17-12-2007, 02:36 PM
நன்றி வாத்தியார்,செல்வா

jpl
17-12-2007, 02:37 PM
கதை அழகா போயிட்டிருக்கும்மா...
தொடந்து எழுதுங்க...:icon_b:

ஆவலோடு...:D
உத்திரவு மலர்..

jpl
19-12-2007, 01:20 PM
இரவில் எல்லோரும் படுக்க ஆயத்தமானார்கள்.
மகமாயி,தேவி இருவரின் மனமும் மகேந்திரன் மீதே கவனமாக இருந்தது.
அவன் யாரிடமும் பேசாமல் சாப்பிட்டுப் படுத்துக் கொண்டான்.
பூரணியைத் தூங்க வைத்தவள்,மெதுவாகச் சென்று,என்னங்க என்றாள்.
ம்ம் என்று சுரத்தில்லாமல் கேட்டவன் திரும்பிப் படுத்தான்.
உடம்பு சரியில்லையா?இல்ல வேணி பற்றி கவலைப்படுகின்றீர்களா?
என்று வினவினாள்.
ஒன்றுமில்லை சொஸட்டியில் பணம் வாங்கியிருந்தேன்.இப்ப செலவுக்கு...
ஆடிட்டிங்கு வருவாங்கப் போலத் தெரியுது.அது தான் யோசிக்கிட்டு இருக்கேன்..
இப்பொழுது கவலை தேவியையும் பற்றிக் கொண்டது.
என்கிட்ட இருக்கிற நகையை வைச்சுறுங்க..என்றவளை
ஏற்கனவே கொஞ்சம் நகையை வைச்சாச்சு..எங்கியாவது போகும் போது
இல்லையின்னா கேக்கிறவங்களுக்கு பதில் சொல்ல முடியாது என்று இடை மறித்தான்.

வேணியின் கலயாணம் திடீரென்று முடிவானது.வெள்ளாம்மை நேரம் என்பதால் மகமாயி எம்புள்ளைக்கு இல்லாது எனக்கு எதுக்கு என்று நகையை மகேந்திரனிடம் கொடுத்து விட்டாள்.பத்தாதுக்கு தேவியின் நகையும் கொஞ்சம் சொஸட்டியில் வைத்து தான் கல்யாணம் நடந்தேறியது.இல்லை எனாமல் தேவி கழுத்தில் போட வேண்டிய
நகைகளே இப்ப இருக்கு.தேவியும் அம்மா வீட்டினருக்கு கூட தெரியாமல் வைத்துக் கொண்டாள்.இப்ப நகையயக் கழட்டிக் கொடுத்தால் தெரிந்து விடும் நகை இல்லை என்பது.சம்பந்தி வீட்டுக்குப் பதில் சொல்ல வேண்டும்.அத்துடன் மானப்பிரச்னை ஆகிவிடும்.
போட்ட நகையைப் பிடுங்குன குடும்பம் என்ற பெயரும் வந்துவிடும்.

அறுவடை முடிந்து திருப்பலாம் என்றால் பயிர்க்கடன் அது இது என்று
திருப்ப முடியாமல் ஆகிவிட்டது.இப்ப வேணியின் புருஷன் சாவு வீட்டில் இவனும் செலவு பண்ண வேண்டிதாக இருந்தது.
மகேந்திரன் அந்த கூட்டுறவு சொஸட்டியில் சேர்மானாக இருந்தான்.
காஷியரும் அவசரம் கருதி பணம் கொடுத்திருந்தார்.
ஆடிட்டிங் வந்தால் முதலில் பாதிக்கப்படுவது காஷியர் தான்.
அதுவே அவனை மிகவும் கவலைக்குள்ளாக்கியது.
ஊரில் பெருந்தனக் குடும்பம் என்பதால் வெளியே கேட்கவும் அவனால் இயலவில்லை.
பெரியவர் ஆட்டைத் தூக்கி,மாட்டில் மாட்டைத் தூக்கி ஆட்டில் என்று சமாளித்து விடுவார்.

மகேந்திரன் அந்நிலையை இன்னும் எட்டவில்லை.
உரக்கடையில் பாக்கி இருந்ததால் அங்கு கேட்கவும் சங்கடப்பட்டான்.

மறுநாள் காலையில் வழமை போல் வேலையை ஆரம்பித்த வேணி,
தேவியைப் பார்த்து என்ன மதினி இராத்திரி தூங்கவில்லையா?
முகம் ஒரு மாதிரி இருக்கு என்று கேட்டாள்.

தேவியால் கட்டுப்படுத்த முடியவில்லை.

இது வயித்தல வந்த நேரம் அத்தை புருஷனை முழுங்கியாச்சு..
இப்ப அப்பன ஜெயிலுக்கு அனுப்ப போவுது என்று ஆங்காரமாக கத்தினாள்.

மதினி என்ன சொல்றீங்க?
தேவி நடந்த நிகழ்வுகளை கூறினாள்.

வேணி ஒன்றும் பேசாமல் உள்ளே சென்று ஒரு பெட்டியை கொண்டு வந்து
தேவியின் கையில் கொடுத்தாள்.

வேணி என்ன இது?
எதுக்கு மதினி இது எனக்கு?என்னால் தானே இவ்வளவு கஷ்டமும்..

என்றவளை இடைமறித்து "உன் மாமியார் வீட்டிற்கு தெரிந்தால் பெரிய
பிரச்னை ஆகிவிடும் "என்றாள் தேவி

"அதை அப்ப பார்க்கலாம் மதினி இப்ப ஆக வேண்டியதைப் பார்ப்போம்என்றாள் வேணி.

மகேந்திரனிடம் போய் சொன்னாள் தேவி.அதற்குள் மகமாயி கவனித்து என்ன என்று கேட்க,

வேணி நடந்தவற்றை சொன்னாள்.

மகமாயியும்,மகேந்திரனும் என்ன சொல்வது என்று தோன்றாமல் நின்றனர்.

"கடவுளே எ புள்ளைகளுக்கு இப்படி ஒரு நிலை வரனுமா?"என்று புலமபத் தொடங்கினாள் மகமாயி.

சட்டென்று சுதாரித்த தங்கம்தம்பி ஆக வேண்டியத பார்.நகையை வச்சு வாங்கின பணத்தைக் கொடுத்துறு முதல.நம்ம பிள்ளைய நம்ம என்ன விட்டறவா செய்வோம் என்று யதார்த்திற்கு வந்தாள்.

தங்கமே அனைவரிடமும் யாருக்கும் தெரிய வேண்டாம் என்று அப்பிரச்னையை
முடித்தும் வைத்தாள்.

"போ தேவி தம்பிக்கு காப்பியைக் கொடு.வயக்காட்டுல வேலை இருக்குல" என்று
துரிதப்படுத்தினாள் தங்கம்.

lolluvathiyar
19-12-2007, 01:47 PM
ஆகா கதை நிரைய விவசாய குடும்பத்தில் நடக்கும் உன்மைகளை புட்டு புட்டு வைத்தது. தன்மான பிரச்சனையே பல விவசாயிகளை உறவினர்களிடம் உதவிக்கு செல்ல தயங்க வைத்து அதிக வட்டிக்கு வெளியில் வாங்க அது குட்டி போட்டு பல குடும்பங்களை சின்னாபடுத்திவிடுகிறது

மனோஜ்
03-01-2008, 10:02 AM
ஒரு கிராமத்தில் வாழ்வது பொன்ற உணர்வு எற்பட்டது மிகவும அருமையான குடும்ப அன்பு சூழலை மனதில் தைக்கிறது கதை நன்றி

இளசு
25-01-2008, 07:59 PM
இன்ன நடந்தது.அதற்குப்பின் இப்படி என சொல்லாமல்,,,
சரளமான உரையாடல்களாலும் சரமாரியான கதைமாந்தர்களாலும்..
சின்னச்சின்ன விவரம் சொல்லும் குறிப்பான வர்ணனைகளாலும்..

ஒரு இறப்பின் சோகம் - இளம்விதவை..
ஓரு பண நெருக்கடி - விவசாயியின் நிரந்தரப் பள்ளம்
ஒரு இளமைப்புயல் - துக்கவீட்டில் கல்யாணப்பேச்சு..
அந்த வகையறா அண்ணிக்கொடுமை இருக்கலாம் என தூவ..
இந்த வகையறா இப்படி ஒரு கூடுதல் சுமையா என ஏவ..

(வாழ்வின் வசந்தமான சுகங்கள் வழங்கும் சுகந்தமான பெண்மையின் மறுபக்கம்
இப்படி சுயநலம், புறம்பேசுதல், சூது கற்பிக்கும் உள்குத்தல் என அசூயைதான் இல்லையா?)

ஒரு வித்தியாசமான , திறனான கதையாசிரியரின் கைவண்ணம் கண்டேன் ஜேபிஎல் அவர்களே...

குழந்தைப் பசிக்காக மட்டுமே இழப்பு வீட்டில் மீண்டும் அடுப்பு மூட்டப்படும்..

அப்படி வாழ்க்கைச் சங்கிலி தொடர்வதற்காகவே..

''பேரன் பேத்திய பாத்துட்டு கண்ண மூட'' நம் முற்சந்ததியின் ஜீன்கள் சொல்லவைக்கின்றன..

நேற்றுகள் மறையும்போது
இயங்கவைக்க
இளம் நாளைகள் இல்லையேல்
இன்றுகள் உறைந்துவிடும்!

இந்த அழகியல் மண்டிய சமூகப் படிவத்தொடரை லதா அவர்கள்
தொடர வேண்டுகிறேன்.

அன்புரசிகன்
26-01-2008, 07:19 PM
ஒரே மூச்சில் படித்தேன். கிராமத்தின் மணம் கமழ்கிறது. சிறுபராயத்திற்கே போனதாக ஒரு நினைப்பு. கதையில் லயிக்க அதுவே ஒரு காரணம். தொடருங்கள்.

சுகந்தப்ரீதன்
26-02-2008, 09:45 AM
லாதா...அம்மா..எங்க போயிட்டீங்க...!!

வீட்டுல கல்யாண ஜோலியெல்லாம் முடிஞ்சுடிச்சிதான...? அப்புறம் ஏன் இன்னும் தாமதம்...சீக்கிரம் வந்து தொடருங்க லதாம்மா...!!

தலைப்பை பார்த்துவிட்டுதான் உள்ளே படிக்க வந்தேன்...!
படிக்க படிக்க கிராமத்து சூழ்நிலைகளும் அதில் பெண்களின் அன்றாட நிகழ்வுகளையும்... அச்சமூகத்தில் அவர்கள் படுகின்ற சங்கடங்களையும் வெகு இயல்பாக எழுத்துவடிவில் நீங்கள் காட்டியவிதம்...

பாராட்டுக்களும்..வாழ்த்துக்களும்..உங்களுக்கு...!!
அதை மீண்டும் தொடர வேண்டிகிறேன்.. உங்களை எங்களுக்காக...!!


நேற்றுகள் மறையும்போது
இயங்கவைக்க
இளம் நாளைகள் இல்லையேல்
இன்றுகள் உறைந்துவிடும்!
.
இல்லையென்றால் உலக வாழ்க்கை ஸ்தம்பித்து போகும்..!!
நிதர்சனமான உண்மை அண்ணா நீங்கள் கூறுவது...!!

jpl
29-08-2011, 02:01 AM
இன்ன நடந்தது.அதற்குப்பின் இப்படி என சொல்லாமல்,,,
சரளமான உரையாடல்களாலும் சரமாரியான கதைமாந்தர்களாலும்..
சின்னச்சின்ன விவரம் சொல்லும் குறிப்பான வர்ணனைகளாலும்..

ஒரு இறப்பின் சோகம் - இளம்விதவை..
ஓரு பண நெருக்கடி - விவசாயியின் நிரந்தரப் பள்ளம்
ஒரு இளமைப்புயல் - துக்கவீட்டில் கல்யாணப்பேச்சு..
அந்த வகையறா அண்ணிக்கொடுமை இருக்கலாம் என தூவ..
இந்த வகையறா இப்படி ஒரு கூடுதல் சுமையா என ஏவ..

(வாழ்வின் வசந்தமான சுகங்கள் வழங்கும் சுகந்தமான பெண்மையின் மறுபக்கம்
இப்படி சுயநலம், புறம்பேசுதல், சூது கற்பிக்கும் உள்குத்தல் என அசூயைதான் இல்லையா?)

ஒரு வித்தியாசமான , திறனான கதையாசிரியரின் கைவண்ணம் கண்டேன் ஜேபிஎல் அவர்களே...

குழந்தைப் பசிக்காக மட்டுமே இழப்பு வீட்டில் மீண்டும் அடுப்பு மூட்டப்படும்..

அப்படி வாழ்க்கைச் சங்கிலி தொடர்வதற்காகவே..

''பேரன் பேத்திய பாத்துட்டு கண்ண மூட'' நம் முற்சந்ததியின் ஜீன்கள் சொல்லவைக்கின்றன..

நேற்றுகள் மறையும்போது
இயங்கவைக்க
இளம் நாளைகள் இல்லையேல்
இன்றுகள் உறைந்துவிடும்!

இந்த அழகியல் மண்டிய சமூகப் படிவத்தொடரை லதா அவர்கள்
தொடர வேண்டுகிறேன்.

இளசுவின் திறனாய்வு மிக்க நன்று...


"நேற்றுகள் மறையும்போது
இயங்கவைக்க
இளம் நாளைகள் இல்லையேல்
இன்றுகள் உறைந்துவிடும்!"

சொக்க வைக்கும் சொல்நடை.

jpl
29-08-2011, 02:04 AM
லாதா...அம்மா..எங்க போயிட்டீங்க...!!

வீட்டுல கல்யாண ஜோலியெல்லாம் முடிஞ்சுடிச்சிதான...? அப்புறம் ஏன் இன்னும் தாமதம்...சீக்கிரம் வந்து தொடருங்க லதாம்மா...!!

தலைப்பை பார்த்துவிட்டுதான் உள்ளே படிக்க வந்தேன்...!
படிக்க படிக்க கிராமத்து சூழ்நிலைகளும் அதில் பெண்களின் அன்றாட நிகழ்வுகளையும்... அச்சமூகத்தில் அவர்கள் படுகின்ற சங்கடங்களையும் வெகு இயல்பாக எழுத்துவடிவில் நீங்கள் காட்டியவிதம்...

பாராட்டுக்களும்..வாழ்த்துக்களும்..உங்களுக்கு...!!
அதை மீண்டும் தொடர வேண்டிகிறேன்.. உங்களை எங்களுக்காக...!!


இல்லையென்றால் உலக வாழ்க்கை ஸ்தம்பித்து போகும்..!!
நிதர்சனமான உண்மை அண்ணா நீங்கள் கூறுவது...!!

கல்யாண ஜோலியெல்லாம் முடிந்து, பாட்டி ஆகி, தனிக்குடித்தனமும் வைத்தாகி விட்டது.அதனால் தான் மீண்டும் எழுத நேரம் கிட்டியிருக்கின்றது. விட்ட இடத்திலிருந்து மீண்டும்..

கலைவேந்தன்
29-08-2011, 04:37 AM
மிக எளிய நடையில் கிராமத்துப் பின்னணியில் அழகாகப் போகிறது கதை. நான் மீண்டும் வந்த நேரம் ஜெயபுஷ்பலதாவும் மீண்டும் வந்து கதை தொடரப்போவதாகச் சொல்லி இருப்பது ஆறுதலைத் தருகிறது.

தொடருங்கள் லதா..!

jpl
29-08-2011, 06:36 AM
ஏன் கலை இடையில் வருகைக்கு தடை?

கலைவேந்தன்
29-08-2011, 02:22 PM
ஒன்றா இரண்டா எடுத்துச்சொல்ல.. நீங்கள் நலம் தானே லதா..?

seguwera
29-08-2011, 03:13 PM
கதை மிக அருமையாக தொடர்கிறது

கீதம்
30-08-2011, 02:16 AM
முழுவதையும் படித்தேன். இயல்பான உரையாடல்களால் கதைமாந்தரின் அறிமுகமும், குணாதிசய வெளிப்பாடும் உணர்த்தும் விதம் நன்று. பணச்சிக்கல் அவிழுமா? மனச்சிக்கல் உருவாகுமா? ஆர்வம் உண்டாக்கும் விதமாய் ஒரு அருமையான தொடர்.பாராட்டுகள். விரைவில் தொடர்வீர்கள் என்று நம்புகிறேன்.

jpl
30-08-2011, 04:34 AM
மகேந்திரன் வயக்காட்டுக்குச் சென்ற சிறிது நேரத்தில் போரா போராவாக* பஞ்சுப் பொதி வந்திறங்கியது.விலை படியாததால் களத்து மேட்டிலிருந்து வீட்டிற்கு வந்த்தது.
அதை கண்டதும் மகமாயி பரபரப்பானாள்.
தேவி பண்ணை ஆள்களுக்கு சாப்பிட எதாச்சும் செய்து வை என்று உத்திரவிட்டவள்,வந்த வேலை ஆட்களையும் வேலை வாங்க ஆரம்பித்தாள்.
பேத்தி விளையாட ஒரு பஞ்சுப் பொதி மட்டும் ஹாலில் தனியாக வைத்து விட்டு, மற்றவற்றை ஒன்றின் மேல் ஒன்றாக அம்பாரமாக அடுக்க வைத்துக் கொண்டிருந்தாள் மகமாயி.
தேவியும்,வேணியும் அடுப்பாங்கடையில் மும்மரமானார்கள்.
நிர்மலா அவர்கள் இருவருக்கும் உதவுகிறேன் என்று இருவரிடமும் விளையாடிக் கொண்டிருந்தாள். தேவி அவளை "சும்மா இரு" என்று அடக்கிப் பார்த்தாள்.
வேணி இருக்கட்டும் மதினி “எத்தனை நாளைக்கு கல்யாணம் காட்சியின்னு அப்பறம் அடங்கத்தானே வேண்டியிருக்கு, இருந்துட்டு போகட்டும்” என்று பச்சைக் கொடி காட்டினாள்.
உண்மையில் நிர்மலாவின் வரவு வீட்டின் துக்கச் சூழலை வெகுவாக மாற்றி இருந்ததது.”வாயாடின்னு பேர் வாங்கினால் போற வீட்டில நல்லாயிருக்கும்” என்று முணுமுணுத்தாள் தேவி..
நிர்மலா அதை எல்லாம் சட்டை செய்யாமல் பின்னால் ஓடினாள்.
சமைக்கும் அவசரத்தில் துவைத்த துணியை காய வைக்காமல் இருப்பதைப்
பார்த்த வேணி வாளியை எடுத்தாள்.
ஆட்களை மேற்பார்வை பார்த்துக் கொண்டே மாட்டுக்கு தீனி போட்டு, தண்ணீர் காட்டினாள் மகமாயி.
"அத்தே துணியை காயப் போட்டு வந்தரேன்"என்றவளை," சரி போட்டு வா"
என்று கூறிய மகமாயி வைக்கோல் எடுக்க பின்னாலுள்ள வைக்கோல் படப்பையை நோக்கி நடந்தாள்.
நிர்மலா வழியெங்கும் அடுக்கி வைத்த பஞ்சு பொதியை கடந்து, மாடிப் படி இருக்கும் ஆசாரத்தை நோக்கி நடந்தாள்.
ஆசாரத்தில் ஏகத்துக்கு அடுக்கிய பஞ்சுப் பொதியினைக் கடந்து மூலையிருக்கும் படியை நோக்கி திரும்ப முயல,அப் பஞ்சுப் பொதியின் பின்னாலிருந்து சந்திரன் தோன்றினான்.கண்கள் இமைக்க மறந்து,ஒரே வினாடியில் தன்னிலை இழந்தான் சந்திரன்.
போரா-கித்தான் சாக்கு கொண்டு பெரியதாக தைக்கப்பட்டு இருக்கும்.

jpl
30-08-2011, 04:36 AM
நலமே கலை..நீங்கள்?