PDA

View Full Version : வயோதிபர்களுக்கு தினமும் பழச்சாறு



IDEALEYE
08-12-2007, 12:26 PM
வயோதிபர்களுக்க மகிழ்ச்சியூட்டும் கண்டுபிடிப்பை சிட்னி பல்கலைக்கழக ஆய்வு வெளியிட்டுள்ளது. பழவகைகள் கலந்த பழச்சாற்றை தினமும் அருந்தி வந்தால் புராஸ்டேட் புற்றுநோயைத் தடுக்கலாம் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

இது குறித்து லண்டனிலிருந்து வெளியாகும் "டெய்லி மெயில்' பத்திரிகையில் கூறப்பட்டுள்ளதாவது:

திராட்சை, பெரி ரக பழ வகைகளைக் கலந்த பழச்சாற்றை அருந்தும்போது புற்றுநோய் செல்களின் வளர்ச்சி மட்டுப்படுவது தெரியவந்துள்ளது. இதை ஆராய்ச்சிக் குழுவின் தலைவர் டாக்டர் ஜாஸ்சிங் உறுதிப்படுத்தி உள்ளார்.

ஆய்வுக் கூடத்தில், மனித புராஸ்டேட் கட்டியுடன் கூடிய மரபுரீதியில் உருவாக்கப்பட்ட சுண்டெலியைக் கொண்டு பரிசோதனை செய்ததில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இரண்டு வாரங்கள் தொடர்ந்து பழச்சாறு கொடுத்தபோது புராஸ்டேட் புற்றுக் கட்டி 25 சதவீதம் சுருங்கியிருப்பது தெரியவந்தது.

நாள்தோறும் எவ்வளவு பழச்சாறு அருந்தினால் புற்று நோய் செல்கள் மட்டுப்படும். பழச்சாறு அருந்தி வரும் நிலையில் புராஸ்டேட் புற்றுநோய் வராமல் முன்கூட்டியே தடுக்க முடியுமா என்று அடுத்த கட்டமாக ஆராய்ச்சி செய்ய திட்டமிட்டுள்ளனர்.

அதோடு புராஸ்டேட் புற்றுநோய் உள்ள 150 ஆண்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு நாள்தோறும் 3 டம்ளர் பழச்சாறு கொடுத்து அதன் விளைவு எப்படி இருக்கும் என்பது குறித்து ஆய்வு செய்யவும் ஆராய்ச்சியாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

பழச்சாறு எந்த அடிப்படையில் புராஸ்டேட் புற்று கட்டியைக் குறைக்கிறது. நோயின்தன்மைக்கு ஏற்ப எவ்வளவு பழச்சாறு குடிக்க வேண்டும் என்பதை எல்லாம் கண்டுபிடித்து தெளிவான வழிமுறைகளை வகுக்க இன்னும் பல ஆண்டுகள் ஆகலாம்.

இருப்பினும் புராஸ்டேட் புற்றைத் தடுக்க ஆண்கள் தினமும் பலவகையான காய்கறிகள் மற்றும் பழங்களை உணவில் தாராளமாகச் சேர்த்துக் கொண்டால் அது புராஸ்டேட் புற்று மட்டுமல்ல எல்லா வகை புற்றுநோயைத் தடுக்கவும் பெரும் உதவியாக இருக்கும் என்று "டெப்பியா கிளைடன்' என்ற புராஸ்டேட் நோய்த் தடுப்பு அறக்கட்டளை கூறியுள்ளது.

புராஸ்டேட் சுரப்பி: புராஸ்டேட் சுரப்பி சிறுநீர் பை அருகே அமைந்துள்ளது. ஆண்களிடம் மட்டுமே உள்ள உறுப்பு இது. இந்த சுரப்பில் சுரக்கும் நீர் விந்தணுக்கள் எளிதில் நீந்திச் செல்வதற்கு உதவி செய்கிறது. 60 வயதான ஆண்களில் பலருக்கு புராஸ்டேட் வீக்கம் ஏற்படும். அது சிலருக்கு புற்றுநோயாக மாறும் அபாயம் உள்ளது.

அனுராகவன்
20-03-2008, 04:27 AM
நன்றி நண்பரே!!
இப்போது தான் கண்டேன்..
நன்றி உங்கள் பகிவிற்கு...
தொடர்ந்து வாருங்கள்