PDA

View Full Version : 3000ஆவதுபதிவு-பூவின் முதல் அ(ப)டி..!பூமகள்
08-12-2007, 10:07 AM
3000-ஆவது பதிவு - பூவின் முதல் அ(ப)டி..!


எனது மூவாயிரமாவது பதிவு எப்படியானதாய் அமைய வேண்டுமென்று என் மூளையின் அனைத்து நரம்புகளுக்கும் ஓவர் டைம் வேலை செய்ய வச்சி யோசிச்சதுல ஒரு நிகழ்வு மறக்கவே முடியாத ஒன்றாக இன்று வரை அமைந்தது தெரியவந்தது.

அதைப் பத்தி சொன்னால்.. இங்கு ப(சி)லருக்கு சந்தோசமா இருக்கும்.. ஏன்னா.. பூ வாங்கிய அடி பத்தினதாச்சே.....:rolleyes:

என் மழலைப்பருவத்துக்கு இப்போ உங்கள கூட்டிட்டு போறேன்.. அப்போவெல்லாம் இப்போ மாதிரி கொசுவும் கிடையாது... கான்வெண்டும் கிடையாது. எங்கோ... அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஆங்கில பள்ளிகள் ஆரம்பித்து அது பணக்காரர்களுக்கே உரிய பள்ளியான காலம் அது.

அதுக்குன்னு பூவ ரொம்ப பழங்கால பொண்ணுன்னு நினைக்க வேணாம்... என்னதான் வாத்தி என் வயதை தப்பு தப்பா சொன்னாலும் அவரது பாட்சா எல்லாம் இங்கு பலிக்காது.

அப்போது எங்கள் இருப்பிடத்துக்கு கொஞ்சம் தொலைவில் ஒரு ஆங்கிலப்பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. எங்க வீட்டு நிலை அடித்தள நடுத்தர வர்க்கத்தின் ஏக்கங்களோடு என் பெற்றோரும் என்னை அந்தப் பள்ளியில் சேர்த்தனர். அப்போது பூவுக்கு வயது 4.

அப்போ எல்லாம் ஃபிரீகேஜி கிடையாது. நான்கு வயதில் நேரடியாய் எல்.கே.ஜி. சரியான அம்மா பிள்ளையான நான் தினம் தினம் அம்மாவின் முந்தானை பிடித்து அழுது முடிக்கவே ஒரு வாரம் எடுத்தது.
மிகப்பெரிய மைதானத்தில் கடைசியில் இருக்கும் ஒரு மூன்று வகுப்பறைகள். அதில் நடுவில் அமைந்த வகுப்பறை என் வகுப்பு.

முதன் முதலில் அம்மா என்னை அங்கு விட்டபோது, அம்மாவை பிரியும் துயர்தாங்காமல் அழுது ஆற்பாட்டம் செய்தது இன்னும் கண்ணில் நிழலாடுகிறது. அப்போது, அந்த பெரிய மைதானம் இறுதி வரை அம்மா சென்று திரும்பும் வரை அழுத படியே பார்த்து நின்றிருப்பேன். ஓடாமல் இருக்க என்னைப் பிடித்த படி ஆயம்மா...

ஒரு வாரத்திலேயே எல்லாம் சரியானது. ஆசிரியரின் ஆங்கிலப் பாடம்.. கிரீக் லத்தின் போல புரியாத மொழி. வாய்ப்பாடு போல் ரைம் சொல்லி சொல்லியே 3 மாதங்கள் போனது. எல்லாக் குழந்தைகளும் சீருடையை அழுக்கு பண்ணிட்டு மாலை வீடு திரும்புகையில் அப்பவே பூவு அழுக்கே ஆக்காம நீட் பொண்ணா வருவது பார்த்து அம்மா ரொம்பவே ஆச்சர்யபடுவாங்க.. இன்னிக்கும் சொல்லுவாங்க.. நோட் புக் கூட அப்படியே புதுசு மாதிரி இருக்கும்னு..! (படிச்சாதானே...! அப்படின்னு முனுமுனுக்கிறீங்களோ??:aetsch013::lachen001:) ஆனால்.. நான் படிப்பிலும் ஃபஸ்ட்.

அந்த புதிய பள்ளியின் முதல் செட் மாணவர்கள் என்பது இப்போதும் கூடுதல் சிறப்பு.

அது ஆகஸ்ட் மாதம்.. சுதந்திர தின விழா நெருங்கிக் கொண்டிருந்தது.

தமிழ்த்தாய் வாழ்த்து பாட மாணவியையும் "ஜனகனமன..." பாட ஒரு மாணவனையும் தேடிட்டு இருந்தாங்க..!

எங்க மிஸ் வந்து பாட்டு பாட யாருக்கு தெரியும்னு கேட்டதும்... ரொம்ப வேகமா பூவு கையை தூக்கிட்டேன்.. (நாம தான் அப்பவே ஒரு நாலு வரி தெரிஞ்சாலும் அது பாடிப்பாடியே கூட இருக்கவங்கள காலி பண்ணிருவோமே..!:lachen001::lachen001:)

என்னோடு கை தூக்கிய எல்லோரும் அவுட் ஆக.. நான் மட்டும் ஜெயித்த பெருமிதத்தில் பெவிலியனிலிருந்து வெளிப்பட்டேன்.

கை தூக்கியது எவ்வளோ பெரிய குத்தமுன்னு...அப்போதும் பூவுக்கு புரியலை...!

சுதந்திரதின விழாவுக்கு சில நாட்கள் தான் இருந்தது. அந்த மிஸ் பேரு நினைவில் இல்லை. ஆனால்.. பார்க்க பயங்கர உயரமா... அதற்கு தகுந்த உடல் பருமனோட சும்மா சூப்பரா இருப்பாங்க..!

என்னை கூப்பிட்டு அவங்க டேபிள் முன்னாடி நிக்க வச்சாங்க... அப்போ தான் பூவுக்கு ஏழரை உக்கிரத்தோட எட்டிப் பார்க்க ஆரம்பித்திருந்தது.. பயிற்சி ஆரம்பமானது..

"நீராரும் கடலுடுத்த... நிலமடந்தை... கெழிலொழுகும்.............
சீராரும் வதனமென திகழ் பரத கண்டமெதில்...."

இப்படி மிஸ் பாட நான் கூட பாட.... அவங்க பாட... மழலை மொழியின் நான் பாட... கிட்ட தட்ட 2 மணி நேரம் கழித்து என்ன தப்பு செய்தேனோ தெரியாது... பளார்னு ஒரு அறை.. கன்னத்தில்..!
எனக்கு பொறி கலங்கி போச்சு... காதுல ஏதோ கொய்ன்னு ஒரு சத்தம்.. அதுக்கப்புறம்.. பூவு கண்ணுல அழுகை வந்ததோ இல்லையோ... ஆனால்.... மூக்கிலிருந்து நல்லா ஜலதோசம் வந்தது..!

ஆனாலும்... நான் முழுக்க பாடி முடிக்கும் வரை அவங்க அடி கொடுப்பதை நிறுத்தவே இல்லை. அவங்க வீட்டில் என்ன பிரச்சனையோ.. அன்னிக்கி நான் நல்லா மாட்டிக்கிட்டேன்.. என் வீட்டிலேயே ஒரு அடி கூட வாங்காத சமத்து பூ அங்கு விதிய நொந்துட்டு அழுதிட்டே பாடினேன்.

என் மழலை வயதில் கடினமான அந்த சொற்களை சரியாக உச்சரிக்கனும்னு அவங்க நினைச்சது இன்னிக்கி தான் எனக்கு புரிஞ்சது.. இதுல அதை பார்க்காம வேற மனப்பாடமா பாடனும்..

அன்னிக்கி மதியம் முழுக்க அடிவாங்கி அழுதழுது பாடி.. திரும்ப அடிவாங்கி... சாயிந்திரம் வீட்டுக்கு போக அம்மா வரும் வரை அழுதிட்டே இருந்தேன்.. சிவப்பான கன்னத்தை தொட்டு பார்த்தால்... இரு பக்கமும் கைவிரல் பதிந்து பூவின் புசு புசு (அப்பவெல்லாம் அமுல் பேபி தான் பூ..!:cool::rolleyes:) கன்னம் மேலும் சிவந்து வீங்கியிருந்தது.

வீட்டுக்கு வந்து அம்மாவிடம் சொன்னாலும்.. மிஸ் நல்லதுக்கு தான் அடிச்சிருப்பாங்கன்னு சொல்லி என்னை சமாதானப்படுத்தினார்.

அடுத்தடுத்த நாட்கள் வாழ்த்துப் பாடலை சரியாக பாடும் தீவிர பயிற்சி..! திருத்தங்களும் உச்சரிப்புகளும் ஏற்ற இறக்கங்களும் பூவின் குரலில் பிரவேசித்தன.

எதிர்பார்த்த நாளும் வந்தது. முதன்முதலில் மேடையில் எல்லார் முன்னிலையிலும் பூ மைக் முன் நின்று பாடத் துவங்கியது. மிஸ் அடித்ததன் விளைவுகள் இரண்டு:


பாசிட்டிவ் விளைவு = பாடல் முழுவதும் மறக்காமல்.. உச்சரிப்பு பிசகாமல் பயமறியாமல் பாடினேன்.
நெகடிவ் விளைவு = பாடுகையில் இடையிடையே மூக்குனுள் இருந்து சளியும் வெளிப்பட்டு வெறுப்பேத்தியது. மூக்கை உறிஞ்சி உறிஞ்சி எப்படியோ பாடிமுடித்தேன் என்பது வேறு கதை.
இந்த மேடை தான் என் வாழ்வில் நான் ஏறிய முதல் மேடை. சொல்லப் போனால், இந்த அடிகள் எனக்கு பாட்டின் மீது வெறுப்பை ஏற்படுத்துவதற்கு பதில் ஒரு உத்வேகத்தை ஏற்படுத்தின.

அன்று மேடையில் பெருமையாய் நின்று தைரியமாய் பாடிய என்னை பார்த்து பலரும் என் அம்மாவிடம் பாராட்டியதைக் கேட்கையில் அந்த அடிகளின் வலி மறந்தேவிட்டது.

அன்று ஆரம்பித்த வாழ்த்துக் கூட்டப் பாடல்.. அனுதினமும் நான் சேர்ந்த பள்ளிகள் எங்கும் என் குரலினாலேயே ஆரம்பித்தது.

எல்லார் முன்னிலையிலும் பாடுவதால் எல்லோருக்கும் தெரிந்த ஒரு மாணவியாக இருந்தேன். கீழ் வகுப்பு குட்டீஸ் முதல் மேல் வகுப்பு ஜாம்பவான்கள் வரை என் பெயர் பிரபலமானது.

பள்ளியில் எத்தனை மேடைகள் ஏறிப் பாடியிருந்தாலும், என் வாழ்வின் அடித்தளத்தில் என்னைச் செதுக்கிய முதல் அடி வெற்றிப் படிக்கல்லாய் அமைந்ததை இன்றும் மறக்கவே இயலவில்லை.:)

(சரி சரி.... பூவுக்காக எல்லாரும் அழுவீங்கன்னு தெரியும்.. கண்ணைத் தொடச்சிட்டு... வேலையைப்பாருங்க...!
பக்கத்து சீட்டுக்காரரு.. ஓரக்கண்ணால உங்கள பார்த்து சிரிக்கிறாரு பாருங்க..!:lachen001::D:D)

மதி
08-12-2007, 10:14 AM
நிஜமாவே அழுதுட்டேன் பூ....
ச்சே... டீச்சருங்களுக்கு பச்ச புள்ளைங்கள அடிக்கறதே பொழப்பா போச்சு..

சரி... மூவாயிரம் பதிவுகள் போட்டு நல்ல வேகத்தில் போய் கொண்டிருக்கிறீர்கள்..(நானெல்லாம் என்னிக்கு மூவாயிரம் பதிவுகள் போடறது)

வாழ்த்துக்கள்..

சுகந்தப்ரீதன்
08-12-2007, 10:39 AM
மன்ற மக்களே... கண்ணுல தண்ணி வரவைக்க பூ நல்லாவே காதுல பூ சுத்துது.. யாரும் ஏமாந்துடாதிங்க..!

உதாரணத்துக்கு...
"நீராரும் கடலுடுத்த... நிலமடந்தை... கெழிலொழுகும்.............
சீராரும் வதனமென திகழ் பரத கண்டமெதில்...."

இந்த ரெண்டு வரிக்கு மேல பூவூக்கு பெரிய கண்டமே இருக்கு... அவங்களுக்கு அதுக்கு மேல பாடத் தெரியாததுங்க...?.

அப்புறம் அமுல் பேபியாம்..?

எனக்கு கூடத்தான் அமுல் விளம்பரத்த பாத்தா ஏக்கமா இருக்கும்.. பூவு தன்னோட ஏக்கத்த இந்த மாதிரி பொய்சொல்லி தீத்துக்கு..போனப் போகுதுன்னு பூவ விட்டுங்க..மக்களா..!

அடுத்து இஸ்கூல்ல..பஸ்டாம்..?

அது படிப்புலன்னு நினைக்காதிங்க.. மத்தியானம் பெல் அடிக்கறதுக்குள்ள சாப்புடுறதுலதான்..!

பக்கத்து சீட்டுக்காரரு.. ஓரக்கண்ணால உங்கள பார்த்து சிரிக்கிறாரு பாருங்க..!

நல்லா பாருங்க.. அவரு அழுவுறாரு.. வாரக்கணக்குல குளிக்கத பூக்கூட அவர உட்கார வச்சுட்டாங்களேன்னு..?!

(கண்டிப்பா அடுத்த ஆப்பு எனக்கு இருக்குங்கோ..)

பூமகள்
08-12-2007, 10:44 AM
நிஜமாவே அழுதுட்டேன் பூ....
ச்சே... டீச்சருங்களுக்கு பச்ச புள்ளைங்கள அடிக்கறதே பொழப்பா போச்சு..
அச்சச்சோ.. உங்களை நிஜமாவே அழ வச்சிட்டனோ??
என் பிறந்த நாளும் அதுவுமா... அழக்கூடாது மதி அண்ணா.
உங்களின் வாழ்த்துக்கு நன்றிகள் அண்ணா.
நீங்களும் விரைவில் மூவாயிரமென்ன... முப்பதாயிரம் கூட பதிப்பீங்க அண்ணா. நான் வந்து அதுக்கும் வாழ்த்தனும் என்று இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

பூமகள்
08-12-2007, 10:53 AM
மன்ற மக்களே... கண்ணுல தண்ணி வரவைக்க பூ நல்லாவே காதுல பூ சுத்துது.. யாரும் ஏமாந்துடாதிங்க..!

சுபி.... உன் மூளைய ஏன் இப்படி அடிக்கடி வீட்டுல வச்சிட்டு வந்து இருக்கவங்களையும் குழப்புறே..??:aetsch013::lachen001:
உண்மையைத் தான் பூ எப்பவும் சொல்லும்னு எல்லாருக்குமே தெரியும். நீ இப்படி பூவை நம்பாதீங்கன்னு எல்லாரு காதிலும் பூ சுத்த நினைச்சா உன்னை என்னன்னு சொல்றது... நான் சொல்ல மாட்டேன்.. மத்தவங்களே சொல்லட்டும்..! :D:D

இந்த ரெண்டு வரிக்கு மேல பூவூக்கு பெரிய கண்டமே இருக்கு... அவங்களுக்கு அதுக்கு மேல பாடத் தெரியாததுங்க...?.
எல்லா வரியையுமா போடனும்?? (இடமிச்சம்..!:cool::p)
"ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு தான் பதம்."
எந்தப் பாடல்னு சொல்ல முதலிரு வரிகள் போதுமே..!!:icon_b:
ஹையோ ஹையோ.. இது கூட தெரியல... பாவம் சுபிக்கு டியூசன் வைக்க ஏற்பாடு பண்ணுங்கப்பா...!:rolleyes:

(கண்டிப்பா அடுத்த ஆப்பு எனக்கு இருக்குங்கோ..)
இன்னிக்கி என் பிறந்த நாள் என்பதால்... ஆப்பு வைக்கலை..பிழைச்சி போங்க.. நாளைக்கு இருக்கு..!:sauer028::sauer028:

lolluvathiyar
08-12-2007, 10:53 AM
பூமகள் அடிவாங்கிய காட்சியை காது குளிர கேட்டு சந்தோசமடைந்தோம். இளம் வயது அனுபவங்களை பகிர்ந்து கொள்வதில் ஒரு வகை சந்தோசம் இருகிறது, அதில் பூமகள் அதிக சந்தோசமடையும் ஒரு குழந்தை.

சின்ன வயசிலயே மேடை ஏறி பாட்டு எல்லாம் பாட வச்சுட்டாங்க. அதையும் பாடீட்டீங்க. என்ற கதை என்னத்த சொல்ல, கடைசிவரைக்கும் மிஸ் அப்பா அம்மா கிட்ட (அட பிரென்ட்ஸ் அன்னதம்பி கிட்டயும்) அடிவாங்கீட்டே இருப்பேன். அந்த அளவுக்கு நான் நம்ம புள்ளி ராஜா அப்பாவி, அடி வாங்கிய உனக்கு பாஸிட்டிவா பாட்டு பாடிவிட்டாய், ஆனா எனக்கு என்ன பாசிட்டிவ் ஏற்பட்டதுனு தெரியல. ஒன்னே ஒன்னு நடந்து கிட்டு இருக்கு. இப்பவும் சம்சாரத்துகிட்ட அடி வாங்கீட்டே இருக்கேன். பையன் வேற் வளர்ந்துட்டு இருக்கான். நாளைக்கு ...

அன்புரசிகன்
08-12-2007, 10:56 AM
ஐ......... ஜாலி :icon_rollout:.. பூவு :sport-smiley-002:அடிவாங்கியிருக்கு... :huepfen024: :aktion033: :medium-smiley-080:

3000 ற்கு வாழ்த்துக்கள் பூ. :4_1_8:

சுகந்தப்ரீதன்
08-12-2007, 11:06 AM
"ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு தான் பதம்."
:sauer028::sauer028:
ஒரு சோத்த பதம் பாக்குறன்னு சொல்லிட்டு பானை சோத்தையும் பதம் பாக்குற நீ.. இப்படி பழமொழி சொல்றது... கொஞ்சம்கூட நல்லா இல்ல பூ.. ஒருவாட்டி உண்மை சொல்லி பாரேன்.. உனக்கே சந்தோசமா இருக்கும்..?:mini023:

சுகந்தப்ரீதன்
08-12-2007, 11:08 AM
:icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout:

ஷீ-நிசி
08-12-2007, 11:11 AM
நல்லா காமெடியா சொல்லியிருக்க.....

இப்ப கூட வாழ்த்து பாடல் பாடும்போது மூக்க உறிஞ்சிகிட்டுதான் பாடுவீங்களாமே!

டீச்சர் சொன்னாங்க!

IDEALEYE
08-12-2007, 12:14 PM
கணைத்துடைத்துக்கொண்டு வேலையைப்பருங்கள்
என்று சொல்ல 3000 பதிவுகள் வரை பூ காத்திருந்துள்ளார்
வாழ்வில் நிலைக்கும் அனுபவப்பாடங்கள் சொல்லித்தரப்பட்ட பல சந்தர்ப்பங்களில் மறக்காமல் நிலைக்கும் ஒரு பாடமாய் பூவின் கதை அமைகின்றது, வாழ்த்துக்கள் பூ......
ஐஐ

சிவா.ஜி
08-12-2007, 12:40 PM
சின்ன வயது நினைவுகளே சுகம்தான்.அதிலும் முதல் மேடை அனுபவம் மறக்கமுடியாதது.அடி வாங்கியபின் அசத்திய அனுபவம் ஆயிற்றே எப்படி மறக்கும்?பகிர்ந்து கொண்ட விதம் மிக அருமை.3000-மாவது பதிவாக வந்திருக்கும் இந்த இனிய நினைவுப் பேழை அழகு.வாழ்த்துகள் பூமகள்.

வசீகரன்
08-12-2007, 12:49 PM
எல்லோரையும் கவர்ந்துவிடும் பாங்கு எல்லோருக்கும் வந்துவிடாது
பூ மகள்......
தற்போது மன்றத்தின் செல்லமே நீங்கள்தான்....!உங்கள் அகத்தின் அழகு ஊடகத்தின் வாயிலாக நாங்கள் அறிகிறோம்....! உங்கள் கலகலப்பும்.... ஆர்வமும் ........ அனைவரிடமும் நட்பு பாராட்டும் மனப்பாங்கு..... வியக்க வைக்கிறீர்கள் பூ....!
உங்கள் உள்ளம் ...மடை திறந்த வெள்ளம்......! நல்ல ஒரு ஞாபகத்தை
பகிர்ந்து கொண்டீர்கள்......! அடி வாங்குற சீன் சூப்பர்......!


என்றும்
வசீகரன்

ஓவியன்
08-12-2007, 01:04 PM
நான் படிச்ச ஸ்கூலில எல்லாம் நம்மளுக்கு டீச்சர்ஸ் அடிக்க மாட்டாங்க, தப்பு பண்ணினாலும் மன்னிச்சு விட்டிடுவாங்க......!! :D:D:D

நம்மளுக்கு அப்படி ஒரு ராசி.......!! :D
அந்த இராசியின் பின்னால் ஒரு இரகசியம் ஒளிஞ்சிருக்கு...!! :icon_rollout:

ஆனா அப்படி எதுவுதுமில்லாமல் நல்லாவே அடி வாங்கியிருக்கீங்க...
கேட்க பாவமா இருக்கு.....!! :frown:

சரி, சரி இனிமேல் யாரிடமும் அடி வாங்காமலிருக்க என் வாழ்த்துக்கள்...!! :icon_b:

தாமரை
08-12-2007, 01:14 PM
எங்க அந்த டீச்சர்! விடப்போறதில்லை.. இன்னிக்கு!

ஆனா பூவு, இந்தப் பாட்டுக்கு இரண்டு மணிநேரம் ஓவர்தான்.. நம்ம ஸ்வேதா ஒருகூடை சன்லைட் பாட்டை இரண்டு முறைக் கேட்டதுமே மனப்பாடம் பண்ணிட்டா! ஹி ஹி

பூமகள்
08-12-2007, 01:28 PM
பூமகள் அடிவாங்கிய காட்சியை காது குளிர கேட்டு சந்தோசமடைந்தோம்.
வாத்தியார் அண்ணா...!
இப்படி ஒரு கொலைவெறியா?? இதை வெளிக் கொண்டுவரவே இந்த பதிவு...!!:rolleyes::smartass::innocent0002: :thumbsup:
ஹா ஹா ஹா..!:lachen001: மாட்டிக்கிட்டீங்களா????:icon_b::icon_clap::082502now_prv:
தவளை___________ கெடும்..!! (கோடிட்ட இடத்தை நிரப்பிக்கோங்கபா..!:icon_b:)
ஐ......... ஜாலி :icon_rollout:.. பூவு :sport-smiley-002:அடிவாங்கியிருக்கு... :huepfen024: :aktion033: :medium-smiley-080:
என்னே ஒரு வில்லத்தனமான பாசம்..!! :ohmy::icon_hmm:
உங்களை அப்புறமா வேறு திரியில் கவனிச்சிக்கிறேன்..!:icon_tongue::icon_shout:

பூமகள்
08-12-2007, 01:40 PM
நல்லா காமெடியா சொல்லியிருக்க.....
நன்றிகள் ஷீ..! :)

கண்ணைத்துடைத்துக்கொண்டு வேலையைப்பருங்கள் என்று சொல்ல 3000 பதிவுகள் வரை பூ காத்திருந்துள்ளார் வாழ்த்துக்கள் பூ......
மிகுந்த நன்றிகள் ஐடியல் ஐ. :)

பகிர்ந்து கொண்ட விதம் மிக அருமை.3000-மாவது பதிவாக வந்திருக்கும் இந்த இனிய நினைவுப் பேழை அழகு.வாழ்த்துகள் பூமகள்.
சிவா அண்ணா..!
உங்களின் விமர்சனம் சந்தோசமாய் இருக்கு. ரொம்ப நன்றிகள் அண்ணா. :)

ஆதவா
08-12-2007, 01:43 PM
அதைப் பத்தி சொன்னால்.. இங்கு ப(சி)லருக்கு சந்தோசமா இருக்கும்.. ஏன்னா.. பூ வாங்கிய அடி பத்தினதாச்சே.....:rolleyes:


நிச்சயமா எனக்கு சந்தோசம்தான்.....


என் மழலைப்பருவத்துக்கு இப்போ உங்கள கூட்டிட்டு போறேன்..

எத்தனை வருசமுங்க? நாற்பத்தைந்தா? :D


அப்போவெல்லாம் இப்போ மாதிரி கொசுவும் கிடையாது... கான்வெண்டும் கிடையாது.

கொசுவைப் பார்த்திருக்கேன், காண்வெண்டைப் பார்த்ததில்லை. :D
எங்கோ... அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஆங்கில பள்ளிகள் ஆரம்பித்து அது பணக்காரர்களுக்கே உரிய பள்ளியான காலம் அது.

அதுக்குன்னு பூவ ரொம்ப பழங்கால பொண்ணுன்னு நினைக்க வேணாம்...


அப்படியெல்லாம் சரியா நெனக்கமாட்டோம்....என்னதான் வாத்தி என் வயதை தப்பு தப்பா சொன்னாலும் அவரது பாட்சா எல்லாம் இங்கு பலிக்காது.


வாத்தியார் உண்மையத்தான் சொல்லுவாரு..அப்போது எங்கள் இருப்பிடத்துக்கு கொஞ்சம் தொலைவில் ஒரு ஆங்கிலப்பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. எங்க வீட்டு நிலை அடித்தள நடுத்தர வர்க்கத்தின் ஏக்கங்களோடு என் பெற்றோரும் என்னை அந்தப் பள்ளியில் சேர்த்தனர். அப்போது பூவுக்கு வயது 4.

நாற்பத்தியொரு வருடத்திற்கு முன்பு....:icon_rollout::wuerg019:அப்போ எல்லாம் ஃபிரீகேஜி கிடையாது. நான்கு வயதில் நேரடியாய் எல்.கே.ஜி. சரியான அம்மா பிள்ளையான நான் தினம் தினம் அம்மாவின் முந்தானை பிடித்து அழுது முடிக்கவே ஒரு வாரம் எடுத்தது.

ஆமாமா..... உங்கம்மா கூட சொன்னாங்க.... ஸ்கூலுக்குப் போகாம அடம்பிடிச்ச கதையை...மிகப்பெரிய மைதானத்தில் கடைசியில் இருக்கும் ஒரு மூன்று வகுப்பறைகள். அதில் நடுவில் அமைந்த வகுப்பறை என் வகுப்பு.

முதன் முதலில் அம்மா என்னை அங்கு விட்டபோது, அம்மாவை பிரியும் துயர்தாங்காமல் அழுது ஆற்பாட்டம் செய்தது இன்னும் கண்ணில் நிழலாடுகிறது. அப்போது, அந்த பெரிய மைதானம் இறுதி வரை அம்மா சென்று திரும்பும் வரை அழுத படியே பார்த்து நின்றிருப்பேன். ஓடாமல் இருக்க என்னைப் பிடித்த படி ஆயம்மா...


அந்த ஆயம்மாவுக்குத் தலைவலியே பூமகள் தானாம்.... விசாரிச்சதுல தெரிஞ்சது..ஒரு வாரத்திலேயே எல்லாம் சரியானது.

அது உங்களூக்கு.... ஆயம்மாவுக்கு ஆயுசுக்கும் சரியாகலையாம்..:eek:


ஆசிரியரின் ஆங்கிலப் பாடம்.. கிரீக் லத்தின் போல புரியாத மொழி. வாய்ப்பாடு போல் ரைம் சொல்லி சொல்லியே 3 மாதங்கள் போனது. எல்லாக் குழந்தைகளும் சீருடையை அழுக்கு பண்ணிட்டு மாலை வீடு திரும்புகையில் அப்பவே பூவு அழுக்கே ஆக்காம நீட் பொண்ணா வருவது பார்த்து அம்மா ரொம்பவே ஆச்சர்யபடுவாங்க.. இன்னிக்கும் சொல்லுவாங்க.. நோட் புக் கூட அப்படியே புதுசு மாதிரி இருக்கும்னு..! (படிச்சாதானே...! அப்படின்னு முனுமுனுக்கிறீங்களோ??:aetsch013::lachen001:) ஆனால்.. நான் படிப்பிலும் ஃபஸ்ட்.

பக்கத்து வீட்டுப் பெண்பிள்ளைங்க கிட்ட இருந்து மிரட்டி பிடிங்கிட்டு வந்ததுன்னு ஏன் உண்மையச் சொல்லல?அந்த புதிய பள்ளியின் முதல் செட் மாணவர்கள் என்பது இப்போதும் கூடுதல் சிறப்பு.

அது ஆகஸ்ட் மாதம்.. சுதந்திர தின விழா நெருங்கிக் கொண்டிருந்தது.


இதெல்லாம் ஞாபகம் வைத்திருக்கிறீர்களா? நான்கூட ஜனவரியோன்னு நெனச்சேன்.:lachen001:தமிழ்த்தாய் வாழ்த்து பாட மாணவியையும் "ஜனகனமன..." பாட ஒரு மாணவனையும் தேடிட்டு இருந்தாங்க..!

எங்க மிஸ் வந்து பாட்டு பாட யாருக்கு தெரியும்னு கேட்டதும்... ரொம்ப வேகமா பூவு கையை தூக்கிட்டேன்.. (நாம தான் அப்பவே ஒரு நாலு வரி தெரிஞ்சாலும் அது பாடிப்பாடியே கூட இருக்கவங்கள காலி பண்ணிருவோமே..!:lachen001::lachen001:)


பள்ளியோட சாபம் பிறந்தநாளா இருக்கும்..என்னோடு கை தூக்கிய எல்லோரும் அவுட் ஆக.. நான் மட்டும் ஜெயித்த பெருமிதத்தில் பெவிலியனிலிருந்து வெளிப்பட்டேன்.

கை தூக்கியது எவ்வளோ பெரிய குத்தமுன்னு...அப்போதும் பூவுக்கு புரியலை...!


உங்களை செலக்ட் பண்ணியது எவ்வளவு குத்தமுன்னு அவங்களுக்கும் புரிந்திருக்க வாய்ப்பில்லை. :icon_p:சுதந்திரதின விழாவுக்கு சில நாட்கள் தான் இருந்தது. அந்த மிஸ் பேரு நினைவில் இல்லை. ஆனால்.. பார்க்க பயங்கர உயரமா... அதற்கு தகுந்த உடல் பருமனோட சும்மா சூப்பரா இருப்பாங்க..!

அடப்பாவமே! பசங்கதான் சைட் அடிப்பாங்க...பொண்ணுங்களுமா?என்னை கூப்பிட்டு அவங்க டேபிள் முன்னாடி நிக்க வச்சாங்க... அப்போ தான் பூவுக்கு ஏழரை உக்கிரத்தோட எட்டிப் பார்க்க ஆரம்பித்திருந்தது.. பயிற்சி ஆரம்பமானது..

"நீராரும் கடலுடுத்த... நிலமடந்தை... கெழிலொழுகும்.............
சீராரும் வதனமென திகழ் பரத கண்டமெதில்...."

இப்படி மிஸ் பாட நான் கூட பாட.... அவங்க பாட... மழலை மொழியின் நான் பாட... கிட்ட தட்ட 2 மணி நேரம் கழித்து என்ன தப்பு செய்தேனோ தெரியாது... பளார்னு ஒரு அறை.. கன்னத்தில்..!
எனக்கு பொறி கலங்கி போச்சு... காதுல ஏதோ கொய்ன்னு ஒரு சத்தம்.. அதுக்கப்புறம்.. பூவு கண்ணுல அழுகை வந்ததோ இல்லையோ... ஆனால்.... மூக்கிலிருந்து நல்லா ஜலதோசம் வந்தது..!


அடடா!! அந்த நேரத்தில எங்கப்பா கூட இல்லையே!! (பூ சொன்ன காலத்தில எங்கப்பாதான் நாலாம் வகுப்பு படிச்சிருக்கமுடியும்:D)


ஆனாலும்... நான் முழுக்க பாடி முடிக்கும் வரை அவங்க அடி கொடுப்பதை நிறுத்தவே இல்லை. அவங்க வீட்டில் என்ன பிரச்சனையோ.. அன்னிக்கி நான் நல்லா மாட்டிக்கிட்டேன்.. என் வீட்டிலேயே ஒரு அடி கூட வாங்காத சமத்து பூ அங்கு விதிய நொந்துட்டு அழுதிட்டே பாடினேன்.

அவங்களும் விதியே ன்னு உங்களை பாடவச்சுட்டாங்களோ???:cool:என் மழலை வயதில் கடினமான அந்த சொற்களை சரியாக உச்சரிக்கனும்னு அவங்க நினைச்சது இன்னிக்கி தான் எனக்கு புரிஞ்சது.. இதுல அதை பார்க்காம வேற மனப்பாடமா பாடனும்..

அன்னிக்கி மதியம் முழுக்க அடிவாங்கி அழுதழுது பாடி.. திரும்ப அடிவாங்கி... சாயிந்திரம் வீட்டுக்கு போக அம்மா வரும் வரை அழுதிட்டே இருந்தேன்.. சிவப்பான கன்னத்தை தொட்டு பார்த்தால்... இரு பக்கமும் கைவிரல் பதிந்து பூவின் புசு புசு (அப்பவெல்லாம் அமுல் பேபி தான் பூ..!:cool::rolleyes:) கன்னம் மேலும் சிவந்து வீங்கியிருந்தது.


அமுல் பேபியா? அப்படீன்னா? ஏற்கனவே கன்னமெல்லாம் புசுபுசுன்னு தான் இருக்கும்.... மேலும் சிவந்து...... பூ,,, பார்க்கக் கூடிய முடியாதபடி இருப்பீங்களோ?:traurig001:வீட்டுக்கு வந்து அம்மாவிடம் சொன்னாலும்.. மிஸ் நல்லதுக்கு தான் அடிச்சிருப்பாங்கன்னு சொல்லி என்னை சமாதானப்படுத்தினார்.


மனசுக்குள்ள, " நல்லா வேணும்..." னு திட்டியிருப்பாங்க... அது தெரியாம......:D


அடுத்தடுத்த நாட்கள் வாழ்த்துப் பாடலை சரியாக பாடும் தீவிர பயிற்சி..! திருத்தங்களும் உச்சரிப்புகளும் ஏற்ற இறக்கங்களும் பூவின் குரலில் பிரவேசித்தன.


தெய்வ கடாட்சம். அவருக்கு வேறவழியும் தெரியலை.எதிர்பார்த்த நாளும் வந்தது. முதன்முதலில் மேடையில் எல்லார் முன்னிலையிலும் பூ மைக் முன் நின்று பாடத் துவங்கியது. மிஸ் அடித்ததன் விளைவுகள் இரண்டு:பாசிட்டிவ் விளைவு = பாடல் முழுவதும் மறக்காமல்.. உச்சரிப்பு பிசகாமல் பயமறியாமல் பாடினேன்.
நெகடிவ் விளைவு = பாடுகையில் இடையிடையே மூக்குனுள் இருந்து சளியும் வெளிப்பட்டு வெறுப்பேத்தியது. மூக்கை உறிஞ்சி உறிஞ்சி எப்படியோ பாடிமுடித்தேன் என்பது வேறு கதை.
இந்த மேடை தான் என் வாழ்வில் நான் ஏறிய முதல் மேடை. சொல்லப் போனால், இந்த அடிகள் எனக்கு பாட்டின் மீது வெறுப்பை ஏற்படுத்துவதற்கு பதில் ஒரு உத்வேகத்தை ஏற்படுத்தின.


இதெல்லாம் கொஞ்சம் ஓவர்தான்....அன்று மேடையில் பெருமையாய் நின்று தைரியமாய் பாடிய என்னை பார்த்து பலரும் என் அம்மாவிடம் பாராட்டியதைக் கேட்கையில் அந்த அடிகளின் வலி மறந்தேவிட்டது.

கைதட்டலைன்னா, திரும்பவும் பாடவேண்டியிருக்கும்.... அந்த துன்பத்தை அவங்க அனுபவிக்க விரும்பலை போல இருக்கு...அன்று ஆரம்பித்த வாழ்த்துக் கூட்டப் பாடல்.. அனுதினமும் நான் சேர்ந்த பள்ளிகள் எங்கும் என் குரலினாலேயே ஆரம்பித்தது.

எல்லார் முன்னிலையிலும் பாடுவதால் எல்லோருக்கும் தெரிந்த ஒரு மாணவியாக இருந்தேன். கீழ் வகுப்பு குட்டீஸ் முதல் மேல் வகுப்பு ஜாம்பவான்கள் வரை என் பெயர் பிரபலமானது.


இல்லாட்டி பாடியே பாதி ஸ்கூலை துரத்திவிட்டிருப்பீங்க... :lachen001:பள்ளியில் எத்தனை மேடைகள் ஏறிப் பாடியிருந்தாலும், என் வாழ்வின் அடித்தளத்தில் என்னைச் செதுக்கிய முதல் அடி வெற்றிப் படிக்கல்லாய் அமைந்ததை இன்றும் மறக்கவே இயலவில்லை.:)

(சரி சரி.... பூவுக்காக எல்லாரும் அழுவீங்கன்னு தெரியும்.. கண்ணைத் தொடச்சிட்டு... வேலையைப்பாருங்க...!
பக்கத்து சீட்டுக்காரரு.. ஓரக்கண்ணால உங்கள பார்த்து சிரிக்கிறாரு பாருங்க..!:lachen001::D:D)


சே சே இதுக்காக போய் யாராச்சும் அழுவாங்களா????:wuerg019::wuerg019:

யவனிகா
08-12-2007, 01:44 PM
யார் அது பூவ அடிச்சது...ஆமா..சொல்லு ஆட்டோ அனுப்பலாம்...டீச்சராவது ஒண்ணாவது...

அழகான அனுபவம்...ஆனா நீ பாடினதை நினைச்சு சிரிப்புத்தான் வந்தது...
எங்க பூவு..இப்ப ஜன,கண,மண பாடு....எல்லாரும் அட்டென்சன்ல எந்திருச்சு நில்லுங்கப்பா...

யவனிகா
08-12-2007, 01:46 PM
ஆதவா...எப்பிடி இப்பிடி....கண்ணு வலிக்குது....விட்டுடுங்க...வேணாம்...

பூமகள்
08-12-2007, 01:50 PM
எல்லோரையும் கவர்ந்துவிடும் பாங்கு எல்லோருக்கும் வந்துவிடாது பூ மகள்......
உங்கள் உள்ளம் ...மடை திறந்த வெள்ளம்......!
உங்களின் வரிகளின் மூலம் உங்களின் அன்பு வெளிப்படுகிறது. எந்த அளவு என் பதிவுகள் உங்களுக்கு பிடித்திருக்கிறது என்றும் புரிகிறது. இதனைப் பார்த்து மிகவும் மகிழ்கிறேன்.

நல்ல ஒரு ஞாபகத்தை பகிர்ந்து கொண்டீர்கள்......! அடி வாங்குற சீன் சூப்பர்......!
என்னடா..அன்பா பாராட்டுறாரேன்னு பார்த்தா...:icon_ush::icon_ush: பூ அடிவாங்குவது சூப்பர் சீனாமே..!! :sauer028::sauer028:
வசீ.... வஞ்சப்புகழ்ச்சி அணியை அடிக்கடி உபயோகிப்பீரோ??!!:traurig001:

ஆனா அப்படி எதுவுதுமில்லாமல் நல்லாவே அடி வாங்கியிருக்கீங்க... கேட்க பாவமா இருக்கு.....!! :frown:

சரி, சரி இனிமேல் யாரிடமும் அடி வாங்காமலிருக்க என் வாழ்த்துக்கள்...!! :icon_b:
எங்க ஓவியன் அண்ணாவின் மூளை எனக்கில்லாம போச்சே..!:frown::frown:
ஆனா.. அதுக்கப்புறம்.. என்னை யாருமே அடிக்கும்படி நான் செய்யலையே..! :icon_b:

ஆனா பூவு, இந்தப் பாட்டுக்கு இரண்டு மணிநேரம் ஓவர்தான்.. நம்ம ஸ்வேதா ஒருகூடை சன்லைட் பாட்டை இரண்டு முறைக் கேட்டதுமே மனப்பாடம் பண்ணிட்டா! ஹி ஹி
தாமரை அண்ணாவ்..!:icon_rollout:
ஒருகூடை சன்லைட்க்கும் நீராரும் கடலுடத்தக்கும் வார்த்தைக் கடினம் வித்தியாசமிருக்கில்லையா அண்ணா?:icon_b:
ஆனால்.. ஸ்வேதா உங்களை விட புத்திசாலின்னு தான் தெரியுமே..!:D
ஸ்வேதாவை நினைச்சா சந்தோசமா இருக்கு..!:)

அன்புரசிகன்
08-12-2007, 02:29 PM
ஏன் எல்லோரும் பூவை இப்படி வாட்டுகிறீர்கள்???

ஓவியரே.... சலுகைகள் கிடைக்கிறது என்றால் நீங்கள் அந்த இடத்திற்கு முக்கியமானவராக இருக்கவேண்டும். வேறு என்ன???

மலர்
08-12-2007, 03:11 PM
பூ வாங்கிய முதல் அடியே..
சும்மா இடி மாதிரி
வாங்கியிருக்கியே...:D:D

அத பாக்க குடுத்து வைக்கலியே...:traurig001:

யவனிகா
08-12-2007, 03:24 PM
பூ வாங்கிய முதல் அடியே..
சும்மா இடி மாதிரி
வாங்கியிருக்கியே...:D:D

அத பாக்க குடுத்து வைக்கலியே...:traurig001:

எனக்கும் அதே கவலை தான் மலரு...

பூமகள்
08-12-2007, 03:47 PM
நிச்சயமா எனக்கு சந்தோசம்தான்.....
சே சே இதுக்காக போய் யாராச்சும் அழுவாங்களா????:wuerg019::wuerg019:
அடப்பாவி..................!!!!!!!!!!:sprachlos020::eek:
____
____
____
இப்படி என்னை ஓட்டுனதுக்கு உனக்கு சீதனமா கொடுக்க நினைச்ச பணத்தை நான் கொடுக்க மாட்டேன்...!! :rolleyes::rolleyes::mad::mad::sauer028::sauer028:

ஜெயாஸ்தா
08-12-2007, 04:25 PM
எல்லோரும் பூமகளை வழக்கம் போல் அதிகமாகவே கலாய்த்துவிட்டனர். அதனால் நான் வழக்கம் போல் 3000 பதிவுக்கு வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன். அப்புறம் அருமையாக கலாய்த்த ஆதவாவுக்கும், தம்பி சுந்தனுக்கும் ஆளக்கொரு இணையகாசு பரிசாக வழங்கி பாராட்டுகிறேன். (நமக்கு தீவிரவாதத்தை வளர்க்கிறது ரொம்ப புடிக்குமுங்கோ...!)

பூமகள்
08-12-2007, 04:37 PM
அருமையாக கலாய்த்த ஆதவாவுக்கும், தம்பி சுந்தனுக்கும் ஆளக்கொரு இணையகாசு பரிசாக வழங்கி பாராட்டுகிறேன். (நமக்கு தீவிரவாதத்தை வளர்க்கிறது ரொம்ப புடிக்குமுங்கோ...!)
யூ டூ அண்ணா????!!:traurig001::traurig001: :frown::frown:

மனோஜ்
08-12-2007, 05:23 PM
பூ இப்படி அழகாக மலர அடித்தளமாக அமைந்தது ஒரு அதிர்ச்சி கதை
சென்ன விதம் அருமை பூ....மா
வாழ்த்துக்கள் தொடர்ந்து பல அடித்தளங்கள் அமைய

நுரையீரல்
08-12-2007, 05:52 PM
ஒரு பாட்டுக்குள்ள இவ்வளவு பெரிய சோகமா... ச்சே.. ஏன் தான் அல்லாருமா சேர்ந்து தங்காச்சிய அடிக்கிறாங்களோ... :traurig001: :traurig001:

மலர்
09-12-2007, 01:38 AM
இப்படி என்னை ஓட்டுனதுக்கு உனக்கு சீதனமா கொடுக்க நினைச்ச பணத்தை நான் கொடுக்க மாட்டேன்...!! :rolleyes::rolleyes::mad::mad::sauer028::sauer028:
இதை கேக்கவே சந்தோஷமா இருக்கு...:D:D

இதயம்
09-12-2007, 07:16 AM
நினைக்கவே ஆச்சரியமாக இருக்கிறது. பூ மன்றத்திற்கு ஏதோ நேற்று வந்தது போல் இருக்கிறது, ஆனால், புயல் வேகத்தில் பதிவுகளை அளித்து இன்று 3000-வது பதிவை தந்திருக்கிறார். அவரின் உழைப்பிற்கு பாராட்டுக்கள்..!!

மனிதரில் திறமைகள் கொட்டிக்கிடந்து பயனில்லை. அதை தூண்டி விட்டு வெளிப்படுத்த காரணி ஒன்று தேவை. அப்படி ஒரு காரணியாகத்தான் தமிழ்மன்றம் பலருக்கு இருந்து வருகிறது. எனவே தமிழ் மன்றத்திற்கு என் நன்றிகள். பூவின் ஆரம்பகாலப்படைப்புகளை நான் படித்த போது, பெரிதாக பாராட்டுவதற்கு ஒன்றுமில்லை போல் இருந்தாலும் பூவுக்குள் படைப்புப்புதையல் புதைந்து கிடப்பதை என்னால் உணர முடிந்தது. அதை வெளிக்கொண்டு வர நான் பூவிடம் பலமுறை என்னாலான ஊக்கத்தை கொடுத்து வந்திருக்கிறேன். அப்படிப்பட்ட அனைவரின் ஊக்கம் தான், இன்று பூ ஒரு கவிதாயிணியாக, எழுத்தாளராக வெற்றிநடை போட வழி வகை செய்திருக்கிறது.

மற்ற படைப்புகளோடு ஒப்பிடும் பொழுது பூவின் இந்த இளமைக்கால அனுபவக்குறிப்பில் பல வரவேற்கத்தகுந்த மாற்றங்கள். இந்த முதிர்ச்சி நிச்சயம் அவர் படைப்புகளின் தரத்தை உயர்த்தும் என்பதில் யாதொரு சந்தேகமும் கிடையாது. பூவின் குழந்தைப்பருவ நினைவுகளை அப்படியே காட்சிகளாக நம் நினைவுத்திரையில் ஓட்டியதில் அவரின் எழுத்துத்திறன் ஒளிந்திருக்கிறது. அதுவும் தான் சொல்லவந்த அனுபவத்தை நகைச்சுவை கலந்து தந்த விதம், கனிந்த பலாச்சுளையை தேனில் ஊற வைத்து தந்த சுவையின் இனிய அனுபவம் ஏற்படுகிறது.

பூவை இந்த வயதிலும் (எத்தனை வயது என்று சொல்லமாட்டேன்..!! இதை வைத்து ஏற்கனவே இங்கு ரகளை நடக்கிறது...!!) மனம் நோகும் படி பேச முடியாத பொழுது, இந்த பூ.. அரும்பாக இருந்த போது ஒரு ஆசிரியையால் எப்படி அடிக்க முடிந்தது (அதுவும் கைவிரல் பதியும் படி) என கோபத்துடன் கேட்க வேண்டும் போலிருக்கிறது. ஆசிரியை என்ற பெயரில் ஒரு அரக்கியோ..?? இருந்தாலும் அவர் செய்த செயலால் ஏற்பட்ட விளைவு நன்மையை ஏற்படுத்தியதால் அவரை மேலும் திட்டாமல் விட்டுவிடுகிறேன். பாடல் பாடுவதென்பது பயிற்சியின் மூலம் அனைவரும் கைவரப்பெறும் கலை.! ஆனால், இனிமையான குரல் என்பது கடவுள் கொடுக்கும் கூடுதல் தகுதி... ஏன், வரமும் கூட..! அது பூமகளுக்கு கிடைத்திருக்கிறது. நான் முதன்முதலில் அவரிடம் பேசும் பொழுது அவர் குரலின் இனிமையில் மயங்கி, வற்புறுத்தி பாடச்சொல்லி கேட்டேன். அப்போது என் மனக்கண்ணில் வந்து போனவர்கள் பாடகிகள் சித்ரா, சுஜாதா போன்றவர்கள்..!! பூவின் இந்த குரல் திறமை குடத்தினுலிடப்பட்ட விளக்காக இருக்கிறதோ என்பது கருத்து. அது குன்றின் மீது இடப்பட்டு எட்டுத்திக்கிலும் இசை ஒளி பரப்பவேண்டும் என்பது என் அவா. அவரின் பாடல் திறனுக்கு ஊக்கம் கொடுத்த ஒரு சம்பவத்தை நம்மிடம் இங்கே பகிர்ந்து கொண்டதில் \"வலி இல்லாமல் வாழ்க்கை இல்லை\" என்ற உண்மையை புரிய முடிகிறது. அன்பான பெண், அருமையான நட்பு, அழகான படைப்பு.. வேறென்ன சொல்ல பூமகளைப்பற்றி..??!!

அறிஞர்
10-12-2007, 03:16 PM
அமுல் பேபி
முதலில் அடிவாங்கி....
பின் சிறப்பாக பாடி...
அதன்பின் அனைவரின் மனதில் இடம்பிடித்துவிட்டது.

அழகான கதை..... பூமகளே...

பூமகள்
10-12-2007, 03:20 PM
அமுல் பேபி முதலில் அடிவாங்கி....
பின் சிறப்பாக பாடி... அதன்பின் அனைவரின் மனதில் இடம்பிடித்துவிட்டது.
மிக்க நன்றிகள் அறிஞர் அண்ணா. :)

அழகான கதை..... பூமகளே...
ஆங்.... என்னங்க அண்ணா... :frown::frown:
முன்னர் பாராட்டி.. இங்க கவுத்திட்டீங்களே..!:icon_p:
இது கதையல்ல நிஜம்..!! :traurig001:

பாரதி
10-12-2007, 03:26 PM
முதலடி பாட முதலடி வாங்கிய பூ!!
முதலடி எடுத்து வைப்பதுதான் சிரமம். பின்னர் எல்லாமே எவ்வளவு எளிது என்பது புரியம். குழந்தைப்பருவங்கள் எத்தனை சிரமமுடையதாய் இருப்பினும், பிற்காலத்தில் நினைத்துப்பார்க்கும் போது இன்னும் கொஞ்ச நாட்கள் குழந்தையாய் இருக்கக்கூடாதா என்ற எண்ணமும் ஏக்கமும் அனைவருக்கும் வரவே செய்யும்.

சில நிகழ்வுகள் மனதில் ஆழப்பதிந்து விடும். அப்படியான நிகழ்வுகளை தொடர்ந்து தருமாறு அன்புடன் பூவை பூவை கேட்டுக்கொள்கிறேன். இதயம் நெகிழ்ந்த வாழ்த்துக்கள் பூ.

பூமகள்
10-12-2007, 05:30 PM
நினைக்கவே ஆச்சரியமாக இருக்கிறது. பூ மன்றத்திற்கு ஏதோ நேற்று வந்தது போல் இருக்கிறது, ஆனால், புயல் வேகத்தில் பதிவுகளை அளித்து இன்று 3000-வது பதிவை தந்திருக்கிறார். அவரின் உழைப்பிற்கு பாராட்டுக்கள்..!!
உங்களைப் போன்றோரின் ஆசியும் அன்பும் தான் அண்ணா என்னை இப்படி மூவாயிரமாவது பதிவை எட்டச் செய்திருக்கிறது.
உங்களின் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் என்றுமே நான் கடமைப்பட்டிருக்கிறேன்.
பாராட்டுக்கு நன்றிகள் அண்ணா. :)

பூவை இந்த வயதிலும் (எத்தனை வயது என்று சொல்லமாட்டேன்..!! இதை வைத்து ஏற்கனவே இங்கு ரகளை நடக்கிறது...!!) மனம் நோகும் படி பேச முடியாத பொழுது, இந்த பூ.. அரும்பாக இருந்த போது ஒரு ஆசிரியையால் எப்படி அடிக்க முடிந்தது (அதுவும் கைவிரல் பதியும் படி) என கோபத்துடன் கேட்க வேண்டும் போலிருக்கிறது. ஆசிரியை என்ற பெயரில் ஒரு அரக்கியோ..?? இருந்தாலும் அவர் செய்த செயலால் ஏற்பட்ட விளைவு நன்மையை ஏற்படுத்தியதால் அவரை மேலும் திட்டாமல் விட்டுவிடுகிறேன்.
அவரின் பாடல் திறனுக்கு ஊக்கம் கொடுத்த ஒரு சம்பவத்தை நம்மிடம் இங்கே பகிர்ந்து கொண்டதில் \"வலி இல்லாமல் வாழ்க்கை இல்லை\" என்ற உண்மையை புரிய முடிகிறது. அன்பான பெண், அருமையான நட்பு, அழகான படைப்பு.. வேறென்ன சொல்ல பூமகளைப்
பற்றி??!!உங்களின் அன்பான உள்ளம் இந்தப் பதிவில் தெரிகிறது அண்ணா.
நிச்சயம் எல்லார் வாழ்விலும் ஒரு சாதனை நிகழ இப்படியான சம்பவங்கள் நிச்சயமாக நிகழ்ந்திருக்கும்.
எனக்கு இப்படியான சம்பவங்கள் தான் என் வாழ்க்கையை நிர்ணயிக்க வழி வகுத்தன.
மிக்க நன்றிகள் அன்பு இதயம் அண்ணா. :)

பூமகள்
11-12-2007, 06:37 AM
முதலடி பாட முதலடி வாங்கிய பூ!!
முதலடி எடுத்து வைப்பதுதான் சிரமம்.
சில நிகழ்வுகள் மனதில் ஆழப்பதிந்து விடும். அப்படியான நிகழ்வுகளை தொடர்ந்து தருமாறு அன்புடன் பூவை கேட்டுக்கொள்கிறேன். இதயம் நெகிழ்ந்த வாழ்த்துக்கள் பூ.
உண்மை தான் அண்ணா..!
வாழ்வில் சில சம்பவங்கள் நம்மைச் செதுக்கும் உளிகளாக மாறும்...!
அந்த சமயத்தின் வலி பொறுத்தால் கூட்டுப் புழு பட்டாம்பூச்சியாவதை யாராலும் தடைசெய்ய முடியாது...!
என் மனத்தில் அத்தகைய மாற்றத்தினை ஒவ்வொரு கால கட்டத்திலும் ஏற்படுத்திய சில மறக்க முடியாத சம்பவங்களை இனி உங்களோடு பகிர்கிறேன்.
உங்களின் உற்சாகமும் ஊக்கம் கொடுக்கும் பின்னூட்டமுமே என் எழுத்தினைச் செதுக்க எனக்கு உதவுகின்றன. மிகுந்த நன்றிகள் பாரதி அண்ணா.:)

அமரன்
11-12-2007, 07:22 AM
பூவை அடித்த ஆசிரியருக்கு நன்றி. அடிக்க அடிக்க மூக்கால் ஒழுக ஒழுக இசையுடன் சிறப்பான உச்சரிப்பில் தாளக்கட்டுடன் பாடிய பூவுக்கும் பாராட்டுகள். நல்ல நடையில் எழுதியுள்ளீர்கள். தொடருங்கள்.

பூமகள்
11-12-2007, 07:35 AM
பூவை அடித்த ஆசிரியருக்கு நன்றி.
என்ன ஒரு வில்லத்தனம்...!:eek::sprachlos020::sauer028:
அடிச்சதுக்கு நன்றியாம்ல...!:icon_ush::icon_ush: பூவுக்கு கண்ணு சிவந்து கன்னத்த தொட்டுப் பார்த்து தொட்டுப் பார்த்து எச்சா அழுதது எனக்கு தானே தெரியும்..!:frown::mad::frown:

எழுத்தை பாராட்டியதற்கு நன்றிகள் அமரன் அண்ணா. என்னால் முயன்ற அளவு தொடர்கிறேன். :)

நேசம்
11-12-2007, 01:44 PM
தனது முதலடியிலே வெற்றி பயணத்தை தொடரும் பூமகள் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.உங்கள் படைப்பு திறமைகள் பிரகாசிக்க எனது பிராத்தனைக்கள் உண்டு அன்பு தங்கைக்கு

அமரன்
11-12-2007, 02:29 PM
என்ன ஒரு வில்லத்தனம்...!:eek::sprachlos020::sauer028:
அடிச்சதுக்கு நன்றியாம்ல...!:icon_ush::icon_ush: பூவுக்கு கண்ணு சிவந்து கன்னத்த தொட்டுப் பார்த்து தொட்டுப் பார்த்து எச்சா அழுதது எனக்கு தானே தெரியும்..!:frown::mad::frown:
சிலை வடிச்ச கலைஞனுக்கு நன்றி சொல்லலைன்னா எப்படி?

பூமகள்
12-12-2007, 06:41 AM
சிலை வடிச்ச கலைஞனுக்கு நன்றி சொல்லலைன்னா எப்படி?
நன்றி அமர் அண்ணா.
ஒரு சின்ன திருத்தம்..!
"சிலை வடிச்ச" இல்லை... அது "சிலை அடிச்ச...!" :traurig001::traurig001:

அமரன்
12-12-2007, 06:59 AM
நன்றி அமர் அண்ணா.
ஒரு சின்ன திருத்தம்..!
"சிலை வடிச்ச" இல்லை... அது "சிலை அடிச்ச...!" :traurig001::traurig001:
ஓ... உங்க ஆசிரியை சிலையாட்டம் இருப்பாங்களோ?
அப்பவே நீங்கள் பல்கலை வித்தகக் கலைஞியோ?

பூமகள்
12-12-2007, 07:51 AM
ஓ... உங்க ஆசிரியை சிலையாட்டம் இருப்பாங்களோ?அப்பவே நீங்கள் பல்கலை வித்தகக் கலைஞியோ?
இப்படி சரியா புரிஞ்சும் உல்டாவா பதில் சொல்றவங்களை என்ன செய்வது??:mad::mad::mad:

ஐயா அமரரே..!

இங்கு சிலை என்று சொன்னது என்னை..!:icon_b:
அந்தச் சிலையை அடிச்சவங்க தான் சிற்பியாக ஆசிரியை..!:icon_b:

இதுக்கு மேல பிரிச்சு மேஞ்சா அடி விழும்..! ஆட்டோ வரும்.. சொல்லிட்டேன்..!:sauer028::sauer028:

IDEALEYE
12-12-2007, 09:33 AM
அப்போ
பூ சிலையா???
பூச்சிலையா?
ஐஐ

பூமகள்
17-12-2007, 09:16 AM
பூ சிலையா???
பூச்சிலையா?
இரண்டும்..!!! :lachen001::lachen001::lachen001:

செல்வா
17-12-2007, 09:37 AM
நல்ல அனுபவம்.....
நல்ல அடி
நல்ல பாட்டு....
நல்ல திரி.....
பாவம் பூ.... :)
ஆசிரியையிடம் வாங்கிய அடி போதவில்லை என்று உறுப்பினர்கள் கொடுக்கும் பாசக்குட்டுகள்...கொடுத்து வைத்தவர்கள் நீங்கள்....
நன்றாக எழுதுகிறீர்கள். ரோசாவை வெட்டிவிட்டால்தான் நிறைய தளிர் விட்டு நிறைய பூக்கள் பூக்கும் என்பார்கள்..... வாழ்த்துக்கள்...

பூமகள்
17-12-2007, 11:18 AM
நல்ல அனுபவம்.... பாவம் பூ.... :)
ரோசாவை வெட்டிவிட்டால்தான் நிறைய தளிர் விட்டு நிறைய பூக்கள் பூக்கும் என்பார்கள்..... வாழ்த்துக்கள்...
ஆஹா... சூப்பர் தத்துவம்..!! நன்றிகள் செல்வா..!!:icon_b:
எல்லாரும் கலாய்த்துத் தள்ள, உங்களிடமிருந்து ஆறுதலான வார்த்தைகள்..!! மிக மிக சந்தோசமா இருக்கு...!!:D:D

நன்றி..! நன்றி..! நன்றி..!!:)

ஆர்.ஈஸ்வரன்
19-12-2007, 05:55 AM
உண்மை எழுதுகிறது உண்மை

தேவிப்ரியா
20-12-2007, 05:34 PM
என் பிறந்த நாளும் அதுவுமா... பூமகள்.


காலம் தாழ்த்தினாலும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

logini
30-05-2008, 10:36 AM
சூப்பராக எழுதி இருக்கீங்க பூ அக்கா. உங்களை அடித்ததில் எனக்கு வருத்தம் தான் ஆனால் வாசிக்கும் போது சிரிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை.
மென்மேலும் உங்கள் திறமைகள் வளர வாழ்த்துகிறேன்.