PDA

View Full Version : உணவுக்குப் பின் கூடாதுகள் ஏழு!!!



சிவா.ஜி
08-12-2007, 09:36 AM
சாப்பிட்டவுடன் உடனடியாக செய்யக்கூடாத ஏழு செயல்கள்.(செஞ்சா கண்டிப்பா ஏழரை)

புகைக்கக்கூடாது
சிகெரெட் புகைக்கக் கூடாது.உணவுக்குப் பின் புகைக்கும் ஒரு சிகெரெட்,பத்து சிகெரெட்டு புகைத்ததற்கு சமம் என்பது ஆராய்ச்சியாளர்களின் தொடர் ஆராய்ச்சின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.(பாஸஞ்சர்ல வர்ற கேன்சர் சூப்பர் ஃபாஸ்ட்ல வரும்)

பழங்களை சாப்பிடக்கூடாது
உணவுக்குப் பின் உடனே பழங்கள் சாப்பிட்டால் வயிற்றில் உப்புசம் ஏற்படும்.எனவே உணவுக்குப் பிறகு ஒன்றிலிருந்து இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு பழங்கள் சாப்பிடுவதே நல்லது.

தேநீர் அருந்தக்கூடாது
தேநீர் அருந்துவதால்,வயிற்றில் அமிலத்தை சேர்க்கிறது.இதனால் புரதச் சத்து கடிணமாகி,ஜீரனிக்க சிரமம் ஏற்படும்.

இடுப்பு பெல்ட்டை தளர்த்தக்கூடாது
அப்படி தளர்த்துவதால் சுலபமாக குடல் சுருண்டு கொள்ளவோ,அடைத்துக்கொள்ளவோ வாய்ப்பு இருக்கிறது(அடுத்த ரவுண்டுக்கு ரெடி பண்ணிக்கிறவங்க எல்லாம் கொஞ்சம் யோசிக்கனும்)

குளிக்கக்கூடாது(எப்பவுமே இல்லைங்க...சாப்ட்ட உடனேதான்)
குளிப்பதால் கை ,கால்,மற்ற உடல் பகுதிகளில் இரத்த ஓட்டம் அதிகமாவதால்...வயிறைச் சுற்றி இரத்த ஓட்டம் குறைந்து விடுகிறது.அதனால் ஜீரனமாவது தாமதமாகும்.

நடக்கக்கூடாது.
உணவுக்குப் பின் நூறடி நடந்தால் 99 வயது வாழமுடியுமென்று சொல்வார்கள்.ஆனால் அது உண்மையல்ல.உடனே நடப்பதால் உணவின் மூலமாக கிடைக்கும் ஊட்டச்சத்துகள் முழுமையாக உடலுக்கு கிடைக்காது.செரிக்க கொஞ்சம் நேரம் கொடுத்துவிட்டு பிறகு நடக்கவேண்டும்.

உறங்கக்கூடாது
உடன் உறக்கத்தால்,சரியான செரிமானமில்லாமல்,வாயுத்தொல்லையும்,குடல் பாதிக்கப்படும் வாய்ப்பும் உள்ளது.

ஆதவா
08-12-2007, 09:58 AM
இந்த ஏழுகூடாதுகளும் என்னுடன் கூடாது..

உணவை ரசித்துத் தின்பவன் நான்.... மிக மெதுவாக.... (அன்னிக்கு உங்க கூட சாப்பிட்டதே கொஞ்சம் ஃபாஸ்டுதான்.)

தின்றதும் சிறிது நேரம் அமரும் பழக்கம் - (வீட்டில் இருக்கும் போது) டிவி ஓடிக்கொண்டிருக்குமே!! அதான்..

இப்பொழுதெல்லாம் தின்றது நடக்கும் பழக்கம்.....

மதி
08-12-2007, 10:18 AM
ரொம்ப கஷ்டமா இருக்கும் போலருக்கே..

சிவா.ஜி
08-12-2007, 12:28 PM
ஆதவா...ஆரோக்கியத்துக்கு நல்லது கூடாதா.....முயற்சி செய்ங்க.உடம்பத் தேத்தனனுமில்ல....
என்ன மதி இது...இது கூட கஷ்டமா....?

ஜெயாஸ்தா
08-12-2007, 04:34 PM
நடக்கக்கூடாது.
உணவுக்குப் பின் நூறடி நடந்தால் 99 வயது வாழமுடியுமென்று சொல்வார்கள்.ஆனால் அது உண்மையல்ல.உடனே நடப்பதால் உணவின் மூலமாக கிடைக்கும் ஊட்டச்சத்துகள் முழுமையாக உடலுக்கு கிடைக்காது.செரிக்க கொஞ்சம் நேரம் கொடுத்துவிட்டு பிறகு நடக்கவேண்டும்.


அப்படியா சங்கதி...! நானும் தவறாகத்தான் நினைத்துக்கொண்டிந்திருக்கிறேன். புரிய வைத்ததற்கு நன்றி.

யவனிகா
08-12-2007, 06:51 PM
அண்ணா...அப்படியே என்னென்ன செய்யலாம்னு சொல்லிருங்க...

ஆதவா
09-12-2007, 05:32 AM
ஆதவா...ஆரோக்கியத்துக்கு நல்லது கூடாதா.....முயற்சி செய்ங்க.உடம்பத் தேத்தனனுமில்ல....
என்ன மதி இது...இது கூட கஷ்டமா....?

அண்ணே! அந்த ஏழும் என்னுடன் கூடாது (கூட்டம் போடாது) என்றேன்...

மதியை நீங்க பார்த்தா அப்பறம் சொல்லுவீங்க... ஆதவன் எவ்வளவோ தேவலைன்னு....:D:D

மதி
09-12-2007, 06:44 AM
அண்ணே! அந்த ஏழும் என்னுடன் கூடாது (கூட்டம் போடாது) என்றேன்...

மதியை நீங்க பார்த்தா அப்பறம் சொல்லுவீங்க... ஆதவன் எவ்வளவோ தேவலைன்னு....:D:D

என்ன காமெடி இது..? என்னோட போட்டியா?
பெங்களூர் மக்கள்கிட்ட கேளுங்க..
:icon_ush::icon_ush::icon_ush::eek::eek::eek::eek:

ஆதவா
09-12-2007, 07:05 AM
என்ன காமெடி இது..? என்னோட போட்டியா?
பெங்களூர் மக்கள்கிட்ட கேளுங்க..
:icon_ush::icon_ush::icon_ush::eek::eek::eek::eek:

ஹி ஹி..... இப்படி வாய்சவடால் உட்டு பயப்படுத்தறவங்களை நான் அதிகம் பார்த்திருக்கேன்....

leomohan
09-12-2007, 07:36 AM
பயனுள்ள தகவல் சிவா.

நன்றி.

lolluvathiyar
10-12-2007, 06:35 AM
அட பாவமே இந்த குளிக்கரது, நடக்கரது, தூங்கரத தவிர மீதி நான்கை நான் கட்டாயம் செய்கிறேனே. சிவா ஜி இப்படி பயமுறுத்தீட்டீங்களே, நான் எப்பதான் திருந்த போறேனோ

சிவா.ஜி
10-12-2007, 06:38 AM
நான் எப்பதான் திருந்த போறேனோ

இப்பவே வாத்தியாரே....(அப்பதானே இன்னும் ஆரோக்கியமா புறமுதுகிட்டு ஓடி வரலாம்...ஹி..ஹி..ஹி..)

மனோஜ்
10-12-2007, 06:37 PM
சிவா அவர்கலே 7ம் ஏழரையாதான் இருக்கு
முயற்சி செய்கிறொன் தகவலுக்கு நன்றி:icon_b:

இளசு
10-12-2007, 08:39 PM
ஆஹா.. எத்தனை கூடாதுகள் இங்கே!

எல்லாம் சரிதான் சிவா.. குறிப்பாய் பழம் உண்பது..

வெற்றிலை, இனிப்பு - இதுகளுக்குத் தடா உண்டா?


இதைப்படித்தவுடன் வேறொன்று சட்டென நினைவாடலில் :


அவள் : என்னைக் காதலிக்கிறதுன்னா முதல்ல சிகரெட்டை விடணும்..
அவன் : சரி..
அவள் : உன் உதவாக்கரை நண்பர்கள் கூட்டத்தை விடணும்..
அவன் :சரி
அவள்: அப்பப்ப பீர் குடிப்பியே ..அதை விடணும்..
அவன்: !!!!! ம்ம்ம்ம்..அப்புறம்..
அவள் : மற்ற பொண்ணுங்களை லுக் விடறது, ஜொள்ளு வழியறது - எல்லாம் அறவே விடணும்..
அவன்: .....!!!!!
அவள்: அப்புறம் பொய் சொல்றது, லேட்டா வர்றது...... என்ன.. விடறியா?
அவன் : ம்ம்ம்ம்ம்... விட்டுடுறேன்..
அவள் : நான் சொன்ன எல்லாத்தையும்தானே?
அவன்: ம்ஹூம்.. உன்னைக் காதலிக்கிற ஐடியாவை.....!

சிவா.ஜி
11-12-2007, 06:00 AM
அதானே இத்தனை கண்டிஷன் போட்டா பாவம் எந்த காதலனுக்குத் தான் அவளைக் காதலிக்கத் தோணும்...?
புகையிலையில்லாமல் வெற்றிலைப் போடுவது நல்லது என்று சொல்வார்களே....சரியா இளசு?இனிப்பு.....சாப்பிடலாமா.....தெரியவில்லை.

நேசம்
11-12-2007, 01:14 PM
சில விசயங்கள் புதியவையாக எனக்கு இருந்தன.பகிர்தலுக்கு நன்றி சிவாண்ணா

அறிஞர்
11-12-2007, 10:29 PM
சில தகவல்கள் முன்னர் கேள்விபட்டது.. சிலவை புதிது.. நன்றி சிவா...

இளசுவின் கலாய்த்தலும் அருமை..

tamizhan_chennai
11-02-2009, 12:35 PM
ஆராக்கியத்துக்கு தேவையான நல்ல அரிய தகவல்களை தந்த
தோழருக்கு நன்றி......