PDA

View Full Version : இலங்கையர் ஒருவரை இனங்காண்பது எப்படி?விகடன்
08-12-2007, 06:35 AM
இலங்கையர் ஒருவரை இனங்காண்பது எப்படி?

இலங்கையர்கள்:
1)சாப்பிடும்போது வெங்காயம், மிளகாய், பூண்டு உட்பட எல்லாவற்றின் சுவையையும் ரசித்து சுவைத்து உண்டு தட்டைக் காலி பண்ணிடுவார்கள்.

2)பரிசுப் பொருட்கள் வைச்சுத் தந்த பெட்டி அதைச் சுத்தி வந்த பேப்பர், அலுமினியக் கடதாசி எல்லாத்தையும் எடுத்துப் பிறகு பாவிப்பதற்காக பத்திரமாக வைப்பார்கள்.

3)பல்லில மாட்டிக் கொண்ட உணவுத் துணிக்கைகளை tshick, tshick என்று சத்தம் வர எடுப்பார்கள்.

4)விமான நிலைய வாசலில இரண்டு மிகப் பெரிய சூட்கேஸ்களோட நின்று கொண்டிருப்பார்கள்.

5)Party ஒன்றுக்கு ஒன்றிரண்டு மணித்தியாலம் பிந்திப் போவதோட அது normal என்றே நினைப்பார்கள்.

6)தவறுதலாக முத்திரை குத்தாம வாற தபால் தலைகளை கவனமாக பிய்த்து எடுத்து வைப்பார்கள்.

7)குளியலறையில கண்டிப்பாக கை கழுவுவதற்கு ஒரு பிளாஸ்ரிக் பாத்திரம் ஒன்று இருக்கும்.

8)தன் பிள்ளைகளுக்கு ஒரே உச்சரிப்போட(rhythm) கூடின மாதிரியான பெயர்களை வைப்பார்கள். (உதாரணத்துக்கு சுரேஸ், ரமேஷ், தினேஸ்)

9)பிள்ளைகளினது உண்மையான பெயர்களுக்கு சம்பந்தமில்லாமல் செல்லப் பெயர் ஒன்று வைத்துக் கூப்பிடுவார்கள்.

10) "இங்கு உணவு, நீர் அனுமதிக்கப்படாது" என்று பெயர்ப்பலகை மாட்டப்பட்ட இடங்களுக்கும் நொறுக்குத் தீனிகளை எடுத்துச் செல்வார்கள்.

11)வீட்டுக்கு வந்த விருந்தினர்கள் விடை பெறும்போது வாசலில் வைத்து மணித்தியாலக் கணக்காக கதைத்துக் கொண்டிருப்பார்கள்..

12)காரில் எவ்வளவு பேரை ஏற்ற முடியுமோ அவ்வளவு பேரை ஏற்றி செல்வார்.

13)புதிதாக வாங்கிய பொருட்களை (remote control, VCR, carpet or new couch.) பிளாஸ்ரிக் கவரால மூடி கவனமாக வைத்திருப்பார்கள்.

14)தன் பிள்ளைகளிடம் நண்பர்கள் சொல்வதைக் கவனத்திற் கொள்ள வேண்டாமென்று சொல்லும் பெற்றோர்கள்; மற்ற "Uncles And Aunties" என்ன நினைப்பார்களோ என்பதற்காக பிள்ளைகளைச் சில விஷயங்களைச் செய்ய விட மாட்டார்கள்.

15) Rice cooker வைத்திருப்பது முக்கியமானது.

16)நாப்பது வயதானால் கூட தங்கள் பெற்றோருடனேயே வசிப்பார்கள். பெற்றோரும் அதையே விரும்புவார்கள்.

17)தங்கட மகளாக இல்லாட்டா யாருடைய மகள் யாருடைய மகனோட ஓடினது என்பதைத் தெரிஞ்சிருக்க விருப்பம் காட்டுவதோட அதை மற்றவர்களுக்குப் பரப்புவதைத் தம் கடமையாக நினைப்பார்கள்.

18)தொலைதூர அழைப்புகளை இரவு 9 மணிக்கப் பிறகே (Off-peak hours) எடுப்பார்கள்.

19)பெற்றோருடன் வீட்டில் இல்லாமல் வேறு இடத்தில் வசித்தால், பெற்றோர் தொலைபேசியில் கதைக்கும் போது அது நடுச்சாமமாக இருந்தாலும் சாப்பிட்டாயிற்றா எனக் கேட்க மறக்க மாட்டார்கள்.

20)இலங்கையர் ஒருத்தரை சந்தித்து சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தால் எந்த ஒரு வகையிலோ அவர்கள் தம் உறவினர் என கண்டுபிடித்து விடுவார்கள்.

21)வெளிநாட்டில் உள்ளவர்களோடு தொலைபேசியில் பேசும் பெற்றோர்கள் அவர்களுக்கு கேட்பதற்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு கத்திக் கதைப்பார்கள்.

22)சோபாவில் அழுக்குப்படாமல் இருப்பதற்கு பெட்சீற்ஸ் போட்டு வைத்திருப்பார்கள்.. அதே நேரம் அவர்களது பெட்ல இருக்கிற சீட்ல (sheet) தண்ணீர் பட்டு மாதக்கணக்காக இருக்கும்.
23)திருமண வைபவத்தில் 600 பேருக்குக் குறைவாக வந்திருந்தால் சங்கடமாக உணர்வார்கள்.

24)திருமணப் பேச்சின் போது தங்கள் பெண் உண்மையாக எப்படி இருந்தாலும் மெல்லிய அழகான பெண் என்றே சொல்லுவார்கள்

25)எப்பொழுதுமே மற்றவர்களுடைய சொந்த விஷயங்களில் மூக்கை நுழைப்பதற்கு அவர்கள் என்ன செய்கிறார்கள் எங்கே போகிறார்கள் என்பதை அறிவதற்கு விருப்பம் காட்டுவார்கள்.

இதை வாசிக்கும் உங்களுக்கு இதில் பல பொருந்துகிறதா? அப்படியானால் நீங்கள் ஒரு இலங்கையர் ( + தமிழரென்று சொல்லலாமெனவே நான் நினைக்கிறேன்) என்பதில் சந்தேகமே இல்லை.


இது இன்று மின்னஞ்சலில் ஒரு நண்பர் அனுப்பி வைத்தது. அனைத்தும் அப்படியே அப்பட்டமாக பொருந்தாவிட்டாலும் சிலதாவது பொருந்தும் என்ற நம்பிக்கையில் இங்கே பதிக்கிறேன். இது பற்றிய உங்கள் உடன்பட்ட முரண்பட்ட கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன :icon_b:

lolluvathiyar
08-12-2007, 06:43 AM
வித்தியாசமாக இருந்தது, இது இலங்கைகாரர் என்பது சிங்களத்தவரா ஈழதமிழரா அல்லது இருவரையும் குறிக்கிறதா என்று தெரியவில்லை.
ஆனால் இதிலிருக்கும் நிரைய விசயங்கள் சராசரி இந்தியர்களின் பழக்கவழக்கங்களாகவே இருக்கிறது.

சிவா.ஜி
08-12-2007, 07:01 AM
வாத்தியார் ம்மிகச் சரியாகச் சொல்லியிருக்கிறார்.இவற்றில் பெரும்பான்மையானவை இந்தியருக்கும் பொருந்தும்.குறிப்பாக அந்த பிளாஸ்டிக் பேப்பரால் பொதிந்து வைப்பது மிகச் சரி.விட்டால் ஒரு பெரிய பேப்பரை எடுத்து தங்கள் வீட்டையே மூடி வைத்து விடுவார்கள்.
பகிர்ந்துகொண்டதற்கு நன்றி விராடன்.

இதயம்
08-12-2007, 07:27 AM
இது அமெரிக்க வாழ் இந்தியரின் குணநலன்களாக குறிப்பிடப்பட்டு, வெகு காலத்திற்கு முன்பிருந்து இணைய உலகில் உலவிய ஆங்கில அஞ்சலின் தமிழாக்கம் இது. இந்த குணங்கள் இலங்கை நண்பர்களையும் பிரதிபலிப்பதால் இந்தியர்களுக்கு பதிலாக இலங்கையர்களை குறிப்பிட்டு எழுதியிருக்கிறார். அவர்களுக்கும் இது பொருந்தும் என்பதால் இரசிக்க கூடிய பதிவே இது..!!

இதனை பதித்த நண்பருக்கு நன்றி..!

praveen
08-12-2007, 07:27 AM
என்ன நண்பரே, இலங்கையர் என்று போட்டு விட்டீர்கள், இந்திய துனைக்கன்டதிற்கு என்று போடுங்கள். பொருத்தமாக இருக்கும்.

ஜெயாஸ்தா
08-12-2007, 07:41 AM
என்ன நண்பரே, இலங்கையர் என்று போட்டு விட்டீர்கள், இந்திய துனைக்கன்டதிற்கு என்று போடுங்கள். பொருத்தமாக இருக்கும்.

ஆமாம்.... அதுதான் சரியென்று படுகிறது. என்னப்பற்றிதான் இந்தக்கட்டுரையில் எழுதப்பட்டிருக்கிறதோ என்றுகூட நினைத்துவிட்டேன். ஹி....ஹி...ஹி...!

அமரன்
08-12-2007, 07:48 AM
இது அனைத்துலகத் தமிழர்களுக்கும் பொருந்தும். இன்னொன்றை சேர்த்துக்கொள்ளலாம். "பொதுப்பிரயாணங்களில் வண்டியின் உட்புறத்தை தமது சத்தத்தால் சுத்தப்படுத்துவதில் வல்லவர்கள்".

விகடன்
08-12-2007, 09:33 AM
கருத்துக்கள் பதிந்திட்ட அனைவரிற்கும் நன்றிகள்.
பொதுவாக தமிழர்களிற்கே உரித்தான பண்புகள் இருக்கின்றன. ஆனால் அதை நான் சுட்டிக்காட்ட விரும்பவில்லை. ஏனெனில், எந்நாட்டவரை வைத்து நான் எழுதும் பகிடிகளால் என்னை ஒருவரும் திட்டப்போவதில்லை. திட்டினாலும் அது ஒரு பெரிய விடயமாகப்போவதில்லை. மேலும் எந்நாட்டில் கண்ணூடாகப் பார்த்தவையும் இருக்கின்றது.
இதையே நான் பொதுவாக "தமிழர்கள்" என்று சுட்டிக்காட்ட அதை படித்த சகோதர நாட்டு அன்பர்களும் ஏனைய தமிழர்களும் வந்து விளக்கம் வைத்திட்டால்.....!!!

ஆகையால்த்தான் ஈழத்தை வைத்து பதியப்பட்டுவிட்டது. எழுதித்தான் தெரிய வைக்கவேண்டியதில்லை. படிக்கும்போது "அட நாமளுந்தானே இதற்குள் அடங்குகிறோம்..." என்று பலரது சிந்தனைகள் துடிக்கும். அது போதும்.

சிவா.ஜி
08-12-2007, 09:38 AM
ஆகையால்த்தான் ஈழத்தை வைத்து பதியப்பட்டுவிட்டது. எழுதித்தான் தெரிய வைக்கவேண்டியதில்லை. படிக்கும்போது \"அட நாமளுந்தானே இதற்குள் அடங்குகிறோம்...\" என்று பலரது சிந்தனைகள் துடிக்கும். அது போதும்.

சரியான ஆப்பு....இல்லை...இல்லை...தோப்பு...!!!

பூமகள்
08-12-2007, 09:49 AM
நிறைய செயல்கள் சிந்திக்க வைத்தன.
பொருத்தம் பார்த்து அவரவர் மனம் புரிந்து கொள்ளட்டும் என்று விளக்கிய விதம் அருமை.
பதித்தமைக்கு நன்றிகள் விராடன் அண்ணா. :)

நுரையீரல்
08-12-2007, 09:58 AM
இந்தியர்கள் / தமிழர்கள் / இலங்கையர்கள் என்றில்லை விராடன்... அனைத்து நாட்டைச் சேர்ந்த நடுத்தர வர்க்கத்தினருக்கும் இது பொருந்தும்..

IDEALEYE
08-12-2007, 11:59 AM
உண்மைதான் இது எல்லா நாட்டு மத்திய வர்க்ககத்திற்கும் பொருந்தும் குறிப்பாக தமிழர் என்றோ அல்லது வேறு இனத்தவர் என்றோ சொல்ல முடியாது.ஆனால் சில நாட்டவர்களுக்கு சில விஷேட பண்புகள் ஒன்று இரண்டு இருக்கும் இப்படி டசன் கணக்கில் என்று பார்த்தது இதுவே முதல் தடவை.
யெமன் நாட்டு மக்கள் வெற்றிலை போன்ற ஒரு இலையை எப்பொழுதும் மென்று கொண்டிருப்பார்கள் (தூக்கத்திலும் கூட)
கென்யா நாட்டு மக்கள் எப்பொழுதும் நின்று கொண்டிருக்க விரும்புவார்களாம் இருக்கைகள் அவசியமில்லை.
பொதுவாக இலங்கையர்கள் தேனீர் அதிகம் அருந்துவார்கள்
இந்தியர்கள் அதிகம் மசாலா, கோதுமை,ஆட்டா மா என கொள்வனவு செய்வார்கள்
ஐஐ
இவை எனது பயண அனுபவங்கள்... மட்டும்தான்..

விகடன்
09-12-2007, 11:53 AM
பின்னூட்டங்களுக்கு நன்றி.

என்ன செய்வது, நான் கற்றது கைமண்ணளவு.
தமிழர்கள் பக்கம் மட்டுமே தெரியும். அதிலும் ஒரு குறிப்பிட்ட பகுதியில்த்தான்....

இதுவே எல்லோருக்கும் பொருந்தும் என்று இப்ப இப்பதானே தெரிய வருகிறது.

ஏதோ அமர்க்களமாக வாதங்கள் போகுமென்று இந்தப்பகுதியில் வந்து பிரசுரித்தேன். எல்லோரும் சேர்ந்து பாடிவிட்டு போகிறீர்களே.

masan
19-12-2007, 04:09 PM
அப்படியா விராடன்

<<<>>>
தணிக்கை செய்யப்படுகிறது
அன்புரசிகன்.

அன்புரசிகன்
19-12-2007, 04:45 PM
இலங்கையரை பற்றி கதைக்கும் எந்த அருகதையும் உமக்கு இல்லை மாசன். இனியும் நீர் திருந்தாவிட்டால் தக்க நடவெடிக்கை எடுக்கப்படும்.