PDA

View Full Version : மகரந்த மாதங்கள்



miindum
07-12-2007, 02:11 PM
மக்களை பிரசவிக்க மாதர்கள் தயாரானாலும்
மாதங்களின் முடிவில்தான் மகவு பிறக்கும்!

சொர்க்கத்தின் வாசலுக்கு பக்கத்திலிருந்தாலும்
சுட்டியழைத்தபின்னர்தான் சொந்தமாகும் சொர்க்கம்!

தர்க்கம்பண்ணிய தத்துவவாதிகள் வர்க்கத்தார்
வாயசைவில் கட்டுண்டுகிடப்பர்!

அன்றாடங்காய்ச்சிய அல்பமனிதனுக்கோ அரசனோ ஆண்டவனோ அனைவரும் ஒன்றே!

ஆதவா
07-12-2007, 02:27 PM
மகரந்த மாதங்கள்.

மன்றத்தில் உங்களின் முதல் குழந்தை....

கவிதை அறிவில் குறைந்திருப்பதால்தான் என்னவோ எனக்கு புரிய மறுக்கிறது. உங்களின் உயர்ந்த கருத்துக்கள் என்னுள் நுழைய மறுக்கின்றன..

மீண்டும், அல்ப மனிதன் அன்றாடங்காய்ச்சி ஆகமாட்டார்.... அரசனும் ஆண்டவனும் அனைவரும் ஒன்றே என்பது அவரவர் பார்வையில்..

கவிதை நன்று... அதை உங்கள் எழுத்தால் மீண்டும்" விளக்குதல்.. அதிலும் நன்று.

வாழ்த்துகள்.

ஆதி
07-12-2007, 03:33 PM
உங்கள் பெயர் போன்ற உங்கள் கவிதையும் வித்யாசமாய் உள்ளது..

கவிதையில் மூன்று தளங்கள் உண்டு, முதல் இரண்டு தளங்களைப் படித்துப் புரிந்துக்கொள்கிற அறிவும் எனக்கும் உண்டு, ஆனால் முன்றாம் தளக்கவிதைகள் பெரும்பாலும் புரிந்த மாதிரி இருந்தாலும் முழு அர்த்தத்தையும் புரிந்ததில்லை..

இக்கவிதையைப் படித்த பின் எனக்கு ஞாபகம் வந்த கவிதை..

ங்...

இன்றுவரை எனக்கு புரியவில்லை என்ன இந்த ங்.. என்று.

உங்கள் கவிதையை சொஞ்சம் விளக்கினால் நிரம்ப மகிழ்வேன்.

ஆவலுடன் ஆதி

சாம்பவி
07-12-2007, 04:52 PM
புணரபி ஜனனம்
புணரபி மரணம்
புணரபி ஜனனி
ஜடரே ஷயனம்... !


கரு முதல்
காடு வரை
மனித வாழ்க்கை சுழற்சி... !

மகரந்த மாதங்கள்...
இலையிதிர் காலங்கள்... !

பிதாமகனை அற்பனாக்கியதும் ஏனோ....
அரிச்சந்த்திரனே அவந்தானே... !