PDA

View Full Version : பருவநட்சத்திரங்கள்...!-நிறைவு பகுதி



பூமகள்
07-12-2007, 10:56 AM
முந்தைய பாகங்கள்: 1 (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=12812) , 2 (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=12841) , 3 (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13367)


பருவ நட்சத்திரங்கள் - நிறைவு பகுதி


(எல்லாரிடமும் விடைப்பெற்றுக் கொண்டு மீண்டும் காரில் செல்ல ஆயித்தமானார்கள் கலாவும் காமேஷும்.)

காமேஷின் கார், ஜிபி தியேட்டர் தாண்டி, நூறடி சிக்னலில் நின்றிருந்தது.

"அவளுக்கென்ன அம்பா சமுத்திரம்.. ஐயரு ஹோட்டலு அல்வா மாதிரி தாழம்பூவென தளதளதளவென வந்தா வந்தாள் பாரு..!
அவனுக்கென்ன ஆழ்வார்க்குறிச்சி அழகுத் தேவரு அருவா மாதிரிபர்மா தேக்கென பளபளபளவென வந்தா வந்தான் பாரு............!"

- ஜில்லுனு சந்தோசமாக துள்ளல்ப் பாடலைக் கேட்டபடியே கலா- காமேஷ் ஜோடியைச் சுமந்த படி கார் பிரதான சாலையில் பயணப்பட்டிருந்தது.

கலாவின் முகத்தில் ஏதோ மாற்றம் தெரிந்ததை குறிப்பால் உணர்ந்தான் காமேஷ்.

"கலா... ரொம்ப பசிக்குதுமா... நம்ம ஃபேவரட் அஞ்சப்பர் போயி காலை டிபன் முடிச்சிட்டு நேரே உங்க வீட்டுக்கு போவோமே..!" என்று கெஞ்சலாக சொன்னான் காமேஷ்.

"நானும் அதைத்தான் சொல்ல நினைச்சேங்க..! சரிங்க... அப்பாவும் அம்மாவும் வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க.. உங்க மொபைல் கொடுங்க.. நான் வீட்டுக்கு போன் பண்ணி லேட்டா வர்றதா சொல்லிடறேன் " என்று சொல்லி காமேஷின் சட்டை பாக்கெட்டிலிருந்து
மொபைலை எடுத்து போன் செய்தலானாள் கலா.

அஞ்சப்பரில் காலை இடியாப்பம் சாப்பிட்டு முடித்து, நேரே கார் கோவைப்புதூரில் இருக்கும் கலாவின் வீட்டுக்கு புறப்பட்டார்கள்.

தடபுடலான வரவேற்புடன் மதிய விருந்து முடிந்து இருவரிடமும் ஆசி பெற்று திரும்புகையில் மணி மாலை 5ஐக் கடந்திருந்தது.

கலாவின் முகத்தில் அன்பு இல்லத்தில் ஏற்பட்ட மாற்றம் பற்றி விவாதிக்க இது தான் தருணமென்று முடிவெடுத்து எப்படி ஆரம்பிப்பது என்று யோசனையில் ஆழ்ந்திருந்தான் காமேஷ்.

கலாவே ஆரம்பித்தாள். "ஏங்க.. நான் அப்பவே கேக்கனும்னு நினைச்சேன்... அன்பு இல்லத்தில் ஒரு பெரியவரைப் பார்த்தோமே... ரத்னவேல் ஐயா அவரை எப்படி உங்களுக்கு தெரியும்??".

காமேஷு மனதுக்குள் "அப்பாடா.." என்றான். காமேஷ் கேட்க தயங்கியதை கலாவே ஆரம்பிச்சது நிம்மதி அளித்தது.

உடனே காமேஷ், "அது இருக்கட்டும் கலா.. முதல்ல நீ சொல்லு... ஏன் அவரை நான் அறிமுகப்படுத்தறதுக்கு முன்னாடியே அவரைப் பார்த்து அதிர்ச்சியானே?? அவரை ஏற்கனவே உனக்கு தெரியுமா?" ஆச்சர்யத்தில் புருவத்தை உயர்த்திக் கேட்டான்.

கலா, உடனே... "ஆமாங்க..ஏற்கனவே அவரை பத்து வருடத்துக்கு முன்னால் பார்த்திருக்கேன்" என்றவாறு அனைத்து ஃபிளாஷ் பேக் நிகழ்வையும் சொல்லி முடித்தாள்.

"அதெல்லாம் இருக்கட்டும்.. .இவரை எப்படி நீங்க சந்திச்சீங்க?" விடாப்பிடியாய் கேட்டாள் கலா.

காமேஷ், "ரொம்ப ஆச்சர்யமா இருக்கு கலா.. நான் சந்தித்த அதே பெரியவரை நீ தா எனக்கு முன்னாலேயே சந்திச்சிருக்க.. ஆனா அப்போ, நீ யாரோ.. நான் யாரோ.. இப்போ பாரு.. ரெண்டு பேரும் ஒன்னா போயி சந்திச்சிருக்கோம்.." என்று புலகாங்கிதமாகி உணர்ச்சிவசப்பட்டான் காமேஷ்.

கார் இப்போது கோவைபுதூரில் உள்ள இன்பாண்ட் ஜீசஸ் சர்ச் முன்னர் நிறுத்தி விட்டு, காமேஷ், "கலா.. இங்கு இருக்கும் ஐயப்பன் கோயிலும் நாகப்பிள்ளையார் கோயிலும் இன்பாண்ட் ஜீசசு சர்ச்சும் ரொம்ப பிரபலமாமே. அங்கு போயிட்டு பின்பு வீட்டுக்கு போவோம் டா." என்றவாறே கலாவுடன் இறங்கி நடக்கலானான்.

சற்று தூரம் காலாற நடந்த படியே பேசிக் கொண்டு சென்றனர். சிறிது தூரத்தில் ஐயப்பன் கோயில் இருந்தது.

கோயிலுக்குள் சென்று வழிபட்டு, சந்தனம் வைத்துவிட்டு பின்பு சிறிது தூரம் நடந்து இன்பாண்ட் ஜீசஸ் சர்ச்சுக்குள் வந்தனர்.

அங்கு மெழுகுவர்த்தி ஏத்தி வழிபட்டுவிட்டு, வெளியே வந்து கார் எடுத்து நாகப்பிள்ளையார் கோயில் நோக்கி பயணப்பட்டனர்.

வழிபாடுகள் முடிந்து ஒரு வழியாய் காரில் ஏறி தங்களின் வீடு நோக்கி பயணமானார்கள். இப்போது மணி மாலை 5.45.

அதுவரை சஸ்பென்ஸ் பொறுத்துப் பார்த்த கலா.. அதற்கு மேல் பொறுக்க முடியாமல், திரும்ப அந்த டாப்பிக்கை ஆரம்பித்தாள்.

"ஏங்க.. நான் கேட்டதுக்கே இன்னும் பதிலைக் காணோமே.. அந்த பெரியவரை எங்கே எப்போ எப்படி சந்திச்சீங்க??" ஆர்வமாய் கேட்டாள் கலா.

"சொல்றேன்மா.. உன்கிட்ட சொல்லாம வேற யார் கிட்ட சொல்லப்போறேன்.." என்றவாறே... காரை மெதுவாக்கி, தன் ஆள்காட்டி விரல் கொண்டு கலாவின் முகத்தின் முன் வட்டவட்டமாய் சுற்றிச் சிரித்தான் காமேஷ்.

"என்னங்க பண்றீங்க... சின்ன பிள்ளை மாதிரி.." புரியாமல் கேட்டாள் கலா.

"ஃபேளேஷ் பேக் போகப் போறோம். அதான்.. சுழல் உருவாக்கினேன்." என்றான் கலகலச்சிரிப்புடன் காமேஷ்.

"போங்க.. உங்களுக்கு எப்பவுமே விளையாட்டு தான்" செல்லமாய் அவனது கையைத் தட்டிவிட்டபடி சிணுங்கினாள் கலா.

"நான் பி.எஸ்.ஜி கல்லூரியில் படிச்சிட்டிருந்த நேரத்துல.. பயங்கரமா பைக்கை ஸ்பீடா ஓட்டுவேன்.. அப்போ அதிகமா இருந்தது இளமைத் திமிர்.. எல்லாரும் புருவம் உயர்த்தி பார்க்க வைக்கும் ஒரு பிரபல கல்லூரியில் படிக்கறேன்கிறதுல கூடுதல் மிதப்பு எனக்கு இருந்துச்சு.. ஒரு தடவ அப்படித்தான்.. வேகமா பை ஓட்டிட்டு அவிநாசி ரோட்டில் ஹோப்ஸ் காலேஜ் தாண்டி போயிட்டு இருந்தேன். ஒரு திருப்பத்தில்
இந்த முதியவர் திடீரென்று சாலையின் குறுக்கே வர... அதிர்ச்சியில் ப்ரேக் போடுவதற்குள் அவர் மேல் எனது முன் வண்டிச்சக்கரம் கொஞ்சம் இடித்து அவர் நிலைதடுமாறி கீழே விழுந்து மயக்கமாயிட்டார். நானும் விழுந்து வண்டி என் மேல் விழந்து அடியில் மாட்டிக் கொண்டேன்.. ஹெல்மட் போட்டிருந்ததால் தலைக்கு ஒன்றும் ஆகலை.. அப்போ.. அந்த பெரியவரை ஆஸ்பத்திரியில் சேர்த்து ட்ரீட்மெண்ட் தந்தேன்.
அவருக்கு தலையில் அடிபட்டதால ஸ்கேனும் செய்தாங்க.. அப்போ தான் புரிஞ்சது.. அவருக்கு மூளையில் ஏற்கனவே ஒரு காயமானதால் பழைய நினைவுகள் அழிக்கப்பட்டிருக்கு என்பது.. அதனால்.. தன் பற்றிய எந்த விவரத்தையும் அவரால சொல்ல முடியலை.. எனக்கு என்ன பண்றதுன்னே புரியலை கலா... அப்படியே விட்டுப் போகவும் மனமில்லை.. அவருக்கு தான் படிச்ச படிப்பு... பெயர், அன்றாட நாம் நமக்கு செய்து கொள்ளும் வேலைகள், தாய்மொழி எதுவுமே மறக்கலை.. என் நண்பன் கிட்ட சொன்னப்ப.. அவன் வந்து பார்த்தான்.. பார்த்தவன்.. என் கையைப் பிடிச்சிட்டு அழாத குறையா நெகிழ்ந்துபோனான்..."

"ஐயோ.. என்னங்க... உங்களுக்கு ஏக்ஸ்டண்ட் ஆச்சா... அப்புறம்.. என்ன ஆச்சுங்க.. அவருக்கு பலத்த அடி இல்லையே? அந்த பெரியவர் யார்னு தெரிஞ்சிதா??" இடைமறித்தாள் கலா.

"ஆமாம் கலா... ஆனா..அன்னிக்கப்புறம்.. நான் வண்டிய வேகமா ஓட்டுவதையே விட்டுட்டேன். அவரைப் பத்தி என் நண்பனிடம் கேட்டதில் அவன் சொன்னது அவன் தனது யூஜியை அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் படிச்சிருந்தான். அங்கு ஆங்கிலமொழி பாடத்தின் முனைவராய் இருந்தவர் தான் இந்த பெரியவராம்.. அவரால் பலபேரின் வாழ்வு வெளிச்சத்துக்கு வந்திருக்காம்.. எந்த கட்டணமுமே வாங்காமல் இலவசமாய் பல ஏழை தமிழ் வழிக் கல்வி பயின்ற மாணவர்களுக்கு ஆங்கில உச்சரிப்பு மற்றும் உரையாடலைக் கற்றுக் கொடுத்து பெரிய நிறுவனங்களில் வேலை கிடைக்க உதவியவராம்.. இந்த அற்புதமான மனிதருக்கா இந்த நிலையென்று உடைஞ்சுட்டான்... அவனோட உதவியால... அவரைப் பத்தி தெரிஞ்ச விசயம் அடுத்தடுத்து அதிர்ச்சியையே தந்தது." என்று சொல்லி நிறுத்தினான் காமேஷ்.

"என்னங்க சொல்றீங்க.. இப்பேர் பட்ட பெரிய மனிதரா அவர்?? என்ன நடந்ததுங்க அவருக்கு..?" வருத்தமும் கலக்கமும் சேர்ந்துகொண்டது கலாவுக்கு.

"பல வருடம் முன்பு அவர் ஒரு சுற்றுலாவுக்காக நம்ம கோவை வந்திருக்கார்... அப்போ.. ஊட்டி செல்லும் வழியில் பெரிய ஏக்சிடண்ட் ஆனது. அதில் இவரோடு பயணம் செய்த மனைவி அந்த இடத்திலேயே இறந்திருக்கிறார். மகனும் இவரும் பெரிய காயங்களோடு உயிர்தப்பித்திருக்கின்றனர். இவருக்கு சிகிச்சை அளித்த பின் நார்மலாய் கொஞ்ச காலம் இருந்திருக்கிறார்.. பின்பு.. மகன் வீட்டில் இருக்காமல் திடீரென்று ஒரு நாள் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார்..
அவர் எங்கிருக்கிறார் என்று தேடிப் பார்த்து கிடைக்காமல் விட்டுவிட்டார் அவரது மகன். அப்புறம்.. என் நண்பர் மூலமா நான் அவரது மகனைத் தொடர்பு கொண்டேன், அவர் என்ன சொன்னார் தெரியுமா?" என்று சொல்லி சஸ்பென்ஸ் வைத்தான் காமேஷ்.

"ரொம்ப சந்தோசப்பட்டிருப்பாங்களே.. அப்படித்தானே.." என்றாள் கலா மகிழ்ச்சியுடன்.

"அப்படித்தான் நானும் நினைச்சேன் கலா.. ஆனால்..இதோடு ஆறாவது முறையா தொலைந்து கிடைச்சிருக்கார் என்றும் அவர் அவசரமாய் குடும்பத்தோடு வேலை நிமித்தம் ஆஸ்ரேலியா போவதாகவும் இந்த நிலையில் அப்பாவை அவரால் பார்த்துக் கொள்ள முடியாதுன்னு சொல்லிட்டாரு.. சில லட்சங்கள் பணம் அந்த பெரியவர் பேருல போடுவதாகவும் அதை வைத்து நல்ல முதியோர் இல்லத்திலேயே வைச்சிக்கோங்கன்னு சொல்லிட்டார்" என்று வருத்தமாய் சொன்னான் காமேஷ்.

"ச்சே.. இப்படியுமா இருப்பாங்க... பெத்தவங்கள கூட பார்க்காம... விட்டுட்டு அப்படியென்ன வாழப்போறாங்கன்னு தெரியலை.." ஆத்திரமானாள் கலா.

"ஆமா கலா.. இப்படியும் இருப்பாங்கன்னே எனக்கு அப்போ தான் புரிஞ்சது.. இதுல எனக்கு ஒரே ஆறுதல்.. அந்த பெரியவருக்கு தன் குடும்பம் பத்தி நினைவே இல்லை.. அதனால் இந்த சம்பவங்கள் அவரது நிம்மதிய பாதிக்கல.. இன்னிக்கி வரைக்கும் இந்த உண்மையை நான் அவர் கிட்ட சொல்லவே இல்ல அன்னிக்கிலிருந்து அவரை இந்த அன்பு இல்லத்தில் சேர்ந்து பத்திரமா பார்த்துட்டு வருகிறேன். சின்ன வயசிலயே அப்பாவையும் அம்மாவையும் இழந்த எனக்கு கடவுள் கொடுத்த
"காட் ஃபாதர்"-ஆ இவரை நினைக்கிறேன்" என்றான் காமேஷ்.

இத்தனையையும் பொறுமையாய்க் கேட்ட கலா.. ஒரு முடிவுக்கு வந்தாளாய் பேசலானாள்.

"உண்மையிலேயே நான் ரொம்ப கொடுத்து வச்சவங்க... இத்தனை அன்பான மனிதநேயம் மிக்க ஒருத்தர் எனக்கு கிடைச்சது போன ஜென்மத்து புண்ணியம் தான்.. நான் ஒரு யோசனை வச்சிருக்கேன்.. சொல்லட்டுமாடா என் கருத்த மச்சான்....!!" என்று சீரியஸா பேசுகையிலும் நகைச்சுவை காட்டினாள் கலா.

"ஏய்..ஏய்.. என்ன சொன்ன... டா...வா... கருத்த மச்சானா,.... நான் என்ன கருப்பா.. அப்போ.. நீ என்னோட கருவாச்சி.. டீ கருவாச்சி..." செல்ல சீண்டல் களைகட்டியது.

"சரி சரி.. எல்லாம் இருக்கட்டும்... ஏதோ சொல்லனும்னியே சொல்லு கலா" என்றான் காமேஷ்.

"உங்களோட ஃகாட் பாதரை நம்ம வீட்டிலேயே வைத்து பூஜித்தால் என்ன?" என்றாள் கலா.

"வாவ்... எப்படி கலா..நான் மனசுல நினைச்சது கேட்டது உனக்கு...??!! இதை உன்னிடம் எப்படி சொல்றதுன்னு தான் யோசிச்சிட்டு இருந்தேன்" என்றான் காமேஷ்.

"எனக்கு தெரியுங்க உங்க மனசை.. அதான் இந்த முடிவெடுத்தேன். ஆனால்.. ஒரு விசயம்.. ரத்னவேல் ஐயாவுக்கு நம்மோடு வருவதில் பூரண சந்தோசமும் நம்ம கூட வர சம்மதமும் சொன்னா தான் இது நிஜமாக்கனும்.. மயிலை வற்புறுத்தி ஆட வைக்கக் கூடாதுங்க.." என்றாள் தீர்மானமாய் கலா.

"ரொம்ப சரிமா.. நாளைக்கு சாயிந்திரமே போயி அவரின் சம்மதத்தை கேட்டுட்டு வந்துடறேன்.." என்றான் காமேஷ் உற்சாகமாக.

கார் உக்கடத்தை நெருங்கிய வேளையில்,
உக்கடம் குளத்தின் ஜில்லென்ற தென்றல் காற்றும்... அந்திவானத்தை தொட்டுப் பார்த்த மகிழ்ச்சியில் ஜொலிப்புக் காட்டி பெருமைப்பட்டுக் கொண்டிருந்த குளத்து நீரும் இவர்களோடு சேர்ந்து மகிழ்ச்சியில் ஆரவாரமிட்டது.

"யார் யார் சிவம்... நீ நான் சிவம்..
வாழ்வே தவம்... அன்பே சிவம்..."

-என்ற பாடல் காரினுள் காற்றில் ஜதிசொல்லி அவர்களின் இதயத்தில் நுரையீரல் வழி சென்றது.

நாளைய அந்திவானத்தில் மேற்கில் உதிக்கும் ரத்னமாய் சூரியன் மின்னக் காத்திருந்தது ஃகாட் பாதர் வருகைக்காக..!


(முற்றும் - சுபம்)

யவனிகா
07-12-2007, 11:07 AM
அடடா....பருவ நட்சத்திரங்கள் அற்புதமா முடிஞ்சிருச்சே...கவிதாயினி பூ...கதாசிரியராகவும் கலக்க ஆரம்பிச்சிட்டாங்க...அது சரி இது கற்பனைக் கதையா...இல்லை யாரவது சொன்ன உண்மைச் சம்பவத்தை கதையா மாற்றிச் சொன்னையா?

கதை நல்லாயிருக்கு பூ...கொஞ்சூண்டு செயற்கைத்தனம் தெரியுது அவ்வளவுதான். அதுவும் போகப் போக சரியாகி விடும்.
சரி...இன்ஃபன்ட் ஜீசஸ் சர்ச் வரைக்கும் வந்திருக்காங்க...பக்கத்தில தான என் வீடு...அனுப்பியிருந்தீன்னா...அசத்தலா ஒரு காப்பி போட்டுக் குடுத்திருக்க மாட்டேன்...ஏமாத்திட்டியே பூவு....
சரி...ஏமாத்தினாலும் போகுது அருமையா ஒரு கதை குடுத்திருக்க...அக்காவோட வாழ்த்துக்களோட 1000 இ பணமும் அன்பளிப்பு.

ஆதவா
07-12-2007, 11:11 AM
மற்ற பகுதிகளை இதில் சேர்க்கும்படி கேட்டுக் கொள்கிறேன்....

பூமகள்
07-12-2007, 11:16 AM
இது கற்பனைக் கதையா...இல்லை யாரவது சொன்ன உண்மைச் சம்பவத்தை கதையா மாற்றிச் சொன்னையா?

முதல் பின்னூட்டம் எப்போதுமே... என் அன்பு யவனி அக்காவிடமிருந்து வந்ததுன்னா சந்தோசத்துல உச்சி குளுந்துட்டும்..! அது போல் இன்றும்..!

இந்த கதையின் நாயகர் உண்மையில் அந்த பெரியவர் தான்.

என் வாழ்க்கையில் இந்தப் பெரியவரை கலாவைப் போல் என் பள்ளி நாட்களில் சந்திச்சேன். இப்போ அவரு எங்கே இருக்கார்னு எனக்கு தெரியாது. ஆனால்.. இப்படியெல்லாம் நடந்து அவர் பத்திரமா இருந்தா நல்லாயிருக்கும்னு என் மனம் சொல்லியதைத்தான் கற்பனைக் கதையில் கொண்டுவந்தேன்.
இந்தக் கதையில் வந்த கலாவின் ஃப்ளேஸ் பேக் மட்டுமே சில உண்மைச் சம்பவங்களை உள்ளடக்கியது. மற்றவை எல்லாமே கற்பனையே..! யாரையும் குறிப்பிடுவன இல்லை...!

கதை நல்லாயிருக்கு பூ...கொஞ்சூண்டு செயற்கைத்தனம் தெரியுது அவ்வளவுதான். அதுவும் போகப் போக சரியாகி விடும்.
சரி...ஏமாத்தினாலும் போகுது அருமையா ஒரு கதை குடுத்திருக்க...அக்காவோட வாழ்த்துக்களோட 1000 இ பணமும் அன்பளிப்பு.
இந்த நிறைவுப் பகுதிக்காக மண்டைய உடைச்சி எழுதினதே இவ்வளோ தான் நல்லாயிருக்கா...??!! :icon_ush::icon_ush::confused::confused:
என்ன செய்வது அக்கா.. உங்களின் சிஷ்யை ஆகி இன்னும் நல்லா எழுதக் கத்துக்குறேன்.. அதுவரைக்கும் பொறுத்தருள்க அக்கா..! :icon_rollout:
உங்க வீடு அங்கயாக்கா இருக்கு... அடுத்த முறை கதையில் இல்ல நிஜத்திலேயே வந்துட்டா போச்சு..!!:icon_b:

அன்பான இ-பண அன்பளிப்புக்கும் பாராட்டுக்கும் மிகுந்த நன்றிகள் யவனி அக்கா. :)

lolluvathiyar
07-12-2007, 11:22 AM
நீண்ட நாட்களாக எழுதி வந்த கதை இன்று எப்படியோ முடித்து விட்டாய் பூமகள். கதையில் முதலில் மர்மம் வ்ருவது போல் கொண்டுவந்து பிறகு எந்த சஸ்பென்ஸும் இல்லாமால் முடிவில் மனித நேயம் கொண்டு வந்து அழகாய் முடித்திருகிறீர்கள். பாராட்டுகள்.

ஆனால் என்னை பொருத்தவரை என்ன தோன்றுகிறது என்றால் இது போன்ற பெரியவர்களை ( நம் தாய் தந்தையர் உட்பட) அவர்கள் உழைக்க முடியாத காலம் நெருங்கிய பின் நல்ல முதியோர் இல்லத்தில் இருப்பது தான் சிறந்தது. பிள்ளை பாசம் இருக்கும் என்ன தான் கூட இருந்தால் சிறிது தனிமை வெறுமையாக தான் இருக்கும். ஆனால் முதியோர் இல்லங்களில் பலருடன் காலம் கழிப்பதால் தனிமை வெறுமை இருக்காது. அப்படி இல்லாவிட்டால் கிராமங்களில் இருக்கலாம் அங்கு விவசாய வேலை செய்தால் உன்மையில் மனதுக்கு இதமாக இருக்கும். மாடு மரங்களுடன் புலங்குவது ஒரு புதிய உயிரோட்டத்தை தரும்.

பூமகள்
07-12-2007, 11:38 AM
நீண்ட நாட்களாக எழுதி வந்த கதை இன்று எப்படியோ முடித்து விட்டாய் பூமகள். என்ன வாத்தியார் அண்ணா.. அப்போ இந்த நிறைவு பகுதி நல்லாயில்லையா??! :frown::traurig001:

உங்களின் முன் கருத்தை நான் ஆதரிக்க மாட்டேன். ஏனெனில், முதியோர் இல்லங்களையே இல்லாமல் ஆக்க வேண்டும் என்று அரசு திட்டம் போட்டுக் கொண்டு இருக்கிறது. பெற்றோரை அவர்களது மகன் கண்டிப்பாக பார்த்துக் கொண்டுதான் ஆக வேண்டும் என்று சட்டம் கூடிய விரைவில் வந்தாலும் வரும்.
தனது பேரக் குழந்தைகளோடு விளையாடுவதை விட பெரியவருக்கு மகிழ்ச்சி வேறு இருப்பதாய் எனக்கு தோன்றவில்லை.

உங்களின் கருத்துகளினை இங்கு தந்தமைக்கு நன்றிகள் வாத்தியார் அண்ணா.

நேசம்
07-12-2007, 11:40 AM
அருமையான முடிவுவை கொண்டதாக கதை கொண்டு சென்றதற்கு பாராட்டுக்கள்.சில சம்பவங்களை வைத்து கதை கற்பனையா கொண்டு சென்றதற்கு வாழ்த்துக்கள்

lolluvathiyar
07-12-2007, 12:13 PM
என்ன வாத்தியார் அண்ணா.. அப்போ இந்த நிறைவு பகுதி நல்லாயில்லையா??! :frown::traurig001:



முடிவு நல்லா இல்லை என்று நான் சொல்லவே இல்லை பூமகளே, உன்மையிலேயே மிக நன்றாக இருந்தது. முதியோரை பற்றி பொதுவாக என் கருத்தை சொன்னேன்.



முதியோர் இல்லங்களையே இல்லாமல் ஆக்க வேண்டும் என்று அரசு திட்டம் போட்டுக் கொண்டு இருக்கிறது.


முதியோர் இல்லம் என்றாலே அனைவர் மனதில் எழுவது கவனிக்காமல் பிள்ளைகளால் கைவிடபட்டவர்கள் என்று என்னம் தான். அது உன்மைதான். ஆனால் இன்று வெளி நாடுகளுக்கோ அல்லது வெளியூருக்கு வேலைக்கு போன பிள்ளைகள் முதியோரை அவர்கள் வீட்டில் வைத்து கொள்ளலாம். ஆனால் அவர்களுக்கு (குறிப்பாக கிராமங்களில் அல்லது சின்ன நகரங்களில் வசித்தவ முதியோர்) சூப்பர் சிட்டியில் வாழ்வது பிடிக்காது. அங்கு எப்பவுமே வெறுமை தனிமைதான் இருக்கும். கனவன் மனைவி இருவரும் பனத்தை துரத்துவார்கள். பேரகுழந்தை ரெஸ்ட் இல்லாமல் படித்து அது போக மீதி நேரங்களில் அபாகஸ், கனினி, பிரென்ச் கிளாஸ் போய் விடும். வீட்டுக்கு வந்தவுடன் தூங்கி விடும்.

பேரன் பேத்திகள் குழந்தைகளாக இருக்கும்வரைதான் தாதாபாட்டியுடன் விளையாடுவார்கள். கல்லூரி செல்லும் வயது வந்து விட்டால் கண்டுகொள்ளமாட்டார்கள். அந்த வீடுகளில் வசிக்கும் முதியோர்கள் சம்பளம் வாங்காத வாட்ச்மேன் ஆயாகளாக தான் இருக்க நேரிடுகிறது. அது போக தனிமையின் கொடுமை. அவர்களுக்கு டீவி பார்பது பிடிக்காது. இது அவர்கள் தவறும் அல்ல அவர்கள் படிக்க வைத்து ஆளாக்கிய பிள்ளையின் தவறும் அல்ல. அந்த முதியோர்களுக்கு உன்மையில் முதியோர் இல்லம் தான் சிறந்தது என்று சொன்னேன். அங்கு உன்மையிலேயே பக்தி, நட்பு, சேவை போன்றவைகளில் கவனம் செலுத்தி சந்தோசமாகவும் உபயோகமாகவும் காலம் களிப்பார்கள்.





பெற்றோரை அவர்களது மகன் கண்டிப்பாக பார்த்துக் கொண்டுதான் ஆக வேண்டும் என்று சட்டம் கூடிய விரைவில் வந்தாலும் வரும்.


நேற்று தான் அந்த சட்டம் அமுலுக்கு வந்திருகிறது, பெற்றோரை கவனிகாத பிள்ளைகளுக்கு 3 மாதம் சிரை தன்டனையும் உண்டு. அதுவும் வழக்கம் போல தவறாகவே பயன்படுத்த படும்.

பாரதி
07-12-2007, 12:34 PM
பாராட்டுக்கள் பூ. தொடர்ந்து உங்கள் கைவண்ணத்தில் கதைகளைக் காண்பேன் என நம்புகிறேன்.

ஒரு சிறிய சந்தேகம் : இந்தக்கதை "அன்பேசிவம்" பட விமர்சனத்திற்கு முன்பு எழுதியதா..?

ஆதவா
07-12-2007, 02:03 PM
வா!!!!! கதை அருமை பூ!, சொன்னவிதத்தில் இழைத்த விதத்தில் சற்றேனும் குறை இருக்கவேண்டுமே!!! ஆமாம்.... செயற்கைத்தனம் (நன்றி யவனி.)

ஆனால் கதையின் போக்கை வேறெப்படியோ இருக்குமென்று சிந்தித்து வைத்திருந்தேன். அவ்வாறில்லாமல் இருந்தது. முதியவருக்கு நேர்ந்தது பலரின் வாழ்வுக் கதை.

ஆரம்பம் முதல் முடிவு வரை மங்கலமாகவே செல்கிறது... இடைச்செறுகலாக கனவு.

கோவையைச் சுற்றி கதை நடப்பதால் என் ஊருக்குள் உலவும் எண்ணம் ஏற்படுகிறது.. திருப்பூரிலும் அன்பு இல்லம் உண்டு.. முதியோருக்காக அல்ல.

இம்மாதிரி தத்து எடுப்பதில் சிலருக்கு சுகமுண்டு... அன்னையில்லாதவர்கள் அப்பனில்லாதவர்கள்... உடன் வந்தாரை உளமாற பூசிப்பவர்கள்..

பாராட்டுக்கள் உங்கள் கதைக்கு.... அற்புதமாக நகர்த்திய விதத்திற்கு... என் பங்குக்கு எனது பணம் வந்ந்து சேரும்....

பாராட்டுகள்...

பூமகள்
09-12-2007, 02:39 PM
பாராட்டுக்கள் பூ.
ஒரு சிறிய சந்தேகம் : இந்தக்கதை "அன்பேசிவம்" பட விமர்சனத்திற்கு முன்பு எழுதியதா..?
நன்றிகள் பாரதி அண்ணா. :)
ஒன்றை மறந்துவிட்டீர்கள் என்று நினைக்கிறேன். அன்பே சிவம் விமர்சனம் நான் இங்கு பதித்தேன் அவ்வளவே. அதை எழுதியது வேறொருவர் என்று அங்கே குறிப்பிட்டிருந்தேனே..!!:confused::confused:

உங்களின் கேள்விக்கான பதில் இந்த கதை சமீபத்தில் அந்தப் படத்தின் விமர்சனத்துக்கு பின் எழுதியதே.

பூமகள்
09-12-2007, 02:42 PM
பாராட்டுக்கள் உங்கள் கதைக்கு.... அற்புதமாக நகர்த்திய விதத்திற்கு... என் பங்குக்கு எனது பணம் வந்ந்து சேரும்....
விமர்சனத்துக்கு நன்றிகள் ஆதவா.
எங்கே இன்னும் உன் இ-பணம் வந்து சேரவில்லையே...??!!:frown::frown::frown:

பூமகள்
09-12-2007, 02:46 PM
அருமையான முடிவுவை கொண்டதாக கதை கொண்டு சென்றதற்கு பாராட்டுக்கள்.
மிக்க நன்றிகள் நேசம் அண்ணா. :)

பாரதி
10-12-2007, 12:35 AM
நன்றிகள் பாரதி அண்ணா. :)
ஒன்றை மறந்துவிட்டீர்கள் என்று நினைக்கிறேன். அன்பே சிவம் விமர்சனம் நான் இங்கு பதித்தேன் அவ்வளவே. அதை எழுதியது வேறொருவர் என்று அங்கே குறிப்பிட்டிருந்தேனே..!!:confused::confused:

உங்களின் கேள்விக்கான பதில் இந்த கதை சமீபத்தில் அந்தப் படத்தின் விமர்சனத்துக்கு பின் எழுதியதே.

ஹஹஹா... நான் மறக்கவில்லை பூ. அந்த விமர்சனம் வேறொருவரால் எழுதப்பட்டு, பிறிதொரு புத்தகத்தில் வந்தது என்று நீங்கள் குறிப்பிட்டதையும் மறக்கவில்லை. என் கேள்வியின் நோக்கம் − அந்த விமர்சனம் எந்த அளவிற்கு உங்களை பாதித்தது என்பதை அறிந்து கொள்ளத்தானே தவிர வேறொன்றில்லை. மீண்டும் பாராட்டுக்கள் பூ.

சிவா.ஜி
10-12-2007, 03:40 AM
கதையை முடித்த விதம் அருமை பூமகள்.ஆனால்...நிஜத்தில் இது சாத்தியமில்லை.நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும் முதியோர்களே உதாசீனப்படுத்தப்படுகிறார்கள்.இதில் மனநிலை சரியில்லாத ஒரு முதியவரை,அந்த நேர ஆர்வத்தில் கூட வைத்துக்கொண்டாலும்,வாத்தியார் சொன்னதைப் போல பணத்தைத் துரத்தும் இந்தக்காலத்தில் இதுவே சுமையாக மாறும் நிலை கூட ஏற்படலாம்.பெரிய நகரங்களில் இருப்பவர்களுக்கு இது அவ்வளவாக சாத்தியமில்லாதது.கிராமத்தில் வேண்டுமானால் முடியும்.
நல்ல கதாசிரியராக உருவாகிக்கொண்டுவரும் தங்கைக்கு மனமார்ந்த பாராட்டுகள்.

பூமகள்
10-12-2007, 07:10 AM
ஹஹஹா... நான் மறக்கவில்லை பூ. அந்த விமர்சனம் எந்த அளவிற்கு உங்களை பாதித்தது என்பதை அறிந்து கொள்ளத்தானே
நல்லது அண்ணா.
அன்பு என்பது எல்லோருக்கும் பிடித்தமான ஒன்று. இந்த கதைப்படி அந்த அன்புள்ளம் மிக்கவர்களுக்கு தகுந்த பாடல் போட நினைக்கையில், இந்தப் பாடல் எனக்கு பிடித்த பாடல் என்பதால் பதித்தேன்.
அந்தப் படத்துக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை அண்ணா.
உங்களின் பின்னூட்டத்துக்கு நன்றிகள்.

பூமகள்
10-12-2007, 07:28 AM
கதையை முடித்த விதம் அருமை பூமகள்.ஆனால்...நிஜத்தில் இது சாத்தியமில்லை.நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும் முதியோர்களே உதாசீனப்படுத்தப்படுகிறார்கள்.இதில் மனநிலை சரியில்லாத ஒரு முதியவரை,அந்த நேர ஆர்வத்தில் கூட வைத்துக்கொண்டாலும்,வாத்தியார் சொன்னதைப் போல பணத்தைத் துரத்தும் இந்தக்காலத்தில் இதுவே சுமையாக மாறும் நிலை கூட ஏற்படலாம்.பெரிய நகரங்களில் இருப்பவர்களுக்கு இது அவ்வளவாக சாத்தியமில்லாதது.கிராமத்தில் வேண்டுமானால் முடியும்.
நல்ல கதாசிரியராக உருவாகிக்கொண்டுவரும் தங்கைக்கு மனமார்ந்த பாராட்டுகள்.
உங்களின் விமர்சனத்துக்கு நன்றிகள் சிவா அண்ணா.
ஆயினும், இந்தக் கதையில் அந்தப் பெரியவருக்கு பழையது மறந்துவிட்டதே ஒழிய வேறு பிரச்சனை ஏதும் இல்லை. ஆகவே அவரை வைத்துப் பராமரிப்பதில் பிரச்சனை இருப்பதாய் தெரியவில்லை அண்ணா.
இது நடைமுறைக்கு சாத்தியமாக்குவதும் நமது கடமை தானே. அதற்கு இந்தக் கதை முன்னோடியாய் இருக்க வேண்டுமென்றே விரும்புகிறேன்.

உங்களின் பாராட்டுக்கு நன்றிகள் சிவா அண்ணா. :)

சிவா.ஜி
10-12-2007, 08:15 AM
இது நடைமுறைக்கு சாத்தியமாக்குவதும் நமது கடமை தானே.

நடைமுறைக்கு சாத்தியமாகவேண்டும்,இப்படிப்பட்ட இல்லங்கள் இல்லாமல் போகவேண்டும்.....முயலுவோம் பூமகள்.

மதி
10-12-2007, 09:05 AM
அருமையான கதைக்களம் பூமகள்.. நன்றாக பயணித்திருக்கிறீர்..
பாராட்டுக்கள்..
முதியோர் இல்லங்களே இல்லாமல் போகும் காலம் வர வேண்டும்..

பூமகள்
10-12-2007, 09:25 AM
நடைமுறைக்கு சாத்தியமாகவேண்டும்,இப்படிப்பட்ட இல்லங்கள் இல்லாமல் போகவேண்டும்.....முயலுவோம் பூமகள்.
சிவா அண்ணா..!
ரொம்ப நன்றி அண்ணா.
நிச்சயம்.. நல்லதொரு எதிர்காலத்தை உருவாக்குவோம். :icon_b:

அருமையான கதைக்களம் பூமகள்.. நன்றாக பயணித்திருக்கிறீர்.. பாராட்டுக்கள்..
முதியோர் இல்லங்களே இல்லாமல் போகும் காலம் வர வேண்டும்..
மிகுந்த நன்றிகள் மதி அண்ணா. :)
உங்களின் வாழ்த்தும் பாராட்டும் எனக்கு மிகுந்த உற்சாகத்தைத் தருகிறது.

மலர்
13-12-2007, 04:25 PM
ஆகா... கதை எப்படியோ போயி.
முடிவில் சுபமாயிட்டு....
பூ.... நல்ல முடிவு
பாராட்டுக்கள்...