PDA

View Full Version : காவிரி ஆறும், நண்டுகளும்

ஆதவா
07-12-2007, 08:52 AM
ஆற்றங்கரையில்
நீச்சல் தெரியாமல்
அமர்ந்திருப்பேன்.

ஆற்றில் எங்கோ சென்ற அப்பா
நண்டுகள் பிடித்து வருவார்
இறந்து போன நிலையில்

கொடுக்கு துண்டிக்கப்பட்டு
பிரசவத்தோடு இறந்திருக்கும்
சில பெண் நண்டுகள்

ஓடைப் பிரித்தால் காற்று புணர்ந்து
மாய்ந்து போகும் லட்சம் உயிர்கள்.
இறப்பதைக் கண்டால் மகிழ்ச்சி எனக்கு.

அப்பா சொல்வார்,
நண்டு உடலுக்கு நல்லதென்று

சொன்னவர் இங்கில்லை,

நண்டு வேட்டையில் இறங்குகிறேன்
என் அப்பாவைப் போலவே

ஆதி
07-12-2007, 09:32 AM
சற்று நேரத்திற்கு முந்தான் காவிரி உறழ்வை வைத்து ஒரு கவிதை எழுதினேன்..

நீங்கள் காவிரியில் நண்டுப்பிட்டித்த ஞாபக்தில் எழுதியுள்ளீர்..

என்ன வியப்பு ?

பல்யங்களில் பதிந்தப் பதிவுகள் பரலோகம் போனாலும் மறக்காது..

ஈரமான கவிதை ஆதவா..

பாராட்டுக்கள்..

-ஆதி

மதி
07-12-2007, 09:41 AM
அட..இவ்ளோ கொடுமைக்காரரா நீங்க...
கவிதை நன்று..
காலங்கள் மாறினாலும்.. என்றும் நண்டு உடலுக்கு நல்லது தான்.

ஆதவா
07-12-2007, 09:49 AM
சற்று நேரத்திற்கு முந்தான் காவிரி உறல்வை வைத்து ஒரு கவிதை எழுதினேன்..

நீங்கள் காவிரியில் நண்டுப்பிட்டித்த ஞாபக்தில் எழுதியுள்ளீர்..

என்ன வியப்பு ?

பல்யங்களில் பதிந்தப் பதிவுகள் பரலோகம் போனாலும் மறக்காது..

ஈரமான கவிதை ஆதவா..

பாராட்டுக்கள்..

-ஆதி

நன்றி ஆதி. காவிரியில் நண்டு பிடித்த ஞாபகம் எல்லாம் இல்லை.. சொல்லப்போனால் எனக்கு நீச்சலே வராது.:D. நண்டு பிடித்த அப்பாக்களை கரையில் நின்று கவனித்ததுண்டு.... (இறுதி வரியில் ஒளிந்திருக்கும் மகனைப் போல)

சென்னையில் இருக்கும்போது நண்டு தின்றிருக்கிறேன்... அப்போதே முகச்சுளிப்பு... இப்போது முழுவதும் சுளிப்பு... பிடிப்பதில்லை..

தொடர்கதையாக நீளும் ஒரு நினைவை இங்கே புகுத்தியுள்ளேன்.. என் அப்பா இதில் கவிதைநாயகன்.. தன் அப்பாவை இழந்துவிட்ட நினைவு நண்டுபிடிப்பதில் இருக்கிறது. அது இழக்காமலே எனக்கும்..

நன்றி ஆதி.

ஆதவா
07-12-2007, 09:51 AM
அட..இவ்ளோ கொடுமைக்காரரா நீங்க...
கவிதை நன்று..
காலங்கள் மாறினாலும்.. என்றும் நண்டு உடலுக்கு நல்லது தான்.

என்னைப் பற்றி தெரிந்துகொண்டே இப்படி கேட்கலாமா? :D :D

நன்றிங்க மதி

ஓவியன்
07-12-2007, 10:27 AM
வாழ்வில் பல விடயங்கள் இப்படித்தான் ஆதவா...

நன்மை, தீமை பற்றி ஆராயாது
முன்னோர் வழி நடக்கின்றோம்
விளைவுகளைப் பற்றியே சிந்திக்காமல்....

குட்டி நண்டுகள் பிறக்காமலே
இறக்கின்றன
ஒரு தந்தையின் தன் மகனுக்கான
உணவுத் தேடலில்........

வாழ்வியல் முரண் இது...!!

நண்டு சாப்பிட்டால் நம் உடலுக்கு நல்லது
ஆனால் நண்டுக்கு.....??!!

இது நண்டுக்கு மாத்திரமல்ல
வாழ்வியலில் பல்வேறிடங்களில்
கன கச்சிதமாகப் பொருந்தக் கூடியது...

பாராட்டுக்கள் ஆதவரே.......!!

jpl
07-12-2007, 10:47 AM
ஓடைப் பிரித்தால் காற்று புணர்ந்து
மாய்ந்து போகும் லட்சம் உயிர்கள்.
இறப்பதைக் கண்டால் மகிழ்ச்சி எனக்கு.

அப்பா சொல்வார்,
நண்டு உடலுக்கு நல்லதென்று

சொன்னவர் இங்கில்லை,

நண்டு வேட்டையில் இறங்குகிறேன்
என் அப்பாவைப் போலவே
காவேரிக் கரையில் முளைத்த நெப்பந்தஸ்(Nepenthes) போல் சரேலேன்று
வார்த்தைகள் நம் நினைவை இழுத்துக் கொள்கிறது.சொன்னவர் மாய்ந்த உணர்வைப் பெற்று தரும் கவி ஆதவா....

ஆதவா
07-12-2007, 10:56 AM
வாழ்வில் பல விடயங்கள் இப்படித்தான் ஆதவா...

நன்மை, தீமை பற்றி ஆராயாது
முன்னோர் வழி நடக்கின்றோம்
விளைவுகளைப் பற்றியே சிந்திக்காமல்....

குட்டி நண்டுகள் பிறக்காமலே
இறக்கின்றன
ஒரு தந்தையின் தன் மகனுக்கான
உணவுத் தேடலில்........

வாழ்வியல் முரண் இது...!!

நண்டு சாப்பிட்டால் நம் உடலுக்கு நல்லது
ஆனால் நண்டுக்கு.....??!!

இது நண்டுக்கு மாத்திரமல்ல
வாழ்வியலில் பல்வேறிடங்களில்
கன கச்சிதமாகப் பொருந்தக் கூடியது...

பாராட்டுக்கள் ஆதவரே.......!!

ஓவியரே உங்கள் பார்வை மிக அருமை...(ஆதவாவோட தோழனாச்சே:aetsch013:) ஆனால் நண்டுக்கு நல்லதா என்று ஆராய வேண்டியதில்லை.. ஏனெனில் அவை நமக்காக படைக்கப்பட்டவை.... முற்றிலும் அழிந்து போக வல்லவையல்ல...

உங்கள் வரிகள்... எனது கவிதையை அடக்கிவிட்டது....

ஆதவா
07-12-2007, 10:59 AM
காவேரிக் கரையில் முளைத்த நெப்பந்தஸ்(Nepenthes) போல் சரேலேன்று
வார்த்தைகள் நம் நினைவை இழுத்துக் கொள்கிறது.சொன்னவர் மாய்ந்த உணர்வைப் பெற்று தரும் கவி ஆதவா....

அம்மா, உங்களின் பின்னூட்டத்தை பெருமையாக கருதுகிறேன்....

எனது ஆக்கத்தின் பக்கத்தில் உங்கள் பார்வையை செலுத்தியமைக்கு நன்றி.....

(வெண்பாவில் பெண்பா (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13586) பாடியுள்ளேன். அருள்பாலிக்கவும்... .)

யவனிகா
07-12-2007, 11:29 AM
நண்டுக் கவிதை நன்று...மனித நண்டுகளை
என் செய்வது ஆதவா...

ஆதவா
07-12-2007, 11:31 AM
நண்டுக் கவிதை நன்று...மனித நண்டுகளை
என் செய்வது ஆதவா...

தின்பதொன்றே வழி...

நன்றிங்க யவனிஅக்கா..

சிவா.ஜி
08-12-2007, 04:15 AM
பார்வையாளனின் இந்தப் பார்வை அர்த்தம் பல உணர்த்துகிறது.மிக அருமையான பின்னூட்டங்களைப் படித்ததில் என்ன எழுதுவதென்று தெரியாமல்...வாழ்த்துகளும்...பாராட்டுகளும் ஆதவா.

ஷீ-நிசி
08-12-2007, 04:37 AM
சென்னையில் இருக்கும்போது நண்டு தின்றிருக்கிறேன்... அப்போதே முகச்சுளிப்பு... இப்போது முழுவதும் சுளிப்பு... பிடிப்பதில்லை..

சிறுவயது நினைவுகள் மிக அழகாய்...

சரி! அதென்ன முகச்சுளிப்பு.. நண்டு ரொம்ப நல்லாருக்குமே பா..

உமக்கு சுளிப்பு... எனக்கு நண்டென்றால் வாயெல்லாம் இளிப்பு..:D
எனக்கு ஏற்படவேயில்லை சலிப்பு..

அதிலும் பழவேற்காடு நண்டு என்றால் அது ஒரு தனிசுவை..

நண்டு செய்யறவிதத்துல செய்து, சாப்பிடறவிதத்துல சாப்பிட்டா சும்மா சூப்பரா இருக்கும்.. நீ வா மாமே! ஒரு நாள் தண்டையார்பேட்டை... எங்கம்மா கையால சாப்பிட்டுப் பாரு!
:icon_b:
அதோட நண்டுன்னா உனக்கும் ரொம்ப புடிக்க ஆரம்பிச்சிரும். :)

யவனிகா
08-12-2007, 05:09 AM
நண்டு செய்யறவிதத்துல செய்து, சாப்பிடறவிதத்துல சாப்பிட்டா சும்மா சூப்பரா இருக்கும்.. நீ வா மாமே! ஒரு நாள் தண்டையார்பேட்டை... எங்கம்மா கையால சாப்பிட்டுப் பாரு!
:icon_b:
அதோட நண்டுன்னா உனக்கும் ரொம்ப புடிக்க ஆரம்பிச்சிரும். :)

எல்லாம் செஞ்சு பிளேட்ல வெச்சு இந்தா மவனே சாப்பிடு கண்ணுன்னு நீட்டினா நல்லாத்தான் இருக்கும்....
அடுத்த முறை அம்மா நண்டு வைக்கும் போது நீங்க கழுவி, கிளீன் பண்ணிக் குடுங்க...சாப்பிடும் போது உங்களுக்கும் கட்டாயம் சுளிப்பு வரும்...

ஷீ-நிசி
08-12-2007, 10:48 AM

எங்க அம்மாவுக்கும் நண்டுன்னா ரொம்ப பிடிக்கும். :)

ஆதவா
08-12-2007, 11:18 AM
பார்வையாளனின் இந்தப் பார்வை அர்த்தம் பல உணர்த்துகிறது.மிக அருமையான பின்னூட்டங்களைப் படித்ததில் என்ன எழுதுவதென்று தெரியாமல்...வாழ்த்துகளும்...பாராட்டுகளும் ஆதவா.

மிக்க நன்றி அண்ணா.... உங்கள் வாழ்த்துகளுக்கு...

சிறுவயது நினைவுகள் மிக அழகாய்...

சரி! அதென்ன முகச்சுளிப்பு.. நண்டு ரொம்ப நல்லாருக்குமே பா..

உமக்கு சுளிப்பு... எனக்கு நண்டென்றால் வாயெல்லாம் இளிப்பு..:D
எனக்கு ஏற்படவேயில்லை சலிப்பு..

அதிலும் பழவேற்காடு நண்டு என்றால் அது ஒரு தனிசுவை..

நண்டு செய்யறவிதத்துல செய்து, சாப்பிடறவிதத்துல சாப்பிட்டா சும்மா சூப்பரா இருக்கும்.. நீ வா மாமே! ஒரு நாள் தண்டையார்பேட்டை... எங்கம்மா கையால சாப்பிட்டுப் பாரு!
:icon_b:
அதோட நண்டுன்னா உனக்கும் ரொம்ப புடிக்க ஆரம்பிச்சிரும். :)

எல்லாம் சரிதான் மாமே! கவிதையைப் பத்தி ஒண்ணும் சொல்லவே இல்லை....

நன்றி கபாலி...:D

ஷீ-நிசி
08-12-2007, 11:36 AM
Originally Posted by ஷீ-நிசி
சிறுவயது நினைவுகள் மிக அழகாய்...

சரி! அதென்ன முகச்சுளிப்பு.. நண்டு ரொம்ப நல்லாருக்குமே பா..

உமக்கு சுளிப்பு... எனக்கு நண்டென்றால் வாயெல்லாம் இளிப்பு..
எனக்கு ஏற்படவேயில்லை சலிப்பு..

அதிலும் பழவேற்காடு நண்டு என்றால் அது ஒரு தனிசுவை..

நண்டு செய்யறவிதத்துல செய்து, சாப்பிடறவிதத்துல சாப்பிட்டா சும்மா சூப்பரா இருக்கும்.. நீ வா மாமே! ஒரு நாள் தண்டையார்பேட்டை... எங்கம்மா கையால சாப்பிட்டுப் பாரு!

அதோட நண்டுன்னா உனக்கும் ரொம்ப புடிக்க ஆரம்பிச்சிரும்.

எல்லாம் சரிதான் மாமே! கவிதையைப் பத்தி ஒண்ணும் சொல்லவே இல்லை....

நன்றி கபாலி...:D