PDA

View Full Version : வீர்சிங்கின் நேர்முக தேர்வு !!!



mania
26-06-2003, 05:37 AM
வீர்சிங் ஒரு வேலைக்காக ஒரு நேர்முக தேர்வுக்கு போயிருந்தார். அதிகாரி அவரிடம் சில வார்தைகள் சொல்லி
அவைகளுக்கு எதிர்சொல் கேட்டார். கேள்விகளும் பதிலும் இதோ
அதிகாரி :முன்னாடி
வீர்சிங் : பின்னாடி
அதி :மேலே
வீர் : கீழே
அதி :இடது
வீர் : வலது
அதி :சைவம்
வீர் : அசைவம்
அதி :அசிங்கம்
வீர் ; (கொஞ்சம் யோசித்துவிட்டு ) சிங்கம்
அதி : நீ தப்பு
வீர் : நான் சரி
அதி : சரி போதும்
வீர் : தப்பு போதாது
அதி (பொறுமை இழந்து) : ஊமை முட்டாளே
வீர் : பேசும் புத்திசாலியே
அதி : தயவு செய்து நிறுத்தறயா
வீர் : தயவு செய்து தொடருகிறாயா
அதி(வெறுத்துப்போய்) : வாயைமூடு
வீர் :வாயைத்திற
அதி :என்னைக்கொல்றயே
வீர் : உன்னை காப்பாத்தறேனே
அதி (கோபமாக) :உன்னை நிராகரித்துவிட்டேன், உனக்கு வேலை கிடைக்காது
வீர் (சந்தோஷமாக குதித்துக்கொண்டே) :நான் ஒத்துக்கொள்ளப்பட்டேன். எனக்கு வேலை கிடைக்கும் ???!!!

மணியா

பாரதி
26-06-2003, 09:47 AM
ஹஹஹஹஹா.....

gankrish
26-06-2003, 11:14 AM
சூப்பரப்

தஞ்சை தமிழன்
26-06-2003, 11:55 AM
மணியாவின் சிந்தனை ரசிக்கதக்கது.

poo
26-06-2003, 06:10 PM
மண்டைகாயவைக்கும் மணியா... நீ வாழ்க!!!

suma
26-06-2003, 08:20 PM
மண்டைகாயவைக்கும் மணியா... நீ வாழ்க!!!

விகடன்
11-08-2007, 09:32 AM
வீர்சிங்கின் நேர்முக தேர்வு !!!

--------------------------------------------------------------------------------



அன்றுதான் அதிகாரி எதிர்பார்த்த எதிர் மறையான விடைகளாக இருக்கும் .