PDA

View Full Version : பழைய சோறு



பகுருதீன்
07-12-2007, 08:26 AM
அறு சுவை உணவுகள் ஆயிரம் உண்டேன்
ஆயிரம் பொன் கொடுத்து அமிர்தம் கூட தின்றேன்
உயர்தர உணவகத்தில் வெள்ளி தட்டு உண்டு
உட்கார்ந்து சாப்பிட குளிர்ந்த அறை உண்டு
இத்தனையும் ஈடாகவில்லை தாயே
உன் வியர்வை பட்டு உப்பேறிய
ஒரு பிடி நீர்ச் சோற்றுக்கு

ஆதி
07-12-2007, 08:35 AM
அறு சுவை உணவுகள் ஆயிரம் உண்டேன்
ஆயிரம் பொன் கொடுத்து அமிர்தம் கூட தின்றேன்
உயர்தர உணவகத்தில் வெள்ளி தட்டு உண்டு
உட்கார்ந்து சாப்பிட குளிர்ந்த அறை உண்டு
இத்தனையும் ஈடாகவில்லை தாயே
உன் வியர்வை பட்டு உப்பேறிய
ஒரு பிடி நீர்ச் சோற்றுக்கு

ஈற்றிலுள்ள இருவரிகளும் இதயத்தை உருகவைத்தன..

தாயின் கைவிரல் பட்டச்சோற்றின் சுவை தாய்ப்பாலுக்கு அடுதபடியாய் அடையமுடியா அமுதம்..

நல்ல பொருள் பொதிந்த கவிதை.. சொற்களில் கருமிதனமும், கருத்தில் வள்ளல்குணமும் இருந்தாலே சிறந்த கவிதை..

வார்த்தைகளை சொஞ்சம் சிக்கனமாய் பயன்படுத்தலாமோ ?

தலைப்பே கவிதைப் போலதான் தோன்றியது எனக்கு..

நல்ல கவிதை, நல்ல கருத்து.. வாழ்த்துக்கள் பஹுருதின்..

தாய்ச்சிறப்பை வைத்து நீங்கள் மன்றத்தில் பதித்த இரண்டாம் கவிதை என நினைக்கிறேன்..

-ஆதி

ஆதவா
07-12-2007, 09:00 AM
ஆதி சொன்னதைப் போலவே, இறுதி வரிகள்..... தாயிடம் உணவுண்பது என்பது சில காலங்கள் வரை நமக்குக் கிடைக்கும் வரம், அதாவது தற்காலிக வரம்... (மனைவியை தாயாகப் பார்க்கும் கூட்டம் நாங்கள். இருதாய் உலகம் என்னுலகம் .)

தாயிற் சிறந்ததொரு
கோயிலுமில்லை.

கடவுளின் உப்பைத் தின்பது இனிக்குமே அன்றி கசக்காது. அருமையான கவிதை பகுருதீன்.... நேரம் கிடைத்தால் தாய்-சோறு பற்றி ஒரு கவிதை எழுதிவைத்தேன்... படித்துப் பாருங்கள்... (உங்கள் கருவிலிருந்து சற்று மாறுதலாக..)

மறந்துவிட்டதாய் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9470)

jpl
07-12-2007, 09:05 AM
இத்தனையும் ஈடாகவில்லை தாயே
உன் வியர்வை பட்டு உப்பேறிய
ஒரு பிடி நீர்ச் சோற்றுக்கு
தாய்மையை போற்றாத கவிகளே இல்லை.
அதில் ஒரு கோணம்.நன்றே பஹுருதீன்...

ஓவியன்
07-12-2007, 09:13 AM
உண்ணப்படும் உணவின் ருசி பெரும்பாலும் உணவில் தங்கியிருப்பதில்லை...
மாறாக உணவு சமைத்த இடம்...
சாப்பிடும் நேரம், சூழல் போன்றவற்றிலேயே தங்கியுள்ளது....

பஹூரூதீன்..!!

உங்கள் கவிக்கரு அப்படியே இன்னொரு படைப்பாளிக்கும் ஏற்கனவே உதித்துள்ளது பாருங்களேன்...

"ஆயிரம் உணவுகள் அறுசுவை உடன் உண்டாலும் .ஆயிரம் பொன் கொடுத்து அமிர்தமே வாங்கி தின்றாலும் . அவை அனைத்தும் நீ கரைத்து கொடுத்த பழைய சாதத்திற்கு இணையாக வில்லை தாயே.

http://www.andhimazhai.com/kavithai/viewmorekavithai.php?id=996

என்றும் மறவாத பழைய சாதம் + வெங்காயம் "