PDA

View Full Version : 2007 முடிவுக்குள் wordpressஐத் தமிழாக்குவோம்



மயூ
07-12-2007, 08:24 AM
அன்பு நண்பர்களே,

//இன்று வலைப்பதிவு வைத்திருக்கும் 99.9% பேர் ஆங்கிலம் தெரிந்ததால் வலைப்பதிவு வைத்திருக்கிறார்கள் என்பது என் கருத்து. வாழ்க தமிழ்.//

என்று ஒரு எகத்தாளமான கருத்து இட்லிவடைப் பதிவில் http://idlyvadai.blogspot.com/2007/12/blog-post_1600.html கண்டு செமக்கடுப்பாகி இந்த ஆண்டு இறுதிக்குள் wordpressத் தமிழாக்கியே தீருவது என்று களத்தில் குதித்து இருக்கிறேன். கடந்த ஒரு வாரத்தில் 700 சரங்களைத் தமிழாக்கி உள்ளேன். இன்னும் 2200 சரங்கள் உள்ளன. அண்மையில் மயூரேசனும் களத்தில் குதித்து இருக்கிறார்:)

தமிழ்ப்பதிவுலகம், தமிழ்ப்பதிவுலகம் என்று நிறைய பேசிக் கொண்டே இருக்கிறோம்..ஆனால், ஆக்கப்பூர்வமான செயல்கள் குறைவு தான்..இதைத் தமிழாக்கி முடிப்பது உருப்படியான ஒரு பணியாக இருக்கும்..தமிழ் மட்டும் அறிந்த பல தமிழர்களை வலைப்பதிய வைக்கும்..அதுவும் இல்லாமல் நம் பண்பாட்டுக்கு ஏற்ற சொல்லாடல் உள்ள இடைமுகப்பப்பை உருவாக்குவது இனிமையாக இருக்கும் தானே..

எப்படி செய்வது?

http://translate.wordpress.com/ சென்று பயனர் கணக்கு உருவாக்கி மொழிபெயர்ப்பு மொழியாகத் தமிழைத் தேர்ந்தெடுங்கள்.

http://translate.wordpress.com/list.php போய் மேலிருந்து கீழாக்க ஒவ்வொரு சரமாக மொழிபெயர்க்கலாம். edit என்ற குறிப்பிடப்பட்டிருப்பவை ஏற்கனவே தமிழாக்கப்பட்டு விட்டது. அவற்றை விட்டு விடலாம். இல்லை, சரியாக தமிழாக்கப்பட்டிருக்கிறா என்று உறுதி செய்யலாம். add இணைப்பு உள்ளவை இன்னும் தமிழாக்கப்படாமல் இருப்பவை.

தெளிவில்லாத சரங்களை அப்படியே விட்டுவிடுங்கள். வேறு யாராவது தமிழாக்கலாம். சரத்தில் ஓரிரு சொற்கள் மட்டும் தெரியவில்லை என்றால் அவற்றை அப்படியே ஆங்கிலச் சொற்களாக ஆங்கில எழுத்திலேயே எழுதி விடுங்கள். விவரம் தெரிந்த வேறு எவரும் தமிழாக்கலாம். ஐயங்கள், விளக்கங்களை comment பகுதியில் தந்தது உரையாடுங்கள். பொதுவான உரையாடல்களுக்கு, நம்முடையே ஆன ஒருங்கிணைப்புக்கு http://groups.google.com/group/tamil_wordpress_translation குழுமத்தில் இணையலாம்.

தளம் முழுக்க ஒரே மாதிரி சொல்லாடல் இருப்பது முக்கியம்..இதுவரை நான் பயன்படுத்திய பொதுவான சொல்லாடல்க்களும் என் பரிந்துரைகளும்..

blog - பதிவு (most of the places, to be short)..வலைப்பதிவு (when we need to be more formal)

post - இடுகை

comment - மறுமொழி

category - பகுப்பு

tag - குறிச்சொல்

wordpress - வேர்ட்ப்ரெஸ

link - தொடுப்பு

user - பயனர்

logout (verb) - வெளியேறுக

login (noun) - புகுபதிகை

edit - திருத்துக

role - பொறுப்பு

நினைவு வரும்போது பிற சொற்களையும் தமிழாக்கக் குழுமத்தில் தெரிவிக்கிறேன்.

கவனத்தில் வைக்க வேண்டிய இன்னும் சில - நம் பண்பாட்டுக்கு ஏற்ப வினைச்சொற்களை மரியாதை விகுதிகளுடன் எழுதலாம். எடுத்துக்காட்டுக்கு, தேடு என்பதற்குப் பதில் தேடுக என்று தமிழாக்கலாம். இன்னொன்று நேர்மறையாக தமிழாக்குவது. எடுத்துக்காட்டுக்கு, delete userஐ பயனரை அழிக்கவும் என்று சொல்லாமல் பயனரை நீக்கவும் என்று தமிழாக்குவது..அழிப்பது என்பது நமது பண்பாட்டில் கடுமையான சொல்லாடல் தானே..

நீங்கள் குறைந்தது இவ்வளவு சரங்கள் தமிழாக்க வேண்டும் என்று ஒரு கட்டாயமும் இல்லை. உங்களால் இயன்றைச் செய்யலாம். ஒரு நிமிடத்துக்கு இரண்டு சரங்கள் என்ற வேகத்தில் தமிழாக்குவது பெரும்பாலும் சாத்தியமே..

எவ்வளவே பண்ணிட்டோம்..இதைப் பண்ண மாட்டமா :)

அன்புடன்
ரவி



தமிழ் வேர்ட்பிரஸ் மடலாடற் குழுவில் நடந்த உரையாடல் ஒன்று.......!! அதிரடியாக இந்தத் திட்டத்தை நிறைவேற்ற மன்றத்து தமிழ் ஆர்வலர்களையும் அழைக்கின்றேன்!!!!

leomohan
07-12-2007, 08:34 AM
அருமையான முயற்சி மயூ. வாழ்த்துகள். நேரம் கிடைக்கும்போதெல்லாம் நானும் இறங்கிவிடுகிறேன்.

பிச்சி
07-12-2007, 08:46 AM
என்னால் முடிந்த பங்களிப்பை செய்குவேன்..

அன்பு
பிச்சி

ஜெயாஸ்தா
07-12-2007, 10:01 AM
நல்ல பயனுள்ள முயற்சி...... நானும் உங்களோடு இணைந்து என்னால் முடிந்ததை செய்கிறேன். ஆங்கிலம் தெரியவில்லை என்று இறந்த விதுவுக்காக வருந்துகிறேன்.

மயூ
07-12-2007, 01:33 PM
மே மாதம் குழுமம் தொடங்கிச் சுணங்கிக் கிடந்தது. நவம்பர் இறுதியில் 300 சரங்கள் தமிழாக்கத்தில் இருந்து இரு நாட்கள் முன்னர் 950+ கொண்டு வர முடிந்திருந்தது. கடந்த ஓரிரு நாள் பாய்ச்சலில் இப்ப 1375+ சரங்கள் தமிழாக்கி இருக்கிறோம் :).

நினைவுக்கு வரும் சில சொற் பரிந்துரைகள்:

blogroll - பதிவுப் பட்டியல்

password - கடவுச்சொல்

update - இற்றைப்படுத்துக (வினைச்சொல்), இற்றைப்பாடு (பெயர்ச்சொல்)

upgrade க்கு யாராவது சொல் பரிந்துரை செய்தால் நலம்..

manage - மேலாண்மை, மேலாள்க

admin - மேலாளர்

options - தெரிவுகள்

optional - விரும்பினால்

domain - ஆட்களம்

custom - தன் விருப்ப

error - பிழை

bug - வழு

activate - முடுக்கு

deactivate - முடக்கு

plugin - நீட்சி

theme - வார்ப்புரு

align - ஓரங்கட்டுக

justify - பரப்புக

spam - எரிதம்

privacy - தகவல் பாதுகாப்பு

private - இது போன்ற சொற்களை ஒற்றைச் சொல்லில் தமிழாக்க முயல அவசியமில்லை. இதை - என் பார்வைக்கு மட்டும் - என்று தமிழாக்கி இருக்கிறேன்.

ping - பிங் .

approve - ஏற்க

archives - தொகுப்புகள்

author - பதிவர்

image - படிமம்

upload - பதிவேற்றம்

import - இறக்குக, இறக்குமதி

export - ஏற்றுக, ஏற்றுமதி

parent category - தாய்ப் பகுப்பு

dashboard - கட்டுப்பாட்டகம்

default - இயல்பிருப்பு

draft - வரைவு

excerpt - துணுக்கு

header - தலைப்பகுதி

footer - அடிப்பகுதி

home - முகப்பு

server - வழங்கி

character - வரியுரு

sidebar - பக்கப்பட்டை

மேலும் சில குறிப்புகள்:

%s, raquo போன்ற சரங்கள் நிரலாக்கக் கட்டளைகள். அவற்றை அப்படியே விட்டு விடுங்கள்.

வேர்ட்ப்ரெஸ் காரர்கள் ஆங்கிலத்தில் விளையாட்டுத்தனமாக சில இடங்களில் எழுதி இருப்பார்கள். அந்தத் தொனியையும் இளக்கத்தன்மையையும் நாமும் பின்பற்றுவது நலம்..இறுக்கமான தமிழாக்கமாக இல்லாமல் கலகலப்பான நட்புணர்வு கூடிய தமிழாக்கமாக இருப்பது நலம்.

சொல்லுக்குச் சொல், ஆங்கில இலக்கண அடிப்படையில் தமிழாக்கினால் தமிழ் நடையில் செயற்கையான நடை வந்துவிடும். ஆங்கிலச் சொற்றொடரைப் படித்துப் புரிந்து கருத்தை மனதில் இருத்தித் தமிழாக்கினால் போதுமானது. dubbing திரைப்படம் போல் ஆகி விடக்கூடாது.

ஆங்கிலத்தில் பெரும்பாலும் செயப்பாட்டு வினை (passive voice) பயன்படும். தமிழில் செய்வினை தான் அதிகம். இதைக் கருத்தில் கொண்டு இயன்றவரை
செய்வினை அடிப்படையில் எழுதலாம்.

நன்றி:ரவிசங்கர்

பாரதி
07-12-2007, 01:45 PM
நல்லது மயூ! உங்களையும் மற்றவர்களையும் தூண்டிய இட்லி வடைக்கு நன்றி சொல்லித்தான் ஆக வேண்டும் போலும்! இயன்ற அளவில் நானும் பங்களிக்க முயல்கிறேன். நன்றி.

அறிஞர்
07-12-2007, 01:54 PM
நல்ல முயற்சி நண்பா... வாழ்த்துக்கள்...

அங்கு... நம்மவர்கள் பலர் விளையாட்டுதனமாக பதிந்து தவறுகளை உருவாக்கியிருக்கிறார்களே.. அதை எப்படி நீக்குவது...

மயூ
07-12-2007, 02:55 PM
நல்ல முயற்சி நண்பா... வாழ்த்துக்கள்...

அங்கு... நம்மவர்கள் பலர் விளையாட்டுதனமாக பதிந்து தவறுகளை உருவாக்கியிருக்கிறார்களே.. அதை எப்படி நீக்குவது...

அறிஞரே அவற்றை கடைசியிலல் திருத்துவேவாம்.. எப்படியும் முழுவதும் முடிந்தபின்னர் ஒரு குப்பை களைதல் நிகழ்ச்சித்திட்டம் போடவேண்டும்!!! :) நீங்கள் புதிதாக எழுதத் தொடங்குங்கள்!!!

சிறுதுளி பெருவெள்ளம் என்பதை ஞாபகப்படுத்துகின்றேன்.

சாம்பவி
07-12-2007, 05:59 PM
upgrade க்கு யாராவது சொல் பரிந்துரை செய்தால் நலம்..



upgrade − மேம்படுத்துக... !

சிவா.ஜி
08-12-2007, 08:17 AM
மிக மிக நல்ல முயற்சி...தேவையானதொரு சேவை.ஈடுபட்டுள்ளோருக்கும்,ஈடுபடுவோருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.

சூரியன்
08-12-2007, 03:11 PM
நண்பரே நானும் இதில் இனைந்துகொள்கிறேன்..

மயூ
08-12-2007, 03:13 PM
நண்பரே நானும் இதில் இனைந்துகொள்கிறேன்..

சந்தேகம் இருந்தால் அந்த மடலாடற் குழுவில் வினாவி தெரிந்து கொள்ளுங்கள்.... கலக்குவொம் வாருங்கள் சூரியன்!!! :)

சூரியன்
08-12-2007, 03:16 PM
சந்தேகம் இருந்தால் அந்த மடலாடற் குழுவில் வினாவி தெரிந்து கொள்ளுங்கள்.... கலக்குவொம் வாருங்கள் சூரியன்!!! :)

சரி நண்பரே.

மயூ
11-12-2007, 05:43 AM
http://translate.wordpress.com/rankings.php

மொழிபெயர்ப்பு பிந்தய நிலவரத்தை இங்கே காணவும். தமிழ் இப்போது 6ம் இடத்தில் உள்ளது. ஜப்பானிய மொழியைக் கூட மொழிபெயர்ப்பில் முந்திவிட்டோம்... அனைவருக்கும் வாழ்த்துக்கள் இன்னமும் சில 300 சரங்களே மொழிபெயர்க்கப்பட வேண்டியுள்ளது...

தமிழன் மனம் வைத்தால் எதையும் சாதிப்பான் என்பதற்கு இது நல்ல உதாரணம்... வாழ்க தமிழ்... !

விரைவில் wordpress.com தமிழில் கிடைக்கப் போகின்றது!!! :)
அன்புடன்,
மயூரேசன்