PDA

View Full Version : வெட்டி பந்தா - 2



நுரையீரல்
06-12-2007, 01:06 PM
வெட்டி பந்தா - பாகம் 1

இளமையில் வறுமை கொடிது!

தமிழகத்தில், கொங்கு மாநகரத்தின் மையத்தில், ஏழைத்தம்பதிகளின் பத்தாவது குழந்தையாகப் பிறந்தவன் தான் நான்.

பத்தாவதாகப் பிறந்ததால் என்னவோ! வயிற்றுக்கு சோறு மட்டும் என்றுமே பத்தாது. இம்மாதிரி சூழ்நிலையில் தான், அன்றைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களால், அனைத்துப் பள்ளிகளிலும் கட்டாய மதிய உணவுத்திட்டம் கொண்டு வரப்பட்டது.

படிப்பிற்காக பள்ளி செல்வதைவிட, வயிற்றுக்காக பள்ளி செல்லும் குழந்தைகளின் சேர்க்கை அதிகமாயிற்று. அந்த எண்ணிக்கையில் நானும் ஒருவன். இலவசமாக கிடைக்கும் சத்துணவில் அசைவம் இல்லாட்டியும், அந்த உணவில் இருக்கும் ஒருசில புழுக்களை உண்பதனால் என் உடலில் கொழுப்பும் (Not Cholesterol) சேர ஆரம்பித்தது.

நான் ஒரு ஏழை என்பதனையும் மறந்து, பணக்கார மற்றும் நடுத்தர வர்க்க மாணாக்கர்களின் சேக்காளிகளாக மாறினேன். பள்ளி இடைவேளையில் அவர்கள் வாங்கித்தரும் ஜவ்வுமிட்டாய் மற்றும் கம்மரக்கட்டுகளுக்காகவும் அவர்களின் அன்புக்குரிய பணியாளனுமாக ஆகினேன்.

பள்ளியில் இருக்கும் காலங்களில் படிப்பில் கவனம் செலுத்துவதைக் காட்டிலும், மற்ற மாணாக்கர்களுக்கும் எனக்கும் உள்ள வேறுபாட்டினை ஒப்பிடுவதிலேயே அதிகக் கவனம் செலுத்தினேன்.

எனது ஏழ்மையை மறைக்க மிகவும் உதவியது எனது வாயும் நான் அடிக்கும் வெட்டி பந்தாவும் தான். காரணமும் இருக்கிறதே − நான் விடும் வெட்டி உடான்ஸ்களை நம்பியே, என்னை நண்பனாக அவர்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்று தவறாக எண்ணியிருந்தேன். அவ்வாறு நான் விட்ட பொய்யான பந்தாக்களில், மிகச் சிறந்த ஒன்றை தங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

அப்போது நான் கல்லூரிப் படிப்பு படித்துக் கொண்டிருந்தேன். நான் படித்த காலத்தில் மிகக் குறைந்த அளவு பாக்கெட் மணி கொண்டு போன கல்லூரி மாணவன் நானாகத்தானிருக்கும்.

குறைகள் இல்லாத மனிதேனே இல்லை என்பதால், என் குறைகளை நினைத்து என்றுமே வருந்தியதுமில்லை. என் தகுதிக்கு என்ன செய்ய முடியுமோ அந்தளவுக்கு ரவுசுகளையும் செய்து கொண்டு தானிருந்தேன். நீங்களே சொல்லுங்களேன், எவனாவது நாலணாக் காசுக்கு மணிப்பருசு வைத்திருப்பானா?

தட்டித் தடுமாறி கல்லூரிக்குள் வந்தாலும், மிகப்பெரிய தொகை கொடுத்து கைக்கடங்காத கட்டிப் புத்தகங்களை வாங்குமளவுக்கு பொருளாதாரம் இடம் தரவில்லை. இருந்தாலும் பணக்கார மாணவர்கள் படித்துவிட்டு டாய்லெட் செல்லும்போதோ (அ) அவர்கள் உறங்கும் போதோ அவர்களது புத்தகத்தை இரவல் வாங்கி ஓரளவுக்குப் படித்தேன், இரண்டாம் வகுப்பிலும் தேர்ந்தேன் - அது வேற கதை.

சிகரெட் வாங்குவதற்கு காசில்லாவிட்டாலும், நண்பர்கள் பிடிக்கும் கடைசிக் கால் பாக சிகரெட் அடிக்கும் பாக்கியத்தை எனக்குத் தந்தார்கள் என் இனிய நண்பர்கள். அதுவும் கலெக்சன் டிக்கெட் என்று என்னை நொந்து கொண்டே தருவார்கள்.

" யு நோ, லாஸ்ட் பஃப் ஆஃப் தி சிகரெட் இஸ் ஈகுவல் டு ஃபர்ஸ்ட் கிஸ் வித் லேடி" என்று பந்தா விட்டுக் கொண்டே அந்த எச்சில் சிகரெட்டையும் பிடிப்பேன். நண்பர்களெல்லாம் சேர்ந்து அடிக்கும் ஒரே சிகரெட்டின் புகைக்கு தனி கௌரவம் இருக்கிறது என்பது வேறு கதை.

பல்வேறு துறைகளைக் கொண்ட ஆண்−பெண் இருபாலர் படிக்கும் கல்லூரி தான் எங்கள் கல்லூரி. விஜய், கிஷோர் மற்றும் நான் மூவரும் வேறு, வேறு துறைகளில் படிப்பவர்கள். ஆனால், மூவரும் சேரும் இடம் எங்களது காதலிகள் படிக்கும் வேறொரு துறை.

தினமும் மதிய இடைவெளிகளில் அங்கே போய் சேர்ந்து விடுவோம். நாங்கள் மூவரும் எங்கள் காதலிகள் சாப்பிடும் அழகைப் பார்த்து ரசித்துக் கொண்டிருப்போம். இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், மூவருக்கும் அந்தக் காதலிகள் கொடுத்த சமபங்கு அல்வா தான்.

அல்வா வாங்கினாலும், எங்களுக்குள்ள நட்பின் அளவு கூடியதே தவிர குறையவில்லை. ஆமாம், இப்போது மூன்று பேரும் சேர்ந்து வேறொரு கல்லூரியில் படிக்கும் சிட்டுகளுக்கல்லவா பிட்டு போட்டுக் கொண்டிருக்கிறோம்.

இதில் விஜய் − ஒரு பிரபல நகைக்கடை உரிமையாளரின் மகன். கிஷோர் − ஒரு போலிஸ் உயரதிகாரியின் மகன். நான் − ஓட்டாண்டி. என்னுடைய பொருளாதார நிலைமையை நன்கு அறிந்தவர்கள் தான் விஜய்யும், கிஷோரும்.

அவர்கள் என்றுமே என்னை ஏழையாகப் பார்த்ததில்லை, நல்ல நண்பனாகத் தான் பார்த்தார்கள். நானோ அவர்களை நண்பனாக நினைப்பதைவிட, பணக்கார நண்பர்களின் நட்பு எனக்கு ஒரு கௌரவம் என்னும் போக்கிலேயே பழகிக் கொண்டிருந்தேன். என்னுடைய ஏழ்மையை நினைத்தும் புழுங்கிக் கொண்டிருந்தேன்.

கூத்தும், கும்மாளமும் அடித்துக் கொண்டிருக்கும் எனது கல்லூரி வாழ்க்கை சமயத்தில் − மானத்தை வாங்கும் மலேரியா வந்தது. அதனால் கல்லூரிக்கு ஓரிரு வாரங்கள் செல்ல முடியவில்லை.

விஜய்யும், கிஷோரும் என்னைக் காணாமல் துடித்தார்கள். என் பற்றிய எந்த விபரமும் அவர்களுக்குத் தெரியாது. தெரிவிக்கப்படக்கூடாது என்ற வைராக்கியத்தில் இருந்தேன். காரணம் − அரசு பொது மருத்துவமனையில் இரண்டு வார ஆஸ்பத்திரி வாசத்திற்கு என்னை ஆளாக்கியது மலேரியா.

அரசு மருத்துவமனையில் சிகிச்சையெடுப்பது அவர்களுக்குத் தெரிந்தால் மானம் போய்விடுமோ என்று பயந்து, அவர்களுக்கு நானே போன் செய்தேன்.

எனக்கு மலேரியா வந்திருப்பதால், இரண்டு வாரம் ஆஸ்பத்திரியில் இருக்க வேண்டும் என்று டாக்டர்கள் கூறியதாக அவர்களிடம் கூறினேன்.

"எந்த ஆஸ்பத்தியில் அட்மிட் செய்திருக்கிறார்கள்" என்று அவர்கள் கேட்டதற்கு... நகரில் இருக்கும் ஒரு பெரிய தனியார் மருத்துவமனையின் பெயரைச் சொல்லிவிட்டு போனை துண்டித்துவிட்டேன்.

அது மலேரியா காய்ச்சல் சீசன் என்பதால், ஆண் நோயாளிகளுக்கான வார்டில் உள்ள கட்டில்கள் எல்லாம் நிறைந்து, தரையில் ஒரு ஓலைப்பாயை போட்டு நோயாளிகளைப் படுக்க வைத்திருந்தார்கள். நானும் ஒரு ஓலைப்பாய் நோயாளி தான்.

இதற்கிடையில், நான் குறிப்பிட்ட தனியார் மருத்துவமனைக்கு என் நண்பர்கள் குழு படையெடுத்தது. அங்கு விசாரித்ததில் என்னைப் பற்றிய எந்த விபரமும் கிட்டவில்லை, உடனே எனது வீட்டிற்குப் போயிருக்கிறார்கள். வீட்டில் கிடைத்த தகவலின் அடிப்படையில், என்னைத் தேடி பொதுமருத்துவமனைக்கே வந்துவிட்டார்கள்.

அவர்கள் வந்த சமயம், டாய்லெட்டுக்கு அருகிலுள்ள இடத்தில் ஓரமாக ஒரு ஓலைப்பாயில் படுத்திருந்தேன். கரெண்ட் வேறு போயிருந்தது. நண்பர்கள் ஒவ்வொரு கட்டிலாக பார்த்துவிட்டு, என்னைக் காணாமல் திரும்பி போய்க் கொண்டிருந்த வேளையில்,

"ஏப்பா.. விஜய், கிஷோரு இங்க பாரு... நாங்க இங்க இருக்கோம்.." என்று அம்மா அவர்களைக் கூப்பிட, என் மானம் கப்பலேறி தொலை தூரம் சென்று கொண்டிருந்தது.

(தொடரும்)


பாகம் 2 (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=308789&postcount=49)

lolluvathiyar
06-12-2007, 01:19 PM
வாவ் ராஜா கதை வெளியில வர ஆரம்பிச்சிருச்சா, அருமையான ஸ்டார்டிங் தொடருங்கள்.
இந்த வெட்டி பந்தா உங்களுக்கு மட்டும் அல்ல, 90 சதவீதத்தினருக்கு இருக்கும் ஒரு சாதர்ன குணம், இது தான் வருங்காலத்தில் பலரின் ஏழ்மைக்கு காரனமாகி விடுகிறது என்று நான் கருதுகிறேன்.

நீங்க என்னதான் முக்கி முக்கி கதை எழுதினாலும் நான் 007 ல மாத்தி எழுதிடுவேனல*

தாமரை
06-12-2007, 01:26 PM
அய்யா, இது நிஜமாகவே வெட்டிப் பந்தாதான். மாதம் இருபது ரூபாய் மட்டுமே பாக்கெட் மணியாக வைத்துக் கொண்டு ஹாஸ்டலில் வாழந்தவந்தான் நானும்.. ஆனால் என் ஒவ்வொரு நண்பனும் அதை அறிந்திருந்தான். எனது காலில் நரம்பில் அடிபட்டு இரத்தம் பீறிட்ட பொதும், எனக்கு ரிவர்ஸ் மலேரியா (அதாவது மலேரியா மாதிரி.. ஆனால் மலேரியாவுக்கு அப்படியே உல்டா.. அது பகல்ல வந்தா இது ராத்திரியில் வரும்) வந்தபொதும் என் வீட்டிற்கே தெரியாது. நண்பர்கள் தான் பார்த்துக் கொண்டார்கள்..

நான் அவர்களுக்குத் திருப்பிக் கொடுத்ததும் உண்டு.. பாடம் சொல்லிக் கொடுப்பது, உடலுழைப்பில் உதவுவது என. கீரனூரில் எந்த ஹோட்டலிலும் என்னிடம் யாரும் பணம் கேட்க மாட்டார்கள்..

நண்பர்களிடம் வெட்டிப்பந்தா பண்ணின உம்மை வெட்டிப் போடணும்..

நுரையீரல்
06-12-2007, 02:27 PM
நண்பர்களிடம் வெட்டிப்பந்தா பண்ணின உம்மை வெட்டிப் போடணும்..
இது நீங்களாக சொல்வதா? இல்லை இதயம் 5,000 இபணம் தந்து சொல்லச் சொன்னதா?

இருந்தாலும் இந்தக் கொலைவேறி சற்று அதிகம் தான். யப்பா நம்மள போட்டு தள்ளுறதுக்குத் தான் எத்தனை கைகள்.

யவனிகா
06-12-2007, 03:23 PM
எனது வாயும் நான் அடிக்கும் வெட்டி பந்தாவும் தான். காரணமும் இருக்கிறதே − நான் விடும் வெட்டி உடான்ஸ்களை நம்பியே, என்னை நண்பனாக அவர்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் .

காதலனாக ஏற்றுக் கொண்டவர்களின் கண்ணீர்க் கதை பற்றித்தானே அடுத்தது எழுதப்போகிறீகள்....அதுசரி இப்ப உங்க பந்தா குறைஞ்சிருக்கா இல்லை கூடிருக்கா?

தாமரை
06-12-2007, 04:44 PM
இது நீங்களாக சொல்வதா? இல்லை இதயம் 5,000 இபணம் தந்து சொல்லச் சொன்னதா?

இருந்தாலும் இந்தக் கொலைவேறி சற்று அதிகம் தான். யப்பா நம்மள போட்டு தள்ளுறதுக்குத் தான் எத்தனை கைகள்.

இப்படி கூட சம்பாதிக்க வழி இருக்கா!

பூமகள்
06-12-2007, 04:50 PM
வெட்டி பந்தா விட்டதை இப்படி வெளிப்படையாய் சொல்லும் துணிவே பலருக்கு வராது. அந்த வகையில் உங்களைப் பாராட்டுகிறேன் ராஜா அண்ணா.

சில சம்பவங்கள் எங்கள் வீட்டின் நிலையைக் கூட நினைவு படுத்தியது. என் அண்ணாவின் அப்போதைய நிலை இன்னும் மறக்க முடியாமல் என் கண்கள் முன் விரிகிறது.

சிகரெட் தான் இடிக்கிறது.(நான் பயங்கரமா இதை எதிர்ப்பவள்).

மற்றபடி.. உங்களின் மனம் புரிகிறது.
உங்களின் துணை கொடுத்து வைத்தவர் தான். :)
உங்களின் கொசுக் கடியை எப்படித்தான் தாங்குகிறாரோ..!! ;)

தொடருங்கள்.
பாராட்டுகள் எஸ்.ராஜா அண்ணா.

அமரன்
06-12-2007, 05:02 PM
உள்ளதை உள்ளபடி சொன்ன ராஜாவைப் பாராட்டுகின்றேன். விரும்புகின்றேன்.
உள்ளத்தை பூட்டிவைத்து, வெட்டி பந்தா செய்த ராஜாவை வெறுக்கின்றேன்.
மனவாடைகள் விலகி, சுகிப்பது நட்பில் மட்டுமே என்று நம்புவதாலே இப்படி..

நுரையீரல்
06-12-2007, 05:13 PM
வெட்டி பந்தா விட்டதை இப்படி வெளிப்படையாய் சொல்லும் துணிவே பலருக்கு வராது. அந்த வகையில் உங்களைப் பாராட்டுகிறேன் ராஜா அண்ணா.
பாராட்டுக்கு நன்றிகள் தங்கையே... ஒருவன் வெட்டி பந்தா விடுவதற்குக் காரணம் - மற்றவர்களைவிட நாம் குறைந்திருக்கிறோம் என்று ஒப்பீடு செய்வதால் எழும் நிலையே. உண்மையில் யாரும், யாரையும்விட குறைந்தவருமில்லை, உயர்ந்தவருமில்லை. இதைப் புரிந்து கொண்டால், யாரும் வெட்டி பந்தா செய்யப்போவதுமில்லை.


சிகரெட் தான் இடிக்கிறது.(நான் பயங்கரமா இதை எதிர்ப்பவள்).
சிகரெட் பிடிப்பவர்கள் கூட ஆரம்பிக்கும் போது ஒரு வெட்டிப் பந்தாவுக்குத் தான் ஆரம்பிக்கின்றார்கள். நான் ஸ்டைலாக சிகரெட் பிடிக்கிறேன் என்று காட்டிக் கொள்ளவே செய்கின்றனர்.

நான் ஒரு செயின் ஸ்மோக்கர் கிடையாது. ஜஸ்ட் அக்கேஷனல் ஸ்மோக்கர். தங்கையின் அறிவுறைப்படி அதையும் தவிர்த்துவிடுவேன்.

பூமகள்
06-12-2007, 05:24 PM
உண்மையில் யாரும், யாரையும்விட குறைந்தவருமில்லை, உயர்ந்தவருமில்லை. இதைப் புரிந்து கொண்டால், யாரும் வெட்டி பந்தா செய்யப்போவதுமில்லை.
நிதர்சனம் அண்ணா.
உங்களின் விளக்கத்துக்கு நன்றிகள். :)

தங்கையின் அறிவுறைப்படி அதையும் தவிர்த்துவிடுவேன்.
இந்த அன்புத் தங்கைக்காக உங்களின் மனமாற்றம் அளவில்லா மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. இந்த வாக்கை காப்பீர்கள் என்று நம்புகிறேன்.

மிகுந்த நன்றிகள் ராஜா அண்ணா.

நுரையீரல்
06-12-2007, 05:27 PM
உள்ளதை உள்ளபடி சொன்ன ராஜாவைப் பாராட்டுகின்றேன். விரும்புகின்றேன்.
உள்ளதை உள்ளபடி சொல்பவரை விரும்பும் அன்பு நண்பர் அமரனுக்கு கோடி நமஸ்காரம்..


உள்ளத்தை பூட்டிவைத்து, வெட்டி பந்தா செய்த ராஜாவை வெறுக்கின்றேன்.
வெட்டி பந்தா செய்த முன்னால் ராஜாவை, இன்னாள் ராஜாவே வெறுக்கிறான் - அதன் வெளிப்பாடா இந்தத்திரி. வெட்டி பந்தா செய்த முன்னாள் ராஜாவை வெறுப்பதாக உண்மையைச் சொன்ன அமரனை நானும் மனதார விரும்புகிறேன். (ஹா, ஹா, ஹா, ஹா... இதெப்படியிருக்கு)


மனவாடைகள் விலகி, சுகிப்பது நட்பில் மட்டுமே என்று நம்புவதாலே இப்படி..
காதலுக்கு கண்ணில்லை என்பார்கள். ஆனால் தற்போதெல்லாம் தகுதி பார்த்து வருவது தான் காதல். அதற்காகவே ஊள பந்தா விட்டு திரிபவர்கள் ஏராளம். நட்பு மட்டுமே மனதைப் பார்த்து வருவது நட்பிற்கு கண்ணில்லை என்று வேண்டுமானால் சொல்லலாம் - சரிதானே அமரன்.

நுரையீரல்
06-12-2007, 05:35 PM
இந்த அன்புத் தங்கைக்காக உங்களின் மனமாற்றம் அளவில்லா மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. இந்த வாக்கை காப்பீர்கள் என்று நம்புகிறேன்.

மிகுந்த நன்றிகள் ராஜா அண்ணா.
நான் எப்போ வாக்குக் கொடுத்தேன். நான் சும்மானாச்சுக்கும் (ஒரு குட்டி வெட்டி பந்தா) சொன்னா, இப்படி வாக்கு கேக்குறியே தங்காச்சி...

பக்கிரிக்கு (இதயம்) தெறிஞ்சுதுனா, அடுத்த தடவை நான் சிகரெட் பிடிக்கும் போது, என் வாயில பட்டாசு வச்சு விட்ருவாரு.

நுரையீரல்
06-12-2007, 05:43 PM
காதலனாக ஏற்றுக் கொண்டவர்களின் கண்ணீர்க் கதை பற்றித்தானே அடுத்தது எழுதப்போகிறீகள்....
வெட்டி பந்தாவை நம்பித்தான் காதலித்தார்கள் என்றால், வெட்டி பந்தா விட்டால் தான் காதல் கை கூடுமா? இதுக்கு இதயம் நல்லெண்ணை (விளக்கெண்ணை) வந்து தான் விளக்கம் கொடுக்க வேண்டும் என்பது என் தாழ்மையான வேண்டுகோள்.


அதுசரி இப்ப உங்க பந்தா குறைஞ்சிருக்கா இல்லை கூடிருக்கா?
கூட்டிக் கழிச்சு, தொடச்சி, பெருக்கிப் பாருங்க... கணக்கு எல்லாம் சரியாத்தான் வரும்.

அமரன்
06-12-2007, 05:44 PM
காதலுக்கு கண்ணில்லை என்பார்கள். ஆனால் தற்போதெல்லாம் தகுதி பார்த்து வருவது தான் காதல். அதற்காகவே ஊள பந்தா விட்டு திரிபவர்கள் ஏராளம். நட்பு மட்டுமே மனதைப் பார்த்து வருவது நட்பிற்கு கண்ணில்லை என்று வேண்டுமானால் சொல்லலாம் - சரிதானே அமரன்.
காதலைப்பற்றி எனக்கு அதிகம் தெரியாதுங்க. அவதானங்களின் அடிப்படையில் முன்னரை விட இப்போது, பழைய காதல் புதிய இடத்தில் என்பது அதிகமாகி வருகின்றது. நீங்கள் சொன்னதுதான் காரணம்போலும். அப்படி இருந்தால் அது காதலா என்று என்னையே நான் கேட்டுக்கொண்டிருக்கின்றேன்..

நட்புக்குப் பலகண்கள் இருக்குங்க. இதயத்தின் சுவர்களில் இருக்கும் மயிர்த்துளைக்குழாய்களின் தொடக்கத்தை சொன்னேன்..

பூமகள்
06-12-2007, 05:46 PM
நான் எப்போ வாக்குக் கொடுத்தேன். நான் சும்மானாச்சுக்கும் (ஒரு குட்டி வெட்டி பந்தா) சொன்னா, இப்படி வாக்கு கேக்குறியே தங்காச்சி...
என்னாது????:sprachlos020::eek: சும்மானாச்சுக்கும் சொன்னாலாம் இந்த பூ விட்டிருவான்னு நினைச்சீங்களா??:sauer028::sauer028: கோவை தாதா ஆட்டோ அனுப்பச் சொல்லிருவேன்..!:rolleyes::rolleyes:
பிளைட்டிலேயே சிறப்பு வசதியோடு ஆயுதங்களோடு ஆட்டோ வரும்.:sauer028::icon_b:

பக்கிரிக்கு (இதயம்) தெறிஞ்சுதுனா, அடுத்த தடவை நான் சிகரெட் பிடிக்கும் போது, என் வாயில பட்டாசு வச்சு விட்ருவாரு.
இதை இப்படியே தனிமடலில் இதயம் அண்ணாக்கு அனுப்பி அவரை இங்கு இழுத்துப் பார்க்க வைத்து, எப்பாவாச்சும் புகை பிடிப்பதைப் பார்த்தால் உங்க வாயில் ஆட்டோபாம் வைக்கச் சொல்லலானா என் பேரு பூமகள் இல்ல..:sauer028::sauer028:

அன்புரசிகன்
06-12-2007, 06:56 PM
ஒரு சில வித்தியாசங்கள் கண்டேன். நீங்கள் நண்பர்களுக்கு பந்தா காட்டுவீர்கள். நாம் நண்பர்களுடன் சேர்ந்து மற்றவர்களுக்கு பந்தா காட்டுவோம். நம்ம கூட்டத்தை பார்த்து பொறாமைப்பட்டவர்கள் பலர்...

களவும் கற்று மற என்பதற்கிணங்க தண்ணி புகை அனைத்தையும் கற்று மறந்திருக்கிறேன்.

தங்கவேல்
07-12-2007, 05:42 AM
இதெல்லாம் வாழ்க்கையில் சகஜமப்பா

சிவா.ஜி
07-12-2007, 05:54 AM
அப்படியே என் வாழ்க்கையையும் பிரதிபலிக்கும் பதிவு.நன்பர்களிடம் பந்தா காட்டி நொந்து நூலான கதைகள் ஏராளம்.பணம் இல்லாத போது இருந்த வெட்டி பந்தா இன்று பணம் வந்ததும் காணாமல்போய்விட்டது.
அருமையான பதிவு ராஜா.உங்களை நினைத்தால் பெருமையாக இருக்கிறது.

இதயம்
07-12-2007, 06:25 AM
மாப்ளையோட இந்த பதிவை படிச்சி மனசு கனத்துப்போச்சிங்க..! அந்த காலத்துல நம்ம தேவைகளையும் கணக்கெடுக்காம, புள்ளைகளையும் கணக்கெடுக்காம வத, வதன்னு பெத்திருக்காங்கப்பா..!! வயித்துச்சாப்பாட்டுக்காகவே ராசா பள்ளிக்கு போனது பெரும் கொடுமை தான். அதிலும் புழு இருக்கும் சோறு சாப்பிட்டு கொழுப்பு வச்சதுன்னு சொன்னதை படிச்சி அந்த நகைச்சுவையை ரசிச்சேன், ஆனா, அவரோட இயலாமையை நினைச்சி வருத்தப்பட்டேன். உண்மையிலேயே பாவம் தான் புள்ளி இல்ல..?!!

நானெல்லாம் வரம் வாங்கி வந்தவன் போலிருக்கு. சின்னவயசிலேர்ந்து இப்ப வரை வறுமையோட சுவடு தெரியாத வாழ்க்கையோட தான் நான் வளர்ந்தேன். இப்ப தான் தெரியுது புள்ளிக்கு ஏன் கடவுள்னா இத்தனை காண்டா இருக்கார்னு..!! மனுசனுக்கு நம்பிக்கை வேணும்யா.. நம்பிக்கை தான் வாழ்க்கை.. அந்த நம்பிக்கை தான் எல்லாருக்கும், எல்லாம் தரும்..! எனக்கு கேட்டது கிடைக்கலன்னா அது மேல இருக்கிற நம்பிக்கையை தொலைக்கிறது நம்மோட சுயநலத்தை தான் காட்டுது..!! இத்தனை வறுமையோடவே வளர்ந்தேன்னு சொல்றவர் அந்த வறுமையில ஏம்பா தம்மடிக்க ஆரம்பிச்சீங்க.?. அதுவும் ஒட்டுப்பீடி பொறுக்கி..! (நான் உங்களை பொறுக்கின்னு சொல்லலை, பீடிய பொறுக்கி குடிச்சீங்கன்னு சொல்றேன்..!!). அப்படின்னா சின்ன வயசிலேயே இப்ப உங்க கிட்ட இருக்கிற திமிரு, சண்டைக்கோழி, மலைக்கோட்டை... அடச்சே.. தெனாவெட்டு, கொழுப்பெல்லாம் இருந்திருக்கு.. அதான் ராசா இவ்ளோ கஷ்டப்பட்டிருக்கீங்க..!

எல்லா ஃப்ரண்ட்ஷிப்பும் உயர்ந்ததுங்கிறத நான் ஒத்துக்க மாட்டேன். மனைவி மாதிரி, நட்பும் இறைவன் கொடுக்கும் வரம் தான். ஒரு நட்போட சுய குணத்தை புரிய பல நாள் ஆகலாம், பல மாசம் ஆகலாம், ஏன் பல வருஷம் கூட ஆகலாம். ஒரு மனுஷனோட கஷ்டத்தில தான் அவன் நண்பனோட உண்மையான முகம் தெரியும். அந்த வகையில ராசாக்கு கிடைச்சதெல்லாம் மேன்மையான நட்பு தான். ஆனா, அப்படிப்பட்ட நல்ல நட்பை அவர் தான் மதிக்கலைங்கிறது பெரிய முரண்பாடு. ஏன்னா... அவர் தன் வறுமைய காரணமா வச்சி நல்ல நண்பர்கள்கிட்ட உண்மையில்லாம இருந்து, குட்டு வெளிப்பட்டிருக்கே..!! அவங்க மனம் என்ன பாடு பட்டிருக்கும்..? என்னய்யா பணம்..? அது இன்னைக்கு வரும், நாளைக்கு போகும்..!! ஆனா, உறவுகள் அப்படியில்ல. அதை புரிஞ்சிக்கிட்டா இந்த வெட்டி பந்தா செய்ய வாய்ப்பே இல்லை..!

நான் நல்லவன்னு சொன்னா இங்கே கூச்சல் போடறதுக்கு ஒரு கும்பல் இருக்கு. அதனால நான் நல்லவன்னு சொல்லிக்க விரும்பலை. ஆனா, பொய் சொல்றது, ஏமாத்துறது உள்ளிட்ட எல்லாத்தையும் வெறுக்கிறேன். அது என் உணர்விலேயே கலந்துட்டதால அதை செய்யறவங்களையும் எனக்கு பிடிக்காது. பின்ன எப்படி ராசாக்கிட்ட நட்பு வச்சிக்கிட்டேன்னு என்னை கேக்கறீங்களா..? அதுலதான் நான் ஏமாந்துட்டேன்.. சரி.. போனா போகுதுன்னு விட்டுட்டேன். கடலை வாங்கி சாப்பிடும் போது அதில 1,2 பூச்சிக்கடலையும் இருக்கும் தானே.. அது மாதிரி தான் இதுவும்.

அதென்ன ராசா.. இப்பெல்லாம் எல்லா இடத்திலேயும் என் தலையை உருட்டுறதையே பொழைப்பா வச்சிருக்கீங்க..? அதுவும் ஏகப்பட்ட கம்ப்ளைண்டோட..! நம்ம சு.சா இப்படி தான்.. தன் பேரு எப்பவும் பிரபலமா பேசப்படணும்னு கலைஞருக்கு செத்துப்போன(!) மர்லின் மன்றோவோட தொடர்பு இருக்கு, சோனியாவுக்கு இஸ்ரேலோட தொடர்பு இருக்குன்னு ஏதாவது எழவு கொட்டிக்கிட்டே இருப்பார்..! ராசா சொல்றதெல்லாம் பார்த்தா இவர் சு.சா நம்பர் 2 மாதிரியே இருக்கு..!!

எனக்கு ஒரு விஷயத்தை நினைச்சா தான் சிரிப்பு, சிரிப்பா வருது.. என்னான்னு கேளுங்களேன்.. சிவா நீங்க கேளுங்களேன்.. வாத்தி நீங்க கேளுங்களேன்.. யவனி நீங்களாவது கேளுங்க.. அட... யாராவது கேளுங்கப்பா..! இப்படி ஒரு வெட்டி பந்தா, ஒட்டுப்பீடி, வெத்துவேட்டு பார்ட்டிய ஒரு பொண்ணு விரட்டி, விரட்டி லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிச்சே அதை. நினைச்சா தான் சிரிப்பா வருது..!! அதென்ன இந்த பொண்ணுங்களுக்கு தனுஷ் படத்துல வர்ற மாதிரி முடிச்சவிக்கி, மொள்ளமாரி மாதிரி ஆளுங்கள தான் புடிக்குது.. ? அதுக்கு நாம என்ன செய்ய...?? எல்லாம் விதி..!! யவனிகா சொன்ன மாதிரி உங்களை காதலிச்ச...இல்ல.. இல்ல.. நீங்க காதலிக்கிறதா சொல்லி ஏமாத்துன பொண்ணுங்களோட கண்ணீர்க்கதைகளையும் மறக்காம எழுதுங்கப்பா.. அதப்படிச்சிட்டு இனியாவது பொண்ணுங்க ஏமாறாம எச்சரிக்கையா இருக்கட்டும்..!!:D:D

யவனிகா
07-12-2007, 06:41 AM
யவனி நீங்களாவது கேளுங்க.. அட... யாராவது கேளுங்கப்பா..!

நான் என்னத்த கேக்கறது....ஏழரை நாட்டான் ஆரம்பிக்கும் போது சிலருக்கு எசகு பிசகா ஆரம்பிக்குமாம்...அது உங்களுக்கு ஆரம்பிக்கப் போகுதுன்னு நினைக்கிறேன்.
எப்படிங்க இது....எத்தனை கிடைச்சாலும் அடங்கவே மாட்டீங்கறீங்க...உங்க வீட்டம்மாவ நினைச்சா பாவமா இருக்கு....அவங்களப் பேசவே விட மாட்டீங்க போல...நீங்க வரம் வாங்கிட்டுத் தான் வந்தீங்கன்னு தெரியுது....

சிவா.ஜி
07-12-2007, 06:49 AM
.நீங்க வரம் வாங்கிட்டுத் தான் வந்தீங்கன்னு தெரியுது....

அவரு வரம் வாங்கிட்டு வந்தாரா, பேசறதுக்கு உரம் வாங்கிட்டு வந்தாரான்னு தெரியலையே.....முப்போகம் விளயும்ன்னு கேள்வி பட்டிருக்கேன் இங்க எப்போகமும் மானாவாரி மகசூலாவே இருக்குதே...பாவம் அவங்க வீட்டம்மா...

யவனிகா
07-12-2007, 06:55 AM
அவரு வரம் வாங்கிட்டு வந்தாரா, பேசறதுக்கு உரம் வாங்கிட்டு வந்தாரான்னு தெரியலையே.....முப்போகம் விளயும்ன்னு கேள்வி பட்டிருக்கேன் இங்க எப்போகமும் மானாவாரி மகசூலாவே இருக்குதே...பாவம் அவங்க வீட்டம்மா...

அண்ணா அடுத்த பிறவின்னு ஒன்னு இருந்தா கண்டிப்பா நான் உங்களுக்கு தங்கச்சியாத் தான் பிறப்பேன். எப்படின்னா இப்படி எல்லா பாலையும் சிக்சராக்கறீங்க...

உங்க பக்கத்தில ஒருத்தர் இருக்காரே...அவர திரும்பிப் பாத்து ஒரு லேசா சிரிப்பு சிரியுங்க...அவரோட முகத்துக்கு ரத்தத்த, இதயம் ஒழுங்கா சப்ளை செய்யலன்னு நினைக்கிறேன்...பேயறைஞ்சாப்பல இருக்காரில்ல....

இதயம்
07-12-2007, 06:56 AM
அவரு வரம் வாங்கிட்டு வந்தாரா, பேசறதுக்கு உரம் வாங்கிட்டு வந்தாரான்னு தெரியலையே.....முப்போகம் விளயும்ன்னு கேள்வி பட்டிருக்கேன் இங்க எப்போகமும் மானாவாரி மகசூலாவே இருக்குதே...பாவம் அவங்க வீட்டம்மா...

நீங்க ரெண்டு பேரும் பொறாமையில் வேதனைப்படுவீங்களேன்னு சொல்லலை..! இப்ப ஒரு உண்மையை சொல்றேன்.. நான் நல்லா பேசறேன்னு என் வீட்டுக்காரி, தான் பேசாம என்னை பேச வச்சி, பேச வச்சி பெரிய பேச்சாளர் ஆக்கிட்டா..!

ஆனா, ராசா அப்படியில்ல.. அவர் எங்க.. என்ன பண்ணினாலும் மத்தவங்க மாதிரி இல்லாம புதுமையா தான் செய்வார்.. தனியா தான் தெரிவார்..! காரணம், அவரோட இல்லாத அறிவோன்னு எக்குத்தப்பா யோசிச்சிடாதீங்க.. எங்க இருந்தாலும், என்ன பண்ணினாலும் அவர் மட்டும் தனியா தெரியணும்னு அவங்க வீட்டு தாய்க்குலம் அவருக்கு போட்ட உத்தரவு அப்படி..!! :eek::eek::eek:

சிவா.. உங்க வீட்டு மேட்டரை இப்ப சொல்லவா.. அப்புறம் சொல்லவா..??:D:D

சிவா.ஜி
07-12-2007, 06:59 AM
அவரோட முகத்துக்கு ரத்தத்த, இதயம் ஒழுங்கா சப்ளை செய்யலன்னு நினைக்கிறேன்...பேயறைஞ்சாப்பல இருக்காரில்ல....

இதயம் செய்யற வேலையையெல்லாம் ஓரங்கட்டிட்டு,ஒரே வேலையா பேசிக்கிட்டே இருந்தா இரத்தம் எப்படி சப்ளை ஆகும்மா?

யவனிகா
07-12-2007, 07:07 AM
உங்களை காதலிச்ச...இல்ல.. இல்ல.. நீங்க காதலிக்கிறதா சொல்லி ஏமாத்துன பொண்ணுங்களோட கண்ணீர்க்கதைகளையும் மறக்காம எழுதுங்கப்பா.. அதப்படிச்சிட்டு இனியாவது பொண்ணுங்க ஏமாறாம எச்சரிக்கையா இருக்கட்டும்..!!:D:D

ஆமா...அவரு மன்மதன் சிம்பு...மூக்கில இரத்தம் வர வர பொண்ணுகளை துரத்தித் துரத்தி கொலை பண்றாரு....அவரே அல்லல் பட்டு, துன்பப் பட்டு, துயரப்பட்டு....ஒத்தப் பொண்ண காதலிச்சுக், கல்யாணம் பண்ணி ஒழுங்கா குடும்பம் நடத்தறாரு...

அவருதான் ஏதோ டைம் பாஸுக்கு நானொரு பிளே பாய் ந்னு எழுதறாருன்னா...அதையெல்லாம் நம்பிட்டு நீங்க அறிவுறைய வேற மானாவாரியா வாரி வழங்க்குறீங்களே....பாவம் இதயம் நீங்க ரம்ப____________.

இதென்னப்பா இது.... இவங்க நல்லவங்கன்னு ஊரு சொல்லணும்னா இருக்கறவங்க எல்லாரையும் கெட்டவனாக் காட்டறது...

சிவா அண்ணா...இப்ப என்ன நிலவரம்....

சிவா.ஜி
07-12-2007, 07:09 AM
சிவா.. உங்க வீட்டு மேட்டரை இப்ப சொல்லவா.. அப்புறம் சொல்லவா..??:D:D

அட ங்கொக்கா மக்கா...இதே வேலையாத்தான் திரியறீங்களா.....

யவனிகா
07-12-2007, 07:17 AM
நீங்க ரெண்டு பேரும் பொறாமையில் வேதனைப்படுவீங்களேன்னு சொல்லலை..! இப்ப ஒரு உண்மையை சொல்றேன்.. நான் நல்லா பேசறேன்னு என் வீட்டுக்காரி, தான் பேசாம என்னை பேச வச்சி, பேச வச்சி பெரிய பேச்சாளர் ஆக்கிட்டா..!


உங்க வீட்டுக்கார அம்மாகிட்ட பேசின வரைக்கும் அவங்க அப்படி சொல்லலியே...

அவங்க என்ன தெரியுமா சொன்னாங்க...

யவனி...ரொம்ப கொடும....நான் "அ" அப்படின்னு ஆரம்பிச்சா....அவரு அ,ஆ,இ,ஈ....."அக்" ந்னு முடிக்கறாரு...

நான் கத்தரிக்கா...அப்படின்னு ஆரம்பிச்சா....கத்தரிக்கா பித்தம்...வாழைக்கா வாயு...கீரை செரிக்காது...பீன்ஸ் வெலை கூட....வெறும் மோறு போதும்ன்னு முடிக்கறாரு.

நான் செவப்பு புடவன்னு ஆரம்பிச்சா....செவப்புப் புடவ மாடு முட்டும்...வெள்ளைப் புடவ சேறடிக்கும்...கறுப்புப் புடவ குடும்பத்துக்கு ஆகாது....அப்படின்னு அடுக்கிட்டே போறாரு...

என்ன செய்யரது யவனி...உங்க வீட்டுக்காரர்கிட்ட சொல்லி நல்ல புத்தி சொல்லக் கூடாதான்னு ஓன்னு அழுகை.....

சிவா.ஜி
07-12-2007, 07:19 AM
யவனிகா...சூப்பர்ம்மா.....நிஜமாவே சிரிச்சிட்டேன்.

இதயம்
07-12-2007, 07:20 AM
சிவா அண்ணா...இப்ப என்ன நிலவரம்....

எப்படியெல்லாம் உளவு சொல்றாங்கப்பா..! மொத வேலையா என் ஆஃபீஸ் இடத்தை மாத்தணும். குறிப்பா சிவா கண்ணுல படாம இருக்க ஒரு தென்னங்கீத்து தடுப்பு வச்சாவது மறைக்கணும்..! உடனுக்குடன் மெஸேஜ் போவும் போலிருக்கே..!!

நானே வூட்டுல இருந்தா போரடிக்கும்.. எவ்ளோ நேரம் தான் மோட்டு வளைய பார்க்கிறது (ரொம்ப நேரம் பார்த்தா மோட்டு வளையில 3D தெரியுதுப்பா..!!:D:D)-ன்னு இங்க வந்தா இவங்களோட இம்சையா இருக்கே..!!:eek::eek:

இதயம்
07-12-2007, 07:26 AM
யவனிகா...சூப்பர்ம்மா.....நிஜமாவே சிரிச்சிட்டேன்.

சிவா..சும்மா சொல்லுங்க.. நான் தப்பா எடுத்துக்க மாட்டேன்..!! நீங்க இதுக்கு சிரிக்க யவனிகாகிட்ட எவ்வளவு இ-காசு வாங்குனீங்க..!!? கவர்மெண்ட் வேலைக்காரங்க எல்லாம் இலஞ்சம் வாங்குறாங்கன்னு புலம்பிட்டு ஒரு அப்பாவி... இல்ல..இல்ல.. இந்த படுபாவியை கலாய்க்க வச்சி சிரிக்க இலஞ்சம் வாங்குறது மட்டும் தப்பில்லையா.?:frown::frown:

(இந்த நேரம் மலரை வேற காணோம்..! 2 அருவாவுக்கு ஆர்டர் கொடுக்கணும்..!!:sauer028::sauer028::sauer028:)

சிவா.ஜி
07-12-2007, 07:38 AM
குறிப்பா சிவா கண்ணுல படாம இருக்க ஒரு தென்னங்கீத்து தடுப்பு வச்சாவது மறைக்கணும்..!

இங்கே ஈச்ச ஓலைதான் கிடைக்கும்...வேணுன்னா ஏற்பாடு பண்ணட்டுமா...?

நுரையீரல்
07-12-2007, 07:39 AM
சின்னவயசிலேர்ந்து இப்ப வரை வறுமையோட சுவடு தெரியாத வாழ்க்கையோட தான் நான் வளர்ந்தேன். இப்ப தான் தெரியுது புள்ளிக்கு ஏன் கடவுள்னா இத்தனை காண்டா இருக்கார்னு..!!
பக்கிரி சொல்றாரு, சின்ன வயசுல நான் கஷ்டப்பட்டதால தான் கடவுள் மேல காண்டா இருக்கேனு சொல்றாரு.

மச்சான் கஷ்டப்படுறவங்க எல்லாம் கடவுள் மேல காண்டான உலகத்தில பிறக்கிற ஒருத்தன் கூட கடவுள் நம்பிக்கையோடு இருக்கமாட்டான்.


நான் நல்லவன்னு சொன்னா இங்கே கூச்சல் போடறதுக்கு ஒரு கும்பல் இருக்கு. அதனால நான் நல்லவன்னு சொல்லிக்க விரும்பலை. ஆனா, பொய் சொல்றது, ஏமாத்துறது உள்ளிட்ட எல்லாத்தையும் வெறுக்கிறேன். அது என் உணர்விலேயே கலந்துட்டதால அதை செய்யறவங்களையும் எனக்கு பிடிக்காது.
அதெப்படிய்யா அடிக்கடி நான் நல்லவன், வல்லவனுட்டு வெட்டி பந்தா விடுறீங்க..

ஒன்னு தெரியுமோ இந்தத்திரியே உங்களுக்காக ஆரம்பிச்சேன். அதெபப்டினு கேட்கிறீங்களா... ஒண்ணாப்பு படிக்கிற குட்டி பசங்களுக்கு நீதிக்கதை சொல்வோமே அத மாதிரி தான் இந்தத்திரியும்...

அடங்குங்கய்யா... இதுல வேற,

சிவா நீங்க கேளுங்களேன்.. வாத்தி நீங்க கேளுங்களேன்.. யவனி நீங்களாவது கேளுங்க.. அட... யாராவது கேளுங்கப்பா..!
இது ஒரு பொளப்பா..?

பக்கத்து சீட்டுல இருக்கிறவர பார்த்தாவது திருந்துங்கய்யா எப்படியோ நீங்க அவர கெடுக்காம இருந்தா சரிதான்.

இதயம்
07-12-2007, 07:41 AM
இங்கே ஈச்ச ஓலைதான் கிடைக்கும்...வேணுன்னா ஏற்பாடு பண்ணட்டுமா...?

எந்த எழவையாவது கொடுங்க..!! இந்த இ(ளி)ச்சவாயனுக்கு ஈச்ச ஓலை பொருத்தமாதான் இருக்கும்..!!:sauer028::sauer028:

நுரையீரல்
07-12-2007, 07:43 AM
எப்படியெல்லாம் உளவு சொல்றாங்கப்பா..! மொத வேலையா என் ஆஃபீஸ் இடத்தை மாத்தணும். குறிப்பா சிவா கண்ணுல படாம இருக்க ஒரு தென்னங்கீத்து தடுப்பு வச்சாவது மறைக்கணும்..!
மச்சான் நீங்க தடுப்புச்சுவர் எல்லாம் கஷ்டப்பட்டு எழுப்ப வேண்டாம்... ஒரே ஒரு பிளாஸ்திரி போதும்... அத்த உங்க வாயில போட்டு ஒட்டுங்க...
பிரச்சினை எல்லாம் தீர்ந்துடும்.

அப்புறமா ஆனங்த விகடன்ல ஒரு விளம்பரம் கொடுக்கலாம்... பல நாள் இருந்த பிரச்சினை shri அம்மான் பகவான் தயவால போச்சுனு - அதுக்கு வேற தனியா காசு தருவாய்ங்க... ஆனந்த விகடன்லயும், விஜய் டி.விலயும் உங்க ஃபோட்டோ வரும்.

நுரையீரல்
07-12-2007, 07:51 AM
விஜய் டி.விலயும், ஆனந்த விகடன்லயும் வர்ற உங்க ஃபோட்டோவ காமிச்சு, பூச்சாண்டி பாருனு பயமுறுத்தி நிறைய தாய்மார்கள் அவங்க சாப்பிடாத குழந்தைகளுக்கு சோறூட்டுவாங்க, அது வேற உங்களுக்கு எக்ஸ்ட்ரா புண்ணியமா போகும்..

இதயம்
07-12-2007, 07:53 AM
இதை இப்படியே தனிமடலில் இதயம் அண்ணாக்கு அனுப்பி அவரை இங்கு இழுத்துப் பார்க்க வைத்து, எப்பாவாச்சும் புகை பிடிப்பதைப் பார்த்தால் உங்க வாயில் ஆட்டோபாம் வைக்கச் சொல்லலானா என் பேரு பூமகள் இல்ல..:sauer028::sauer028:

நீ கவலைப்படாத கண்ணு..! இந்த டமுக்குடப்பாம்பாளையக்கார பயபுள்ளைய நான் பாத்துக்கிறேன்..! அண்ண அந்தாளை கரெக்ட் பண்ணத்தானே இத்தனை தூரம் பிளேனு புடிச்சி போறேன்.. பின்னிப்புடமாட்டேன்... பின்னி..!! (அது சரி.. எனக்கு ஆட்டம் பாம் தெரியும், அது என்ன ஆட்டோ பாம்..!? ஒருவேளை ஓவியா ஸ்பெஷலோ..??). உன்னமாதிரி எல்லா பொண்ணுங்களும் சிந்திச்சி பேச ஆரம்பிச்சா இந்த மாதிரி அக்கியூஸ்டுங்களுக்கு பொண்டாட்டியா அம்மணி கிடைக்குமா...? :D:D:D

நுரையீரல்
07-12-2007, 08:03 AM
உன்னமாதிரி எல்லா பொண்ணுங்களும் சிந்திச்சி பேச ஆரம்பிச்சா இந்த மாதிரி அக்கியூஸ்டுங்களுக்கு பொண்டாட்டியா அம்மணி கிடைக்குமா...? :D:D:D
ஏய்யா... ரெண்டு பதிப்புக்கு முன்னாடி தானே வெட்டி பந்தா விடாதேனு படிச்சு, படிச்சு சொன்னேன். எத்தன சொன்னாலும் உமக்கு புத்தியே வராதா??? தங்க நகைகளை அடகுக்கு வைக்கிற மாதிரி, உம் மூளையை எங்காவது அடகு வைத்திருக்கிரீறோ??? (எந்தக் கேனப்பையன் ஒதவாக்கற மூளையை வாங்குனானோ தெரியலயே)

பக்கத்து சீட்டுக்காரறே... அவரு மூளை எங்காவது பங்களாதேசிகாரன் கிட்ட அடகு வச்சிட்டு, நூறு ரியால் மொபிலி கார்டு வாங்கிருப்பாரு.. அது யாரு எவருனு பார்த்து கொஞ்சம் மீட்டுக் கொடுங்களேன்.

இதயம்
07-12-2007, 08:07 AM
பக்கிரி சொல்றாரு, சின்ன வயசுல நான் கஷ்டப்பட்டதால தான் கடவுள் மேல காண்டா இருக்கேனு சொல்றாரு.

மச்சான் கஷ்டப்படுறவங்க எல்லாம் கடவுள் மேல காண்டான உலகத்தில பிறக்கிற ஒருத்தன் கூட கடவுள் நம்பிக்கையோடு இருக்கமாட்டான்.
உண்மை தான்..! கஷ்டப்படுறவங்க எல்லாம் கடவுள் மேல கடுப்பானா, உலகத்துல யாருக்கும் நம்பிக்கை இருக்காது. ஆனா, கஷ்டப்படுறவங்க எல்லாருமா உங்கள மாதிரி அச்சுப்பிச்சுத்தனமா யோசிக்கிறாங்க..? கடவுளை காணோம்னு சொல்றாங்க.? அவங்க தெளீஈஈஈஈஈவாஅ இருக்காங்க.. அதனால் தான் அவங்க உங்களை மாதிரி பீடி பொறுக்கலை. சரியா சிந்திக்க தெரியாம நீங்க தான் தெளிவா குழம்பி, கடவுள்ங்கிறது கப்ஸான்னு சொல்ல வைக்கிது..!!



அதெப்படிய்யா அடிக்கடி நான் நல்லவன், வல்லவனுட்டு வெட்டி பந்தா விடுறீங்க..
நான் என்னை நல்லவன்னு காட்டிக்கத்தான் இப்படி சொல்றேன்னு யாரு சொன்னது..? என்னை கெட்டவன்னு சொல்லத்தான் அப்படி சொன்னேன். ஏன்னா.. நீங்க தன்னை கெட்டவன், கெட்டவன்னு சொல்றதாலே தானே மக்கள் உங்களை நல்லவன்னு நம்பி ஏமாறுறாங்க..?! உங்க ஸ்டைலை தான் நானும் பண்றேன்..!! அது எப்படிப்பா வெட்டி பந்தா ஆகும்...??


ஒன்னு தெரியுமோ இந்தத்திரியே உங்களுக்காக ஆரம்பிச்சேன். அதெபப்டினு கேட்கிறீங்களா... ஒண்ணாப்பு படிக்கிற குட்டி பசங்களுக்கு நீதிக்கதை சொல்வோமே அத மாதிரி தான் இந்தத்திரியும்...
அடப்பாவமே.. உங்களால ஒண்ணாப்பு படிக்கிற குட்டிப்பசங்களை தவிர வேற யாருக்கும் பிரயோசனமா ஒண்ணும் சொல்ல முடியாதா..??


இது ஒரு பொளப்பா..?

பக்கத்து சீட்டுல இருக்கிறவர பார்த்தாவது திருந்துங்கய்யா எப்படியோ நீங்க அவர கெடுக்காம இருந்தா சரிதான்.
அவரே பாவம்.. ஆஃப்ரிக்கா, கஜகஸ்தான்னு போய் சிக்கி, சீரழிஞ்சி தான் கடைசியா சவுதிக்கு வந்துருக்கார். இனி அவரை கெடுக்க என்ன இருக்குன்னு தயவு செய்து சொல்லுங்க.. கண்டுபிடிக்க முடியலைங்கிறத இங்க சொல்ல வெக்கமா இருந்தா, தனிமடல்ல சொல்லுங்க மாப்ளே..!! எவ்வளவோ செய்றோம், இதை செய்ய மாட்டோமா..?:D:D

பிச்சி
07-12-2007, 08:11 AM
அண்ணா உங்கள் பந்தா முழுவதும் படித்து முடித்தேன். இருந்தாலும் அந்த பழமொழி எனக்கு பிடிக்கவில்லை..

இப்பவும் நீங்க இப்படித்தானா?

அன்பு
பிச்சி

இதயம்
07-12-2007, 08:14 AM
ஏய்யா... ரெண்டு பதிப்புக்கு முன்னாடி தானே வெட்டி பந்தா விடாதேனு படிச்சு, படிச்சு சொன்னேன். எத்தன சொன்னாலும் உமக்கு புத்தியே வராதா???

அன்பு தங்கை பூமகளின் புத்திசாலித்தனத்தை நான் பாராட்டியதை பொறுக்காமல் (இது அந்த பொறுக்குதல் அல்ல..!!:D:D) பொறாமையோடு விமர்சித்த புள்ளிக்கு என் கடுமையான கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறேன்..! அதுமட்டுமல்லாமல், பூமகளை பல இடங்களில் தாக்கி விமர்சிக்கும் அவரின் மீது மூளையை உபயோகிப்போர் சங்கம் மிகக்கடுமையாக கண்டனங்களை தெரிவித்திருக்கிறது என்பதை இங்கே சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்...!!:icon_rollout::icon_rollout:

(மவனே.. உமக்கெல்லாம் பொம்பளை கையில அடிவாங்குனா தான் புத்தி வரும்..!! இன்னைக்கு ஒரு கை பாத்திடலாம்.. ஒரு முடிவோட தான் நானும் ஓவர்டைம் பார்க்க இங்க வந்திருக்கேண்டி மாப்ளோய்...!!:sauer028::sauer028:)

நுரையீரல்
07-12-2007, 08:20 AM
உண்மை தான்..! கஷ்டப்படுறவங்க எல்லாம் கடவுள் மேல கடுப்பானா, உலகத்துல யாருக்கும் நம்பிக்கை இருக்காது. ஆனா, கஷ்டப்படுறவங்க எல்லாருமா உங்கள மாதிரி அச்சுப்பிச்சுத்தனமா யோசிக்கிறாங்க..? கடவுளை காணோம்னு சொல்றாங்க.? அவங்க தெளீஈஈஈஈஈவாஅ இருக்காங்க.. அதனால் தான் அவங்க உங்களை மாதிரி பீடி பொறுக்கலை. சரியா சிந்திக்க தெரியாம நீங்க தான் தெளிவா குழம்பி, கடவுள்ங்கிறது கப்ஸான்னு சொல்ல வைக்கிது..!!
நான் கூட பல நாள் நெனச்சிட்டு இருந்தேன்.. இதயம் முத்தவ்வா... மதம் மேலயும், கடவுள் மேலயும் ரொம்ப பக்தி கொண்டவர்னு...

ஏய்யா... வெள்ளிக்கிழமை அதுவுமா காலைல பத்து மணியில இருந்து ஜுமா தொழுகை முடியுற வரைக்கும் உட்கார்ந்து வெட்டியா உடான்ஸ் விட்டுட்டு இருக்கீங்களே... ஜுமா தொழுகைக்கு போனீங்களா... நான் கடவுள் நம்பிக்கை இல்லாதவன் போகல.. இருக்குற நீங்க ஏன் போகல..

இதுல வேற என் பொண்டாட்டி சொல்றா அன்னிக்கு... இதயம் அண்ணா வந்தா அவரு கரெக்டா தொழுகைக்கு போவாரு.. நீங்களும் அவரு கூட சேர்ந்து போகணும்னு..

இப்ப புரியுதா நாங்க ஏன் கப்ஸானு சொல்றோம்னு...


அடப்பாவமே.. உங்களால ஒண்ணாப்பு படிக்கிற குட்டிப்பசங்களை தவிர வேற யாருக்கும் பிரயோசனமா ஒண்ணும் சொல்ல முடியாதா..??
அப்ப ஒத்துக்கறீங்களா.... நீங்க ஒண்ணாப்பு படிக்கிறேணு...

நுரையீரல்
07-12-2007, 08:28 AM
ஏணுங்க இதயம் சிவா அண்ணன திரியலயே காணொம்.. ஜுமா தொழுகைக்கு கரெக்டா எழுந்திரிச்சு போயிட்டாரு போல... உண்மையா?? இல்ல உங்களுக்காக அவரைப் (proxy) போயி தொழுதிட்டு வரச் சொன்னீங்களா?

யப்பா... கடவுளை நம்புறவங்க தாப்பா கடவுள ஏமாத்துறாங்க..

இதயம்
07-12-2007, 08:31 AM
நான் கூட பல நாள் நெனச்சிட்டு இருந்தேன்.. இதயம் முத்தவ்வா... மதம் மேலயும், கடவுள் மேலயும் ரொம்ப பக்தி கொண்டவர்னு...
ஏய்யா... வெள்ளிக்கிழமை அதுவுமா காலைல பத்து மணியில இருந்து ஜுமா தொழுகை முடியுற வரைக்கும் உட்கார்ந்து வெட்டியா உடான்ஸ் விட்டுட்டு இருக்கீங்களே... ஜுமா தொழுகைக்கு போனீங்களா... நான் கடவுள் நம்பிக்கை இல்லாதவன் போகல.. இருக்குற நீங்க ஏன் போகல..

இதுல வேற என் பொண்டாட்டி சொல்றா அன்னிக்கு... இதயம் அண்ணா வந்தா அவரு கரெக்டா தொழுகைக்கு போவாரு.. நீங்களும் அவரு கூட சேர்ந்து போகணும்னு..
இப்ப புரியுதா நாங்க ஏன் கப்ஸானு சொல்றோம்னு...


அடப்பாவி... ஒரு முஸ்லீமா இருந்துக்கிட்டு ஜும்மா தொழுகை எத்தனை மணிக்குள்ள நடக்கும்கிறது கூட தெரியாம இருக்கிறீரே..!! :eek::eek: இதுல அடுத்தவங்களுக்கு அட்வைஸ் வேற..!! நான் சொல்ற நேரத்தை குறிச்சி வச்சிக்கிட்டு கேளுமையா.. ராபிக்கில் ஜும்மா தொழுகை 1 மணிக்கு..!!!! இப்ப மணி 12.28..!! சின்னப்புள்ளத்தனமால்ல இருக்கு..!! அய்யோ... அய்யோ..!!:icon_rollout::icon_rollout:

உங்க வீட்டுக்காரம்மா என்னையெல்லாம் சரியா புரிஞ்சி தான் தொழுகை பத்தி சொல்லியிருக்கு..!! ஆனா, உங்களை கட்ட நினைச்சதில தான் சரியா புரியாம கோட்டை விட்டிரிச்சி..! இட்ஸ் டூஊஊஊஊஊ லேட்..!! ரொம்ப டென்ஷன் ஆகாதீங்க மாப்ளே.. அப்புறம் ஹார்ட் பேஷண்ட் ஆகிடுவீங்க..!!:D:D

சரி... நான் கிளம்பறேன்.. போய்ட்டு வந்து வச்சிக்கிறேண்டி உங்களை..!!!

நுரையீரல்
07-12-2007, 08:41 AM
எங்க ஏரியாவில 12:10 மணிக்கு ஜுமா தொழுகை முடிஞ்சிரும்... மெக்காவில மட்டும் தான் கொஞ்சம் லேட் ஆகும்.. அதுவும் உங்க ஏரியாவில 1 மணிக்குனு சொல்றது நம்ப கஷ்டமா இருக்கு..

இதுல ஒரு கேவலம் என்னன்னா... ஆத்திகனை தொழுகைக்கு போனு ஒரு நாத்திகன் ஞாபகப் படுத்த வேண்டியிருக்கு...

நுரையீரல்
07-12-2007, 08:44 AM
சரி... நான் கிளம்பறேன்.. போய்ட்டு வந்து வச்சிக்கிறேண்டி உங்களை..!!!
யோவ்.. நான் ஆம்பளைய்யா... என்னப் போயி...

இதயம்
07-12-2007, 10:31 AM
எங்க ஏரியாவில 12:10 மணிக்கு ஜுமா தொழுகை முடிஞ்சிரும்... மெக்காவில மட்டும் தான் கொஞ்சம் லேட் ஆகும்.. அதுவும் உங்க ஏரியாவில 1 மணிக்குனு சொல்றது நம்ப கஷ்டமா இருக்கு..

இதுல ஒரு கேவலம் என்னன்னா... ஆத்திகனை தொழுகைக்கு போனு ஒரு நாத்திகன் ஞாபகப் படுத்த வேண்டியிருக்கு...

வந்துட்டேன்..!! இதில் நான் வாக்குவாதம் பண்ணி நேரத்தை வீணடிக்க விரும்பலை..! நிச்சயம் நீங்க சொல்லி செய்ற அளவுக்கு இதில் நான் நடந்துக்கமாட்டேன்..!!

இதயம்
07-12-2007, 10:32 AM
யோவ்.. நான் ஆம்பளைய்யா... என்னப் போயி...

ஓ....அந்த நெனப்பு வேற இருக்கா..? எந்த வகையில உம்மை சேக்கிறதுன்னு ஒரே குழப்பமா இருக்கய்யா.!!

நேசம்
07-12-2007, 12:03 PM
வெட்டி பந்தாவை உள்ளது உள்ளப்படி சொன்னதற்கு வாழ்த்துக்கள்.இது சொல்வதற்கும் ஒரு துணிவும் வேண்டும்.இதில் வெட்டி பந்தா இல்லையே.....!

நுரையீரல்
07-12-2007, 01:13 PM
வெட்டி பந்தா − பாகம் 2

நான் ஏற்கனவே கூறியிருந்தபடி, நண்பன் விஜய், கிஷோர் மற்றும் நான் மூவரும் வாடிக்கையாகச் செல்லும்; எங்கள் காதலிகளின் கிளாசுக்கு சென்றிருந்தோம். அங்கே காதலிகளின் அருகே அமர்ந்து அவர்கள் சாப்பிடும் மதிய உணவைப் பார்த்து கமெண்ட் அடித்துக் கொண்டிருந்தோம். அதிலும் என் காதலி தினமும் சாப்பிடும் தயிர் சாதத்தைப் பார்த்து "நாமெல்லாம் தயிர் சாதம் ஃபேமிலியாடா ராஜா.." என்று கமெண்ட் அடித்தேன்.

கோபம் வந்த அவள் "ஆமாடா... நானெல்லாம் தயிர்சாதம் தான்.. நீ சாயபு வீட்டுப் பையன் தானே, என்னிக்காவது எனக்கு பிரியாணி கொண்டு வந்திருக்கியா.." என்று கேட்டாள்.

"அதெப்படி என்னப்பார்த்து அப்படிச் சொல்லிட்டே... நானே பிரியாணி சூப்பரா சமைப்பேனாக்கும்" என்று ஒரு பிட்டைப் போட்டேன்.

"ஓ அப்படியா, எங்கே எனக்கு பிரியாணி வச்சு, நாளைக்கு கொண்டு வா பார்க்கலாம்.." என்று எனக்கு அல்வா கொடுக்கப் போகும் காதலி கேட்டாள்.

"நாளைக்குத் தானே... கண்டிப்பா கொண்டு வர்றேன்.. பாரு" என்று அடுத்த பிட்டை போட்டுவிட்டு அங்கிருந்து நகர்ந்தேன்.

அன்று சாயங்காலம், வீட்டுக்குப் போயி... "அம்மா.. அம்மா.. என் ஃப்ரெண்டு கிஷோர் இருக்கான் தானேம்மா... அவனுக்கு பிரியாணி வேணுமாம்.. கொஞ்சம் செய்து கொடும்மா.." என்று கோரிக்கை வைத்தேன்.

"போடா.. பொளப்பத்தவனே... கஞ்சி சோத்துக்கே இங்க வழியக்காணோம்.. இதுல இவரு சேக்காளிக்கு பிரியாணி செய்து கொடுக்கணுமாம்" என்று என்னை விரட்டியடித்தார் என் தாய்க்குலம்.

"ஐயய்யோ... நம்ம வேற வெட்டி பந்தா விட்டுட்டு வந்திருக்கோமே... நாளைக்கு பிரியாணி கொண்டு போகலேனா... நம்ம டப்பா டான்ஸ் ஆடிடுமே.." என்று நினைத்துக் கொண்டே அருகிலிருக்கும் ஏரியா நண்பன் ஹாருனின் சைக்கிள் கடைக்குச் சென்று நிலைமையை எடுத்துக் கூறினேன்.

ஹாருன் தான் எங்கள் ஏரியாவில் இருக்கும் என் போன்ற ஏழை இளைஞர்களின் காதல் தெய்வம். எட்டாம் வகுப்பு வரை எம்பி எம்பி படித்த அவன், அதற்கு மேல் உயரமும் வளரவில்லை, தேர்ச்சியுமடையவில்லை. அதனால் குடும்பத் தொழிலான சைக்கிள் வாடகைக்கு விடும் கடையை நடத்துபவன்.

அந்த சைக்கிள் கடையில் போய் அமர்ந்து, அந்த வழியாக போய் வரும் பஸ்களில் ஜன்னலோரத்தில் அமர்ந்திருக்கும் ஃபிகருகளைக் காட்டி, "மச்சான் இந்த ஃபிகரு உனக்கு செட் ஆகுமா பாருடா... உன் அழகுக்கு கண்டிப்பாக செட் ஆகும்டா" என்று சொல்லி ஏத்திவிட்டா போதும் பத்து ரூபாய் நிச்சயம் கிடைக்கும். அவ்வாறே அன்றும் ஒரு பத்து ரூபாய் சம்பாத்திதேன்.

அடுத்த நாள் காலையில் நேராக அஜ்மீர் பிரியாணி ஹோட்டல் போய், ஒரு அரை பிரியாணியும், குவார்ட்டர் சுக்காவும் வாங்கிப்போய், காதலியிடம் நீட்டினேன். காதலி ருசித்து சாப்பிட்டதை ரசித்தேன்.

"நீயே தான் பண்ணினியா... அடிக்கடி கொண்டு வா.." என்று சொன்னாள்.

"அடிக்கடியா......... சரி வாங்கி வருகிறேன்.." என்று சொல்லி அடிக்கடி ஹாருன் கடைக்கும் சென்றேன்.

இதற்கிடையில், ஹாருன் ரூட்டுப் போட்ட அனைத்து ஃபிகர்களும் ஒன்றன்பின் ஒன்றாய் டாட்டா காட்டிவிட, காதல் தெய்வம் இனிமேல் யாருக்கும் உதவப் போவதில்லை என்ற சத்தியப் பிரமாணம் செய்து வைத்திருந்தான்.

என்னுடைய பிட்டுகள் எதுவும் ஒர்க் அவுட் ஆகாததால், அவனுடைய கடையில் மாலை வேளைகளில் ஓரிரு சைக்கிள்களுக்கு பஞ்சர் ஒட்டி, அதன் வருமானத்தில் காதலிக்கு பிரியாணி வாங்கிக் கொடுத்துக் கொண்டிருந்தேன்.

அவள் பிரியாணி சாப்பிடும் அழகை ரசிப்பதற்காக, பிச்சை கூட எடுக்கலாம். இப்படியே நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக பாய் கடை பிரியாணி உதவிக் கொண்டிருந்தது.

நான் வாங்கும் பாய் கடை பிரியாணி என்று தெரியாமலேயே, பிரியாணி நான் செய்தது என்று தான் நம்பிக் கொண்டிருந்தான் கிஷோர். பிரியாணி வாங்கும்போது ஓரிரு முறை விஜய்யும் என்னுடன் வந்திருப்பதால், இதை யாரிடமும் சொல்லக் கூடாது என்று அவனிடம் சத்தியம் வாங்கியிருந்தேன்.

அப்போது தான் வந்தது சத்திய சோதனை. கிஷோரின் அம்மா மற்றும் அப்பாவை சந்திக்க அவர்களது வீடிருக்கும் சேலத்திற்கு சென்றிருந்தேன்.

அடுத்த நாள் ஞாயிற்றுக் கிழமை என்பதால், கிஷோரின் அம்மா ஆட்டுக்கறி வாங்கி சமைப்பதற்கு தயாராகிக் கொண்டிருந்தார்.

"அம்மா.. அம்மா... ராஜா அருமையா பிரியாணி செய்வாம்மா... இந்தக் கறிய அவன்கிட்ட கொடும்மா, சூப்பரா பிரியாணி செய்வான்மா" என்று கிஷோர் சொல்ல...

"அப்படியா கண்ணு இந்தா கறி இருக்கு.. நீ பிரியாணி செய்யு.. நான் பக்கத்தில இருக்க மவ வூட்டுக்குப் போயிட்டு வர்றேன்..." என்று சொல்லிவிட்டு அவர்கள் சென்றுவிட்டார்கள்.

"அட.. இப்பவாவது உண்மையச் சொல்லலாமேடா... புள்ளி" அப்படினு பக்கிரி கேட்கிறதுல நியாயம் இருக்குது தான். என்னத்த செய்ய அறியாப் பருவம்.. தெரியாத வயசு... ஊருலகத்துகிட்ட விட்ட வெட்டி பந்தாவ கடைசி வரைக்கும் காப்பத்தறது தானே.. அப்போதைய பழக்கம்.

கிஷோர் அம்மாவும் போயாச்சு.. "டேய்.. மாப்ளே உன் பேரச்சொல்லி நான் வேற பந்தா உட்ருக்கேன்டா.. என் மானத்த வாங்கிடாதடா.." என்று கிஷோரும் சொல்லிவிட்டு குளிக்கப் போயிட்டான்..

அதே இந்தக்காலமா இருந்தா என் வூட்டுக்காறி கிட்ட போனைப் போட்டு.. "அன்பே, அத்தான் சிக்கல்ல சிக்கிட்டு சீக்கியடிக்கிறான்.. காப்பாத்து என் காவல் தெய்வமே..." என்று சொன்னா போனிலயாவது ரெசிபி கொடுத்து என்னக் காப்பாத்துவா..

சரி.. நடப்பது கண்டிப்பா நடந்தே தீரும்... நம்மல்லாம் என்னிக்கு பயந்திருக்கிறோம்.. நம்ம பார்க்காத தோல்வியா இல்ல அல்வாவா... அப்படினுட்டு.. கண்ணமூடி அம்மா செய்ற பிரியாணியயும் அதன் செய்முறையையும் நினைத்துப் பார்த்து மனதில் ஏற்றிக் கொண்டேன்.

"ப்ளிஸ் ஹெல்ப் மி.." என்று அஜ்மீர் அவுலியா, ஏர்வாடி இப்ராஹிம் பாதுஷாவையெல்லாம் துணைக்கு வைத்துக் கொண்டு, அடுப்பில ஒரு சட்டிய வச்சு.. அதுல கொஞ்சம் எண்ணையை ஊற்றி.. எண்ணை காஞ்சதுக்கப்புறம் வெங்காயத் தூவல்களை போட்டு வதக்கினேன்.

வதக்கினேன், வதக்கினேன் வெங்காயம் வதங்கி அது கருப்பும், சிவப்புமா தி.மு.க கலராகுறது வரைக்கும் வதக்கினேன்.

அதுல கொஞ்சம் பட்டை, ஏலக்காய், கிராம்பு பொடிகளைப் போட்டு மேலும் வதக்கினேன். தி.மு.க கலர் போய் தி.க கலர் வந்திடுச்சு. அதாங்க கருப்புக் கலர்.

அப்புறம் செஞ்சத எல்லாம் குப்பைல கொட்டிட்டு, மீண்டும் பழைய படி ஆரம்பித்து பி.ஜே.பி கலரில வதக்கி முடித்தேன். அதுல தக்காளிய அதிகமாப் போட்டு வதக்கி, அதில் வெட்டி வைத்த கறியையும் போட்டு வதக்கினேன். "எத முன்னாடி போடணும் எத பின்னாடி போடணும்கிற வித்தியாசம் இல்லாம.. மனசுப்படி போட்டு பிரியாணிக்குத் தேவையான மசாலா பேஸ்டை உருவாக்கிவிட்டேன்".

ஒரு வழியாக சட்டியில் இருக்கும் பேஸ்டிலிருந்து பிரியாணி ஸ்மெல் வந்தது. போனஸாக சாம்பார் ஸ்மெல்லும் வந்தது. காரணம் − மல்லித்தூள் மற்றும் மிளகாய்த்தூளை கொட்டும் போது தெரியாமல் சாம்பார் தூளையும் கொட்டிவிட்டேன்.

சட்டியில் இருக்கும் பேஸ்டில் தண்ணீரை ஊற்றி, ஊறவைத்த அரிசையையும் போட்டு உலையில் வைத்தேன். சிறிது நேரம் கழிந்து நான் சமைத்த பிரியாணி ரெடி. ஸ்மெல் கூட ஓ.கே தான்..

ஆனா.... சுவை தான் பிரியாணி போல இல்லை. வேறெப்படியிருக்கும் என்பதை உங்கள் ரசனைக்கு விட்டு விடுகிறேன்.

(மீண்டும் அடுத்த வெட்டி பந்தாவில் சந்திப்போம்)


பாகம் 1 (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=308411&postcount=1)

lolluvathiyar
07-12-2007, 01:30 PM
ஆகா படுமோசமான ஆளய்யா கடையில வாங்கிய பிரியானியை வச்சே, காதலிக்கு கொடுத்து வந்தீங்களா. அப்படியும் கூட ஆள கவுத்த முடியலியா. இதே காதல் மன்னன் இதயம் அன்னாவா இருந்திருந்தா இட்லி கொடுத்தே கவுத்தீருப்பாரு.

நானும் வெட்டி பந்தா விட்டவன் தான் ஆனாலும் உங்கள் அளவுக்கு இல்ல சாமி. நான் சமயல் ரூம் பக்கமெல்லாம் போய் ரிஸ்க் எடுத்தவனில்ல



அவனுடைய கடையில் மாலை வேளைகளில் ஓரிரு சைக்கிள்களுக்கு பஞ்சர் ஒட்டி, அதன் வருமானத்தில் காதலிக்கு பிரியாணி வாங்கிக் கொடுத்துக் கொண்டிருந்தேன்.


அட பாவமே இந்த அளவுக்கு மனோதிடமும் திறமையும் இரு ந்திருக்கு அதை எதுக்கு பயன்படுத்திருக்கீங்க பாருங்க. இப்படிதான் எல்லாரும் செய்துவிட்டு கடைசியில மத்தவங்கள திட்டுவாங்க.

என்ன இருந்தாலும் இந்த காதல் (அல்லது கவர்ச்சி) க்கு இருக்கர பவரே தனிதானுங்க



ஆனா.... சுவை தான் பிரியாணி போல இல்லை. வேறெப்படியிருக்கும் என்பதை உங்கள் ரசனைக்கு விட்டு விடுகிறேன்.


வேற எப்படி இருந்திருக்கும் அரிசியும் பருப்புல மட்டன கலந்த மாதிரி இருந்திருக்குமா

அன்புரசிகன்
07-12-2007, 01:44 PM
பிரியாணி போட்டே உங்க காதல வளர்த்திருக்கீங்க.... :D :D :D

பிரியாணிக்காதல்.... சூப்பர்....

அடுத்த பந்தா எப்போது?

நுரையீரல்
07-12-2007, 05:56 PM
ஆகா படுமோசமான ஆளய்யா கடையில வாங்கிய பிரியானியை வச்சே, காதலிக்கு கொடுத்து வந்தீங்களா. அப்படியும் கூட ஆள கவுத்த முடியலியா. இதே காதல் மன்னன் இதயம் அன்னாவா இருந்திருந்தா இட்லி கொடுத்தே கவுத்தீருப்பாரு.
அவரு வாயிலயே ஏரோப்ளேன் விட்ருவாரு... அவருக்கு மச்சம் இருக்குங்க வாத்தியாரே... எல்லா ஃபிகருங்களும் இவரு பின்னாடித்தான் சுத்தணும்... நமிதா வந்தாலே பார்க்கமாட்டாராமில்ல...

உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி வாத்தியாரே...

நுரையீரல்
07-12-2007, 06:00 PM
பிரியாணி போட்டே உங்க காதல வளர்த்திருக்கீங்க.... :D :D :D
பிரியாணி போட்டு காதல் எங்கே வளர்ந்தது? இருந்தாலும் இன்றும் மறக்க முடியாத சம்பவங்கள்... நீங்கவேற இது வேற பார்ட்டிங்க அன்பு...


அடுத்த பந்தா எப்போது?
நிறைய பந்தா இருக்குங்க... அதெல்லாம் கணக்கே இல்லாம இருக்கு... ஒண்ணு ஒண்ணா போடுறேன் அன்பு...

சிவா.ஜி
08-12-2007, 07:16 AM
பிரியாணி செய்யத்தெரியுன்னு சொல்லி பந்தா பண்ணி நொந்தா போய்ட்டீங்க....அய்யோ பாவம்.எங்க வீட்ல செய்யும்போது நால்ல வந்துதே....இங்கே ஏன் வரலன்னு பாவமா ஒரு லுக் விட்டிருந்தீங்கன்னா....அவங்களும் பாவம் பையன்னு நெனைச்சிருப்பாங்க.
இன்னும் நெறைய பந்தா இருக்கா? அவுத்து விடுங்க...ராசா...

இதயம்
08-12-2007, 07:47 AM
யோவ்.. உம்ம வாழ்க்கையில உண்மைங்கிற பேச்சுக்கே இடமில்லையா..? ஏதேது... எல்லா அனுபவத்தையும் எழுதணும்னா உம்ம ஆயுள் போதாது போலிருக்கே..!! கவலையே படவேணாம்.. வெட்டி பந்தாவில் உங்களை யாரும் முந்த சான்ஸே இல்ல..!! (நல்லா நாக்கை பிடுங்கிற மாதிரி நாலு வார்த்தை நறுக்-னு சொல்லலாம்னா தாய்க்குலம் வந்து சாமியாடிட்டு போவுது..!!:sauer028::sauer028: இந்தாளை எப்படி போட்டு தாக்குறதுன்னு தெரியலையே..!! ம்ம்ம்ம்.. யோசிப்போம்..!:confused::confused:)

உங்க கதைய இதுக்கு முன்னாடி யார்க்கிட்டயாவது சொன்னீங்களா..? அத வச்சித்தான் பாலாஜி சக்திவேல் காதல்-னு படமா எடுத்துட்டாரு..! அங்க பரத்.. இங்க புள்ளி..! அங்க பைக் மெக்கானிக் ஷாப்.. இங்க சைக்கிள் கடை..!! எல்லாம் ஒத்து வருது.. ஆனா, காதல் பட க்ளைமாக்ஸ்ல பரத் திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டுல பைத்தியமா அலையிற மாதிரி சீன் வரும்..! அப்படி எதுவும் நல்லது நடந்தது மாதிரி தெரியலையே..! ஒரு வேளை இனிமேத்தான் வருமோ..?! பரத்தோட கம்பேர் பண்ணி பேசிட்டன்னு ரொம்ப பூரிக்க வேணாம்.. நான் க்ளைமாக்ஸை மனசுல வச்சித்தான் சொன்னேங்கிறது மனசுல இருக்கட்டும் மாப்ளோய்..!!:D:D

மக்களே, நம்ம மாப்புக்கிட்ட செய்முறை தெரியாம பிரியாணி செய்ற ஒரு டேலண்ட் மட்டும் இருக்குன்னு தப்பா நினைச்சிக்காதீங்க யாரும்..! நிறைய்ய இருக்கு.. உதாரணத்துக்கு பேசவே தெரியாம பேசுவாரு (அப்புறம் மாத்து நடக்கும்.. அது ஆஃப் ஸ்க்ரீன் சமாச்சாரம்..!!) .. உலக நடப்பு தெரியாம உலகத்தை அலசுவாரு.. பொண்ணுங்களை புரிஞ்சுக்காம அவங்க பின்னாடி அலைவாரு.. அவ்ளோ ஏங்க.. நமீதா கால்ஷீட் ரேட் தெரியாம ஜொள்ளு விடுவாருன்னா பாத்துக்கங்களேன்..! இப்படி பல திறமை கையில் வச்சிருக்கிற சகலகலா வல்லவன் அவர்..!!

வெட்டி பந்தாவ தொடர்ந்து எழுதுங்க ராசா.. இங்க எழுதி, எழுதி தான் செஞ்ச எல்லா பாவத்தையும் தொலைக்கணும்..!!:frown::frown:

பூமகள்
08-12-2007, 09:05 AM
ராஜா அண்ணா...!
வெட்டி பந்தாவின் அடுத்த நிலை வந்தாச்சா..???
பிரியாணி வாங்க... சைக்கிள் டியூப் எல்லாம் பஞ்சர் ஒட்டி... ஹேட்ஸ் அஃப் டூ யூ..!:icon_b:
அந்த காத(ச)லீ ரொம்பவே கொடுத்து வைத்தவர் தான்..!:D
ஆனாலும்.. உங்க பந்தா பஞ்சரான கதையை இப்படி சஸ்பென்ஸா வச்சிட்டீங்களே...! :rolleyes:
சீக்கிரமா அடுத்த பாகம் போடுங்க ராஜா அண்ணா. :)

நுரையீரல்
08-12-2007, 09:12 AM
பிரியாணி செய்யத்தெரியுன்னு சொல்லி பந்தா பண்ணி நொந்தா போய்ட்டீங்க....அய்யோ பாவம்.எங்க வீட்ல செய்யும்போது நால்ல வந்துதே....இங்கே ஏன் வரலன்னு பாவமா ஒரு லுக் விட்டிருந்தீங்கன்னா....அவங்களும் பாவம் பையன்னு நெனைச்சிருப்பாங்க.
உங்க அளவுக்கு புத்தி இருந்துச்சுன்னா, நான் ஏங்க பக்கிரி வாயில எல்லாம் விழுந்து மாட்டிக்கிறேன்...

பக்கிரி மாதிரி மச்சக்காரணுமில்ல...

நுரையீரல்
08-12-2007, 09:16 AM
நமீதா கால்ஷீட் ரேட் தெரியாம ஜொள்ளு விடுவாருன்னா பாத்துக்கங்களேன்..! இப்படி பல திறமை கையில் வச்சிருக்கிற சகலகலா வல்லவன் அவர்..!!
ஏங்க நான் நமிதாவ மறந்தாக்கூட நீங்களே ஞாபகப் படுத்திவிடுவீங்க போல... அந்தளவுக்கு நமிதா பைத்தியமா நீங்க...

ஓஓஓஓஓஓஓ... நீங்கெல்லாம் கால்சீட், கைசீட் ரேட் தெறிஞ்சுட்டுத் தான் ஜொள்ளு விடுவீங்களோ... சரியான வேசக்காரப் பையளுகையா நீங்க..

நுரையீரல்
08-12-2007, 09:23 AM
பிரியாணி வாங்க... சைக்கிள் டியூப் எல்லாம் பஞ்சர் ஒட்டி... ஹேட்ஸ் அஃப் டூ யூ..!:icon_b:
அந்த காத(ச)லீ ரொம்பவே கொடுத்து வைத்தவர் தான்..!:D
என்னக் கல்யாணம் பண்ணாம அல்வாக் கொடுத்திட்டுப் போனதால, அந்தக் காதலி ரொம்பவே கொடுத்து வைத்தவரா???

நான் என்ன சொல்ல வர்றேனு புரிஞ்சுதா??? இது வேற பார்ட்டிம்மா....

நான் என்ன ஒரே ட்ரைல லவ் சக்ஸஸ் ஆகுற அளவுக்கு - இதயம் போல மச்சக்காரப் பையனா... இல்ல ஊருல இருக்குற பொண்ணுக எல்லாம் இதயம் பொண்டாட்டி மாதிரி ஒண்ணும் தெரியாத அப்பாவிகளா...

பூமகள்
08-12-2007, 09:28 AM
நான் என்ன சொல்ல வர்றேனு புரிஞ்சுதா??? இது வேற பார்ட்டிம்மா....
அச்சச்சோ...!:confused:
தவறா ஆளைக் கற்பனை பண்ணிட்டேனா...??:sprachlos020::eek:
மன்னிச்சிருங்க அண்ணாவ்..!:icon_ush::icon_ush:
இப்போ விளங்கிட்டது. என் அண்ணி இதைப் பார்ப்பதற்குள் பூ எஸ்கேப்...!! :icon_rollout:

இதயம்
08-12-2007, 09:50 AM
இதயம் போல மச்சக்காரப் பையனா... இல்ல ஊருல இருக்குற பொண்ணுக எல்லாம் இதயம் பொண்டாட்டி மாதிரி ஒண்ணும் தெரியாத அப்பாவிகளா...

நீங்க சொன்ன பொய்யிலயே பெரீய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய 2 பொய் இது தான்பா..!!

என்னப்பா.. பூவு அவசர, அவசரமா மொபைலை தேடுது..?? புடிங்கப்பா அத முதல்ல... எம்பொண்டாட்டியோட மொபைல் நம்பர் அது கிட்ட இருக்கு..!!:traurig001::traurig001:

இதயம்
08-12-2007, 09:54 AM
என்னக் கல்யாணம் பண்ணாம அல்வாக் கொடுத்திட்டுப் போனதால, அந்தக் காதலி ரொம்பவே கொடுத்து வைத்தவரா???

பின்ன இல்லையா..? உங்களை கட்டியிருந்தா காலம் முழுக்க அந்த பொண்ணுக்குல்ல மலர் ஊர் அல்வா கிடைச்சிருக்கும்..???! ம்ம்ம்.. எல்லாருக்குமா தப்பிக்கிற வாய்ப்பு கிடைக்குது..? பாவம் அந்த பொண்ணு..!! நான் தப்பிச்ச பொண்ணை சொல்லலை.. மாட்டிக்கிட்ட பொண்ணை சொன்னேன்..!!!:D:D:D

இதயம்
08-12-2007, 09:56 AM
ஏங்க நான் நமிதாவ மறந்தாக்கூட நீங்களே ஞாபகப் படுத்திவிடுவீங்க போல...

அடப்பாவி.. பயபுள்ளை எப்படி நடிக்குது..??!! யோவ்.. அந்த ஆஸ்கார் அவார்டை கொண்டு வந்து இவர் கையில் கொடுங்கைய்யா..!!:eek::eek: