PDA

View Full Version : ஞாபகக் குறிப்பேடு



அமரன்
06-12-2007, 12:36 PM
நேசரிடீச்சரின் முதுகில்
நெஞ்சு சாய்த்ததும்
பாட்டியின் இடுப்பில்
தினம் செய்த சவாரிகளும்..

மதகு மறைவில்
மடத்தல் பிஸ்கட் தின்றதும்
தேயிலை ரின் மெலிவில்
முதுகில் டின் கட்டப்பட்டதும்..

ஊர் பொதுக் கிணத்தண்டை
சன்லைட்டின் வாசம் பிடித்ததும்
பட்டுப்பாவாடைகளின் அழகை
பயிர்களுக்கு கவிதையாகப் பொழிந்ததும்.
பருகிய பயிர்கள் ஓங்கிச் செழித்ததும்..

முன்மேசைத் தோழியின்
மமதை பிடித்த பின்னல் நுனி
என்கை சேர்ந்ததும்
வாத்தியார் வாலை நறுக்கியதும்..

எத்தனையோ ஞாபகங்கள்
ஞாபகப் பரணைவிட்டு இறங்கமுயல.
முட்டுக்கட்டையாக
அவைகளின் ஞாபகக்குறிப்பேடாக.நீ.....

அறியாத வயசில்..
தந்தை கட்டிய தூளி
அறுபட்டுப்போனாலும்
அறுபடாமல்
தந்தை நாட்டிய தூளி நீ...

யார்த்தான் நாமமிட்டார்களோ
"ஆயி"ல் மரமென்று
உனக்குப் பொருத்தமாக.......!

ஆயுள் உள்ளவரைக்கும்
உள்ளுக்குள் நிலைத்திருப்பாய்
ஆயுளுடன் உள்ளாயா?
உன்னிலை யாருக்குத் தெரியும்

என்னிலை யாருக்குப் புரியும்?

அன்னையோ
அந்நியன் பூமியில்..
அன்னைபூமியோ
அந்நியன் பிடியில்...

ஆதி
06-12-2007, 12:46 PM
என் பல்யங்களையும் முன்னுக்கு இழுத்து கண்ணுக்குள் உலவவிட்டு சென்றது கவிதை..

தாய்நாட்டின் அடிமை நிலையை சொன்ன வரிகளில் வார்த்தைகளும் தழுதழுக்கிறது..


வாழ்த்துக்கள் அமரன்..


-ஆதி

இளசு
10-12-2007, 08:45 PM
ஒரு தொடர் போர்ச்சூழலும்,
வலுக்காட்டாயப் புலம்பெயர்தலும்
எத்தனை மனச்சித்திர இழப்புகளை
எத்தனை மனிதர்களிடம் நிகழ்த்திவிடுகிறது..

தனிமனிதத் துயரமும் சமூகத்துயரும்
சங்கமமானால் மட்டுமே
இத்தனை ஆழமான படைப்புகள்
நெஞ்சுக்குழி பிளந்து வெளிவரும்..

விக்கித்து நிற்கிறேன் அமரா...
புரிதலுண்டு என்னிடம்..
புலர்தல் எவ்விடம்?

அறிஞர்
10-12-2007, 10:04 PM
காலம் கொடுத்த மாற்றங்கள் தான் எத்தனை....
ஞாபகத்தில் நிற்கும் எண்ணங்கள் தான் எத்தனை...

அமரன்
11-12-2007, 06:56 AM
பால்யகாலங்கள், பட்டரணங்கள் என்ற இரட்டை குளவிகள் மறைய நினைத்தாலும் பிடித்து இழுத்துப்பிடித்திருக்கும் ஒரு ஜீவன்... பலதடவை வெளிவரத்துடிக்க, வேண்டாம் என்ற எனது துடிப்பில் அடங்கிப்போன கவிதை. உரமிட்ட மூவருக்கும் நன்றி.

சிவா.ஜி
11-12-2007, 07:20 AM
இனிப்பை உண்ணும்போது இடறும் கல்லைப் போல...பால்ய நினைவோடு சேர்ந்து வரும் இந்த தாய் மண்ணின் இன்றைய நிலை.
ஆயில் மரத்தின் ஆயுள் மிக நீண்டது...நாளைய சுதந்திர சமுதாய சிறுவர்களும் தூளி கட்டி ஆடுவார்கள்....அப்போதும் ஒரு அமரன் அதை எழுதலாம்..ஆனால் இடறும் கல்லின்றி.
வாழ்த்துகள் அமரன்.

சுகந்தப்ரீதன்
12-12-2007, 01:55 PM
அன்பு அமர் அண்ணா...! ஏக்கங்களுடனும் நினைவுகளை நினைத்து பார்ப்பது எத்தனை வலி நிறைந்த விசயம்.. ஆழமான கருவை அமைதியான வடிவில் கவிதையாக்கி உள்ளீர்கள்.. வாழ்த்துக்கள் அண்ணா..!

ஷீ-நிசி
12-12-2007, 03:06 PM
முன்மேசைத் தோழியின்
மமதை பிடித்த பின்னல் நுனி
என்கை சேர்ந்ததும்
வாத்தியார் வாலை நறுக்கியதும்..

இது அப்படியே நான் முதல் வகுப்பில் படித்தபோது எனக்கு ஏற்பட்ட அனுபவம்...

ஆனால் மேசை இல்லை.. தரையில் அமர்ந்தபடி செய்த விளையாட்டு. டீச்சர் நல்லா ஸ்கேலாலயே அடிச்சாங்க...

ஞாபக குறிப்பேடு ஞாபகங்கள் பலவற்றை கிளறியது அமரா....

வாழ்த்துக்கள்!

அமரன்
17-12-2007, 03:33 PM
ஷீயின் நினைவுகளைக் கிளறியதில் இரட்டிப்பு மகிழ்ச்சி.
சிவாவின், ப்ரீதனின் நம்பிக்கையூட்டம் புத்துணர்ச்சி த்ருகின்றது
நன்றி நண்பர்களே.

ஓவியன்
19-12-2007, 10:29 AM
என்னிலை யாருக்குப் புரியும்?

நமக்கும் புரியும் அமர்...!!

இத்துணை நாட்கள் பொத்தி, பொத்தி
வைத்த ஞாபகங்களை
இன்னும் கொஞ்ச நாள் பொத்தி வையுங்கள்
புலரும் தாயகத்தில்
புதினத் தாளில் பழையவற்றை
புதியனவாய் அசைபோடும் நாள் வரை....

நல்ல வரிகள், நாசூக்காய் நளினமாய் நம்மையும்
நாத் தழு தழுக்க வைக்கின்றன - பாராட்டுக்கள் நண்பா!

ஓவியன்
19-12-2007, 10:30 AM
இது அப்படியே நான் முதல் வகுப்பில் படித்தபோது எனக்கு ஏற்பட்ட அனுபவம்...
ஆனால் மேசை இல்லை.. தரையில் அமர்ந்தபடி செய்த விளையாட்டு. டீச்சர் நல்லா ஸ்கேலாலயே அடிச்சாங்க...!

அட, நீங்களுமா......??? :D:D:D

IDEALEYE
19-12-2007, 01:00 PM
ஞாபகம் வருது எல்லாமே ஞாபகம் வருது.
அமரன் தொடங்க எமக்கும் எல்லாமே ஞாபகம் வருது
வாழ்த்துக்கள் அமரன்
ஐஐ

அமரன்
19-12-2007, 03:13 PM
அட, நீங்களுமா......??? :D:D:D


ஞாபகம் வருது எல்லாமே ஞாபகம் வருது.
அமரன் தொடங்க எமக்கும் எல்லாமே ஞாபகம் வருது
வாழ்த்துக்கள் அமரன்
ஐஐ


இப்பத்தான் புரியுது..
மக்களெல்லாம் என்னய போலவே
அட்டகாசம் பண்ணியிருக்காங்க..
சந்தோசமாக உணர்கின்றேன்.
நன்றி தோழர்களே..

ஓவியன்
19-12-2007, 03:34 PM
இப்பத்தான் புரியுது..
மக்களெல்லாம் என்னய போலவே
அட்டகாசம் பண்ணியிருக்காங்க..
சந்தோசமாக உணர்கின்றேன்.
நன்றி தோழர்களே..

ஹீ,ஹீ, இன்னும் நிறையக் கூறலாம்
ஆனால்
ஆனால், இப்போ
காலம் நேரம் சரியில்லை
அதனால்.........

:icon_ush: :icon_ush: :icon_ush:

சாம்பவி
20-12-2007, 05:54 AM
மனிதம் வெட்டுவோர்....
மரத்தையாவது
விட்டு வைக்கட்டும்..... !

ஆதவா
05-01-2008, 07:07 PM
ஞாபகத்தைக் கீறும் கவிதையாகக் கண்டுகொண்டாலும் ஏனோ வேதாளம் முருங்கையில் ஏறியதைப் போல மீண்டும் ஈழத்தையே கவிதை சுற்றிவருகிறது... ஈழக் கவிஞர்களே! கொஞ்சம் தாய்நாட்டுக் கவிதைகளை தள்ளி வைத்துவிட்டு வேறுவிதத்தில் கொடுங்கள்...

பெரும்பாலும் புயலுக்கு முந்திய அமைதியை ஞாபக அசை போடும் மனது. அதிலிருந்து விலகி அமைதியில் இருந்த பூரணத்தை முழுமையாக எழுத முற்படுவதும் தவறல்லவே! கவிதையின் ஞாபகக் குறிப்புகள் ஒவ்வொன்றும் எல்லா கிராமத்து, அல்லது அந்த சுவாசம் புசித்த மனிதர்களுக்கு நினைவுறுத்துவதாகவே உள்ளது.. கவிதையின் வெற்றி இது.

மெல்ல தடம் மாறி பயணிக்கும் பறவையைப் போல அன்னை நிலத்தின் ஆக்கிரமிப்பைத்தான் எனது ஞாபகம் என்று அறிவுறுத்துவதை ஏற்க என்னால் இயலவில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ருசி.. அதில் தவறில்லை.

நினைவுகளை உசுப்பிவிட்ட கவிதைகளை எளிதில் மனம் புறக்கணிப்பதில்லல..

வாழ்த்துகள்

rocky
06-01-2008, 07:11 AM
மிகவும் அருமையான கவிதைவரிகள் தோழர் அமரன் அவர்களே,

பழைய நியாபகங்களில் மூழ்குவது என்றுமே ஆனந்தம்தான், ஆனால் அது நல்ல அனுபவங்களாக இருக்கும் பட்சத்தில், படித்தவர்களின் குழந்தைப்பருவத்தை நினைவுபடுத்தியதில் உங்களின் கவிதைக்கு வெற்றி கிடைத்துவிட்டது, ஆனால் கவிதையில் உள்ள உங்களின் சோகத்திற்கு எங்களால் நிச்சயம் ஆறுதல் மட்டுமே கூற முடியும், நிச்சயம் உங்களின் நிலை மாறும். நம்பில்லையுடன் காத்திருங்கள். நன்றி தோழரே.

அமரன்
19-01-2008, 08:14 PM
கவிதைகள்
தனக்காகவும் பிறர்க்காவும் எழுதப்படுகின்றது..
நான் எழுதுவது குண்டுமணி அளவு-அதிலும்
எனக்காக நான் எழுதுவது ஊசிமுனை அளவு..
ஊசி முனை அணு இது. நாடில்லாமல் நானேது?

உளிகளெதுவும் வலிக்கவில்லை.. இனிக்கிறது.
நன்றி நண்பர்களே

சாலைஜெயராமன்
19-01-2008, 08:25 PM
நாடில்லாமல் நானேது?
உளிகளெதுவும் வலிக்கவில்லை.. இனிக்கிறது.
நன்றி நண்பர்களே

பிறந்த வீட்டின் பெருமை பேசாத பேச்சு என்ன பேச்சோ?

தங்கள் கவிதையில் இழைந்தோடும் சோகம் அனைவரிடமும் உங்களை அன்னியப்படுத்திவிடும் அமரன்.

சகோதரர்களாய் நாம் இருக்க, தாய்நாட்டை இழந்த தவிப்பு வரக் கூடாது அமர். விடியும். ஒரு நாள் விடியும். இந்தியா சந்திக்காத போராட்டமா. அந்நியனின் கொடுமையை அழித்துவிட்டது அஹிம்சையின் சக்தியால்தானே. அமைதிப் பூங்காவாக இலங்கையை ஆக்கும் நல்லோரின் துணை வெகு சீக்கிரம் வரட்டும். அனைத்து ஈழ சகோதர சகோதரிகளின் பாதுகாப்பான நல்வாழ்வுக்கு நாமெல்லோரும் பிராத்திப்போம்.

ரொம்ப தாக்கமுள்ள ஒரு சீரியஸான கவிதை. பாராட்டுக்கள்.

அமரன்
19-01-2008, 08:37 PM
நம்பிக்கை தரும், எதார்த்தங்களை கொண்டுள்ள வார்த்தைகள். நான் எந்த நாட்டினன் என்பது பல நாட்களின் பின்னரே மன்றசொந்தங்கள் பலருக்கு தெரிந்திருக்கும். இன்னும் பலருக்கு தெரியாதும் இருக்கலாம்.. இவற்றிலிருந்து உங்கள் அலைவரிசையில் நானும் என்பதை உணரலாம் அய்யா

எனக்கு தொட்டில் கட்டியது ஒரு மரத்தில். ஊரில் இருந்த குழந்தைப்பராயத்தில் பெரும்பான்மைக் கூடாக இருந்தது அதே மரம்.. எமது வீட்டு பெரியோர்கள் பலருக்கும் இதே நிலை.. இன்று கூட எனது ஊர் ஞாபகங்களுக்கா திறவுகோலாக, குறிப்பாக இருப்பது அம்மர நினைவுதான்.. அம்மரத்தின் இப்போதைய நிலை எனக்குத் தெரியாது. அதற்குக்காரணம் நாட்டு நிலைமை. அதனாலேயே அது கவிதையில் அழையா விருந்தாளி ஆகிவிட்டது..