PDA

View Full Version : நம் காதல்

ஆதி
06-12-2007, 10:03 AM
எதிர்வீட்டு முற்றத்தில் விழுகின்ற
இன்நிழலே; இதயத்து அடிப்பரப்பில்
உதிர்கின்ற மலர்சுணையே; எதற்காக
உன்நினைவால் வாட்டுகிறாய் என்னை ?
அதிர்வேட்டு மௌனத்தில் வார்த்தைகளை
அடக்கிவிட்டு; பெரும்பாலும் புன்னகையில்
புதிர்ப்போட்டு போகின்றாய்; அடி,எப்படி
பொருள் கொள்ள உன்னை ?

கடிகார முட்கடந்து கசிகின்ற
கணங்களை, கைப்பற்றி, நெஞ்ச
அடிவாரத்தில் அழகழகாய் விண்மீன்போல்
அடுக்கிவைத்தேன் உன்னோடிருந் த,ஞாபகமாய்...
அடிப்பாதம் எடுத்து வந்து,உன்
ஆசைகள் அத்தனையும் நீசொல்லி
முடிப்பதற்குள் நம்பெற்றவரின் காதுகளில்
முழங்கிவிட்டான் எவனோ பாதகமாய்..

வெட்கத்தில் நீஎழுதிய வெண்பா
வெறும்பாட் டானதடி; விழியோர
முட்துளியை தூறிப் போன
முகிலே!என் மேலென்ன வெறுப்பா ?
துட்ட கனவையெலாம் நிறம்நிறமாய்
தூவி, வீசினாயே தூக்கமற்ற
வெட்டவெளியில்; எதைப்பருகி என்காதல்
விரக்தி ஆற்ற,எரி நெருப்பா ?
-ஆதி

செந்தமிழரசி
06-12-2007, 02:02 PM
அறுசீர் விருத்தம், அலங்கார சொல்லாடல், உண்மையிலே கலக்குறீங்க ஆதி.

வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து எழுதுறீங்க. இன்னும் நிறை எழுதுங்க ஆதி.

உண்மையில் உங்களுக்கு நல்ல எதிர்காலமுள்ளது.

வாழ்த்துக்கள் ஆதி

ஆதி
06-12-2007, 05:30 PM
அறுசீர் விருத்தம், அலங்கார சொல்லாடல், உண்மையிலே கலக்குறீங்க ஆதி.

வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து எழுதுறீங்க. இன்னும் நிறை எழுதுங்க ஆதி.

உண்மையில் உங்களுக்கு நல்ல எதிர்காலமுள்ளது.

வாழ்த்துக்கள் ஆதி

பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி.. ஊக்கத்திற்கும் நன்றிகள்..

-ஆதி

யவனிகா
06-12-2007, 06:48 PM
தயிரோடு
தமிழ் கலந்து
உன் தாய்
உனக்கு ஊட்டியிருப்பாளோ?

உன்னுடைய
எழுத்தாணி
ஏதாவது
மனோவசியம்
கற்றுள்ளதோ?

வார்த்தைகள்
உன் விரல் பட்டால்
தாங்களாகவே
கவிதைகளாய்
மலருமோ?

அன்புத்தம்பி ஆதி−உன்
வசீகரக் கவிதைகளால்
மன்றத்தோடு சேர்த்து
எங்கள் மனதையும்
வசமாக்குகிறாய்...

ஆதவா
07-12-2007, 04:11 AM
மலரில் மலர்ந்த நெருப்பாக கவிதை..

உயிர்" கொடுத்த கவிதை வார்த்தைகள் இங்கும். அங்கே அது உயிர் என்றால் இது மெய்யாக.

கடிகார முட்கடந்து கசிகின்ற --- பூமகளின் ஒரு கவிதை நேற்று படித்தேன்... ஆகாதவர்கள் செய்யும் காரியமாம் அது.... அதை அப்படியே மாற்றி காதலில் புகுத்திய விதமும் அருமை.

அடி - பாதம்
பாதம் - அடி ஆக்ஸிமோரான் (நன்றி ஷீ)

நேரில் கண்ட காட்சியைப் போல மின்னுகிறது கவிதை... அது நல்ல உரத்துக்கான விதை.

முகில் தூவும் முற்கள், நீர் பிடித்து பொத்தி வைக்க, அவள் வீசும் கனவும் அதுவே..

வாழ்த்துகள் ஆதி

பிச்சி
07-12-2007, 06:51 AM
ரொம்ப அழகா இருக்குங்க கவிதை..

காதல் கவிதயிலேயே வித்தியாசமா இருக்கு. மனதோடு ப்பிணைந்து வந்தத வரிகள் நீங்கள் எழுதியவை.
சூப்பர்ப் கவிதை அண்ணா.

அன்புடன்
பிச்சி

ஆதி
07-12-2007, 07:44 AM
தயிரோடு
தமிழ் கலந்து
உன் தாய்
உனக்கு ஊட்டியிருப்பாளோ?

உன்னுடைய
எழுத்தாணி
ஏதாவது
மனோவசியம்
கற்றுள்ளதோ?

வார்த்தைகள்
உன் விரல் பட்டால்
தாங்களாகவே
கவிதைகளாய்
மலருமோ?

அன்புத்தம்பி ஆதி−உன்
வசீகரக் கவிதைகளால்
மன்றத்தோடு சேர்த்து
எங்கள் மனதையும்
வசமாக்குகிறாய்...

இந்த கவிதையப் படித்து முடித்தவுடன் எனக்கு ஞாபகம் வந்த விடயம் இதுதான், ஒருமுறை அரசியலமைப்பு சட்டப்படி தி.மு.கழகத்தின் ஆட்சி கவிழ்கப்பட்டது, அந்த தாக்கத்தில் வைரமுத்து ஒரு கவிதை எழுதினார், அதில் இப்படி ஒரு வரி வரும்..

அனார்கலிக்கு பிறகு
உயிரோடுப் இங்கு
புதைக்கப்பட்டது
ஜனநாயகம்தான்

இதற்கும் என் பின்னூட்டத்திற்கும் என்ன சம்பந்தம் என கேட்பீராயின், நிச்சயமாய் எந்த சம்பந்தமும் இல்லை என்பதே என் பதில்..

ஆனால் கலைஞர் ஒரு பதில் சொன்னார் அந்த கவிதையை வாசித்துவிட்டு.. இதுப் போல ஒரு கவிதைகிடைக்கும் எனில் எத்தனைமுறை வேண்டுமானாலும் நான் ஆட்சி இழக்கத்தயார்..

முத்தமிழரிஞரே அப்படி மனம் நெகிழ்ந்தால்..

நான் இப்படிச் சொல்வது தவறில்லை.. இப்படி ஊட்டகவிதை பின்னூட்டமாய் வருமெனில் இதுப்போல மரபுக்கவிதைகள் எழுத நானும் தயார்.

மனம் நெகிழ்ந்த நன்றிகள் யவனிகா அக்கா..

-ஆதி

ஆதி
07-12-2007, 11:03 AM
மலரில் மலர்ந்த நெருப்பாக கவிதை..

உயிர்" கொடுத்த கவிதை வார்த்தைகள் இங்கும். அங்கே அது உயிர் என்றால் இது மெய்யாக.

கடிகார முட்கடந்து கசிகின்ற --- பூமகளின் ஒரு கவிதை நேற்று படித்தேன்... ஆகாதவர்கள் செய்யும் காரியமாம் அது.... அதை அப்படியே மாற்றி காதலில் புகுத்திய விதமும் அருமை.

அடி - பாதம்
பாதம் - அடி ஆக்ஸிமோரான் (நன்றி ஷீ)

நேரில் கண்ட காட்சியைப் போல மின்னுகிறது கவிதை... அது நல்ல உரத்துக்கான விதை.

முகில் தூவும் முற்கள், நீர் பிடித்து பொத்தி வைக்க, அவள் வீசும் கனவும் அதுவே..

வாழ்த்துகள் ஆதி

கடிகார முள் கடந்து, இதுப் பல நாட்களாய் மனதில்நான் அசைப்போட்ட வார்த்தைகள்..

சில விடயங்களை வார்த்தைகளாக்கி மனதினூள் சேமித்து தகுந்த தருணத்தில் தகுந்த இடத்தில் கொடுப்பதுதானே கவி மனம்..

இந்த வரிகள் அறுசீருக்குள் அடங்குமெனத் தோன்றியது அமர்த்திப்பார்த்தேன் அடங்கியது..

என் வேண்டுகோளேற்று படித்துப் பொறுமையாய்ப் பின்னூட்டம் தந்ததிற்கு மிக்க நன்றிகள் ஆதவா..

-ஆதி

ஆதவா
07-12-2007, 11:09 AM

ஆதி, இதென்ன அறுசீருக்குள் அடங்குவது???

ஆதி
07-12-2007, 11:15 AM
ஆதி, இதென்ன அறுசீருக்குள் அடங்குவது???

அறுசீர் விருத்தமாகத் தானே கவிதை எழுதினேன், அதில் கச்சிதமாய் பொருந்தும் என தோன்றியது, ஏனெனில் புதுக்கவிதையில் உள்ள வசதி மரபில் கிடையாது, எதுகை மோனை என்னும் எத்தனை இடரல்கள்..
அதைத்தான் அறுசீரில் அடுங்குமேன தோன்றியது என்றேன்..

-ஆதி

ஆதவா
07-12-2007, 11:23 AM

மன்னிக்கவும் ஆதி... நீங்கள் அதை மனதில் வைத்து சொல்வதாக இருப்பின் எனக்கு நிச்சயம் தெரியாது..... (பிழை திருத்துக என்றதும் வேறேதோவென்று நினைத்தேன்.)

அறுசீர் (கழிநெடிலடி) ஆசிரிய விருத்தம் என்று நீங்கள் குறிப்பிடுவது தெரிகிறது... ஆனால் ஆசிரியப்பாவின் இலக்கணம் இங்கே துளியுமில்லையே ஆதி.

கவனிக்க முதற் மூன்று சீர்களே தளை தட்டுகிறது...

புதுக்கவிதையில் உள்ள வசதி... மரபில் இல்லை.. - இது எனக்கு உடன்பாடில்லாதது.. எதையும் சொல்லும் வசதி புதுக்கவிதையைவிட மரபுக்கு உண்டு.... அதில் எதுகை மோனை இடஞ்சலாக இருக்கக் கூடாதென்பது என் கொள்கை.

ஆதி
07-12-2007, 11:43 AM

இலக்கணமில்லைப் ஒப்புக்கொள்கிறேன்.. வரிகளை மடக்கி வார்த்தைகளை அமர்த்தி எதுகை மோனைக்கு வசதி செய்துக் கொடுத்து எழுதியதுதான் இக்கவிதை.. பாக்குறிய இலக்கணத்தில் கவனம் காட்டவில்லை.. கவிதைப் படிப்பவரைச் சென்றடைய வேண்டுமென்கிறப் புதுக்கவிதைக் கொள்கையே..
அதற்கு முழுமுதற் காரணம்..
பின் எதுகை மோனை எதற்கு என நீங்கள் கேட்டகளாம், மரபுக்கவிதை எழுதாவிடினும் மரபு மாதிரி எழுதிவிடுவதற்குதான்.. இலக்கண மரபை திரிக்கும் நோக்கம் துளியுமில்லை..

-ஆதி

ஆதவா
07-12-2007, 11:52 AM
இலக்கணமில்லைப் ஒப்புக்கொள்கிறேன்.. வரிகளை மடக்கி வார்த்தைகளை அமர்த்தி எதுகை மோனைக்கு வசதி செய்துக் கொடுத்து எழுதியதுதான் இக்கவிதை.. பாக்குறிய இலக்கணத்தில் கவனம் காட்டவில்லை.. கவிதைப் படிப்பவரைச் சென்றடைய வேண்டுமென்கிறப் புதுக்கவிதைக் கொள்கையே..

பின் எதுகை மோனை எதற்கு என நீங்கள் கேட்டகளாம், மரபுக்கவிதை எழுதாவிடினும் மரபு மாதிரி எழுதிவிடுவதற்குதான்.. இலக்கண மரபை திரிக்கும் நோக்கம் துளியுமில்லை..

-ஆதி

ஓ!, இந்த விதத்தில் நானும் எழுதியதுண்டு. அது பால்யகாலத்தில்.. மரபுக் கவிதை இவ்வளவுதான் என்று இலக்கணம் நானாக வகுத்து எழுதியது.... (பிறகுதான் தெரிந்தது தளையெல்லாம்..)

மோனை எதுகை தொடைகள் புகுத்துவது புதுக்கவிதையிலும் இருக்கிறது. மரபு மாதிரி என்பதைவிட புதுக்கவிதை என்றே சொல்லிவிடலாம்... ஆனால் நோக்கம் நன்றுதான்..

இதே நோக்கத்தில் நான் எழுதிய முதற்கவியும் இங்கே (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7344) உள்ளது..

முற்றிலும் மரபல்லாவிடினும், மோனை அடுக்கல் இங்கே (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11093) உள்ளது...

ஆதி
08-12-2007, 03:32 PM
ரொம்ப அழகா இருக்குங்க கவிதை..

காதல் கவிதயிலேயே வித்தியாசமா இருக்கு. மனதோடு ப்பிணைந்து வந்தத வரிகள் நீங்கள் எழுதியவை.
சூப்பர்ப் கவிதை அண்ணா.

அன்புடன்
பிச்சி

பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி தங்கையே..

-ஆதி