PDA

View Full Version : துண்டு நிலா



IDEALEYE
06-12-2007, 04:30 AM
புன்னகை
விசும்பல் விரக்தி
சோகம்
எல்லாத்தினதும்
அடையாளம்
துண்டு நிலா

பிச்சைக்காரனின்
இருண்ட வாழ்வின்
எஞ்சியுள்ள ஒரேயொரு
நம்பிக்கை
பிச்சைப்பாத்திரம்
துண்டு நிலா

மாடிவீட்டு்
வேலைக்காரி அவசரமாய்
பொரித்துப்போட்ட
அப்பளம்
சின்னச்சில்லரைக்குள்
வயிற்றை நிரைக்கும்
சைவக்கடை
தோசை
துண்டு நிலா

விடிகாலையில்
சகுணம் தொலைக்க
காக்கைக்கு
போடுவதற்கு
இரவு எடுத்து
வைத்த
துண்டு ரொட்டி

விடிகாலையில்
அச்சுக்குப் போகும்
மாசிகையில் பிரசுரிக்க
அவசரமாக
எழுதும்
சின்னக்கவிதைக்காக
நான் வரைந்து வைத்த
சிறுகுறிப்புகள்...

என் வாரிசு
சொன்னது
நான் சொல்வதையும்
சேர்த்துக்கொள்ளுங்கள்
பிஸ்டா - டிஷ் அண்டனா
வீல் கவர்
இவைதான்
துண்டு நிலா

வானத்தைப் பார்த்தேன்
நிலா சிரித்தது மௌனமாக
சொன்னது என்னில்
மாற்றம் இல்லை
தோழா
IDEAL I

சுகந்தப்ரீதன்
06-12-2007, 04:52 AM
வானத்தைப் பார்த்தேன்
நிலா சிரித்தது மௌனமாக
சொன்னது என்னில்
மாற்றம் இல்லை
தோழா
IDEAL I
அருமையான வரிகள் ஐடியல்.. இயற்கை அப்படியேதான் இருக்கிறது.. நாம்தான் மாறிக்கொண்டிருக்கிறோம் காலத்தோடு சேர்ந்து தினம்தினம்.. நல்ல கற்பனை.. பல்லாங்குழின் ஒற்றை நாணயம் நினைவுக்கு வருகிறது உங்கள் கவிதையை கண்ட போது.. வாழ்த்துக்கள் நண்பரே...!

அமரன்
06-12-2007, 07:23 AM
சிற்றின்பம் பேரின்பம் என இன்பம் இருவகையாக வகுக்கப்பட்டுள்ளது.. சிற்றின்பத்தைக் குறிக்க நீங்கள் துண்டுநிலாவைக் குரியீடாக்கியுள்ளீர்கள் என்று நினைக்கின்றேன். இறுதியில் நிலாவின் வாய்வழி இன்பம் எல்லாம் ஒன்றுதான் என்று அறிவுறுத்துகின்றீர்கள் போலும்.

நிலைக்கேற்ப இன்பவழங்கிகள் வேறுபடுகின்ற என்பது நிதர்சனமானது. அதை உங்கள் கவிதை பிரதிபலிக்கின்றது. பாராட்டுகள் ஐடியல்.

அமரன்
06-12-2007, 07:24 AM
இக்ககவிதையை புதியகவிதைகள் பகுதிக்கு நகர்த்தியுள்ளேன்

ஓவியன்
09-12-2007, 02:14 PM
மூலப் பொருள் ஒன்றெனினும் அதைப் பார்க்கும் விதத்தில், பார்பவர் கண்ணோட்டத்தில், பார்க்கப்படும் தருணங்களில் அந்த பொருளது உருவகம் வேறுபடும்....

கருத்து அழகானது, ஆனால் அதைச் சொல்ல எடுத்துக் கொண்ட வரிகள் கொஞ்சம் நீளமானதாக தெரிகிறதே ஐஐ...!!