PDA

View Full Version : கறுப்புக் காதலர் தினம். 3



யவனிகா
05-12-2007, 03:00 PM
கறுப்புக் காதலர் தினம் − 1


நான் கூறப் போவது பத்து வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம். அப்போது நான் காலேஜ் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தேன்.எங்கள் செட்டுக்கு வைக்கப்பட்டிருந்த பெயர் "அராத்து நம்பர் இரண்டு". முதலாமிடத்தைப் தக்கவைத்துக் கொண்டிருந்தவர்கள் சாட்சாத் எங்கள் சீனியர்கள் தான்.

வேறு துறைகளைச் சேர்ந்த எல்லாரும் கர்மமே கண்ணாகப் படிக்கும் போது...நாங்கள் மட்டும் கேண்டீனே கதியாகக் கிடப்போம். கேட்டால் படிப்பது "கேட்டரிங்"...கேண்டீனில் தான தொழில் கத்துக்க முடியும் என்போம்.

கல்லூரி நிர்வாகம் கொடுமையான விதிகளை விதித்திருந்தது.செமஸ்டருக்கு ஒரே ஒரு நாள் மட்டும் தான் லீவ் எடுக்க முடியும்.மீறி எடுத்தால் இன்டெர்னல்லில் கை வைக்கப் படும்.கலேஜ் கட் அடிக்க முடியாது.வகுப்பு நேரங்களில் வெளியே செல்வதென்றால், ஹெச்.ஓ.டி. யின் கேட் பாஸ் வேண்டும்.

இத்தனை தடைக்கற்களையும் நாங்கள் வெற்றிப் படிக்கட்டுகளாய் மாற்றினோம்.எப்படியா?
வாட்ச்மேன் எங்கள் கையில். "அண்ணா...எப்படின்னா நீங்க காதல் கோட்டை அஜீத் மாதிரியே இருக்கீங்க...தினமும் குங்குமப் பூ போட்டுப் பால் குடிப்பீங்களோ...என்னன்னு சொன்னா நாங்களும் ட்ரை செய்வோமில்லன்னு" ந்னு ஒரு பிட்டைப் போட்டு அவரு ஆன்னு வாயைப் பிளக்கிற நேரத்தில எஸ்ஸாயிடுவோம்.அவரு கேட்ல இல்லன்னா...ஒரு கருத்துக் கண்ணாயிரம் உக்காந்திட்டு இருக்கும்.அது இதுக்கெல்லாம் மயங்காது. அதுக்கும் ஒரு வழி வெச்சிருந்தோம்.கேட் பாஸ்ல எல்லா டிபார்ட்மெண்ட் ஹெச்.ஓ.டி. மாதிரியும் கையெழுத்துப் போட்டு நீட்டுனா முடிஞ்சது. இதுக்குன்னே கையெழுத்து நிபுணி ஒருத்தியும் கூடவே இருப்பா.ஒரு புதுப்படம் விட்டு வைக்க மாட்டோம்.

எங்க செட்ல நான் தான் கொஞ்சம் அப்பாவி. மத்ததுங்க எல்லாம் வெளைஞ்சதுங்க. இப்பிடி நாங்க கேண்டீனும்..பஜ்ஜியுமா...கேட்டரிங் படிக்கும் போது ராதிகான்னு ஒருத்திக்கு பொறந்த நாள் வந்தது. பிப்ரவரி 14. வரம் வாங்கிப் பொறந்தவ. எத்தன நாள் தான் பொறந்த நாளை ஹோட்டல்யும், தியேட்டரிலயும் கொண்டாடறது...ஒரு சேஞ்சுக்கு நேட்டிவிட்டியோட கொண்டாடலாம்னு நாங்கெல்லாம் முடிவு செஞ்சோம்.

ராதிகாவோட வீடு கோவையில்...சிறுவாணி பக்கத்தில பூளுவாம்பட்டி.தோட்டத்துக்கு நடுவில...பக்கா பண்ணை வீடு...அவ அம்மா நல்ல கோழி பிரியாணி செய்வாங்க. எனவே அங்க தான் பிறந்த நாள் கொண்டாட்டம்னு முடிவு செய்தோம்.எங்க கேங்கில் இருக்கும் ஹாஸ்டல்வாசிகளுக்கும் கஸ்டப்பட்டு அவுட்பாஸ் வாங்கி தயாரானோம்.பாதிப்பேர் வர மறுத்து விட்டார்கள். ஏன்னா அன்னைக்கு காதலர் தினம் ஆகையால்...ரொம்ப பிஸி அவரவர் ஜோலிகளில்...எனக்கு வேறு வழியில்லை...ஏன்னா என் இப்போதைய கணவரும் அப்போதைய காதலருமானவர், சென்னை போயிருந்தார். எனக்குத் திருமணம், நிச்சயிக்கப் பட்டு இருந்தது. வெளி நாடுகளில் இருக்கும் உறவுகள் வந்து வாழ்த்த வேண்டி திருமணம் தள்ளிப் போடப்பட்டிருந்தது.

சம்பவம் நடந்த அன்று ஞாயிறு...கறுப்பு நாயிறு...வீட்டை விட்டுப் புறப்பட்ட போதே என் பாட்டி கேட்டார்கள். "ஏன்டி,ஞாயித்துக் கிழமையில கூட வீடு அடங்க மாட்டியா?எங்க போற" என்று.

"ம்ம்ம்.என் மாப்பிள்ளை கூட ஓடிப் போப் போறேன். அடுத்த வருடம் உனக்கு கொள்ளுப் பேத்தியோட வருவேன் காத்திரு" என்று எகத்தாளமாக பதிலளித்தபோது எனக்குத் தெரிந்திருக்கவில்லை...அன்று எத்தனை வேதனைப் படப்போகிறேன் என்று,,,,

தொடரும்...


பாகம்−2; (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=308379&postcount=49) பாகம்−3 (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=308786&postcount=64)

அறிஞர்
05-12-2007, 03:18 PM
ஆஹா அருமையாக லூட்டியில் ஆரம்பித்தது...

கடைசியில்... த்ரில்லாக நிப்பாடியது... கொஞ்சம் வருத்தத்தை வரவழைக்கிறது....

தொடருங்கள்.. தோழியே..

iniya
05-12-2007, 04:23 PM
ஆகா நல்ல சுவாரிசியமாக ஆரம்பித்துவிட்டு
இப்படி முடிச்சுடீங்களே?? அப்படி என்ன நடந்தது?
ரொம்ப சோகமா??? சீக்கிரம் அடுத்த பதிவைப் போடுங்கோ

பூமகள்
05-12-2007, 05:25 PM
யவனி அக்கா..!
சூப்பர் கேங்க் தான் நீங்க..! இந்த மாதிரி ஒரு நாள் கூட நான் கட் அடிக்கலையே..!!
அடடா... ஆனால்.. கட் அடிச்சிருக்க கூடாதோன்னு உங்க கடைசி சஸ்பென்ஸ் நினைக்க வைக்குது..!!

என்ன அக்கா.. இப்படி பதைபதைக்க வச்சிட்டீங்க..?? சீக்கிரமா அடுத்த பதிவு போடுங்க..!!

கலக்கல் பதிவு.. தலைப்பு தான் பயத்தைக் கிளப்புது..!

அன்புரசிகன்
05-12-2007, 06:19 PM
விரைவான அடுத்தரா தாருங்கள்.........................................

மலர்
05-12-2007, 06:30 PM
யவனிஅக்கா..
காலேஜி லூட்டியா.... :D:D
ஹீ..கண்டினியூ..


யவனி அக்கா..!
சூப்பர் கேங்க் தான் நீங்க..! இந்த மாதிரி ஒரு நாள் கூட நான் கட் அடிக்கலையே..!!
பூ நிஜமா சொல்லு..
காலேஜ கட் அடிச்சதே இல்லைன்னு..:D:D

அன்புரசிகன்
05-12-2007, 06:43 PM
பூ நிஜமா சொல்லு..
காலேஜ கட் அடிச்சதே இல்லைன்னு..:D:D

அதெல்லாம் சும்மா.... கட் அடிக்காத மாணவர் இவ்வுலகில் ஏது....?

மலர்
05-12-2007, 06:49 PM
அதெல்லாம் சும்மா.... கட் அடிக்காத மாணவர் இவ்வுலகில் ஏது....?
அதான..
பூ... நான் தலையில ஏற்கனவே பூ வச்சிருக்கேன்...
இந்த லுலுவாயி பொய்யை எல்லாம் நம்ப மாட்டேன்..

அமரன்
05-12-2007, 06:56 PM
நீங்க அப்பாவி.. நம்பிட்டோம். நீங்கள் தொடருங்கள்..
(கர்மம்=கருமம் ஆ?

அமரன்
05-12-2007, 06:58 PM
பூ நிஜமா சொல்லு..
காலேஜ கட் அடிச்சதே இல்லைன்னு..:D:D
உண்மைச்சொன்னால் யாரும் புரிஞ்சுக்கவே மாட்டேங்கிறாங்க.
புரியாதவங்களுக்காக
வெளிவேலைகள் கட்டடித்துத்தான் பூ காலேஜ் போவாங்க..

அமரன்
05-12-2007, 06:59 PM
அதான..
பூ... நான் தலையில ஏற்கனவே பூ வச்சிருக்கேன்...
இந்த லுலுவாயி பொய்யை எல்லாம் நம்ப மாட்டேன்..
அதானே ..
திருப்பதிக்க்கே லட்டா. சத்தியராஜுக்கே அல்வாவா..

மலர்
05-12-2007, 07:10 PM
வெளிவேலைகள் கட்டடித்துத்தான் பூ காலேஜ் போவாங்க..
அமரன் ...
ஒரு பூவை புயலாக மாற்றிவிட்டீர்கள்...

அமரன்
05-12-2007, 07:14 PM
அமரன் ...
ஒரு பூவை புயலாக மாற்றிவிட்டீர்கள்...
இரண்டை ஆக்க நினைத்தேன்..
ஒன்றானதில் வருத்தம் அடைகின்றேன்..

மலர்
05-12-2007, 07:20 PM
இரண்டை ஆக்க நினைத்தேன்..
ஒன்றானதில் வருத்தம் அடைகின்றேன்..
பூமகளோடு தான் பூ இருக்கும்...
ரெண்டாய் எல்லாம் பிரிக்க முடியாது..

அமரன்
05-12-2007, 07:23 PM
பூமகளோடு தான் பூ இருக்கும்...
ரெண்டாய் எல்லாம் பிரிக்க முடியாது..
பூமகளோடு பூ இருந்தால் வாடியிருக்கும் மலரே... ஏன்?

இளசு
05-12-2007, 08:40 PM
என்னது.. அந்தக்குழுவில் நீங்கதான் அப்பாவியா?
மத்ததெல்லாம் வெளஞ்சதா????

அப்படீன்னா......... ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்!

சுவாரசியமாய் சொல்லத்தெரிந்த உங்களுக்கு
ஆர்வம் கிளப்பும் இடத்தில் தொடரும் போடவும் வருகிறது..

சிறுகதைகள் தாண்டி தொடர்கதை வெல்லும் அடுத்த படி இது..

வாழ்த்துகள் யவனிகா!

நேசம்
05-12-2007, 08:51 PM
விறுப்பான தொடர்கதை மாதிரி சுவாரஸ்யமான இடத்தில் தொடர் போட்டு விட்டிர்கள்.அடுத்து என்ன நடந்தது என்று அறிய ஆவல்.எல்லாம் செய்து விட்டு அப்புறம் அப்பாவின்னு சொன்ன எப்படி நம்புவது யவனியாக்கா

சிவா.ஜி
06-12-2007, 04:14 AM
செம ரவுசுப் பார்ட்டிங்களாத்தான் இருந்திருக்கிறீங்க....கையெழுத்து போடடறதுக்குன்னே கூட ஒரு நிபுணியுமா...?நீங்க படிச்ச காலேஜ் நான் படிச்சிக்கிட்டிருந்த சமயங்களில் எங்களுக்கெல்லாம்.....பிருந்தாவனம்.ஆனாலும் ரொம்ப கண்டிப்புதான்.அதையும்தாண்டி இத்தனை லூட்டி அடிச்சிருக்கீங்கன்னா....பயங்கர ஆளுங்கதான்.அப்பாவியே இந்தப் போடு போட்டா இன்னும் வெவரமானவங்க என்னா போடு போட்டிருப்பாங்க....?ரொம்ப சுவாரசியமா இருக்கும்மா யவனிகா.சீக்கிரம் அடுத்த பாகத்தைக் கொடுங்க.

Ram-Sunda
06-12-2007, 04:25 AM
கதையின் தலைப்பே கதையின் உட்கருத்தை காட்டும் போல, தொடரும் போட்டு ஆவலை தூண்டிவிட்டீர்கள்...
வாழ்த்துக்கள் யவனிகா

சுகந்தப்ரீதன்
06-12-2007, 04:37 AM
விருவிருப்பா கொண்டு போயி தொடரும் போட்டு எதிர்பார்ப்ப கூட்டிட்டீங்க.. கடைசியில ஆப்பிரிக்கா காதலர்களை பாத்ததால அது கறுப்பு காதலர் தினம்ன்னு சொல்லி கவுத்துடாதிங்க அக்கா..?!

யவனிகா
06-12-2007, 05:11 AM
அடடா... ஆனால்.. கட் அடிச்சிருக்க கூடாதோன்னு உங்க கடைசி சஸ்பென்ஸ் நினைக்க வைக்குது..!!



கட்டடிச்சி ஊர் சுத்தப் போவதெல்லாம் உண்மைதான்...ஆனால் அன்று கண்டிப்பாக கட் அடிக்கலை பூவு..நல்ல பில்ளையா சொல்லிட்டுத்தான் கிளம்பினேன்.என்ன செய்யறது அன்னைக்கு விதி எனக்கு ஓவர் டைம் பாத்திருக்கு போல?

யவனிகா
06-12-2007, 05:18 AM
என்னது.. அந்தக்குழுவில் நீங்கதான் அப்பாவியா?
மத்ததெல்லாம் வெளஞ்சதா????

அப்படீன்னா......... ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்!

சுவாரசியமாய் சொல்லத்தெரிந்த உங்களுக்கு
ஆர்வம் கிளப்பும் இடத்தில் தொடரும் போடவும் வருகிறது..

சிறுகதைகள் தாண்டி தொடர்கதை வெல்லும் அடுத்த படி இது..

வாழ்த்துகள் யவனிகா!

கண்டிப்பா இந்த ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் க்கு எனக்கு அர்த்தம் தெரியல....நீங்க வேணா எங்க காலேஜ் போயிப் பாருங்களேன்....கட்டிடத்திறப்புக் கல்வெட்டுக்குப்பக்கத்தில "96−99 சிறந்த பேக்கு − யவனிகா" அப்படின்னு சிறப்புக் கல்வெட்டு வெச்சிருப்பாங்க.

யவனிகா
06-12-2007, 05:21 AM
பூ நிஜமா சொல்லு..
காலேஜ கட் அடிச்சதே இல்லைன்னு..:D:D

விடு மலரு...இந்த மாதிரி நல்ல புள்ளைங்க க்ளாசில அமைதியா பாடம் கேட்டாத் தான் நாம கட்டடிக்க வசதியா இருக்கும். இல்லைன்னா...வெறும் பென்சுக்கு பாடம் எடுத்த வெறுப்பில....லெக்சரர் நமக்கும் சேத்து ஆப்பு வெக்கும்...

யவனிகா
06-12-2007, 05:28 AM
விறுப்பான தொடர்கதை மாதிரி சுவாரஸ்யமான இடத்தில் தொடர் போட்டு விட்டிர்கள்.அடுத்து என்ன நடந்தது என்று அறிய ஆவல்.எல்லாம் செய்து விட்டு அப்புறம் அப்பாவின்னு சொன்ன எப்படி நம்புவது யவனியாக்கா

நானும் பொறுத்துப் பொறுத்துப் பாத்து பொங்கி எழுந்திட்டேன்...எப்பப்பாரு எம்பேர ஸ்பெல்லிங் மிஸ்டேக்கோட அடிக்கறதே இந்த நேசத்துக்கு வேலையாப் போச்சு...யாவனியக்கா...யவானியக்கா...யார் கூடவாச்சும் சேந்து கூட்டு சதி பண்றீங்களோ?
25 தரம் "யவனிகா" ந்னு இம்போசிசன் எழுதினாத் தான் கதை சொல்லுவேன். சரியா?

அன்புரசிகன்
06-12-2007, 05:35 AM
நான் ஏற்கனவே சொல்லியிருக்கேன். யக்கா என்று போட்டு அழைப்பவர்கள் ஏதோ ஒரு உள்க்குத்து வைத்து தான் கூப்பிடுகிறார்கள் என்று.... அந்த யக்கா, யக்கோ ஆகாது பார்த்துக்கொள்ளுங்கள். :D :D :D

யவனிகா
06-12-2007, 05:37 AM
நீங்க படிச்ச காலேஜ் நான் படிச்சிக்கிட்டிருந்த சமயங்களில் எங்களுக்கெல்லாம்.....பிருந்தாவனம்.ஆனாலும் ரொம்ப கண்டிப்புதான்.

அண்ணா.......நான் படிச்சிட்டு இருந்தப்போ...க்ளாஸ்ரூம்மாடில இருந்து பாத்தா வெளிய ரோட்டில ஆளுங்க போறது வர்றது....பசங்க நின்னு நிதானமா டீக் குடிச்சிட்டு போறது...தூரத்தில தெரியற ஜன்னல் வழியா அவங்க ஆள் முகம் தெரியுதான்னு தேடறதுன்னு...எல்லாம் தெரியும்....

ஒரு பையன் வெளிய நின்னு ரொம்ப லூட்டி செஞ்சான்னு...அவனுக்குத் தெரியாமயே, அவன போட்டோ எடுத்து..."காலேஜுக்கு வெளியே களவாணிப் பயல்" அப்படின்னு போஸ்டர் அடிச்சு அவன் நிக்கிற இடத்திலயே ஒட்டி வெச்சோம். அந்த பையன் முகம் இன்னும் ஞாபகம் இருக்கு...ஆனா அந்த பையனுக்கு இப்ப ஒரு 45 வயசாயிருக்குமோ? உங்கள ஒரு தரம் பாத்தாப் போதும் கரக்டா கண்டு பிடுச்சிடுவேன்....

அன்புரசிகன்
06-12-2007, 05:45 AM
அப்டீன்னா சிவா தான் அந்த களவானிப்பயல்... அதுவும் 45 வயது களவானிப்பயல். சிவா.... இந்த வயசுலயும் உங்களுக்கு அது பிருந்தாவனமா தெரியுதா? அல்லது பிருந்தாத வனமா தோன்றுமா???

ஆனாலும் யவனிகாவுக்கு மெமறிப்பவர் ரொம்ப அதிகம். அதிகமாக வல்லாரை சாப்பிடுவீங்களோ...?

உங்க ஆத்துக்காரருக்கு உங்களின் 1% அவது இருக்கா??? :D

இதயம்
06-12-2007, 05:55 AM
பல முறை படித்த, கேட்ட வார்த்தை..! ஆனால், இன்றும் அதன் முழுப்பொருள் விளங்கா வார்த்தை இந்த ஹ(அ)ராத்து..!:smilie_abcfra: அதற்கான பொருள் தெரிய இப்போது வாய்ப்பு வந்திருப்பது போல் ஒரு உணர்வு எனக்கு இந்த பதிவை படித்ததில். காரணம், என்னை மக்கள் நல்லவன்(!) என்பார்கள்.:D:D அதனாலென்னவோ எனக்கு நல்லவனுக்கான சரியான பொருள் தெரியும் (அப்படி பொருள் தெரியாதவர்கள் 5000 இ-பணத்துடன் என்னை தனிமடலில் தொடர்பு கொள்க..!). அந்த அடிப்படையில் ஹ(அ)ராத்து குழுவில் இருந்த யவனிகாவுக்கு இந்த வார்த்தையின் முழு அர்த்தம் தெரியும், தெரிய வேண்டும்..!! எனவே, என்னைப்போன்ற அப்பாவிகள் களவும் கற்று மற என்ற அடிப்படையில் தெரிந்து கொள்ள அதன் அர்த்தத்தை வெளியிடுமாறு அப்பாவிகள் சங்கத்தின் சார்பில் அவரை கேட்டுக்கொள்கிறேன்..!!

எனக்கு வாழ்க்கையில் நிறைய குறைகள் உண்டு. அதில் பெரிய குறை நான் பெண்ணாக பிறக்கவில்லையே என்பது தான். காரணம், பெண்ணாக பிறப்பதில் ஒன்றும் செய்யாமலேயே பல அனுகூலங்களை பெற முடியும். அதில் சில அனுகூலங்கள் தான் யவனிகா தன் பதிவில் சொன்ன காலேஜ் கட்டடிக்க செய்யப்படும் வழிமுறைகள்.!! எந்த ஊரில் வாட்ச்மேனிடம் நீங்க அழகா இருக்கீங்க..? என்று ஆண்கள் சொன்னால் மகிழ்ந்து வெளியே போக அனுமதிக்கிறார்கள்.? அப்படி சொன்னால் பிறகு அவர்கள் எச்சரிக்கை ஆகி தனக்கு பள்ளம் தோண்டப்படுவது தெரிந்து எல்லைகளை இன்னும் கடுமையாக்குவார்கள்.!! எனக்கு தெரிந்து எதிர்பாலினரை கலாய்ப்பதில் பெண்கள் சளைத்தவர்கள் அல்ல. இந்த பயத்திலேயே நான் என் புள்ளிராஜா மாப்ளை மாதிரி பெண்களின் பின்னால் சுற்றித்திரிந்த அனுபவம் இல்லை..!:D:D

கதை சுவராஸியத்தில் கண்டு கொள்ளமாட்டோம் என்று பெரும் பொய்யை வெகு சுலபமாக பதிவாளர் சேர்த்திருக்கிறார். அது அவர் கொஞ்சம் அப்பாவி டைப்பாம்.! அது கணித முறையிலேயே தவறென்று நிரூபிக்கப்பட்ட விஷயம் இது. கணிதவியலின் படி அராத்து + அப்பாவி= பாவி. எப்படியா..? இந்த இரண்டும் சேரும் போது அ-வுக்கு அ-அடிபட்டு இறுதியில் மிஞ்சுவது ப்பாவி..! அதை பிரித்தால் இப்ப + பாவி = ப்பாவி..!!:D:D இதிலிருந்தே தெரிகிறதா..? அவர் சொன்னது எவ்ளோ பெரிய பொய் என்று..?!! இப்ப தானே தொடரும் போட்டிருக்கிறார். இனி வரும் சுவராஸிய பகுதிகள் படித்தால் இப்ப என்பதும் அடிபட்டு நிரந்தர பாவியாகும் வாய்ப்பிருக்கிறது..!:icon_b::icon_b: அதுவரை ஆவலுடன் காத்திருப்போம், அந்த பாவிக்காக... மன்னிக்க.. அடுத்த பதிவிற்காக..!!!:icon_rollout::icon_rollout:

சிவா.ஜி
06-12-2007, 06:26 AM
அந்த போஸ்டரை அடிச்சது யாரோ தெரியல(கண்டிப்பா உங்க குரூப் இல்ல...ஏன்னா அப்ப நீங்க குட்டிப் பாப்பா...அம்மா மடியில இருந்திருப்பீங்க)ஆனா அந்த பையன் நானில்ல...சும்மா பஸ்ஸுல போகும்போது பாக்கறதோட சரி.அதுலயும் என் நன்பன் ஒருத்தன் சரியா குறிபாத்து ஒரே ஜன்னலையே பாத்துக்கிட்டு வருவான்.இப்ப கூட அவன் கழுத்து ஒரு பக்கமா சாஞ்சிதான் இருக்கும்.
(அன்பு, கன்ஃபெர்ம்-ஆ பண்றீங்க...இருங்க இருங்க.....)

இதயம்
06-12-2007, 06:29 AM
அப்டீன்னா சிவா தான் அந்த களவானிப்பயல்... அதுவும் 45 வயது களவானிப்பயல். சிவா.... இந்த வயசுலயும் உங்களுக்கு அது பிருந்தாவனமா தெரியுதா? அல்லது பிருந்தாத வனமா தோன்றுமா???

ஆனாலும் யவனிகாவுக்கு மெமறிப்பவர் ரொம்ப அதிகம். அதிகமாக வல்லாரை சாப்பிடுவீங்களோ...?

உங்க ஆத்துக்காரருக்கு உங்களின் 1% அவது இருக்கா??? :D

யவனிகா சொன்ன அந்த களவாணி சிவா தானா என்று கண்டுப்பிடிப்பது ஒன்றும் பெரிய கம்பசூத்திரம் அல்ல..! அவருக்கு எளிய வழி ஒன்று சொல்லித்தருகிறேன். நம் மன்றத்தில் சிவா தன்னுடைய புகைப்படத்தை ஏற்கனவே கொடுத்திருக்கிறார். அவருடைய தலை என்ற மைதானத்தில் சில பல புற்களைப்போல் கருப்படித்து எட்ட வைத்து, அந்த புகைப்படத்தை பார்த்தால் தெரிந்து விடும் (அவர் களவாணியை தொலைவிலிருந்து பார்த்ததால் புகைப்படத்தையும் தொலைவில் வைத்து பார்க்க சொல்கிறேன். எப்படி என் ஐடியா..?:D:D). சிவா போன்றவர்கள் அங்கிருந்து பிருந்தா வனத்தை பார்த்த பொழுது அந்த பெண்கள் இவர்களை இதெல்லாம் திருந்தா பொணம் ..!! என்று திட்டித்தீர்த்திருப்பார்கள்..!!

யவனிகாவின் மிதமிஞ்சிய ஞாபகசக்திக்கு காரணம் வல்லாரை சாப்பிடுவதா அல்லது (சிவாவை போல் குரங்கு, பன்றி போன்று )எல்லாரை(யும்) சாப்பிடுவதா..??:D:D

அவங்க வீட்டுக்காரருக்கு இருக்கா..? என்று நீங்கள் கேட்டது நிச்சயம் இருக்க வாய்ப்பில்லை. காரணம், இருவருக்கும் ஒரே விஷயம் அமையக்கிடைக்காது.!!:icon_ush::icon_ush: அந்த வகையில் நீங்க ரொம்ப அதிஷ்டசாலி அன்பு..! ஏனென்றால், உங்க வீட்டுக்காரம்மா ரொம்ப புத்திசாலியா இருப்பாங்களே..!!:icon_rollout::icon_rollout:

யவனிகா
06-12-2007, 06:55 AM
பல முறை படித்த, கேட்ட வார்த்தை..! ஆனால், இன்றும் அதன் முழுப்பொருள் விளங்கா வார்த்தை இந்த ஹ(அ)ராத்து..!:smilie_abcfra: அதற்கான பொருள் தெரிய இப்போது வாய்ப்பு வந்திருப்பது போல் ஒரு உணர்வு எனக்கு இந்த பதிவை படித்ததில். காரணம், என்னை மக்கள் நல்லவன்(!) என்பார்கள்.:D:D அதனாலென்னவோ எனக்கு நல்லவனுக்கான சரியான பொருள் தெரியும் (அப்படி :

அராத்துக்கு எனக்குப் பொருள் தெரியும்...இருந்தாலும் அது அவ்வளவு ரசிக்கப்படக்கூடிய வார்த்தை இல்லை என்பதால் வெளியே சொல்லவில்லை. மருத்துவமனையில் சிலநேரம் பிலிப்பினிகள் "புத்தஹீனா" என்ற வார்த்தையை திட்டுவதற்காக உபயோகிப்பார்கள். நானும் அழகாக இருக்கிறதேன்னு அதை சொல்லித் திட்டிக் கொண்டிருந்தேன்.ஆனால் அதன் அர்த்தம் தெரிந்த போது மிகவும் வருத்தப்பட்டேன். அது போலத் தான் அராத்தும்.

அது கிடக்கட்டும் கிடப்பில்....அது என்ன பேச்சுக்குப் பேச்சு நான் நல்லவன்...வல்லவன்னுகிட்டு...ராஜா மாதிரி உள்ளதை உள்ளபடி சொல்லும் ஆட்களைக் கூட நம்பலாம். உங்களை மாதிரி நல்லவன்னு சொல்றவங்களை? நல்லவனா இருக்க ரொம்ப முயற்சித்து அது நடக்காத விரக்தி மனப்பான்மையில் கூட சிலர் நான் நல்லவன்னு சொல்லுவாங்க....நீங்க எந்த ரகம்....(சும்மா உலூலுங்காட்டிக்கு சொன்னேன்...அழுவாதீங்க என்ன)

அன்புரசிகன்
06-12-2007, 07:30 AM
அவங்க வீட்டுக்காரருக்கு இருக்கா..? என்று நீங்கள் கேட்டது நிச்சயம் இருக்க வாய்ப்பில்லை. காரணம், இருவருக்கும் ஒரே விஷயம் அமையக்கிடைக்காது.!!:icon_ush::icon_ush: அந்த வகையில் நீங்க ரொம்ப அதிஷ்டசாலி அன்பு..! ஏனென்றால், உங்க வீட்டுக்காரம்மா ரொம்ப புத்திசாலியா இருப்பாங்களே..!!:icon_rollout::icon_rollout:

உண்மைதான் இதயம்... எல்லாருடைய வீட்டுக்காரஅம்மாக்களும் புத்திசாலிகளாம். உங்க மனைவி கூடத்தான் என்று கேள்விப்பட்டேன்....

lolluvathiyar
06-12-2007, 07:42 AM
ஆகா கதை துள்ளலாக ஆரம்பித்து பிறகு ஏதோ ஒரு கருப்பு தினத்தை நோக்கி செல்கிறது. சரியான இடத்தில் தொடரும் போட்டுவிட்டாரே, அனைவரையும் சஸ்பன்ஸில் ஆழ்த்தி விட்டாரே.
பத்து வருடத்துக்கு முன் அன்றைய தினத்தில் என்ன நடந்தது என்று எனக்கு தெரியும் (மறக்க முடியாத நாள்) ஆனால் யவனிகாவுக்கு மற்றும் நன்பிகளுக்கு என்ன ஆச்சு? முன்னமே யவனிகாவின் ஒரு துக்க கதை இதன் தொடர் எப்படி வருமோ என்று கவலையாக இருகிறது

யவனிகா
06-12-2007, 08:03 AM
பத்து வருடத்துக்கு முன் அன்றைய தினத்தில் என்ன நடந்தது என்று எனக்கு தெரியும் (மறக்க முடியாத நாள்) ஆனால் யவனிகாவுக்கு மற்றும் நன்பிகளுக்கு என்ன ஆச்சு?

இதை...இதை...இதைத்தான் நான் எதிர்பார்த்தேன்....நீங்க கண்டிப்பா யூகிப்பீங்கன்னு நெனைச்சேன்....நிரூபிச்சிட்டீங்க அண்ணா...

யவனிகா
06-12-2007, 08:05 AM
உண்மைதான் இதயம்... எல்லாருடைய வீட்டுக்காரஅம்மாக்களும் புத்திசாலிகளாம். உங்க மனைவி கூடத்தான் என்று கேள்விப்பட்டேன்....

எல்லா வீட்டுக்கார அய்யாக்களும் மக்குப் பிளாஸ்திரிகளா இருப்பதால....வீட்டுக்கார அம்மாக்கள் எல்லாரும் புத்திசாலிகள் ஆக வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாக்கப்படுகிறோம் அன்பு....

நேசம்
06-12-2007, 08:08 AM
எல்லா வீட்டுக்கார அய்யாக்களும் மக்குப் பிளாஸ்திரிகளா இருப்பதால....வீட்டுக்கார அம்மாக்கள் எல்லாரும் புத்திசாலிகள் ஆக வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாக்கப்படுகிறோம் அன்பு....
சில விதி விலக்கு உண்டு.உதாரணம் வேற யாரு நாந்தான்

இதயம்
06-12-2007, 08:10 AM
அது என்ன பேச்சுக்குப் பேச்சு நான் நல்லவன்...வல்லவன்னுகிட்டு...ராஜா மாதிரி உள்ளதை உள்ளபடி சொல்லும் ஆட்களைக் கூட நம்பலாம். உங்களை மாதிரி நல்லவன்னு சொல்றவங்களை? நல்லவனா இருக்க ரொம்ப முயற்சித்து அது நடக்காத விரக்தி மனப்பான்மையில் கூட சிலர் நான் நல்லவன்னு சொல்லுவாங்க....நீங்க எந்த ரகம்....(சும்மா உலூலுங்காட்டிக்கு சொன்னேன்...அழுவாதீங்க என்ன)
(அடப்பாவிங்களா..! இதுல இப்படி ஒரு மேட்டர் இருக்கா..? இவ்வளவு நாளா நமக்கு தெரியாம போச்சே..!!)

எவன் என்னை நல்லவன்னு சொன்னான்..நான் சும்மா சொல்லிப்பார்த்தேன்..நல்ல வேளை நீங்க நம்பலை..!!

நான் கெட்டவன், அயோக்கியன், புறம்போக்கு, மொள்ளமாரி, முடிச்சவிக்கி, லூஸு, அரைவேக்காடு, களவாணி (நன்றி:யவனிகா), பொய்யன், கஞ்சன், பொறுக்கி, ராஸ்கல், கஸ்மாலம், கம்மனாட்டி.... (இன்னும் என்னப்பா பாக்கி இருக்கு..??!).

எனக்கு நமிதா, மும்தாஜ், பாபிலோனா, சில்க்..(இன்னும் யாருப்பா பாக்கி இருக்கா...?) ஆகியோர்களை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர்களை நினைக்காத நிமிஷமே இல்லை..!

இனி நான் நல்லவனா, கெட்டவனான்னு நீங்களே முடிவு செஞ்சிக்கங்கப்பா..!!

நன்றி: நல்ல வார்த்தைகளை, நல்லவர்களின் பெயர்களை கொடுத்துதவிய என்னருமை மாப்ள புள்ளிராஜா..!!

விரக்தியுடன்,
இதயம் :traurig001::traurig001::traurig001:

நேசம்
06-12-2007, 08:13 AM
என்னருமை மாப்ள புள்ளிராஜா..!!

விரக்தியுடன்,
இதயம் :traurig001::traurig001::traurig001:

இவ்வளவு துக்கத்திலும் நன்றி கூர்வது ரொம்ப நல்ல விஷயம்.வாழ்த்துக்கள் இதயம்

நேசம்
06-12-2007, 08:18 AM
நானும் .யாவனியக்கா...யவானியக்கா...யார் கூடவாச்சும் சேந்து கூட்டு சதி பண்றீங்களோ?
25 தரம் "யவனிகா" ந்னு இம்போசிசன் எழுதினாத் தான் கதை சொல்லுவேன். சரியா?
சின்ன பையன் தானே.மன்னிச்சு விட்டுட்டுங்க.யவனி

இதயம்
06-12-2007, 08:35 AM
சின்ன பையன் தானே.மன்னிச்சு விட்டுட்டுங்க.யவனி

சின்னப்பையனான நீங்க எப்படி உங்க அக்கா வயசில் இருக்கிறவங்களை யவனிகா-ன்னு கொஞ்சம் கூட மரியாதை இல்லாம சொல்லலாம்..?? இதைப் பார்த்துட்டு உங்களை \"யவனியக்கா, யவனியக்கா\"ன்னு அவங்க 100 தடவை இம்போஷிசன் எழுதச்சொல்லப்போறாங்க..! அதனால அவங்க வந்து பார்க்கிறதுக்குள்ள அதை யவனியக்கான்னு மாத்திடுங்க நேசம்..!! கமான்..க்யிக்..!!

இதயம்
06-12-2007, 08:37 AM
இவ்வளவு துக்கத்திலும் நன்றி கூர்வது ரொம்ப நல்ல விஷயம்.வாழ்த்துக்கள் இதயம்

எனக்கும், இதுக்கும் எந்தவொரு சம்பந்தமுமில்ல..! இந்த விளையாட்டுக்கும் நான் வரலை..!

(But, நெசமா I like it Nesam..!:D)

யவனிகா
06-12-2007, 08:38 AM
நான் கெட்டவன், அயோக்கியன், புறம்போக்கு, மொள்ளமாரி, முடிச்சவிக்கி, லூஸு, அரைவேக்காடு, களவாணி (நன்றி:யவனிகா), பொய்யன், கஞ்சன், பொறுக்கி, ராஸ்கல், கஸ்மாலம், கம்மனாட்டி.... (இன்னும் என்னப்பா பாக்கி இருக்கு..??!).
:

இப்பத்தான் காதுக்கு இனிமையா இருக்கு....

யவனிகா
06-12-2007, 08:42 AM
சின்ன பையன் தானே.மன்னிச்சு விட்டுட்டுங்க.யவனி

பால்குடி மாறாத பச்சப்பிள்ளைங்கறதால இப்ப விடறேன்...இனி இந்த தப்பு நடந்தா...வாயில இருக்கிற பால்பாட்டிலைப் பிடுங்கிட்டு...கொண்டுபோய் ஒண்ணாங்க்கிளாஸில சேத்து விட்டுடுவேன், அப்புறம் முதல்ல இருந்து "ஆத்திச் சூடி...அறம் செய்ய விரும்புன்னு" ஆரம்பிக்க வேண்டியது தான்...இதயம் தான் தமிழ் வாத்தியார்..

இதயம்: ஒண்ணங்கிளாஸ் பெஞ்சையே ஒம்போது வருசமா தேக்கிறியே...ஒழுங்கா தப்பில்லாம எழுதமாட்டே....பாரு நான் பத்தி பத்தியா எழுதி...படிக்கறவங்க காதில, கண்ல பொகை வந்தாலும்...தப்பு வருதா....எரும் மாடு...

நேசம்: நான் சரியா தான் பாத்து எழுதறேன்...தப்பு எப்படி வருதுன்னே தெரியல...

இதயம்: உன் சிலேட்டப்பாத்து எழுதுடா...பக்கத்தில இருக்கிற லொல்லு சிலேட்டப் பாக்காத,அதில அ,ஆ,இ.ஈ....யே அவன் தப்பாத்தான் எழுதிருப்பான்.

புள்ளி ராஜா: சார்...இங்க பாருங்க சார்...இந்தப் பொண்ணு என் பக்கத்திலயே உக்கார மாட்டீங்குது...சுகு பக்கத்திலெயே போய் உக்காருது...

இதயம்: படிக்க வந்தியா...பொண்ணு பக்கத்தில உக்கார வந்தியா...அந்தப் பொண்ணு நம்ம கிளாஸ் பொண்ணே இல்லடா...ஏம்மா பொண்ணு...உங்கம்மா தானெ சோசியல் டீச்சர்...அவங்க்கெல்லாம் தமிழ் வாத்தியார் கூட பேசமாட்டாங்களா...நான் எவ்வளவு நல்லவன் தெரியுமா...யாருமே புரிஞ்சுக்க மாட்டேங்கராங்களே...உங்கம்மா கிட்ட என்னப்பத்தி எடுத்துச் சொல்லுமா...

அமரன்
06-12-2007, 08:44 AM
அடுத்தபாகம் போட்டாச்சு என்று எட்டிப்பார்த்து ஏமாறுவதே எனக்கு வேலையாகப் போய்விட்டது.:cool:

யவனிகா
06-12-2007, 08:57 AM
அடுத்தபாகம் போட்டாச்சு என்று எட்டிப்பார்த்து ஏமாறுவதே எனக்கு வேலையாகப் போய்விட்டது.:cool:

பொறுங்க அமரு...இன்னைக்கு கண்டிப்பா போட்டுடறேன்.

அமரன்
06-12-2007, 09:11 AM
பொறுங்க அமரு...இன்னைக்கு கண்டிப்பா போட்டுடறேன்.
:):):):icon_b::icon_b::icon_b::icon_b:

அக்னி
06-12-2007, 09:43 AM
சுவாரசிய நினைவுகள்... தொடருங்கள்...

நானும் பொறுத்துப் பொறுத்துப் பாத்து பொங்கி எழுந்திட்டேன்...எப்பப்பாரு எம்பேர ஸ்பெல்லிங் மிஸ்டேக்கோட அடிக்கறதே இந்த நேசத்துக்கு வேலையாப் போச்சு...யாவனியக்கா...யவானியக்கா...யார் கூடவாச்சும் சேந்து கூட்டு சதி பண்றீங்களோ?
25 தரம் "யவனிகா" ந்னு இம்போசிசன் எழுதினாத் தான் கதை சொல்லுவேன். சரியா?
ஏனுங்க... இப்பிடி தப்பா எழுதிறது பரவாயில்லீங்க...
யவனிகா அக்கா = யவனிகாக்கா
என்று சொன்னா நல்லாவா இருக்கு..?

கண்டுக்காம விட்டிடுங்க...

நேசம்
06-12-2007, 09:55 AM
சுவாரசிய நினைவுகள்... தொடருங்கள்...

ஏனுங்க... இப்பிடி தப்பா எழுதிறது பரவாயில்லீங்க...
யவனிகா அக்கா = யவனிகாக்கா
என்று சொன்னா நல்லாவா இருக்கு..?

கண்டுக்காம விட்டிடுங்க...

இதனால் அப்படி சொன்னேன்.ஆனா இதுக்கு போய் சின்ன பையனை போய் இம்போசிசன் எழுத சொல்றாங்க.(தமிழாசிரியர் மகளுன்னு நிருபிக்காறாங்க பொலிருக்கு)

யவனிகா
06-12-2007, 11:01 AM
கறுப்புக் காதலர் தினம் - 2


சாயந்திரம் 6 மணிக்கு வந்திருவேம்மா..."என்று அம்மாவிடம் சொல்லி விட்டுக் கிளம்பினேன்.அப்போ விதி எனக்குப் பின்னால நின்று "எப்படி வருவேன்னு பாக்கிறேன்னு?" எல்லாப் பல்லையும் காட்டி, நம்பியாராய் கையைப் பிசைந்து சிரித்ததை நான் சத்தியமாக கவனிக்கவில்லை.

உக்கடம் பஸ் ஸ்டாண்டில் தோழிகள் அனைவரும் சந்தித்தோம்.மொத்தம் 8 பேர். என் நெருங்கிய தோழி மஞ்சு ஏனோ வரவில்லை. பஸ்ஸ்டாண்டிலிருந்தே அவளுக்கு போன் செய்து "ஏன் வரல்லைன்னு?" கேட்டேன். அவங்கம்மா கூட சமயபுரம் போறேன்னா...சமயம் பாத்து என்னக் கழுத்தறுத்திட்யேடி....என்று போனை கட் செய்து விட்டு...தீபா,அகிலா,வனிதா,சபீதா...என்று எல்லாருமாய்ச் சேர்த்து பூளுவாம்பட்டி பஸ்ஸில் ஏறி அமர்ந்தோம்.

பஸ் டிரைவருக்கு அன்னிக்கு அடிச்சது லக்கி பிரைஸ். எப்போதும் அந்தவழியில் புல்லுக்கட்டு பெரிம்மாக்களும்,புல்லாக அடிச்ச பெருந்தலைகளும் தான் போவாங்க போல...கண்டக்டர் எங்களையே சுத்தி சுத்தி வந்து "டிக்கெட் வாங்கியாச்சாமா...எத்தனை பேரு... "என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

அருகிலிருந்த சபிதா "வாங்காட்டி நீ எறக்கி விட்டிருவியா என்ன...இன்னிக்கு நீ நரி முகத்தில தான முழிச்சிருக்க..." என்று முனகியபடி..."வாங்கியாச்சு அங்கிள்..."என்றாள் சத்தமாக. கண்டக்டருக்கு முகம் செத்துப் போனது.டிரைவர் அங்கிள் எங்களுக்கு வேண்டி நேருக்கு நேர் பாட்டெல்லாம் போட்டு "வருவாயா...நீ வருவாயா...உடைந்து போன நெஞ்சை ஒட்ட வைக்க நீ வருவாயா...." என்று கலக்கலாய் பஸ்ஸை படு ஸ்பீடாய் ஓட்டிக் கொண்டிருந்தார்...

டீ இந்தாளு பஸ் ஓட்டற ஸ்பீடப் பாத்தா திரும்பி வீட்டுக்குப் போக முடியாது போல" என்றாள் அகிலா. அப்போது ஒரு சிறகு வைத்த தேவதை தேவையில்லாமல் "ததாஸ்து" சொல்லி விட்டது போதும்.

ஒருவழியாக பூளுவாம்பட்டியின் செம்மண் பூமியில், இந்த தேவதைக் குஞ்சுகளின் கால்கள் படும் போது மணி பத்து.

ராதிகாவும்,அவள் சித்தப்பாவும் எங்களை அழைக்க வந்திருந்தார்கள்.
போகும் வழியெல்லாம்,

"என்ன சின்னக் கவுண்டச்சியம்மா...யாரு அம்மிணிக....கூடப் படிக்கற புள்ளைங்களா..." என்ற கிராமத்து மக்களின் வெள்ளந்தி விசாரிப்புகள்.

இவளும் பதிலுக்கு "ஆமாங்கக்கா...எல்லாரும் என்ற கூடப் படிக்கிறவங்க தான்...எனக்குப் பொறந்த நாள்ன்னு எங்கூட்டுக்கு வந்திருக்கிறாங்க" என்று அசத்தலாக கொங்குத் தமிழில் பேசியபடி வந்தாள்.

நாங்களும் அவளை நக்கல் அடித்த படியே...வீட்டிற்குள் நுழைந்தோம். நிஜமாகவே ரம்மியமான சுற்றுப்புறத்துடன் அழகான கூரை வேயப்பட்ட திண்ணை முற்றத்தில் அப்பாடா என்று அமர்ந்தோம்.

ராதிகாவின் அப்பா ஊருக்கு போயிருப்பதாகவும்...ஊர் சுற்றிக்காட்ட எங்களுடன் அவளது சித்தப்பா, சித்தி வரப்போவதாகவும் கூறினாள்.கிடைத்த முறுக்கு,பலகாரங்களையெல்லாம் நொறுக்கி விட்டு,சிறுவாணிக்குப் புறப்பட்டோம்.

கோவையிலேயே பிறந்து வளர்ந்திருந்தாலும் சிறுவாணியை அப்போது தான் பார்க்கிறேன். சுத்தமான காற்று, அடர்ந்த மரங்கள்,அதிகம் ஆளில்லா தனிமை என்று வேறொரு உலகத்துக்குள் புகுந்து கொண்ட உணர்வு...மலை மீது இருந்த குரங்குகளெல்லாம்...அடடா...நமக்குப் போட்டியாய் புது வாலில்லாக் குரங்குகள் வந்திருக்கே! என்று எங்களை கோபத்தில் முறைத்தன.

காதலர் தினமாகையால் அங்கங்கே காதலர்கள் திருட்டுத்தனமாய் காதல் செய்து கொண்டிருந்தனர்.வனத்தில் புகுந்த குரங்குகளுக்கு வாலாட்ட வேறென்ன தேவை இதை விட....சிறுவாணி அதகளமானது...குளித்து முடித்து...அங்கங்கே அமர்ந்து தீயும் நெடியுடன் கடலை வறுத்துக்கொண்டிருந்தவர்களை கிண்டல் செய்து... அவர்களை காதல் மூடிலிருந்து கடுப்பு மூடுக்கு மாற்றி எங்களால் ஆன சேவைகளை சிறுவானிக்கு செய்து முடித்து கீழே இறங்கும் போது மணி மத்தியானம் 2. பசி வேறு.அவசர அவசரமாக வீட்டுக்கு பயணப்பட்டோம்.

போகும் போதே இலை விரித்து தயாராக இருந்தது விருந்து.நல்லா மூக்கு முட்ட ஒரு பிடி பிடித்தோம். "என்ன ஆன்ட்டி மொகல் பிரியாணியெல்லாம் பிச்சை எடுக்கனும் உங்ககிட்ட...பேசாம நீங்க ஒரு ஹோட்டல் ஆரம்பிங்க...யார் வராட்டியும் நாங்க வருவோம்..." என்று ஆன்ட்டியை வகை தொகை இல்லாமல் புகழ்ந்து தள்ளினோம்.

"ஏம்மா...நீ சாய்பு வீட்டுப் பொண்ணு தானே...நீங்க பண்றத விடவா நாங்க பிரியாணி செய்யறோம்..உனக்கு சமைக்கத்தெரியுமா?" அப்படின்னு ஆன்ட்டி என்னை எதிர்க்கேள்வி கேட்டார்கள்.

"நல்லா சாப்பிடத்தெரியும் ஆன்ட்டி...நல்லா சாப்பிடக் கத்துக்கிட்டு அப்புறம் சமைக்கலாம்னு இருக்கேன்" என்று வழிந்தேன்.

ராதிகாவின் சித்தப்பா, சித்தி, குழந்தை அனைவரும் கோவை டவுனுக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தனர்.அவர்களின் திருமண நாளாம் அன்று. அதனால் துணி எடுக்க கோவை கிளம்புகிறோம்...என்று சொல்லி விட்டுச் சென்றார்கள்.நாங்களும் அவர்களுக்கு பை..பை..சொல்லி வீட்டு உண்ட களைப்புப் போக சற்று கட்டைகளை சாய்த்த படியே ஊர்க்கதை பேசிக் கொண்டிருந்தோம்.... இன்று, யாரெல்லாம் யார் யார் கூட எங்கெல்லாம் போயிருப்பார்கள்...என்றுதான்.

"ஏண்டி உனக்குத் தான் நிச்சதார்த்தமே முடிஞ்சாச்சே...இன்னைக்கு உங்காளப் பாக்கப் போலையா?" இது எனக்கான கேள்வி.

"எல்லாம் என் தலை எழுத்து...அவரு ஊர்ல இல்லைடி...சென்னைக்குப் போயிருக்கார்?"என்றேன்.

"எந்த லூசாவது காதலர் தினத்தன்று...அழகான காதலியை விட்டுட்டு வெளியூரு போகுமா..." இது அகிலா.

"அகிலா சனியனே வாயை மூடறியா...எரியற வெளக்கில எண்ணெய ஊத்திப் புண்ணியம் தேடிக்காதடி" எரிச்சலில் நான்.

"அது இல்லைடி...காதலர் தினம்னா காதலிக்கு ஏதாவது வாங்கிக் குடுக்கணும்...ஒரு பொக்கே...கடைசிக்கு ஒரு கார்டு...இதுக்கு பயந்திட்டுத் தான் அந்தக் கஞ்சமஹா"ராஜா" எஸ்ஸாயிடுச்சு போல இல்லடி வனிதா" அகிலா.

"எப்பப்பாரு ஒரு ஓட்டக்கம்யூட்டர்,செங்கல் சைஸ் செல்போன வெச்சிட்டு அப்பிடி என்னடி செய்வான் உன் ஆளு...பில்கேட்ஸ்னு நெனப்போ?" இது ராதிகா.

"ஏண்டி கடங்காரிகளா என் உயிரை எடுக்கிறீங்க...நாளைக்கு காலேஜுக்கு வரச்சொல்றேன்...அவருகிட்டயே கேட்டுக்குங்க" இது நான்.

"அத மட்டும் செய்யாத...நம்ம காலேஜ் கிட்ட மட்டும் வரச்சொல்லாத...பின்னால வருத்தப்படுவே...அப்புறம் மூக்க சிந்திகிட்டு என்கிட்ட வந்து நிக்காத" இது அகிலா.

"ஆமா அவரு அப்படியே மன்மதரு...எல்லாரும் க்யூல நின்னு கரெக்ட் பண்ணிருவாங்க பாரு...பேசறா பாரு...பெனாயில எடுத்து வாயை கழுவுடி" கடுப்பில் தீபா.

"நேரமாச்சி...இதுக்கே வார்டன் பக்கம் பக்கம்மா குற்றப் பத்திரிக்கை வாசிக்கும். கிளம்புங்கடி போலாம்...டீ ராதிகா, கொஞ்சம் பிரியாணி பேக் பண்ணு....இன்னைக்கு இன்டென்சிப் ட்ரய்னிங்க்ல செஞ்சதுன்னு சொல்லி வார்டன் வாயை அடைக்கலாம்" இது அகிலா.

"பொய் சொல்றாடி இவ...ரூமுக்குப் போனதும் மறுபடி இவளே முழுங்குவா பாரு...மலை முழுங்கி மாரியம்மா?" குட்டை வெளிப்படுத்திய குஷி தீபாவுக்கு.

ஒருவாறு அங்கிருந்து கிளம்பி உக்கடம் பஸ் ஏறினோம்.பஸ்ஸில் எல்லாருக்கும் தூக்கம் தள்ளியது.30 நிமிடத்திற்கு மேல் பயணித்திருப்போம்.பஸ் பேரூரில் நின்றது. நின்றது...நின்று கொண்டே இருந்தது.

எல்லாப் பயணிகளும் இறங்கி கச கச வென பேச ஆரம்பித்தார்கள். நாங்களும் இறங்கினோம்.
என்ன ஆச்சி என்று விசாரித்தோம்.
கோவையில் தொடர் குண்டு வெடிப்பு. பஸ் இதற்கு மேல் போகாது...என்றார்கள்.
நடுக்காட்டில் பெண்கள் நாங்கள்.திரும்பிப் பூளுவாம்பட்டிக்கு நடந்து போவது சாத்தியமே இல்லை.ஒரு பஸ்ஸும் இங்கிருந்து போகப் போவதும் இல்லை.போனிலும் யாரையும் பிடிக்க இயலவில்லை.கோவை முழுவதும் போன் வேலை செய்யவில்லை.நேரமும் இருட்டிக் கொண்டி வருகிறது....எங்களின் முகங்கள் எல்லாம் வாட ஆரம்பித்தன.

தொடரும்...


பாகம்−1; (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=308003&postcount=1) பாகம்−3 (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=308786&postcount=64)

நுரையீரல்
06-12-2007, 11:38 AM
ஐயய்யோ அப்புறம் என்ன ஆச்சு...?

பூமகள்
06-12-2007, 11:40 AM
ஐய்யய்யோ..!:frown::frown:
யவனி அக்கா அந்த சமயத்தில் பேரூரிலா இருந்தீங்க???
அடக்கடவுளே...!:eek::sprachlos020:
கஞ்சமஹா"ராஜா" வை புகழ்ந்து திட்டி.. பிரியாணி சாப்பிட்ட சந்தோசம் மறைவதற்குள் இப்படி ஒரு அதிர்ச்சியா அதுவும் காதலர் தினத்தில்..!:mad::mad:


அக்கா பத்திரமா இருந்தீங்களா??? என் மனம் பதபதைக்கையில் தொடரும் போட்டு முடிச்சிட்டீங்களே..??!:frown::frown::frown:

சீக்கிரமா அடுத்த பாகம் போடுங்க அக்கா..:icon_rollout:

அன்புரசிகன்
06-12-2007, 11:41 AM
காதலர் தினத்தில் உங்கள் காதலன் எஸ் அகிவிட்டார் என்றால் என்ன?....

வாசித்து முடிக்கும் வரைக்கும் கண் மூடாது வாசித்து ஒரு பெருமூச்சு விட்டேன். அடுத்த கதை எப்போது???

சிறுவாணிக்கு விளக்கம் கொங்கு தாதாவிடம் கேட்டு தெரிந்து கொண்டேன்.

அன்புரசிகன்
06-12-2007, 11:43 AM
ஐயய்யோ அப்புறம் என்ன ஆச்சு...?

பயப்படாதீங்க... அம்மணி இன்னமும் உயிரோடுதான் இருக்கா... ஏன்னா இப்ப கூட கதை எழுதி தொடரும் போட்டுவிட்டு போய்விட்டாரே... அதனால் தான்.... :D

யவனிகா
06-12-2007, 12:21 PM
உயிரோடு தான் இருக்கிறேன்...அன்று யாரும் என்னைப் போட்டுத் தள்ளாததால்...

அக்னி
06-12-2007, 12:28 PM
முதற்பதிவு சுவாரசியம்.
இரண்டாம்பதிவு பதைபதைப்பு.

அப்புறம் என்னாச்சு? உங்க முன்னாள் காதலரும், இந்நாள் கணவருமான _ _ _ _ _ காதலர்தினத்தில் நின்றிருந்தால்,
இப்படி அந்தரித்திருக்க தேவையில்லை...

கூப்பாடு போட்டாலும் இன்னிக்கு சாப்பாடு போடாதீங்க...

மதி
06-12-2007, 12:31 PM
இப்படி சஸ்பென்ஸ்ல வந்து நிறுத்திட்டீங்க...?
சீக்கிரம் தொடருங்க..

யவனிகா
06-12-2007, 12:37 PM
கூப்பாடு போட்டாலும் இன்னிக்கு சாப்பாடு போடாதீங்க...

அதெல்லாம் தப்பு...நேத்தும் சாப்பாடு போடல...இன்னைக்கும் போடலேன்னா...மனுசன் திருவோடு எடுத்துட்டு கிளம்ப வேண்டியது தான்....நல்ல புள்ளை யவனிக்கு...தப்புத் தப்பா புத்தி சொல்லாதீங்க அக்னி.

மதி
06-12-2007, 12:41 PM
அதெல்லாம் தப்பு...நேத்தும் சாப்பாடு போடல...இன்னைக்கும் போடலேன்னா...மனுசன் திருவோடு எடுத்துட்டு கிளம்ப வேண்டியது தான்....நல்ல புள்ளை யவனிக்கு...தப்புத் தப்பா புத்தி சொல்லாதீங்க அக்னி.

சேம் சைட் கோல் மாதிரி அக்னிய கவுத்துட்டீங்க...
உங்களுக்காக தானே பரிந்து பேசினார்.

அன்புரசிகன்
06-12-2007, 12:46 PM
கூப்பாடு போட்டாலும் இன்னிக்கு சாப்பாடு போடாதீங்க...

யோவ்... நமக்கு அவங்க லவுசா முக்கியம்??
கதைதானே... அப்புறம் என்ன... கதைய வாசிச்சுட்டு கம்னு இருக்கணும். நம்ம பொண்ணுங்க என்னதான் புருசன் செஞ்சாலும் கல்லு புல்லு என்ற பழமொழிய பதிலுக்கு வைச்சுக்கொண்டு இருப்பாய்ங்க...

lolluvathiyar
06-12-2007, 01:11 PM
இந்த சம்பவத்தை நான் எதிர்பார்த்தேன் யவனிகா, பஸ் ஓடவில்லை, எப்படி ஹாஸ்டல் போய் சேர்ந்தீர்கள், அப்பா அம்மா பதைபதைத்து போயிருப்பார்களே

அக்னி
06-12-2007, 02:42 PM
அதெல்லாம் தப்பு...நேத்தும் சாப்பாடு போடல...இன்னைக்கும் போடலேன்னா...மனுசன் திருவோடு எடுத்துட்டு கிளம்ப வேண்டியது தான்....
அப்போ நேத்திக்கே தண்டிச்சிட்டீங்களா..?
அப்பச்சரி...
ஆனா, ஒண்ணு மட்டும் விளங்கலை.
உங்க மனுசனுக்கு இன்னிக்கும் சாப்பாடு போடலைன்னா,
நீங்க எதுக்கு உங்க மனுசன் திருவோடு எடுத்துட்டு கிளம்பணும்?
ஓ... பசி மயக்கத்தில வேலைக்கு போகாம விட்டிடுவாரா?


சேம் சைட் கோல் மாதிரி அக்னிய கவுத்துட்டீங்க...
உங்களுக்காக தானே பரிந்து பேசினார்.
இல்லீங்க. மேலே யவனிகா தெளிவாத்தான் சொல்லியிருக்காங்க. கீழே அன்பு சொன்ன பழமொழிக்கேற்ப, நேரடியா சொல்ல மனசு வரலை போலும்...


நம்ம பொண்ணுங்க என்னதான் புருசன் செஞ்சாலும் கல்லு புல்லு என்ற பழமொழிய பதிலுக்கு வைச்சுக்கொண்டு இருப்பாய்ங்க...
எழுத்துப் பிழைய திருத்துங்க ரசிகரே...
கள்ளு, புஃல்லு...

யவனிகா
06-12-2007, 03:06 PM
கள்ளு, புஃல்லு...

பிழையத் திருத்துங்கப்பா...அப்புறம் அக்னி உங்க பேப்பரத் திருத்துவாரு...

அக்னி
06-12-2007, 03:08 PM
பிழையத் திருத்துங்கப்பா...அப்புறம் அக்னி உங்க பேப்பரத் திருத்துவாரு...
தொரத்துவாருன்னு சொல்லாதவரைக்கும் ரொம்ப நன்றிங்கோ...

யவனிகா
07-12-2007, 12:38 PM
கறுப்புக் காதலர் தினம் - 3


கோவையில் தொடர் குண்டு வெடிப்பு...ஊரடங்கு உத்தரவு...என்றெல்லாம் செய்திகள் அரசல் புரசலாகக் கேட்டன. உண்மை நிலவரம் எதுவும் தெரியவில்லை. பத்து பதினைந்து நிமிடத்தில் அருகில் நின்று கொண்டிருந்தவர்களும் நடராசா சர்வீஸில் பொடிநடையாக நடந்து செல்ல ஆரம்பித்து விட்டனர். எங்களுக்கு அதெல்லாம் சாத்தியமே இல்லை. உக்கடம் வரவே 10 கிலோ மீட்டர் நடக்கணும்.

"என்னடி செய்ய இப்படி மாட்டிக்கிட்டமே...இன்னேரம் எம் பாட்டி திண்ணைல உக்காந்து ரோட்டப் பாக்க ஆரம்பிச்சிருக்கும். இருட்டிருச்சினா ஒப்பாரி வெக்க ஆரம்பிக்குமே...ஏதாவது வண்டி போனாலாவது லிப்ட் கேக்கலாம்னா அத்துவான காடா இல்ல இருக்கு....?யாரையுமே தெரியாதே இங்க நமக்கு..." என்றேன் கவலையுடன்.

அருகில் உள்ள டீக் கடையில் விசாரித்தோம். "இங்கிருந்து நாலு கிலோ மீட்டர் போனால் கோவைப்புதூர் வரும் அங்கே போலீஸ் க்வார்ட்ரஸ் இருக்கு...பேசாம அங்க போங்க...அவங்க ஏதாவது உதவுவாங்க..." என்றார் டீக்கடைக்காரர். அப்படியே பொடினடையாக நடக்க ஆரம்பித்தோம். அதுவரை இருந்த கேலியும் கிண்டலும் எங்கே போனது என்றே தெரியவில்லை. கவலையில் விதியை நொந்து கொண்டே நடந்தோம்.

வழியில் ஒரு குதிரை வண்டி தென்பட்டது, வண்டிக்காரரிடம் பேசி கோவைப்புதூரில் இறக்கி விடும் படி சொன்னோம். இடைப்பட்ட நேரத்தில் அகிலாவின் கையில் இருந்த மொபைலால் யாரையாவது தொடர்பு கொள்ள முடியுமா...என்று முயற்சித்துக் கொண்டிருந்தோம்.

"கோவைப்புதூரில் தான் என்னோட அத்தை வீடு இருக்குப்பா...ஆனா சரியா அட்ரஸ் தெரியாது...பேரை வெச்சு விசாரிச்சி கண்டு பிடிக்கலாம்...இல்லன்ன போலீஸ் க்வார்ட்ரஸ் போலாம்..." இது திலகா.

என்னடீ இது இப்படி இக்கட்டில வந்து மாட்டிட்டமே....என்று புலம்பியபடி கோவைப் புதூர் வந்து சேர்ந்தோம். திலகாவின் அபார நியாபக சக்தியும், எங்களின் நல்ல நேரமுமாய் திலகாவின் அத்தை வீட்டைக் கண்டு பிடித்தே விட்டோம். ஒருவழியாக பாதுகாப்பான இடத்தை கண்டு பிடித்து விட்ட நிம்மதி...திலகாவின் அத்தை எங்களை தடபுடலாக வரவேற்று "டீ" போட்டுக் குடுத்தார். இன்னும் கலக்கத்திலிருந்து யாரும் விடுபடவில்லை.

அங்கங்கே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் எல்லாம் வதந்திகளை தாறுமாறாகப் பரப்பி விட்டுக் கொண்டிருந்தனர்.

திலகாவின் அத்தையின் வீட்டின் அருகில், ஒரு வீட்டு கட்டுமான வேலை நடந்து கொண்டிருந்தது. அதைக் கட்டும் பொறியாளர் திருப்பூரைச் சார்ந்தவர். அவர் திருப்பூர் செல்வதாகக் கூறிக் கொண்டிருந்தார். உக்கடம் வழியே கண்டிப்பாகச் செல்ல முடியாது என்றும் போத்தனூர் வழியாக, சூலூர் போய் அங்கிருந்து திருப்பூர் செல்லப்போவதாகவும் அவர் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்ட எனக்கு மூளையில் தேவையில்லாமல் பல்பு எரிந்து தொலைத்தது.

"சார், போற வழியில என்னக் கொஞ்சம் சூலூர்ல எறக்கி விட முடியுமா...சூலூர்ல இருந்து நான் சிங்கனல்லூர் பஸ் பிடிச்சிக்கறேன்."என்றேன் புத்திசாலித்தனமாக.

தோழிகளும் இதை ஆமோதித்தனர். "நீயாவது வீடு போய் சேரு. போனவுடனே ஹாஸ்டலுக்குப் போன் செய்து காலேஸ் பஸ் அனுப்பச் சொல்லு..."என்றனர் கேணத்தனமாக.

என் வீடு இருக்குமிடமும்....எங்கள் காலேஜ் இருக்கும் இடமும் வேறு வேறு திசை. அதனால் என் வீட்டிற்கு அவர்களை அழைத்துச் செல்வது வீண் முயற்சி. அதுவும் இன்றி எப்படியும் நைட்டுக்குள்ள பஸ்ஸெல்லாம் ஓட ஆரம்பித்து விடும், அவர்கள் ஹாஸ்டல் போய் சேர்ந்து விடலாம் என்றெல்லாம் நான் எண்ணிக் கொண்டு பொறியாளரின் காரில் ஏறி அமர்ந்தேன். நேரம் அப்போதே மாலை ஆறு மணி.

அவரும் அதிகம் என்னைப் பற்றி விசாரிக்காமல் காரை ஓட்டிக் கொண்டிருந்தார். இடையில் அவரிடம் இருந்த மொபைலில் யாருக்காவது லைன் கிடைக்குமா என்று முயற்சித்துக் கொண்டே இருந்தார். போகும் வழியெல்லாம் வழக்கத்துக்கு மாறான அமைதி. மனித நடமாட்டம் குறைவு. இருள் சூழ்ந்த வழியில் பயணிக்கப் பயணிக்க வயிற்றில் இனம் புரியாத கலக்கம்.

பொறியாளர் பேச ஆரம்பித்தார். "என் பெயர் சுந்தரம். உன் பேரு என்னம்மா?"

நான் பேரைச் சொன்னேன்.

"உன்னப் பாத்தா...நம்மூருப் பொண்ணு மாதிரி தெரியலயே...மார்வாடிப் பொண்ணா"

நான் அழமாட்டாக் குறையாக என் மதத்தைச் சொன்னேன்.

இதற்குள் ரோட்டில் அங்கங்கு சாலையை மறித்து விசாரித்துக் கொண்டிருந்தது....ஒரு கும்பல். நாங்கள் சென்ற காரையும் வழிமறித்தது.
"யாருய்யா நீ...காருக்குள்ள யாரு...உம் பேரு என்ன"?

"சுந்தரங்க" என்றார் பணிவுடன்.

உள்ளே இருந்த என்னை நோக்கி டார்ஜ் அடித்த படி....

"பொண்ணு யாரு? துலுக்கப் பொண்ணு மாதிரி இருக்கு...இறங்கும்மா வெளியே...." என்றனர் மூர்க்கமாய்.

தொடரும்....


பாகம்−1; (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=308003&postcount=1) பாகம்−2 (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=308379&postcount=49)

lolluvathiyar
07-12-2007, 01:40 PM
ஐயோ என்ன இது இப்படி நட்டாத்துல விட்டுட்டு தொடரும் போட்டீங்களே யவனிகா.

ஆனால் இந்த அளவுக்கு ரிஸ்க் எடுக்க கூடாது. அனேகமா உங்களுக்கு அந்த நேரத்தில் குண்டு வெடிப்பு ஏதோ செய்தியா தான் எட்டி இருக்கனும், அதன் முழூ பாதிப்பு விபரீதம் தெரிந்திருக்காது. தெரிந்திருந்தா நீங்க நிச்சயம் இந்த ரிஸ்க் எடுத்திருக்க மாட்டீங்க.
கதையில் கொஞ்ச கற்பனை கலந்திருக்கு போல தெரியுது. ஏன்னா நீங்க சொன்ன காலத்துல மொபைல் போன் மிக பெரும் வசதி படைத்தவர்களிடம் மட்டுமே இருந்த சாதனமாச்சே, அப்ப இன்கம்மிங்குக்கு கூட 6 ரூபா சார்ஜ் வருமே. அந்த காலத்துல* மானவி கையில் செல் இருந்தது சற்றே மிகையாக தெரிகிறது. மற்றபடி அனுபவம் விருவிருப்பாகவும் திர்லிங்காகவும் செல்கிறது

யவனிகா
07-12-2007, 02:00 PM
கதையில் கொஞ்ச கற்பனை கலந்திருக்கு போல தெரியுது. ஏன்னா நீங்க சொன்ன காலத்துல மொபைல் போன் மிக பெரும் வசதி படைத்தவர்களிடம் மட்டுமே இருந்த சாதனமாச்சே, அப்ப இன்கம்மிங்குக்கு கூட 6 ரூபா சார்ஜ் வருமே. அந்த காலத்துல* மானவி கையில் செல் இருந்தது சற்றே மிகையாக தெரிகிறது. மற்றபடி அனுபவம் விருவிருப்பாகவும் திர்லிங்காகவும் செல்கிறது
இல்லீங்கோ.. வாத்தியாரண்ணா... இன்கமிங் மற்றும் அவுட்கோயிங் இரண்டுமே அந்தக்காலத்துல 13 ரூபாய் சார்ஜ் தான்.

எங்கூட்டுக்காரர் கஞ்சமகா ராஜாவே அந்தக்காலத்துல செங்கல் மொபைல் வச்சிட்டு வராத காலுக்கு பேசிட்டு இருப்பார். அதிலயும் நான் குறிப்பிட்ட பெண் ஒரு மில் ஓனரின் மகள், அவள் வைத்திருந்ததில் மிகையேதும் இல்லை.

அன்புரசிகன்
07-12-2007, 02:13 PM
சாதி மதம் என்ற போர்வைகள் உங்களையும் பாதிக்கப்போகிறதோ???? தொடருங்கள்.

இதயம்
08-12-2007, 07:12 AM
கதையில் கொஞ்ச கற்பனை கலந்திருக்கு போல தெரியுது. ஏன்னா நீங்க சொன்ன காலத்துல மொபைல் போன் மிக பெரும் வசதி படைத்தவர்களிடம் மட்டுமே இருந்த சாதனமாச்சே, அப்ப இன்கம்மிங்குக்கு கூட 6 ரூபா சார்ஜ் வருமே. அந்த காலத்துல* மானவி கையில் செல் இருந்தது சற்றே மிகையாக தெரிகிறது. மற்றபடி அனுபவம் விருவிருப்பாகவும் திர்லிங்காகவும் செல்கிறது

வாத்தியார்..! அவனவன் இனி என்ன நடக்குமோ, ஏது நடக்குமோன்னு அதிர்ச்சியில இருக்கும் போது இன்கமிங், அவுட்கோயிங் பத்தி பேசிக்கிட்டு..!! ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப முக்கியம்..!!

யக்கா.. நீங்க வேகமாக அடுத்த பாகத்தை போடுங்க..!! எனக்கு இருக்கிற டென்ஷன்ல புள்ளி ராஜா காதை கடிச்சி துப்பிடுவனோன்னு பயமா இருக்கு..!!

மதி
08-12-2007, 07:26 AM
என்ன இப்படி பாதியில நிறுத்திட்டீங்க...
சீக்கிரமே தொடருங்க..

சிவா.ஜி
08-12-2007, 07:58 AM
அடடா....அந்த ஆட்டமும் பாட்டமும் இவ்வளவு சீக்கிரம் ஆட்டம் காணும்ன்னு நெனைக்கவேயில்லையே.....நான் ஏதோ டிரைவர் அங்கிள்தான் திரும்பி வரும்போது ஜொள்ளுல வழுக்கி பிரெக் போட மறந்து ஏதாவது மரத்துக்கு முட்டு குடுத்து நிக்க வெச்சுட்டாரோன்னு நெனைச்சேன். விஷயம் விபரீதமா இருக்கே.உலகத்துக்கே தெரிந்த ஒரு சம்பவத்தில் நமக்குத் தெரிந்தவரும் பாதிக்கப்பட்டிருக்கிறாரென்று நினைக்கும்போது அதிர்ச்சியாய் இருக்கிறது.சஸ்பென்ஸ்ல நிறுத்திட்டீங்களே, சீக்கிரம் தொடருங்க யவனிகா.

பூமகள்
08-12-2007, 09:00 AM
அச்சச்சோ யவனி அக்கா..!:sprachlos020:
இப்படி வந்து மாட்டிக்கிட்டு.. தொடரும் போட்டு பயப்பட வச்சிட்டீங்களே..??:icon_ush::confused::frown:

என்ன ஆச்சு?? அந்த மதபிசாசுக உங்கள ஒன்னும் செய்யலையே..??:sauer028::sauer028:

என்ன இருந்தாலும் நீங்க சமாளிச்சிருவீங்கன்னு நம்பிக்கை இருக்கு..!:icon_b:
அடுத்த பாகம் காண ஆவலுடன் அன்பு குட்டித் தங்கை பூ..!

சுகந்தப்ரீதன்
08-12-2007, 09:09 AM
அன்பு யவனி அக்கா அவர்களே..! மன்னித்துவிடுங்கள்.. நான் தலைப்பை பார்த்துவிட்டு ஏதோ காதல் சம்பவத்தை பற்றி சொல்ல போகிறீர்கள் என்று தவறாக நினைத்து ஆப்ரிக்கா காதலர் அப்படி இப்படின்னு உளரி தொலைத்துவிட்டேன்..! தேவையில்லாமல் காலத்தை நீட்டி எங்களின் எதிர்பார்ப்பை கூட்டாமல் என்ன நடந்தது என்று சீக்கிரம் கூறுங்களேன்..ப்ளீஸ்..!

அமரன்
17-03-2008, 01:25 PM
இந்தப்பக்கமும் கொஞ்சூண்டு எடிப்பார்க்கிறது.

சிவா.ஜி
17-03-2008, 02:10 PM
பாகம் 3 போட்டு அப்பவே நிறைவு செஞ்சிட்டாங்க...ஆனா அந்த புது வருட மாற்றத்தில் மாயமாகிப்போன பக்கங்களில் இவையும் இருந்ததால்...காணவில்லை அமரன்.

யவனிகா
17-03-2008, 03:41 PM
இந்தப்பக்கமும் கொஞ்சூண்டு எடிப்பார்க்கிறது.

நானெல்லாம் அப்பவே எட்டிப் பாத்தாச்சு...
நீங்கதான் பாக்கலை போல...அமரு...,

மன்மதன்
17-03-2008, 04:06 PM
ரொம்ப ஓவரா ரிஸ்க் எடுத்த மாதிரி தெரியுது..
அப்புறம் என்ன ஆச்சுன்னு சொல்லலையே..