PDA

View Full Version : காதலானவனே..!

யாழ்_அகத்தியன்
05-12-2007, 01:52 PM
நீ எழுதும்
கவிதை அழகுதான்
அதற்காக

யார்
கண்ணையும்
நம்பி என்னைக்
கைவிட்டுவிடாதே

*

நீ
இல்லாத
தருணங்களில்
வாடிப்போகும்
எனக்காக

நீ கொடுத்த
பூச்செடிதான்

என்னை
மலரவைத்துக்
கொண்டிருக்கிறது

*

எதுவும் கேக்காமலே
என் மடியில் நீ
உறங்கியபோதுதான்

தெரிந்தது
உன் அன்பின் ஏக்கம்

அதற்காக
உன் குழந்தைதனத்தை
கையிலுமா வைத்திருப்பாய்

என்னை பிடித்தவாறே
உறங்குகிறாய்

*

எவ்வளவு அவசரமாய்
வாசல் கடக்கையிலும்

உன்னை
ஞாபகப்படித்தி
விடுகிறது

முதல் முதல் சந்திப்பில்
நான் வரும்வரை நீ
சாய்ந்து நின்ற வீதிச்சுவர்

*

நீ பிரியும்போது
கவனமாய் இரு என்று
சொன்னதற்கு பதிலாய்

உன் வலதுகையை
கொடுத்துவிட்டு
போயிருக்கலாம்

என்னை பிரியவிடாது
அணைத்துக் கொண்டிருந்திருக்கும்

-யாழ்_அகத்தியன்

யவனிகா
05-12-2007, 03:34 PM
அழகழகான குட்டிக் காதல் கவிதைகள்.மன்றத்தில் காதல் மணம் தீராமல் வீசச் செய்பவர்களில் ஒருவரான யாழ் அகத்தியன்...எப்போதும் போல குட்டிக் குட்டிக் கவிதைகளில் தேக்க முடியாத காதலைத் தேக்கி அளித்துள்ளீர்கள்.வாழ்த்துக்கள்.

யாழ்_அகத்தியன்
05-12-2007, 04:43 PM

மிக்க நன்றி உங்க வாழ்த்துக்கு

இளசு
05-12-2007, 07:34 PM
தபூசங்கர் இப்படி காதலை சிறுசிறு தென்றல் அலைகளாக்கி
நம் மீது மோதவிட்டு,
நம்மையும் மனக்காட்சி காணவைத்துவிடுவார்.

அதே இனிமை, லாவகம் - யாழ் அகத்தியனிடம்..

பாராட்டுகள்.. ரசித்தேன்!

செல்வா
05-12-2007, 08:27 PM
நல்லாருக்குங்க........

அமரன்
06-12-2007, 09:50 AM
நீ எழுதும்
கவிதை அழகுதான்
அதற்காக
யார்
கண்ணையும்
நம்பி என்னைக்
கைவிட்டுவிடாதே

விழியே கதை எழுது
விஞ்சி
விழி எழுதும் கவிதையோ..
காதல் கவிதை கவிதை.

தபூசங்கர் இப்படி காதலை சிறுசிறு தென்றல் அலைகளாக்கி
நம் மீது மோதவிட்டு,
நம்மையும் மனக்காட்சி காணவைத்துவிடுவார்.

அதே இனிமை, லாவகம் - யாழ் அகத்தியனிடம்..

பாராட்டுகள்.. ரசித்தேன்!

அந்த ஒற்றுமையில் ஒன்றை சேர்த்து கணக்கை அதிகரித்துக்கொள்ளுங்கள்
அவரைப்போலவே இவரும் நான் காதலிக்கவில்லை என்கின்றாரே..

யாழ்_அகத்தியன்
06-12-2007, 03:10 PM
தபூசங்கர் இப்படி காதலை சிறுசிறு தென்றல் அலைகளாக்கி
நம் மீது மோதவிட்டு,
நம்மையும் மனக்காட்சி காணவைத்துவிடுவார்.

அதே இனிமை, லாவகம் - யாழ் அகத்தியனிடம்..

பாராட்டுகள்.. ரசித்தேன்!

தபூசங்கர் கவிதைகள்
எனக்கும் பிடிக்கும்

உங்க இனிமையான வாழ்த்துக்கு
மிக்க நன்றி

யாழ்_அகத்தியன்
06-12-2007, 03:11 PM
நல்லாருக்குங்க........

நன்றிங்க

யாழ்_அகத்தியன்
06-12-2007, 03:15 PM
விழியே கதை எழுது
விஞ்சி
விழி எழுதும் கவிதையோ..
காதல் கவிதை கவிதை.

அந்த ஒற்றுமையில் ஒன்றை சேர்த்து கணக்கை அதிகரித்துக்கொள்ளுங்கள்
அவரைப்போலவே இவரும் நான் காதலிக்கவில்லை என்கின்றாரே..

உங்க வாழ்த்துக்கு மிக்க நன்றி

தபூசங்கரும் காதலிக்கவில்லை
என்று பொய்யா சொன்னார்