PDA

View Full Version : உன் நினைவில் ஒரு வெண்பா

ஆதி
05-12-2007, 01:27 PM
மனதினில்நீ வந்து மகிழ்ச்சியாலொண் கோலம்
வனைந்தாயே பூவே மயங்க - நினைவாய்
நறுமணக்கும் என்தமிழ் நங்கையே உள்ளப்
பிறைதனில் பெண்மழையாய் பெய்.

-ஆதி

சாம்பவி
05-12-2007, 01:35 PM
தளை தட்டுகிறதே கவிஞரே.... !
கொஞ்சம் பழுது பார்த்தல் நலமோ.... !

ஆதி
05-12-2007, 01:47 PM
சரிப்பார்த்திருக்கிறேன், இறுதி வரி தவிர்த்து வேறு எங்கும் தளைத்தட்டுகிறதா ?

எடுத்தியம்பினால் பழுது பார்க்க வசதியாய் இருக்கும்..

நன்றி

-ஆதி

சாம்பவி
05-12-2007, 02:19 PM
முழுதும்
உழுக.... !

ஆதி
05-12-2007, 02:46 PM
முழுதும் உழுதுவிட்டேன்..

தாமரை
05-12-2007, 02:54 PM
மனதினில்நீ வந்து மகிழ்ச்சியாலொண் கோலம்
வனைந்தாயே என்னெஞ்ச வாசலில்- நினைவாய்
நறுமணக்கும் என்கவி நாயகீ; இதயப்
பிறைதனில் பெண்மழையாய் பெய்.

-ஆதி

இதைச் சொல்லுகிறார்

ஆதவா
05-12-2007, 02:58 PM
முதலில் வாழ்த்துகள் ஆதி.....

வெண்பா அருமை.. இரு இடங்களில் தளை தட்டுகிறது..... இருப்பினும் முதல் முயற்சி (மன்றத்தில்) என்பதால் பரவாயில்லை..
( வாசலில் − கருவிளம் முன் நேர் இல்லாமல் நிரையாக "நினை" வந்தது
நாயகீ − கூவிளம் முன் நேர் இல்லாமல் நிரையாக "இதய" வந்தது..)

கரு கோர்வையாக வரவில்லை என்பது என் எண்ணம்... இம்மாதிரி பா எழுதும் கவிஞர்கள் பெருக வேண்டும்.. உங்களுடன் துணையாக நானும் இருப்பேன்..

வாழ்த்துகள்.

ஆதி
05-12-2007, 03:25 PM

சரிபார்த்துவிட்டேன் ஆதவா, ஆனால் அர்த்தம் பொதியாமல் புதைந்ததுப் போல் தோன்றுகிதது..

கவியரசு கண்ணதாசனே தளைத்தட்டாமல் எழுத முயன்று தோற்றவர்தானே, நானென்ன தூசு..

ஆதவா
05-12-2007, 03:36 PM
சரிபார்த்துவிட்டேன் ஆதவா, ஆனால் அர்த்தம் பொதியாமல் புதைந்ததுப் போல் தோன்றுகிதது..

கவியரசு கண்ணதாசனே தளைத்தட்டாமல் எழுத முயன்று தோற்றவர்தானே, நானென்ன தூசு..

அட நீங்கவேற ஆதி... பா எழுதறது அதிலும் வெண்பா எழுதறது ரொம்ப சுலபம்...

கண்மணியே கண்மணியே சொல்றதைக் கேளு
கவிதை எழுதறது ரொம்ப சுலபம்
அதிலேயும் வெண்பா மிகவும் சுலபம்
எழுதி முயற்சித்துப் பார்...

அவ்வளவுதாங்க.....

ஆதி
05-12-2007, 03:57 PM

எதுகை மோனைப் பார்த்து எழுதியதால் கொஞ்சம் கடினமாக இருந்ததுப் போல.. ஆனால் முயற்சியைக் கைவிடேன் தொடர்வேன்..

நன்றி ஆதவா ஒரு நல்ல எடுகோள் கவிதைக்கு..

-ஆதி

அக்னி
05-12-2007, 05:49 PM
பதியப்பட்ட நேரத்திலிருந்து, அவதானித்தேன் மாற்றங்களை...
மாற்றங்கள் வெண்பாவில் மெருகூட்ட,
ரசித்திருக்கின்றேன்...
இதுவும் கற்பிக்கும் திரியாகின்றது...

அமரன்
05-12-2007, 06:23 PM
ஒருபக்கம் ஆதவா.. இப்போ ஆதி...
கருப்புரிந்துகொள்ள முடிகின்றது. அமைப்பு??,
கற்றலின் அவசியத்தை உணர்த்துகின்றது.
நன்றி ஆதி. முயற்சிக்கு பாராட்டுக்கள். தொடர வாழ்த்துக்கள்.

இளசு
05-12-2007, 07:51 PM
இந்தத் தலைமுறை இளைய இதயங்கள்
இப்படி இலக்கணப்படி பா எழுத முனைவதே...

அளப்பரிய பாராட்டுக்குரியது..

புதிய ரத்தம் பழைய செய்யுள் கூடுகளில் பாய்வது
செந்தமிழ் ஆயுளை செவ்வனே நீட்டிக்கச் செய்யும் செயல்..

இலக்கணம் நன்கறிந்த சாம்பவி, செல்வன், ஆதவன், இன்னும் ஜேபிஎல்
போன்றோர் ஆக்கபூர்வமாய் அலசி ஆராய இருக்க -

மன்றம் இத்தகைய உயர் முயற்சிகளுக்கும் பலகையாய் இருப்பது -உவகை!

ஆதிக்கு சிறப்புப் பாராட்டுகள்..

ஆதவா - பின்னுறியேப்பா...

ஆதி
06-12-2007, 04:51 PM
ஒருபக்கம் ஆதவா.. இப்போ ஆதி...
கருப்புரிந்துகொள்ள முடிகின்றது. அமைப்பு??,
கற்றலின் அவசியத்தை உணர்த்துகின்றது.
நன்றி ஆதி. முயற்சிக்கு பாராட்டுக்கள். தொடர வாழ்த்துக்கள்.

நிச்சயமாய் தொடர்வேன் அமரன், ஊக்கத்திற்கு நன்றிகள்.

-ஆதி

ஆதி
06-12-2007, 04:52 PM
இந்தத் தலைமுறை இளைய இதயங்கள்
இப்படி இலக்கணப்படி பா எழுத முனைவதே...

அளப்பரிய பாராட்டுக்குரியது..

புதிய ரத்தம் பழைய செய்யுள் கூடுகளில் பாய்வது
செந்தமிழ் ஆயுளை செவ்வனே நீட்டிக்கச் செய்யும் செயல்..

இலக்கணம் நன்கறிந்த சாம்பவி, செல்வன், ஆதவன், இன்னும் ஜேபிஎல்
போன்றோர் ஆக்கபூர்வமாய் அலசி ஆராய இருக்க -

மன்றம் இத்தகைய உயர் முயற்சிகளுக்கும் பலகையாய் இருப்பது -உவகை!

ஆதிக்கு சிறப்புப் பாராட்டுகள்..

ஆதவா - பின்னுறியேப்பா...

நன்றி இளசு அவர்கட்கு

ஆதவா
07-12-2007, 03:30 AM
எதுகை மோனைப் பார்த்து எழுதியதால் கொஞ்சம் கடினமாக இருந்ததுப் போல.. ஆனால் முயற்சியைக் கைவிடேன் தொடர்வேன்..

நன்றி ஆதவா ஒரு நல்ல எடுகோள் கவிதைக்கு..

-ஆதி

உடல், உயிர், பிறகுதான் அணிவதெல்லாம்...

எதுகை பார்த்து எழுதவேண்டுமெனில் எதுவும் எழுத முடியாது. நமக்குத் தேவை கரு... அதற்கு உரு...

பிறந்த குழந்தை எதையும் அணிவதில்லை... வளர்ந்த பின்? சில சமயங்களில் அணிந்தும் அணியாமலும்/ (இது நல்ல தலைப்பா இருக்கே!!)

ஆதி
07-12-2007, 07:24 AM

கரு உறு, உரு உறு, உடை உறு.. நிதர்சனம் ஆதவா..

-ஆதி

ஆதவா
07-12-2007, 07:38 AM
கரு உறு, உரு உறு, உடை உறு.. நிதர்சனம் ஆதவா..

-ஆதி

கருவிலே சொன்ன உருவிலே பின்னே
நிறுவலேபா வாடை உரு.

ஆதி
07-12-2007, 07:50 AM
கருவிலே சொன்ன உருவிலே பின்னே
நிறுவலேபா வாடை உரு.

இமை நொடிக்கும் நேரத்தில்
ஈரடி வெண்பா

அழகுப்பா
அருமைப்பா
ஆதவா..
பாராட்டுகள்..

-ஆதி

ஆதவா
07-12-2007, 08:09 AM
இமை நொடிக்கும் நேரத்தில்
ஈரடி வெண்பா

அழகுப்பா
அருமைப்பா
ஆதவா..
பாராட்டுகள்..

-ஆதி

ஹ்ஹி ஹி நன்றிங்க ஆதி... (எல்லாம் நீங்க கொடுத்த வார்த்தைகள்தான்...)