PDA

View Full Version : எனக்கு வெட்கம்



மயூ
05-12-2007, 09:21 AM
நாலரை மணி வகுப்பு
மூன்று மணிக்கே வகுப்பில்
காதலுக்காக
ஒரு மணி நேரம்
செலவழித்தால் என்ன?

நாலரை மணி
நத்தையாய் வருகின்றது
நாலரை வருடம்
கடந்துவிட்டதாய் உணர்வு
என்னவள் வரவில்லை

காத்திருக்கின்றேன்
காதலியே
காலமெல்லாம் காத்திருபராம்
காதலர்கள்
ஒரு மணிநேரம் காக்க
மாட்டேனே என்னவளே!

நாலரை மணிக்கு
நாதஸ்வர இசைபோல
நகர்ந்து வருகின்றாள்

வைத்த கண்ணை
எடுக்க முடியவி்ல்லை
என்னதான்
நவ நாகரீகப் பெண்கள்
புரட்சி படைத்தாலும்
இவளின்
பாவாடைத் தாவணியின்
பரம இரசிகன் நான்

ஒரு பார்வை வீசி
அப்பால் நகர்கின்றாள்
அது
அன்பா? பரிவா?
இல்லை
நக்கலா?
நிச்சயம் புரியவில்லை

உயிரியல் கற்பிற்கின்றார்
ஆசிரியர்
உயிர்தாண்டி வலிக்கின்றது
அவள் நினைவு

கவனமெல்லாம் அவள்மேல்
பாடம் பப்படம் ஆகின்றது
கனவில் படம்
அவள் என்னருகில்
என் கை அவள் தோள் மேல்
கை கோர்த்து நடக்கின்றோம்
பாபிலோன் தோட்டத்தில்
என் மார்பில் முகம் பதித்து
பல கதை பேசுகின்றாள்
விழிகளில் ஏக்கத்துடன்
நோக்குகி்ன்றாள்

கண்விழித்து எழுகின்றேன்
ஒலிக்கின்றது
ஆசிரியரின் திட்டல்
அதனாலும் ஒரு நன்மை
இப்போது அவள் பார்வை
நூறு வீதம் என்மேல்

ம்ஹூம்
துணிவில்லை
நேருக்கு நேர்
அவள் கண்ணைப் பார்க்க

ஓரக் கண்ணால்
ஓரமாய்ப் பார்க்கின்றேன்
அவளும்
ஒய்யாரமாய் உட்கார்ந்து
ஓரமாய்ப் பார்க்கின்றாள்

எப்போதும் பார்க்கின்றாள்
பேச மட்டும்
மறுக்கின்றாள்
ஒரு புன்னகையாவது
உதிரக் கூடாதா??
ஒரு நேர்ப் பார்வை
வீசக் கூடாதா??
நான் என்ன படுபாதகனா?
இல்லை கொலைகாரனா?


ஆசை அவளுக்குமோ?
மனம் படபடக்கின்றது
கைகள் வியர்க்கின்றது
இதயம் சில்லிடுகின்றது
இரத்தம் பாய்கின்றது
புதுவீச்சுடன்

இன்று எப்படியும்
பேசுவது
உள்மனது வீரியம் கொள்கின்றது
அருகில் நகர்கின்றேன்
தொண்டை குழியல்
அனைத்தும் வற்றிவிடுகின்றது

கண்ணாடி முன்னாடி நின்றபோது
பேசியவை
கண்ணடித்து விட்டு மறந்துவிட்டன
மீண்டும் அவ்விடம் விட்டு நகர்கின்றேன்

ஆனால் அவளிடம்
சென்று பேச மட்டும்
என்னால் முடியாது
மனதில் இருப்பதை
அவளிடம் சொல்ல முடியாது
ஏனெனில்
எனக்கு வெட்கம்
ஆனால் நண்பர்கள் பார்வையில்
எனக்கு ஈகோ!

அன்புரசிகன்
05-12-2007, 10:20 AM
நாலரை (4.5) மணி வகுப்பு
மூன்று (3)மணிக்கே வகுப்பில்
காதலுக்காக
ஒரு (1) மணி நேரம்
செலவழித்தால் என்ன?


கணக்கு எங்கோ இடிக்கிறதே... :D



ம்ஹூம்
துணிவில்லை
நேருக்கு நேர்
அவள் கண்ணைப் பார்க்க

ரெமிமாட்டீனை அப்படியே உள்வாங்கியது போல் இருந்திருக்குமா???



ஆனால் அவளிடம்
சென்று பேச மட்டும்
என்னால் முடியாது
மனதில் இருப்பதை
அவளிடம் சொல்ல முடியாது
ஏனெனில்
எனக்கு வெட்கம்
ஆனால் நண்பர்கள் பார்வையில்
எனக்கு ஈகோ!

ரொம்பத்தான் பம்முவீங்களோ... இதுதான் சொல்றது. எனக்கு புரியுறமாதிரி கவிதை எழுதாதீங்க என்று. இப்படி கன்னா பின்னாவென்று :icon_rollout: பதில் போடுவேன்... :D

உங்கள் கவிதையில் கதாநாயகனாக எனது நண்பன் ஒருவனையும் கண்டிருக்கிறேன்.. ம்... உணர்ச்சிகளின் அசைவுகளை படம்பிடித்துக்காட்டியிருக்கிறீர்கள்.... :icon_b:

வாழ்த்துக்களப்பா... :icon_good:

வசீகரன்
05-12-2007, 10:30 AM
அவள் என்னருகில்
என் கை அவள் தோள் மேல்
கை கோர்த்து நடக்கின்றோம்
பாபிலோன் தோட்டத்தில்
என் மார்பில் முகம் பதித்து
பல கதை பேசுகின்றாள்
விழிகளில் ஏக்கத்துடன்
நோக்குகி்ன்றாள்

அழகான எண்னகோர்வைகள்..... படிக்கும்போது.... மனதில்
காட்சிகளாக விரிக்கின்ற விவரிப்பு வரிகள்.....! அருமை....

யவனிகா
05-12-2007, 11:29 AM
அடடா...எல்லார் வாழ்விலும் இப்படியாகப் பட்ட சம்பவங்கள் இருக்கின்றது...அழ*கு ப*ட* சொல்லியிருக்கின்றீர்க*ள் ம*யூ....

பத்தாவது படித்த போது
பம்மிப் பம்பிப்
காதல் சொன்னவனை
கன்னத்தில் அறைந்தது....

பன்னிரண்டாவதில்
உயிரையே உருக்கி
கடிதம் தந்தவனை
கால் தூசாய்ப் பார்த்தது...

கல்லூரி வாசலில்
கால்கடுக்கக் காத்தவனை
கயவனே என்று
காரித் துப்பிய*து...

எல்லாம்
ஒன்றன்பின்
ஒன்றாய்...
நினைவுக்கு வருகிறது...

நானாய்த் தேடிக்
கைப்பிடித்தவன்...
கத்திகளாய்
வார்த்தை வீசும் போது!

அன்புரசிகன்
05-12-2007, 12:01 PM
நானாய்த் தேடிக்
கைப்பிடித்தவன்...
கத்திகளாய்
வார்த்தை வீசும் போது!

பலரது ஆட்டோகிராஃப் வரவிருக்கிறது போல தோணுதே.....

யவனிகா
05-12-2007, 12:08 PM
பலரது ஆட்டோகிராஃப் வரவிருக்கிறது போல தோணுதே.....

ஒரு கற்பனைக் கவிதை தான் அன்பு...ஆட்டோகிராப் எதிர் பார்க்காதீங்க...
என்ற ஊட்டுக்காரரு ரெம்ப நல்லவருங்கோ...கத்தி குடுத்து காய் வெட்டச் சொன்னா கையயே வெட்டிக்கிற கேசு...அதனால கத்தியை எல்லாம் கண்பார்வைக்குத் தெரியாம ஒளிச்சுத்தான் வெப்பேனாக்கும்....பாவம் இதப் பாத்தா அந்த, பச்சப் புள்ள வருத்தப்படுமல்ல...என்ன அன்பு நீங்க...

சிவா.ஜி
05-12-2007, 12:11 PM
பலரது ஆட்டோகிராஃப் வரவிருக்கிறது போல தோணுதே.....

அய்யோ சாமி அது ஆட்டோகிராஃப் இல்லை...யவனிகாவோட பின்னூட்டக்கவிதை.குடும்பத்துல குழப்பத்தை உண்டாக்கிடுவீங்க போல....

யவனிகா
05-12-2007, 12:26 PM
அய்யோ சாமி அது ஆட்டோகிராஃப் இல்லை...யவனிகாவோட பின்னூட்டக்கவிதை.குடும்பத்துல குழப்பத்தை உண்டாக்கிடுவீங்க போல....

எப்படின்னா...சமயத்தில வந்து காத்து ரட்சிக்கறீங்க....நல்லாயிருங்கண்ணா...நல்லாயிருங்க...

சிவா.ஜி
05-12-2007, 12:34 PM
ஆனால் அவளிடம்
சென்று பேச மட்டும்
என்னால் முடியாது
மனதில் இருப்பதை
அவளிடம் சொல்ல முடியாது
ஏனெனில்
எனக்கு வெட்கம்
ஆனால் நண்பர்கள் பார்வையில்
எனக்கு ஈகோ!

எங்க ஊர்ல ஒரு பழமொழி சொல்லுவாங்க...\"வெட்கப்பட்டவன் துக்கப்படுவான்\"னு அந்த கதையாவில்ல இருக்கு உங்கட கதை.
சொல்லத்தயங்கினா...நன்பர்கள் ஈகோன்னும் சொல்வாங்க....காதலி யூ கோ ன்னும் சொல்லிடுவாங்க.
ஒரு சொல்லாத காதல் கதையையே கவிதையில் படைத்துவிட்டீர்கள்.
அருமை மயூ.வாழ்த்துகள்.

யவனிகா
05-12-2007, 12:43 PM
நன்பர்கள் ஈகோன்னும் சொல்வாங்க....காதலி யூ கோ ன்னும் சொல்லிடுவாங்க.
.
என்னன்னா...நீங்க சூப்பரா ஸ்கோர் பண்றீங்க...சொற்சிலம்பம் பக்கம் ஏதாவது தலையக் காட்டினீங்களா?

சிவா.ஜி
05-12-2007, 12:47 PM
என்னன்னா...நீங்க சூப்பரா ஸ்கோர் பண்றீங்க...சொற்சிலம்பம் பக்கம் ஏதாவது தலையக் காட்டினீங்களா?

அதேதான்ம்மா...பூவோடு சேர்ந்த நாரும் கொஞ்சூண்டு மணக்குது..நன்றி தங்கையே.

மயூ
05-12-2007, 12:53 PM
கணக்கு எங்கோ இடிக்கிறதே... :D


ரெமிமாட்டீனை அப்படியே உள்வாங்கியது போல் இருந்திருக்குமா???



ரொம்பத்தான் பம்முவீங்களோ... இதுதான் சொல்றது. எனக்கு புரியுறமாதிரி கவிதை எழுதாதீங்க என்று. இப்படி கன்னா பின்னாவென்று :icon_rollout: பதில் போடுவேன்... :D

உங்கள் கவிதையில் கதாநாயகனாக எனது நண்பன் ஒருவனையும் கண்டிருக்கிறேன்.. ம்... உணர்ச்சிகளின் அசைவுகளை படம்பிடித்துக்காட்டியிருக்கிறீர்கள்.... :icon_b:

வாழ்த்துக்களப்பா... :icon_good:
கணக்கில் நான் எப்பவுமே மட்டம்தான் இரசிகரே!!! :)

நன்றி இரசிகரே!!! நானும் நண்பர்களை அவதானித்துத்தான் எழுதினேன்!!!! :icon_b: :cool:

மயூ
05-12-2007, 12:54 PM
அழகான எண்னகோர்வைகள்..... படிக்கும்போது.... மனதில்
காட்சிகளாக விரிக்கின்ற விவரிப்பு வரிகள்.....! அருமை....
நன்றி வசீகரன்!!! :)


அடடா...எல்லார் வாழ்விலும் இப்படியாகப் பட்ட சம்பவங்கள் இருக்கின்றது...அழ*கு ப*ட* சொல்லியிருக்கின்றீர்க*ள் ம*யூ....

பத்தாவது படித்த போது
பம்மிப் பம்பிப்
காதல் சொன்னவனை
கன்னத்தில் அறைந்தது....

பன்னிரண்டாவதில்
உயிரையே உருக்கி
கடிதம் தந்தவனை
கால் தூசாய்ப் பார்த்தது...

கல்லூரி வாசலில்
கால்கடுக்கக் காத்தவனை
கயவனே என்று
காரித் துப்பிய*து...

எல்லாம்
ஒன்றன்பின்
ஒன்றாய்...
நினைவுக்கு வருகிறது...

நானாய்த் தேடிக்
கைப்பிடித்தவன்...
கத்திகளாய்
வார்த்தை வீசும் போது!
அடடா!!! ஏதேதோ எல்லாம் எழுதுறீங்க~!!!
எது எதுவாயினும்் உங்கள் பின்னூட்டக் கவிதை நான் எழுதிய கவிதையைவிட அழகாக உள்ளது ஜவனிக்கா அவர்களே!!! :)

மயூ
05-12-2007, 12:56 PM
எங்க ஊர்ல ஒரு பழமொழி சொல்லுவாங்க...\"வெட்கப்பட்டவன் துக்கப்படுவான்\"னு அந்த கதையாவில்ல இருக்கு உங்கட கதை.
சொல்லத்தயங்கினா...நன்பர்கள் ஈகோன்னும் சொல்வாங்க....காதலி யூ கோ ன்னும் சொல்லிடுவாங்க.
ஒரு சொல்லாத காதல் கதையையே கவிதையில் படைத்துவிட்டீர்கள்.
அருமை மயூ.வாழ்த்துகள்.
ஹா.. ஹா.. நிசமான உண்மை!!! :)
நன்றி சிவா.ஜி :)

செல்வா
05-12-2007, 01:24 PM
கண்விழித்து எழுகின்றேன்
ஒலிக்கின்றது
ஆசிரியரின் திட்டல்
அதனாலும் ஒரு நன்மை
இப்போது அவள் பார்வை
நூறு வீதம் என்மேல்

தேடிச்சென்று பெறுகிறேன்...
ஏச்சும் பேச்சும் - உன்
ஏளனப் பார்வை என்றேனும்
ஆறுதலாய் மாறாதா என்று....

நல்லாருக்கு வாழ்த்துக்ககள் மயூ

இளசு
05-12-2007, 08:45 PM
கடைசி வரியில் கத்தி வீசும் யுத்தி !
வெற்றிக்கவிதை இது..

வாழ்த்துகள் மயூ!

(எதிர்(கற்பனைக்)கத்தி வீசிய யவனிகா அவர்களுக்கும் பாராட்டுகள்..)

நேசம்
05-12-2007, 09:19 PM
அழகாக வார்த்தைகளை இட்டு தந்து இருக்கிறிர்கள் கவிதை மயூ.வாழ்த்துக்கள்

அமரன்
06-12-2007, 07:53 AM
கணக்கு எங்கோ இடிக்கிறதே... :D
ரெமிமாட்டீனை அப்படியே உள்வாங்கியது போல் இருந்திருக்குமா???
ரொம்பத்தான் பம்முவீங்களோ... இதுதான் சொல்றது. எனக்கு புரியுறமாதிரி கவிதை எழுதாதீங்க என்று. இப்படி கன்னா பின்னாவென்று :icon_rollout: பதில் போடுவேன்... :Dஉங்கள் கவிதையில் கதாநாயகனாக எனது நண்பன் ஒருவனையும் கண்டிருக்கிறேன்.. ம்... உணர்ச்சிகளின் அசைவுகளை படம்பிடித்துக்காட்டியிருக்கிறீர்கள்.... :icon_b:

வாழ்த்துக்களப்பா... :icon_good:
கலக்கல் ரசிகா... மணிக்கணக்கில் எனக்கு வாய்ப்பளிக்காமைக்கு பொறாமைகலந்த பாராட்டுகள்.

அந்த நண்பர் யாருங்கோ.. உங்கள் நண்பர்கள் இங்கே இருக்கின்றார்கள். அவர்கள் மேல் கவனத்தை திருப்பாதிருக்க உண்மையைச் சொல்லிடுங்க..

ஹி....ஹி...புரியாமல் கவிதை எழுதுவதிலும் ஒரு வசதி இருக்கு..
புரியக்கூடியமாதிரி எழுதுவதில் தனிச்சுகம் இருக்கு....

எனக்கும் ஆட்டோகிராஃப் எழுத ஆசையாகத்தான் இருக்கு..
கற்பனையில் வேண்டாமே...

அமரன்
06-12-2007, 07:55 AM
எளிமையான சொற்கள். எளிதாகப் புரிந்துகொள்ளக்கூடிய "இயல்பான" நடை. பாராட்டுகள் மயூ.

அக்னி
06-12-2007, 08:28 AM
காதலுக்காய் காத்திருந்து,

இழந்து, வதங்கி வருந்துமுன்,
இறந்து, வதைத்து வருத்துமுன்,

திருந்துவாயா... திருத்துவாயா...
திற வாய்... இதுவரை திறாவாய்...

விரைவில் விருந்து வையுங்கள் மயூ...
பாராட்டுக்கள்... எளிமையான அழகிய கவிக்கு...

அன்புரசிகன்
06-12-2007, 08:35 AM
அந்த நண்பர் யாருங்கோ.. உங்கள் நண்பர்கள் இங்கே இருக்கின்றார்கள். அவர்கள் மேல் கவனத்தை திருப்பாதிருக்க உண்மையைச் சொல்லிடுங்க..

எனக்கும் ஆட்டோகிராஃப் எழுத ஆசையாகத்தான் இருக்கு..
கற்பனையில் வேண்டாமே...

உண்மை பொய் இவற்றிற்கு பெரிய வித்தியாசமில்லை அமரா.... உண்மைக்கு ஆம் என்றால் பொய் ற்கு இல்லை. அவ்வளவே....

என்ன புசத்துகிறேன் என்று தோணுகிறதா? எனக்கு வேறு பதில் தெரியவில்லை... :D :D :D

மற்றயது உங்கள் ஓட்டோகிராஃப்... சும்மா பச்சைத்தண்ணி ஓட்டோகிராஃப் எழுதினால் நான் படிக்கமாட்டேன். சும்மா மசாலாத்தூள் போட்டு கமலா லத்திக்கா திவ்யா போன்ற உங்கள் நினைவுகளை எடுத்து அப்படியே உங்கள் வருங்கால கன்னிகாவையும் பற்றி எழுதினால் மட்டுமே நான் வாசிப்பேனாக்கும்.

அமரன்
06-12-2007, 08:38 AM
எல்லாம் புரிஞ்சுதுங்கோ..

அக்னி
06-12-2007, 08:39 AM
கொஞ்சம் தொடர்கின்றேனே யவனிகா...

நானாய்த் தேடிக்
கைப்பிடித்தவன்...
கத்திகளாய்
வார்த்தை வீசும் போது!
புரிந்து கொண்டேன்..,
முகம் பார்க்காமலே
மும்முறை தவிர்த்த தவறை...
தெரிந்து கொண்டேன்..,
தவிர்க்கப் பட்டவனே
கட்டியவனாகி விட்ட உறவை...

பிச்சி
07-12-2007, 07:22 AM
அப்பா... இவ்ளோ பெரிய கவிதையா? மயூ அண்ணா. ஏதாவது காலேஜ்ல படிக்ககறீனஙகளா?

ஓவியன்
07-12-2007, 10:47 AM
அடடே மயூவின் காதல் கவிதையா...!!
சீ....!!
எனக்கு ஒரே வெட்கமா இருக்கு.........!! :D

யவனிகா
07-12-2007, 11:22 AM
கொஞ்சம் தொடர்கின்றேனே யவனிகா...

புரிந்து கொண்டேன்..,
முகம் பார்க்காமலே
மும்முறை தவிர்த்த தவறை...
தெரிந்து கொண்டேன்..,
தவிர்க்கப் பட்டவனே
கட்டியவனாகி விட்ட உறவை...

தவிர்க்கப் பட வேண்டியவனே....என்று வந்திருக்க வேண்டுமோ அக்னி...

மயூ
07-12-2007, 03:58 PM
உண்மை எப்படி வருது பாரு.... குழந்தை பேசினா எப்பவும் இனிப்பாத்தான் இருக்கும்

தன்னைப் பற்றியே பெருமையாக பேசும் மயூரேசனை நம்புபவர்கள் இருவர்தான்... அதிலொருவர் செட்டில் (******) ஆகிவிட்டார், இன்னொருவர் மயூரேசனே!!!

எதுக்குப்பா அந்த அப்பாவீய இங்க இழுக்கிறே... அவர்தான் குடித்தனமாகி இப்ப மன்றத்துக்குக் கூட வர்றதில்ல...!!! அப்புறம் என் குரல் கூட அவர் குரல் மாதிரி இருக்கிறதா நீ சொன்னியே... அவ்வளவு இனிமையோ? :confused: :icon_ush:

மதி
10-12-2007, 03:52 PM
மயூ..
காதல் கவிதை..?
ஒரு சந்தேகம்.. அவள் நாலரைக்கு தான் வருவாள் என்று தெரிந்திருந்தும் ஏன் மூணு மணிக்கே சென்றாய்? அப்புறம் உனக்காக இவ்வளவு நேரம் காத்திருந்தேன் என பின்னாளில் கணக்கு காண்பிக்கவா..?

இப்படி ஓரப்பார்வையாலே பார்த்தே ஒதுங்கிப் போகதப்பூ.. போய் பேசு. நண்பர்களிடம் சொல்லியிருக்கிறாய். பார்த்து.. ஏதாவது "மின்சாரக் கனவா"கிட போகுது.

அக்னி
10-12-2007, 03:59 PM
தவிர்க்கப் பட வேண்டியவனே....என்று வந்திருக்க வேண்டுமோ அக்னி...
சின்ன கற்பனையாக, மூன்றுமுறையும் நிராகரிக்கப்பட்டவனே இம்முறை மணாளனாகிவிட்டால் என்று நினைத்தேன்.
முக்கியமாக சொல்ல வந்த விடயம், நாயகியின் பண்பு. குனிந்த தலை நிமிராத இயல்பு.
அதனால் தான்,
நிராகரித்தபோதும் ஆழநோக்கி, ஆளைநோக்கி பார்க்காமல் விட்டதால் வந்த வினை என்று சொல்ல எடுத்த சிறிய முயற்சி...
ஆகவேதான், "தவிர்க்கப்பட்டவனே" என்று விளித்தேன்...

ஷீ-நிசி
10-12-2007, 04:26 PM
எல்லாம்
ஒன்றன்பின்
ஒன்றாய்...
நினைவுக்கு வருகிறது...

நானாய்த் தேடிக்
கைப்பிடித்தவன்...
கத்திகளாய்
வார்த்தை வீசும் போது!


ரியலி நைஸ்!

ஷீ-நிசி
10-12-2007, 04:27 PM
மயூ! உள்ள உணர்வுகள் மிக அழகாக இருக்கிறது கவிதையில்...

இன்னும் முயற்சியுங்கள்....
மெருகேறும்...
கவிதையும்! காதலும்!

IDEALEYE
10-12-2007, 04:28 PM
உயிரியல் கற்பிற்கின்றார்
ஆசிரியர்
உயிர்தாண்டி வலிக்கின்றது
அவள் நினைவு

படித்ததில் இனித்தது
வாழ்த்துக்கள்