PDA

View Full Version : நடிப்பும் நாடித்துடிப்பும்



சுகந்தப்ரீதன்
05-12-2007, 09:01 AM
கண்டதும் களிப்பு!
காணாமல் தவிப்பு!
எதற்கிந்த நடிப்பு-உன்
நெஞ்சில் என் துடிப்பு!

*********************************

கடந்த வாரம் கழுத்துமணியும்
மூன்றுநாள் முன்பு மூக்குத்தியும்
நேற்றைக்கு நெற்றிப் பொட்டும்
காலையில் காதோர கம்மலும்
கச்சிதமாய் சொல்லி விட்டன!
நீ என்னை நேசிப்பதாய்...!
இன்னும் ஏன் நடிக்கிறாய்
உண்மையை உரைக்காமல்
உதட்டுச் சாயம் பூசிக்கொண்டு?!

*************************************

என்னை எங்கேயென்று தேடுகிறாய்!
எனை கண்டவுடன் தடுமாறுகிறாய்!
நான் என்னவென்று கேட்கிறேன்!
எதுவும் சொல்ல மறுக்கிறாய்!
நீ சொல்லா விட்டாலென்ன?
உன் கால் கட்டைவிரல்
சொல்கிறதே நீ
சொல்லவந்த வார்த்தைகளை!

ஆதி
05-12-2007, 09:10 AM
யான்நோக்குங் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்.

அழகிய கவி சுகந்தப்ரீதன்.. வாழ்த்துக்கள்.

-ஆதி

சுகந்தப்ரீதன்
05-12-2007, 09:32 AM
யான்நோக்குங் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்.

அழகிய கவி சுகந்தப்ரீதன்.. வாழ்த்துக்கள்.

-ஆதி
மிக்க நன்றி நண்பரே..! பட்டென்று குரல் உங்களுக்கு நினைவுக்கு வருவது ஆச்சரியமாக இருக்கிறது எனக்கு.. வாழ்த்துக்கள் :icon_b: நண்பரே..!

அமரன்
06-12-2007, 07:46 AM
அப்பூ சுபி..
இப்படித்தான் ஆரம்பிப்பாங்க. அப்புறம் இதெல்லாம் தலைகீழாக மாறும். அவள் அணிகலன்கள் எல்லாம் வாங்கிகொடுக்கவேண்டி இருக்கும். வார்த்தைகள் தொண்டைக்குழிக்குள் முட்டும். கண்களில் நீர்மட்டம் உயரும்.. பார்த்துப்பா அப்படியே வைத்திருக்க மெயின்டெயின் பண்ணு. வாழ்த்துக்கள்.

சுகந்தப்ரீதன்
06-12-2007, 08:37 AM
அப்பூ சுபி..
பார்த்துப்பா அப்படியே வைத்திருக்க மெயின்டெயின் பண்ணு. வாழ்த்துக்கள்.
என்ன அமரண்ணா..இப்படி சொல்லிட்டீங்க..? அப்படியே வச்சிருந்தா துருபிடிச்சிடுதா..? எல்லாம் அனுபவ வார்த்தைகளாக இருப்பதால் முயற்சிக்கிறேன்.. நீங்கள் சொன்னதையும் முடிந்தால்.!. மிக்க நன்றி அண்ணா வாழ்த்தியமைக்கு..!

அமரன்
06-12-2007, 09:39 AM
என்ன அமரண்ணா..இப்படி சொல்லிட்டீங்க..? அப்படியே வச்சிருந்தா துருபிடிச்சிடுதா..? எல்லாம் அனுபவ வார்த்தைகளாக இருப்பதால் முயற்சிக்கிறேன்.. நீங்கள் சொன்னதையும் முடிந்தால்.!. மிக்க நன்றி அண்ணா வாழ்த்தியமைக்கு..!
நான் தங்மென்றல்லவா நினைச்சேன்.. தகரமாக இருக்கும் என்று கனவிலும் நினைக்கலப்பா..

சுகந்தப்ரீதன்
08-12-2007, 10:55 AM
நான் தங்மென்றல்லவா நினைச்சேன்.. தகரமாக இருக்கும் என்று கனவிலும் நினைக்கலப்பா..
எப்படி நினைப்பு வரும்...?

காதலிக்கும் பெண்ணின் கைகள் தொட்டு நீட்டினால்
சின்ன தகரம்கூட தங்கமாகுமேன்னு....!

நம்பள மாதிரி சாரி..உங்கள மாதிரி ஆளப் பாத்துட்டுதான் எழுதியிருப்பாங்க போலிருக்கு...?:icon_rollout: