PDA

View Full Version : காதல் விதி....!!



சிவா.ஜி
05-12-2007, 03:51 AM
கைச் சிறையில் என்னைக்
கைதியாக்க
புன்னகை விலங்கோடு
என்னிடம் வந்த
ஏந்திழை......
என்னிடமே
சிறைபட்டு போனதேன்...?
விலங்கிட வந்து
விலங்கேற்றதேன்.....?
அவளைச் சுமக்கும் வேளையில்
பூமி புவியீர்ப்பு விசையை
இழந்ததேன்......?

விதிகளை மாற்றும்
காமனின் சதியா....?
காதலில் இதுதான்
கடைபிடிக்கும் விதியா...?

மதி
05-12-2007, 04:51 AM
இப்படி மூச்சு விடாம கேள்வி கேட்டா எப்படி..? ஒன்னொன்னா கேட்டா தானே புரியும்..
ஹிஹீ.. இந்த விஷயங்களில் இதுவரை அனுபவமில்லாததால் எனக்கு பதில் தெரியல.. அனுபவஸ்தர்கள் வந்து சொல்லவும்..

விதிகளை மறந்து
கதியென கிடப்பதே
காதலின் சாத்திரமோ
ஆதலின்
மதிகெட்டு அலைவார்
பதியாகப் போகும்
ஆடவரோ..

ச்சும்மா முயற்சி பண்ணினேன்..கோச்சிக்காதீங்கோ..

உங்க கவிதை நல்லாருக்கு..

சிவா.ஜி
05-12-2007, 05:51 AM
ஆதலின்
\"மதி\" கெட்டு அலைவார்


உங்க கவிதையும் நல்லாருக்கு.ஆனா ஏன் இப்படி..என்ன ஆச்சு கெட்டு அலையற அளவுக்கு...?

அமரன்
05-12-2007, 06:47 AM
வணக்கமுங்க.. நாந்தான் அமரன். எனக்கு இந்தக் காதல் கத்திரிக்காய் எல்லாம் தெரியாதுன்னு சொல்லமாட்டேன். ஏன்னா கத்திரிக்காய் தெரியுமே!

"இஞ்சி இடுப்பழகே. மஞ்சட் சிவப்பழகே" பாட்டுல ஒரு வரி வரும்.. "வெறும் காத்துத்தாங்க வருது." அதான்... அந்தக்காத்து அதிகமானதும் பலூனாட்டம் பறக்குறீங்க..காதலால் மிதக்கின்றேன் என்பதை சொன்ன விதம் அருமை.

விலங்குன்னு நீங்க சொன்னதை அன்பு விலங்குன்னு எடுத்துக்கிறேன். இல்லை..இல்லை ... தாலியையைத்தான் விலங்குன்னு சொன்னேன்னு அடம்பிடிச்சா இருங்க மன்றமாமணிகளை கூப்பிடுகின்றேன்..

சொல்வேந்தரின் கையெழுத்தின் பிரகாரம் "புதியதோர் உலகம் செய்வோம்; புதிய விதிகள் சமைப்போம்". இது க்னொசம் பழசான விதியாக இருக்கே.. உலகல் நொடிக்கு நொடி மாறிட்டே இருக்கில்ல..

பாராட்டுக்கள் சிவா.

சிவா.ஜி
05-12-2007, 07:00 AM
ரொம்ப வணக்கமுங்க அமரன்.ஆமாங்க விதி மாறிக்கிட்டேயிருக்கு ஆனா காதலர்களோட விதி மட்டும் மாறவேமாட்டேங்குது.இப்பவும் காதல் வந்தா தலைக்கு மேல பல்பு எரியுது,அவங்களைச் சுத்தி மழை பெய்யுது...என்ன செய்யறது விடுங்க.புதுசா ஏதாவது தோணுதான்னு பாப்போம்.
நன்றி
இப்படிக்கு
பழைய சிவா

அமரன்
05-12-2007, 07:19 AM
பழைய சிவா? ரசித்தேன் சிவா..:icon_b:

மதி
05-12-2007, 08:27 AM
ரொம்ப வணக்கமுங்க அமரன்.ஆமாங்க விதி மாறிக்கிட்டேயிருக்கு ஆனா காதலர்களோட விதி மட்டும் மாறவேமாட்டேங்குது.இப்பவும் காதல் வந்தா தலைக்கு மேல பல்பு எரியுது,அவங்களைச் சுத்தி மழை பெய்யுது...என்ன செய்யறது விடுங்க.புதுசா ஏதாவது தோணுதான்னு பாப்போம்.
நன்றி
இப்படிக்கு
பழைய சிவா
மணி அடிக்குமே அத விட்டுட்டீங்க...
ஹ்ம்ம்.. அதெல்லாம்.. சரி விடுங்க..

சிவா.ஜி
05-12-2007, 08:32 AM
மணி அடிக்குமே அத விட்டுட்டீங்க...
ஹ்ம்ம்.. அதெல்லாம்.. சரி விடுங்க..

ம்..ம்..சொல்லுங்க..மதி...ஏன் நிறுத்திட்டீங்க...உங்களுக்கும் மணியடிச்சுதா.....?

சுகந்தப்ரீதன்
05-12-2007, 08:51 AM
விதிகளை மாற்றும்
காமனின் சதியா....?
காதலில் இதுதான்
கடைபிடிக்கும் விதியா...?

மிகவும் அருமை அண்ணா..! விதியோடு விளையாடடுகிறீர்கள்.. வாழ்த்துக்கள்..! சதியோ விதியோ காதலிப்பவர்களுக்கு இப்படி புலம்புவதுதான் கதியோ..?:icon_rollout:

மதி
05-12-2007, 09:17 AM
ம்..ம்..சொல்லுங்க..மதி...ஏன் நிறுத்திட்டீங்க...உங்களுக்கும் மணியடிச்சுதா.....?
என்ன இப்படி கேட்டுட்டீங்க...
படிக்கற வயசுல தினமும் அடிக்கும்..
ஒவ்வொரு பாட இடைவேளையின் போதும்.. :D:D :icon_ush::icon_ush: