PDA

View Full Version : நன்றி மறப்பது நன்றன்று



செந்தமிழரசி
04-12-2007, 02:33 PM
யாருக்காக நீ
சிலுவைச் சுமந்தாயோ
அவர்களே உன்னைச் சிலுவையில்
அரைந்தார்கள்

யாரை
ஆசீர்வதிக்க உன்கைகள் உயர்ந்தனவோ
அவர்களே உன்கைகளுக்கு
ஆணியடித்தார்கள்

யாருக்காக நீ
இரத்த வியர்வை வியர்த்தாயோ
அவர்களே உன்னை இரத்தப்பலிக்கு
கையளித்தார்கள்

ஆனால்
அந்த சிலுவை
அதுதான் சத்தியமாய்
நன்றியுள்ளது..

முதலில்
சிலுவையை நீ சுமந்தாய்
இப்போது
சிலுவை உன்னைச் சுமக்கிறது.

செந்தமிழரசி

ஆதி
04-12-2007, 03:39 PM
வேறுப்பட்டப் பார்வை..

இந்தக் கவிதை சில வானப்பாடிக் கவிஞர் எனக்கு ஞாபகப்படுத்தியது..

அழகிய கவிதைச் செந்தமிழரசி..

பாராட்டுக்கள்.. தொடர்ந்து எழுதுங்கள்..

-ஆதி

மலர்
04-12-2007, 05:40 PM
செந்தமிழரசியின் முதல் கவியோ....
பாராட்டுக்கள்...

தொடர்ந்து படையுங்கள்...

நேசம்
04-12-2007, 07:17 PM
வாழ்த்துக்கள் அரசி.தொடர்ந்து தாருங்கள்.புதியவருக்கு என் அன்பளிப்பு 100

ஜெயாஸ்தா
05-12-2007, 02:49 AM
கொடுமைப்படுத்தினர்
இழிவுபடுத்தினர்
காட்டிக்கொடுத்தனர்
சிலுவையில் அடித்தனர்
துரோகிகள்....!

அவர்களையும் மன்னித்து அவர்களின் நல்லவாழ்விற்கு பாடுபட்ட நீ....மகத்தான மனிதத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு.

நல்ல கருத்துச்செறிவுள்ள கவிதை தொடருங்கள் அரசி.

சிவா.ஜி
05-12-2007, 03:23 AM
அழகான வரிகள்,ஆழமான கருத்து,மாறுபட்ட பார்வை.மன்றத்தில் முதல் கவிதையானாலும் பண்பட்ட கவிதாயினி என்பது புலப்படுகிறது.
வாழ்த்துகள் செந்தமிழரசி.

செந்தமிழரசி
05-12-2007, 06:47 AM
வேறுப்பட்டப் பார்வை..

இந்தக் கவிதை சில வானப்பாடிக் கவிஞர் எனக்கு ஞாபகப்படுத்தியது..

அழகிய கவிதைச் செந்தமிழரசி..

பாராட்டுக்கள்.. தொடர்ந்து எழுதுங்கள்..

-ஆதி

வானம்பாடிக் கவிஞர்களுடன் என்னை ஒப்பிட்டதில் மெய்சிலிர்த்துப் போனேன் ஆதி.

தங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி.

செந்தமிழரசி

செந்தமிழரசி
05-12-2007, 06:48 AM
செந்தமிழரசியின் முதல் கவியோ....
பாராட்டுக்கள்...

தொடர்ந்து படையுங்கள்...


ஊக்கத்திற்கு நன்றி மலர்..

செந்தமிழரசி

செந்தமிழரசி
05-12-2007, 06:51 AM
வாழ்த்துக்கள் அரசி.தொடர்ந்து தாருங்கள்.புதியவருக்கு என் அன்பளிப்பு 100

கவிதைக்கு பாராட்டுவரும் அறிவேன்
பணமும் வந்ததைப் பார்த்து வியந்து நிற்கிறேன்.

பணம் தந்து ஊக்கம் தந்த நேசத்திற்கு நன்றி.


செந்தமிழரசி

செந்தமிழரசி
05-12-2007, 06:53 AM
கொடுமைப்படுத்தினர்
இழிவுபடுத்தினர்
காட்டிக்கொடுத்தனர்
சிலுவையில் அடித்தனர்
துரோகிகள்....!

அவர்களையும் மன்னித்து அவர்களின் நல்லவாழ்விற்கு பாடுபட்ட நீ....மகத்தான மனிதத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு.

நல்ல கருத்துச்செறிவுள்ள கவிதை தொடருங்கள் அரசி.

நன்றி ஜெயாஸ்தா.

செந்தமிழரசி

செந்தமிழரசி
05-12-2007, 06:56 AM
அழகான வரிகள்,ஆழமான கருத்து,மாறுபட்ட பார்வை.மன்றத்தில் முதல் கவிதையானாலும் பண்பட்ட கவிதாயினி என்பது புலப்படுகிறது.
வாழ்த்துகள் செந்தமிழரசி.


முதல் கவிதைக்கு இத்தனைப் பின்னூட்டங்கள் வருமேன எதிர்ப்பார்க்கவில்லை.

என் பண்ப்பார்த்து பண்பட்ட கவிதாயினி என்றுப் பின்னூட்டம் தந்த சிவா அவர்களுக்கு என் நன்றிகள்.

செந்தமிழரசி

அக்னி
05-12-2007, 11:15 AM
நண்பர்கள் சொன்னதுபோல் மாறுபட்ட பார்வை...
அப்படியே வாழ்க்கையின் மறைபொருளையும் உணர்த்தும் கவிதை...

உயிருடன் இருக்கையில்
வாழ்வை நாம் சுமந்தால்..,
உயிர் பிரிந்ததும்,
வாழ்வு எம்மைச் சுமக்கும்...

ஒருவரியில் சொல்வதானால்,
சிலுவைப்பாரம் சுமந்த பரம்பொருள்...

மிகுந்த பாராட்டுக்கள் செந்தமிழரசி அவர்களே...

அமரன்
06-12-2007, 08:59 AM
கருமை இருப்பதாலாயே
வெண்மை அறியப்படுகின்றது.
அதன்
மேன்மை உணரப்படுகின்றது..

ஆதிகாகலப் பண்டமாற்று
வணிகத்தின் ஆதார சக்தி..
எக்கால அன்புமாற்று
மானுடத்தின் ஆதார சுருதி..

பாராட்டுக்கள் செந்தமிழரசி..

இறைவன் நம்மை படைத்ததே, நமக்குள் ஒருவருக்கு ஒருவர் சேவை செய்வதற்கே.-பிரவீன்

செந்தமிழரசி
06-12-2007, 01:57 PM
நண்பர்கள் சொன்னதுபோல் மாறுபட்ட பார்வை...
அப்படியே வாழ்க்கையின் மறைபொருளையும் உணர்த்தும் கவிதை...

உயிருடன் இருக்கையில்
வாழ்வை நாம் சுமந்தால்..,
உயிர் பிரிந்ததும்,
வாழ்வு எம்மைச் சுமக்கும்...

ஒருவரியில் சொல்வதானால்,
சிலுவைப்பாரம் சுமந்த பரம்பொருள்...

மிகுந்த பாராட்டுக்கள் செந்தமிழரசி அவர்களே...

கவிதையின் உள் அர்த்தம் நோக்கி பின்னூட்டம் தந்தமைக்கு நன்றி அக்னி..

செந்தமிழரசி
06-12-2007, 01:58 PM
கருமை இருப்பதாலாயே
வெண்மை அறியப்படுகின்றது.
அதன்
மேன்மை உணரப்படுகின்றது..

ஆகாகலப் பண்டமாற்று
வணிகத்தின் ஆதார சக்தி..
எக்கால அன்புமாற்று
மானுடத்தின் ஆதார சுருதி..

பாராட்டுக்கள் செந்தமிழரசி..

இறைவன் நம்மை படைத்ததே, நமக்குள் ஒருவருக்கு ஒருவர் சேவை செய்வதற்கே.-பிரவீன்


கவிதைப் பின்னூட்டத்திற்கும் பாராட்டுக்கும் என் நன்றிகள் அமரன்.

ஆதவா
07-12-2007, 08:28 AM
வாவ்....
நன்றி மறப்பதில்லை சில..
அஃறிணைகள்

உட்பகை அஞ்சித்தற் காக்க..

காக்காமல் போனது யாரின் குற்றம்? கடவுளுக்குத் தெரியவில்லையோ? உடனிருந்தார் பகை. அன்பின்மையும் அதிக அன்புடைமையும் நம்மைக் குத்தும் முற்கள். வஞ்சம் இல்லா மனிதர்கள் மனிதரே அல்ல... (இது நான் சொன்னது.)

கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த மனிதன்..... அவனே மனிதன்...

மெய்வருத்தக் கூலி தரும்...

எது? கூட்டற்குறிப் பலகையா? அல்லது, அதனோடு ஒத்திணைந்த மனிதனா?

உம்மாதிரி கவிதைகள் நிறைய எதிர்பார்க்கிறேன் செந்தமிழரசி...

வித்தியாசமான படைப்பு

சுகந்தப்ரீதன்
03-03-2008, 07:30 AM
உயிரற்ற பொருட்களும் உணர்த்ததான் செய்கிறது...மனிதனுக்கு மாண்புகளை...!! ஆனாலும் உணரத்தான் மறுக்கிறான் மனிதன் மரபுகளை...!!

அஃறினைக்கு இருக்கும் அந்த அறிவு மனிதனின் ஆறறிவில் அடங்கவில்லையோ...? அதனால்தான் உலகில் இத்தனை தொல்லையோ...?!

மாறுப்பட்ட செழிப்பான சிந்தனைக்கு செந்தமிழரசிக்கு எனது வாழ்த்துக்களும் பாராட்டுகளும்...!! தொடர்ந்து எழுதுங்கள்...!!

நாகரா
03-03-2008, 08:40 AM
ஒன்றாய் மண் மீது
ஓங்கி நிற்கும்
அகிம்சையை மௌனமாய் போதிக்கும்
மர புத்தனை
மண்ணிலிருந்து கழித்து
மனித குமாரனை இம்சைப்படுத்திக் கொல்ல
மனிதன் செய்த
கூட்டல் குறிச் சிலுவைக்கு
பெருமை கூட்டும் நல்ல கவிதை

வாழ்த்துக்கள் செந்தமிழரசி.

ஆனால் அவர் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்துவிட்டார்.

அவ்வாறெனில் சிலுவை சுமப்பது யாரை?

இறந்து விட்ட மனிதமே சிலுவையில் தொங்குகிறது போலும்.

செந்தமிழரசி
03-03-2008, 12:00 PM
அன்பின்மையும் அதிக அன்புடைமையும் நம்மைக் குத்தும் முற்கள். வஞ்சம் இல்லா மனிதர்கள் மனிதரே அல்ல... (இது நான் சொன்னது.)

உம்மாதிரி கவிதைகள் நிறைய எதிர்பார்க்கிறேன் செந்தமிழரசி...

வித்தியாசமான படைப்பு

ஆம், அந்த முற்கள்தாம் அவனின் தலைகீரிடமாயின.

நஞ்சுடை அரவமும் நற்பாம்பாய் வழக்கப்படும் அவனியில் வஞ்சமுடை நெஞ்சத்தார் நெளிந்து திரிகிறார் இருகால்களில்.

பின்னே போனவர்தான் முன்னே சொன்னார் சிலுவையில் அரையும்.

நன்றிகள் ஆதவா பின்னூட்டத்திற்கு.

முயர்ச்சிக்கிறேன் இவ்வாறு வித்தாசமாய் படைக்க.

செந்தமிழரசி
05-03-2008, 03:09 AM
மாறுப்பட்ட செழிப்பான சிந்தனைக்கு செந்தமிழரசிக்கு எனது வாழ்த்துக்களும் பாராட்டுகளும்...!! தொடர்ந்து எழுதுங்கள்...!!

பின்னூட்ட பாராட்டுக்கு நன்றிகள் பல சுகந்தப்ரீதன்

பென்ஸ்
06-03-2008, 05:23 PM
நன்றியில்லாத மானுடம்
உயிரற்ற மரகட்டைகளை விட கேவலமாய்...

நச் ரக கவிதை இது...

பாராட்டுகள்...