PDA

View Full Version : விசமப்புன்னகை



அமரன்
04-12-2007, 12:38 PM
காத்திருக்கும்போது
நிறைவான நூற்பந்துபோல
சுழன்றுகொண்டிருந்த முட்கள்
சடுதியில் சுமைகுறைத்தன.

தூரத்தே நீ
புன்னகையை விசிறியபடி..!

மனோஜ்
04-12-2007, 12:45 PM
முற்கள் மட்டும் இல்லை அமரன் பாறைகள்ககூட பஞ்சாகிவிடும்
அருமை நண்பரே

சிவா.ஜி
04-12-2007, 12:50 PM
அதுதான் காலம் காதலரிடம் விளையாடும் கண்ணாமூச்சி விளையாட்டு.காத்திருப்பில் கழுதையாய்....காதலி வந்ததும் பந்தயக்குதிரையாய்
பறக்கும் மணித்துளிகள்.
அருமை அமரன்.வாழ்த்துகள்

ஆதி
04-12-2007, 01:11 PM
காதலைவிட அழகான ஹைக்கூ
ஞாலத்தில் ஏது..

வாழ்த்துக்கள் அமரன்..

-ஆதி

ஆதவா
07-12-2007, 06:10 AM
காத்திருக்கும்போது
நிறைவான நூற்பந்துபோல
சுழன்றுகொண்டிருந்த முட்கள்
சடுதியில் சுமைகுறைத்தன.

தூரத்தே நீ
புன்னகையை விசிறியபடி..!

காத்திருத்தலின் இன்பம்... வள்ளுவர் சொல்லும் குறள்...

எனைத்தொன்று இனிதேகாண் காமம் தாம்வீழ்வார்
நினைப்ப வருவதொன்று இல்.

எப்பேர்பட்ட பிரிவிலும் காத்திருப்பிலும் துன்பம் வாராது...

பூமகள்
08-12-2007, 09:41 AM
"நிமிடங்கள் வருசமாகும் நீ இல்லா கணங்கள்..
வருடமும் நிமிடமாகும் நீ எந்தன் பக்கம் வந்தால்.."

கரு பழையது... சொல்லாடலுடன் சொல்லிய விதம் புதியது.:icon_rollout:

மெதுவாக நகரும் முள் - சுமையாக நூற்பந்து
வேகமான முள் - சுமை குறைந்த நூற்பந்து

உருவகமும் உவமானமும் அசத்தல். :icon_b:

பாராட்டுகள் அமரன் அண்ணா. :)

ஆர்.ஈஸ்வரன்
09-12-2007, 09:54 AM
காத்திருக்கும்போது
நிறைவான நூற்பந்துபோல
சுழன்றுகொண்டிருந்த முட்கள்
சடுதியில் சுமைகுறைத்தன.

தூரத்தே நீ
புன்னகையை விசிறியபடி..!

புன்னகை பொன் நகையை விட என்றும் உயர்ந்தல்லவா

அமரன்
10-12-2007, 10:54 AM
ஊட்டமிட்ட மனமார்ந்த நன்றி.



கரு பழையது... சொல்லாடலுடன் சொல்லிய விதம் புதியது.:icon_rollout:
மெதுவாக நகரும் முள் - சுமையாக நூற்பந்து
வேகமான முள் - சுமை குறைந்த நூற்பந்து

நூற்பந்து சுமை குறைப்பது நன்மையா தீமையா?
அவள் புன்னகை விசமபுன்னகையா? விசம் அப்புன்னகையா?