PDA

View Full Version : மணத்தக்காளி



mgandhi
04-12-2007, 07:31 AM
தினமும் உணவுடன் சேர்க்க வேண்டிய கீரை வகை-களில் மணத்தக்காளியும் ஒன்று.


அதிக அளவில் நீர் விட்டு சுண்டக் காய்ச்சி... மிளகு, சீரகம், உப்பு சேர்த்து எண்ணெய் விட்டு தாளித்துக் குழம்பு செய்யலாம். பருப்-புடன் சேர்த்து கூட்டு வைக்க-லாம். பொரியலாகச் செய்தும் சாப்-பிடலாம். சாம்பார் செய்யும்-போதும் அதில் பயன்-படுத்தலாம். இப்படிப் பயன்படுத்தும்போது, கீரை சாப்பிடப் பிடிக்காத குழந்தை-களும் விரும்பிச் சாப்பிடுவார்-கள்.

மணத்தக்காளியில் நிறைய உயிர்ச் சத்துக்களும், புரதச் சத்துக்களும், இரும்புச் சத்தும் உண்டு. இந்தக் கீரை-யில் தக்காளி வடிவில் சிறிய அளவில் மணி மணியாகக் காய்-கள் இருப்பதால் மணித்தக்காளி என்றும் அழைக்கப்படு-கிறது. இந்தக் காயுடன் கீரையையும் பச்சைப் பருப்பையும் கலந்து உண்டு-வந்தால், உடல் சூடு குறையும். மூலச் சூட்டைத் தணிக்கும் ஆற்றலும் இதற்கு உண்டு.

சித்த மருத்துவத்தில் குடல் புண்-களைக் குணப்படுத்துவதில் மணத்தக்-காளிக்கு முக்கிய இடம் உண்டு. காமாலை நோயாளிகளுக்கு இந்தக் கீரையை நன்றாக இடித்துச் சாறு எடுத்து, பசும்பால் கலந்து தினசரி காலையில் வெறும் வயிற்றில் கொடுக்கும்போது ஒரு வாரத்திலேயே காமாலை நோய் சரியாகிவிடும்.

மணத்தக்காளிக் கீரையில் உடல் நலத்துக்கான சத்துக்கள் நிறைய இருக்-கின்றன. அதனால், குழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்து வாரம் ஒருமுறை-யாவது இந்தக் கீரையைச் சாப்பிடப் பழக்கப்படுத்துவது நல்லது!
நன்றி விகடன்

மாதவர்
04-12-2007, 04:45 PM
வாய் புண் மற்றும் வயிற்று புண்ணுக்கு உடனடி நிவாரணம் இந்த கீரை.

மலர்
04-12-2007, 06:05 PM
இந்த செடியில உள்ள அந்த சின்ன சின்ன பழம் சாப்பிட சூப்பரா இருக்கும்....
மணத்தக்காளி கீரை உடம்புக்கும் ரொம்ப நல்லது,,,

ஜெயாஸ்தா
05-12-2007, 02:45 AM
இந்த செடியில உள்ள அந்த சின்ன சின்ன பழம் சாப்பிட சூப்பரா இருக்கும்....
மணத்தக்காளி கீரை உடம்புக்கும் ரொம்ப நல்லது,,,

மணத்தக்காளி பழம் சாப்பிட நன்றாகத்தான் இருக்கும். ஆனால் மணத்தாக்காளி காயை எங்கள் வீட்டில் குழம்பு வைத்து சில சமயம் தருவார்கள். கொஞ்சம் கசப்பாக இருக்கும். அதனால் நான் மணத்தக்காளியுடன் 'கா'.

மலர்
05-12-2007, 07:31 AM
மணத்தக்காளி பழம் சாப்பிட நன்றாகத்தான் இருக்கும். அதனால் நான் மணத்தக்காளியுடன் 'கா'.
கா பழமாகாதது தான் கா க்கு காரணமா...
நான் இதோட காயை சாப்பிட்டதே இல்லை....

யவனிகா
05-12-2007, 12:35 PM
நல்ல தகவல்கள் காந்தி அவர்களே...நீங்கள் அளிக்கும் உணவு சம்மந்தமான பதிவுகள் அனைத்துமே எனக்கு மிகவும் பயனளிப்பதாக இருக்கிறது,நன்றி.

mgandhi
05-12-2007, 04:34 PM
நல்ல தகவல்கள் காந்தி அவர்களே...நீங்கள் அளிக்கும் உணவு சம்மந்தமான பதிவுகள் அனைத்துமே எனக்கு மிகவும் பயனளிப்பதாக இருக்கிறது,நன்றி.

மிக்க நன்றி யவனிகா