PDA

View Full Version : காதல் குளிர் - 11



gragavan
03-12-2007, 07:36 PM
சென்ற பகுதியை இங்கே (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13537) படிக்கவும்.

விமானம் வானத்தில் மிதந்தது. அதில் ரம்யாவும் ப்ரகாஷாவும் காதலில் மிதந்தார்கள். வந்த வேலையெல்லாம் (நேர்முகத் தேர்வுக்குத்தானே வந்தார்கள்!!!!!!!!!!!!!!!!!!) முடிந்து பெங்களூர் திரும்பல். ரம்யாவின் சீட் பெல்ட்டாக ப்ரகாஷாவின் கை. முன்பும் இதே நெருக்கத்தில் ப்ரகாஷாவோடு உட்கார்ந்திருக்கிறாள் ரம்யா. ஆனால் இப்போது நிலமையே வேறு.

அவளது ரோஜாக் கைகளை கைக்குள் புதைத்துக் கொண்டு கேட்டான். "ரம்யா....I love you so much. I will love you forever. ஆனாலும் எனக்கு ஒரு சந்தேகம். சாய்ங்காலா என் லவ்வ ரிஜெக்ட் பண்ணீட்டு.....ராத்ரி எப்படி? ஆறு மணி உளகடே என்னாச்சு?" கைக்குளிருந்த ரோஜாப்பூக்களை முத்தமிட்டான்.

ப்ரகாஷாவின் கைகளை இதழால் நனைத்தாள். "டேய். நீ காதல்னு சொல்றப்போ எனக்கு உள்ள சந்தோஷமா இருந்தாலும்.....பயம்தான் வந்துச்சு. நீ என் கூட இருக்கும் போது வர்ர சந்தோஷம்...நீ இல்லாதப்ப வருத்தமாகும்னு புரிஞ்சது. நீ இல்லாமப் போயிருவியோங்குற பயத்துல உங்கிட்ட உறுதிமொழி வாங்கனும்னுதான் தோணுச்சு. அந்த பயத்துலதான் காதலைச் சொல்லத் தோணலை. அதுக்குதான் நானும் கேட்டேன். ஆனா நீயும் சொல்லலை. அப்ப நீ முழிச்சது.......... நான் அழாம இருந்தது பெரிய விஷயம். ஆனாலும் முகத்தை மறைக்கிறது ரொம்பக் கஷ்டமா இருந்தது. உன் பக்கத்துல உக்காந்தா கண்டிப்பா அழுதிருப்பேன். அதுவும் உண்யைக் கட்டிப்புடிச்சிக்கிட்டே. அதுனாலதான் கார்ல முன்னாடி போய் உக்காந்தேன்."

ரம்யாவின் முகத்தில் விழுந்த முடியை விரலால் ஒதுக்கினான். அவ்வளவு மென்மையாக அவன் இதற்கு முன் எதையும் கையாண்டதில்லை. என்ன? நேற்றா? ஹி ஹி. இது மென்மைங்க. மென்மை. "ரம்யா....எனக்கும் அழுகே பந்த்து. தும்ப கஷ்டா பட்டு அழாம இருந்தேன். அது சரி. பிராமிஸ்னு சொன்னியே. நானு குடுக்கலையே? அது எப்பக் கெடைச்சது?"

"தெரியலடா. ஆக்சிடெண்ட் ஆனப்புறம் ரொம்பவே distrubed-ஆ இருந்தேன். அப்ப பயத்துல உங்கிட்டதான் ஓடனும்னு தோணிச்சு. அது ஏன்னு எனக்குத் தெரியலை. அப்புறம் ஆட்டோல போறப்போ என்னைப் பாதுகாப்பா வெச்சிருந்தியே....அப்பதான் நீ என்னை கஷ்டப்பட விடமாட்டன்னு தோணிச்சு. உன்னோட நெருக்கம்...உன்னோட வாசம்... உன்னோட சுவாசம்....எல்லாத்தையும் புதுசு புதுசா ரசிச்சேன். நீ எனக்கு வேணும்னு...எப்படியாவது வேணும்னு தோணுச்சு. ஆனா என்னோட கேள்விகளுக்கு இன்னமும் நேரடியான பதில் நீ சொல்லலை. ஆனா பிரச்சனைன்னு வந்தா அது உனக்கு மட்டுமல்ல நம்ம ரெண்டு பேருக்கும்னு காதல் சொல்லுச்சு. ஒங்கம்மா அழுதாங்கன்னா அத எப்படிச் சமாளிக்கிறதுன்னு நம்ம ரெண்டு பேரும் யோசிப்போம். ஒரு வழி கண்டுபிடிப்போம்னு ஒரு முடிவுக்கு வந்தேன். அப்பவே நீ என்னோட ப்ரகாஷாவாயிட்ட.

அப்புறம் எப்படி நீ தனியா தூங்குறது? ஆனா உண்மையச் சொல்றேன்.....உன் கிட்ட எப்படிக் காதலைச் சொல்றதுன்னு தெரியாமதான் முத்தத்தால சொன்னேன். அது...முத்தத்துக்குப் பதில் முத்தம்...அதுக்குப் பதில் முத்தம்னு நடந்து மொத்தமும் நடந்துருச்சு. Well....I liked it. I expressed my love in the best possible way and you reciprocated as a man. I am fine with it. டேய்....உன்னால என்னை விட்டு எங்கயும் போக முடியாது."

ரம்யாவின் கன்னத்தை ஒரு கையால் தாங்கிக் கொண்டு கட்டை விரலால் இதழ்களை வருடினான். அட....அதென்ன...அப்படித்தான் பூ பூக்குமா? ரம்யாவின் முகமாற்றத்தைச் சொன்னேன். படக்கென்று ப்ரகாஷாவின் விரலைக் கடித்து விட்டாள்.

"டேய்....இது பிளேன்....எத்தனை பேர் இருக்காங்க. ஒழுங்கா என்னோட கேள்விக்குப் பதில் சொல்லு. அப்புறம் மிச்சத்த வெச்சுக்கலாம். ஒங்கப்பா கிட்ட சண்ட போட்டுட்டு வந்துருவ. ஒங்கம்மா அழுதா என்னடா செய்வ?" போலி மிரட்டல் விடுத்தாள் ரம்யா.

"ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்....சொல்றேன். அம்மா அழுதா......ம்ம்ம்ம்ம்ம்ம்.....We are ready to accept them as they are. But why cant they accept us as we are? Just because i love you, I dont deserve to be hated. Certainly I will not be happy to start my life without her blessing. She has to understand me and accept us. If she is not understanding, I will assure her my love and affection to her. Also I will be waiting till she understands me. And I will nurture the confidence in her heart by promising the open doors for her and appa. I want them...but I cant loose you. I will gain you first and then my parents soon after that."

"இத இத இதத்தான் நான் அப்ப எதிர்பார்த்தேன். இப்ப எப்படி உனக்கு பதில் தெரிஞ்சதோ. அதே மாதிரி எனக்கும் தெரிஞ்சது மாமா."

"என்ன மாமாவா?"

"ஆமாண்டா மாமா...." முத்துக் கொட்டிச் சிரித்தாள் ரம்யா.

"மாமா எல்லா பேடா....ப்ரகாஷான்னு கூப்டு. அது போதும்."

"மாமா வேண்டாமா...சரி. பேர் சொல்லியே கூப்புடுறேன். ஆனா...அப்பா அம்மா இருக்குறப்பவும் ப்ரகாஷான்னுதான் கூப்புடுவேன்."

"சரி...சரி....கூப்டா சரிதான்." இருவரும் சேர்ந்து சிரித்தார்கள். சிலிர்த்தார்கள். பின்னே...ரம்யாவின் கன்னத்தில் முத்தம் வைத்தானே.

"Execuse me sir. PDA not allowed inside the flight sir" விமானப் பணிப்பெண் பணிவுப்பெண்ணாகச் சொன்னாள்.

பொய்யாக ஆச்சரியப்பட்டாள் ரம்யா. "Sorry. I didnt know PDA is not allowed inside the flight. My husband doesnt understand all these things. He is always mischevous and playful. I will ensure he is controled at leaset inside your flight. Is that fine?"

"Thatz fine madam."

"Thank you" என்று சொல்லிவிட்டு விமானப் பணிப்பெண்ணிற்கு கோவமும் அதை மீறிய பொறாமையும் வரும் வகையில் ப்ரகாஷாவின் இதழ்களில் மெத்தென்று ஒரு முத்தமிட்டாள் ரம்யா.

தொடரும்...கதையல்ல. ரம்யா ப்ரகாஷாவின் இனிய வாழ்க்கை.

பின்குறிப்பு

எச்சில் பண்டம் விலக்கு
அதில்
முத்தம் மட்டும் விலக்கு

இதுவரை முத்தமிடாதவர்களுக்கு வாழ்த்துச் சொல்லி ப்ரகாஷா எழுதிய தமிழ்க்கவிதை.

அன்புடன்,
கோ.இராகவன்

மதி
04-12-2007, 01:20 AM
ஆஹா..
இதமான முடிவு... வாழ்த்துக்கள் ராகவன்.

அன்புரசிகன்
04-12-2007, 03:38 AM
மென்மையான காதல் அவர்களின் இதழோடு முடிந்தது.... முத்தத்தால் காதல் சொல்லவைத்ததில் எழுத்தாளரின் திறமை தெரிகிறது. நன்றிகள் கலந்த வாழ்த்துக்கள் ராகவன் அண்ணலுக்கு...

மலர்
04-12-2007, 07:05 AM
அழகான முடிவு..
பாராட்டுக்கள் ராகவன் அண்ணா...

கவிதை கூட அழகாதானிருக்கு...
எந்த இடத்திலும் படிப்பவர்களுக்கு சலிப்பு தட்டாமலேயே பதினொரு பாகங்களை
கொண்டுவந்து விட்டீர்கள்..
சபாஷ் அண்ணா...
உண்மையில் உங்களின் எழுத்துக்கள் :icon_b:

ராகவன் அண்ணா
அடுத்த கதை எப்போது........???

lolluvathiyar
04-12-2007, 07:15 AM
ஆகா கதை அருமையான முடிவு, எதிர்பார்த்தபடி இருந்தாலும் பல திருப்பங்கள் கொண்டு வந்து கதை அருமையாக நகர்த்தினீர்கள், கதையில் பல இடங்களில் ஹிந்தி கையாளபட்டது, சகிச்சுகிட்டேன் ஏனா எனக்கு ஹிந்தி சுத்தமா தெரியாது, ஆனா இந்த பாகத்துல ஆங்கிலம் அதிகமா கையாளபட்டது. அது தான் எனக்கு சிக்கலே ஏனா எனக்கு முழு ஆங்கில அறிவு கிடையாது (மத்த அறிவு மட்டும் இருக்கானு கேக்க கூடாது) அதனால் அந்த PDF என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம்னு சொல்லிருங்க, இல்லீனா தூக்கம் வராது.

அன்புரசிகன்
04-12-2007, 07:45 AM
"Execuse me sir. PDA not allowed inside the flight sir" விமானப் பணிப்பெண் பணிவுப்பெண்ணாகச் சொன்னாள்.

பொய்யாக ஆச்சரியப்பட்டாள் ரம்யா. "Sorry. I didnt know PDA is not allowed inside the flight. My husband doesnt understand all these things. He is always mischevous and playful. I will ensure he is controled at leaset inside your flight. Is that fine?"



அந்த PDF என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம்னு சொல்லிருங்க, இல்லீனா தூக்கம் வராது.

அட... PDA.. Personal Digital Assistant :lachen001: நேரடி மொழிபெயர்ப்பு பார்க்காதீங்க.... கைகளால் சில்மிஷம் என்பது பொருந்தும் என்று நினைக்கிறேன். :D :D :D

gragavan
04-12-2007, 08:32 PM
கதையைப் படித்துக் கருத்திட்ட நண்பர்களுக்கு நன்றி.

PDA என்றால் Public Display of Affection. பொது இடங்களில் தங்கள் நெருக்கத்தைக் மறைக்காமல் இருப்பதற்கு ஆங்கிலத்தில் இப்படிச் சொல்வார்கள்.

பாரதி
07-12-2007, 12:42 PM
கதையை சுபமாக முடித்ததற்கு வாழ்த்துக்கள் இராகவன்.
வித்தியாசமான முயற்சியாகத்தான் தோன்றியது. எப்போதும் உங்களின் படைப்புகளைப் படிக்கும் போது என் எதிர்பார்ப்பு அதிகரித்துக்கொண்டே செல்லும். அதனால்தானோ என்னவோ எனக்கு இக்கதை குறித்து அதிகம் சொல்லத் தோன்றவில்லை..!

மலர்
13-12-2007, 04:27 PM
ராகவன் அண்ணா அடுத்த கதை எப்போது.......??
வீ ஆர் வெயிட்டிங்..