PDA

View Full Version : உயிர்ஆதி
03-12-2007, 02:13 PM
பறணேறியப் பழையக் கவிதைகளில் இருந்து..

ஒருமுறை சொர்க்கத்தில் சேர்க்கிறாய் - பின்
ஒருமுறை நரகத்தில் வார்க்கிறாய்
ஒருமுறை முளைக்கட்ட விதைக்கிறாய் - அடி
ஒருமுறை முளையறுத்து மிதிக்கிறாய்
ஒருமுறை உன்னைத்தான் பார்ப்பதற்கு - நீ
உயிரையே வாடகைக் கேட்கிறாய்
ஒருநொடி நாந்தான் மகிழ்ந்ததால் - என்
உணர்ச்சிக்கு தடைப்பல விதிக்கிறாய்

எதுவரையில் என்பயணம் அறியவில்லை - அதை
என்றைக்கும் அறிந்துவிட முயன்றதில்லை
இதுவரையில் என்வேர்கள் அசைந்ததில்லை - அடி
இளவெட்டு தூறல்களில் நனைந்ததில்லை
பொதுவாக கனவுகளில் மிதந்ததில்லை - உயிர்
புன்னகையோ இமைகளில் வழிந்ததில்லை
மெதுவாக என்னைநீ மாற்றிவிட்டாய் - என்
மேகத்தில் மழையீரம் பூசிவிட்டாய்

திறக்காத விழிகளை திறந்துவிட்டாய் - ஒரு
திருவோடாய் இதயத்தை ஏந்தவிட்டாய்
மரக்காதில் வார்த்தைகளை எதிரொலித்தாய் - உன்
மடிமீது எந்தலையை மலரவிட்டாய்
அடங்காத ஆசைகளில் அடுப்பெரித்தாய் - நான்
அழுகின்ற நீர்மங்களில் நெய்யெடுத்தாய்
இடக்காக வார்த்தைகளை இதழ்நிறைத்தாய் - என்
இதயத்தைக் குறிவைத்து எதிலடித்தாய்

இளகாதப் பாறையென எண்ணி நிமிர்ந்தேன் - உன்
இமைக்காற்றில் பொடிப்பொடியாய் இடிந்து தகர்ந்தேன்
பழகாது பெண்களிடம் தள்ளி இருந்தேன் - உன்னை
பார்த்ததுமே பழகிவிட ஆர்வம் அணிந்தேன்
கிழடான காதல்கதைக் கேட்டுச் சிரித்தேன் - விழி
கிளர்ச்சியிலே உயிரோடு கிழிந்து உதிர்ந்தேன்
மலடான மேகமென மயங்கி நகர்ந்தேன் - ஒரு
மலர்நினைவில் மழைப்பெய்ய கண்கள் இருண்டேன்

விடியாத இரவுவந்தால் பகல்கள் உண்டா ? - உன்
வீண்பிடி வாதத்தில் எந்தப் பயனுமுண்டா ?
முடியாது எனச்சொல்லி முகத்தை மறைத்தாய் - என்
மூச்சுக்கு கட்டாயத் தூக்கு கொடுத்தாய்
அடிக்காதல் வேறுசெயதால் இனிமேல் மீண்டும் - உயிர்
ஆன்மா இன்னொன்று புதிதாய் வேண்டும் - என்னைப்
பிடிக்காத ஒருத்திக்காய் சாக ஒன்று - என்மேல்
பிரியமான ஒருத்திக்காய் வாழ மட்டொன்று.

- ஆதி

சாம்பவி
03-12-2007, 03:33 PM
கவிதை.... கவிதை.,... !

சொல்லழகு.... பொருளழகு... !
பிழையில்லா தமிழழகு... .!

வாழ்த்துக்கள் கவிஞரே... !

ஆதி
03-12-2007, 03:54 PM
கவிதை.... கவிதை.,... !

சொல்லழகு.... பொருளழகு... !
பிழையில்லா தமிழழகு... .!

வாழ்த்துக்கள் கவிஞரே... !

பின்னூட்டத்திற்கு நன்றி சாம்பவி அவர்களே..

-ஆதி

இளசு
03-12-2007, 07:41 PM
வைரமுத்துவின் கல்லூரி காலக்கவிதைகளில்
கண்டிருக்கிறேன் இப்படி ஒரு சொல்/பொருள் வீச்சை!

உங்கள் ஆழம், அகலம், ஆளுமை அசரவைக்கிறது ஆதி!
மிக வளமான எதிர்காலம் கவியுலகில் காத்திருக்கிறது உங்களுக்கு!

சாம்பவியின் பாராட்டு சாமான்யமல்ல.. அவர் பாராட்டை பெரும் வெகுமதியாய் நான் கருதுகிறேன்..

வாழைப்பூத்திரி எடுத்து
வெண்ணியிலே நெய்யெடுத்தது - வாலி!
காதல் நாடகத்தில் திரை இழுத்து
கண்ணீரில் நெய்யெடுத்தது - ஆதி!

தொடரட்டும் கவிரதப் பயணங்கள்.... கம்பீர சொல்லாட்சியுடன்!

ஆதி
04-12-2007, 05:05 AM

ஐந்தாண்டுக்கு முன்னெழுதியக் கவிதை..

பிறந்தப்பயனையடைந்து விட்டதென்றே பேருவகைக்கொள்கிறது மனம்..

சாம்பவியிடமிருந்து வந்த வாழ்த்தும் முதல் வாழ்த்து இத்திரிக்கு மட்டுமல்ல
எனக்கும்..

நன்றிகள் இளசு அவர்கட்கு.. தொடர்ந்து நீங்கள் தரும் ஊக்கத்திற்கும் ஊட்டத்திற்கும் எஞ்ஞான்றும் நன்றியுடன் ஆதி

அமரன்
04-12-2007, 07:55 AM
அருமை அருமை.
ஆதியின் எண்ணமும் கைவண்ணமும் மணக்குது.
ரசிக்கின்றேன்; ருசிக்கின்றேன்; சொக்கி நிற்கின்றேன்..
எல்லாவளமும் நிறைந்து இருக்கின்றது..
வைரமுத்து பானியில் சொல்லிப்பார்த்தேன்.
எனது பானியிலும் சொல்லிப்பார்த்தேன்..
அளவற்ற இனிமையை சுவைத்தேன்..

மனமார்ந்த பாராட்டுகள் ஆதி.

ஆதி
04-12-2007, 01:35 PM

சந்தப்பானியில் தந்தப் பின்னூட்டத்திற்கும்..

மானமார்ந்தப் பாராட்டுக்கும் நன்றி அமரன்..

-ஆதி

செந்தமிழரசி
05-12-2007, 07:19 AM
பறணேறியப் பழையக் கவிதைகளில் இருந்து..

ஒருமுறை சொர்க்கத்தில் சேர்க்கிறாய் - பின்
ஒருமுறை நரகத்தில் வார்க்கிறாய்
ஒருமுறை முளைக்கட்ட விதைக்கிறாய் - அடி
ஒருமுறை முளையறுத்து மிதிக்கிறாய்
ஒருமுறை உன்னைத்தான் பார்ப்பதற்கு - நீ
உயிரையே வாடகைக் கேட்கிறாய்
ஒருநொடி நாந்தான் மகிழ்ந்ததால் - என்
உணர்ச்சிக்கு தடைப்பல விதிக்கிறாய்

எதுவரையில் என்பயணம் அறியவில்லை - அதை
என்றைக்கும் அறிந்துவிட முயன்றதில்லை
இதுவரையில் என்வேர்கள் அசைந்ததில்லை - அடி
இளவெட்டு தூறல்களில் நனைந்ததில்லை
பொதுவாக கனவுகளில் மிதந்ததில்லை - உயிர்
புன்னகையோ இமைகளில் வழிந்ததில்லை
மெதுவாக என்னைநீ மாற்றிவிட்டாய் - என்
மேகத்தில் மழையீரம் பூசிவிட்டாய்

திறக்காத விழிகளை திறந்துவிட்டாய் - ஒரு
திருவோடாய் இதயத்தை ஏந்தவிட்டாய்
மரக்காதில் வார்த்தைகளை எதிரொலித்தாய் - உன்
மடிமீது எந்தலையை மலரவிட்டாய்
அடங்காத ஆசைகளில் அடுப்பெரித்தாய் - நான்
அழுகின்ற நீர்மங்களில் நெய்யெடுத்தாய்
இடக்காக வார்த்தைகளை இதழ்நிறைத்தாய் - என்
இதயத்தைக் குறிவைத்து எதிலடித்தாய்

இளகாதப் பாறையென எண்ணி நிமிர்ந்தேன் - உன்
இமைக்காற்றில் பொடிப்பொடியாய் இடிந்து தகர்ந்தேன்
பழகாது பெண்களிடம் தள்ளி இருந்தேன் - உன்னை
பார்த்ததுமே பழகிவிட ஆர்வம் அணிந்தேன்
கிழடான காதல்கதைக் கேட்டுச் சிரித்தேன் - விழி
கிளர்ச்சியிலே உயிரோடு கிழிந்து உதிர்ந்தேன்
மலடான மேகமென மயங்கி நகர்ந்தேன் - ஒரு
மலர்நினைவில் மழைப்பெய்ய கண்கள் இருண்டேன்

விடியாத இரவுவந்தால் பகல்கள் உண்டா ? - உன்
வீண்பிடி வாதத்தில் எந்தப் பயனுமுண்டா ?
முடியாது எனச்சொல்லி முகத்தை மறைத்தாய் - என்
மூச்சுக்கு கட்டாயத் தூக்கு கொடுத்தாய்
அடிக்காதல் வேறுசெயதால் இனிமேல் மீண்டும் - உயிர்
ஆன்மா இன்னொன்று புதிதாய் வேண்டும் - என்னைப்
பிடிக்காத ஒருத்திக்காய் சாக ஒன்று - என்மேல்
பிரியமான ஒருத்திக்காய் வாழ மட்டொன்று.

- ஆதி

ஐந்தாண்டுக்கு முன் எழுதியக் கவிதை என்றுக் குறிப்பிட்டிருந்தீர்கள், இன்னும் ஈரம் இருக்கிறது ஆதி.

புதிய சொல்லாடல் வேறுப்பட்டப் பார்வை அர்த்தம், அடடா கலக்குறீங்க ஆதி.

நான் படித்த தங்களுடைய இரண்டாம் கவிதை இது, என்னை உங்கள் ரசிகையாக்கிடுச்சுங்க. உங்க கவிதைகளத் தேடிப் பிடிச்சு படிக்க ஆரம்பித்துவிட்டேன்.

அலங்கரிக்கப்பட்ட வார்த்தைகள், பாராட்டுக்கள் ஆதி.

இதேப் போன்ற இனிய கவிதைகளைத் தங்களிடமிருந்து எதிர்நோக்கி
செந்தமிழரசி

ஆதி
05-12-2007, 11:45 AM

எழுதிய ஈரம் காயாமல் இருக்கிறது எனச்சொன்ன அரசிக்கு நன்றி..

என் ரசிகையாகிவிட்டீர் எனச்சொல்லி என்னை நெகிழவைத்துவிட்டீர் சகோதரி..

நன்றிகள் சகோதரிப் பின்னூட்டத்திற்கும் வாழ்த்துக்கும்..

-ஆதி

யவனிகா
05-12-2007, 12:00 PM
தாமதமாகத் தான் பார்த்தேன் ஆதி கவிதையை...
சந்த நயத்துடன்...கவிச் சிந்து பாடுகிறீர்கள்...
கவிதையின் எல்லாத் தளங்களிலும் நீங்கள் மிளிர்வதைக் காணுகிறேன்.
மன்றத்துக்குக் கிடைத்த பொக்கிஷங்களில் நீங்கள் ஒருவர் என்றால் மிகையாகாது தோழரே...
தொடரட்டும் உங்களின் கவிப் பயணம்...வாழ்த்துக்கள்...

jpl
05-12-2007, 12:53 PM
ஒருமுறை முளைக்கட்ட விதைக்கிறாய் - அடி
ஒருமுறை முளையறுத்து மிதிக்கிறாய்

ஒருமுறை உன்னைத்தான் பார்ப்பதற்கு - நீ
உயிரையே வாடகைக் கேட்கிறாய்

என்
மேகத்தில் மழையீரம் பூசிவிட்டாய்

ஒரு
திருவோடாய் இதயத்தை ஏந்தவிட்டாய்
மரக்காதில் வார்த்தைகளை எதிரொலித்தாய்

நான்
அழுகின்ற நீர்மங்களில் நெய்யெடுத்தாய்

இளகாதப் பாறையென எண்ணி நிமிர்ந்தேன் - உன்
இமைக்காற்றில் பொடிப்பொடியாய் இடிந்து தகர்ந்தேன்

ஒரு
மலர்நினைவில் மழைப்பெய்ய கண்கள் இருண்டேன்உயிர்
ஆன்மா இன்னொன்று புதிதாய் வேண்டும் - என்னைப்
பிடிக்காத ஒருத்திக்காய் சாக ஒன்று - என்மேல்
பிரியமான ஒருத்திக்காய் வாழ மட்டொன்று.
எதை எடுக்க எதை விட?
எனவே அத்தனையும் கோர்த்து விட்டேன்....
அதெல்லாம் சரி ஆதி,உங்களைப் பிடிக்காத ஒருத்திக்காக ஏன் சாக வேண்டும்?முரண் தொடையாய் முரண்டு பிடிக்கின்றீர்கள்....

காதலியின் இமைக் காற்றில் புயலடிக்கின்றது உங்கள் கற்பனை வான்மேகம்.

ஆதி
05-12-2007, 03:52 PM
தாமதமாகத் தான் பார்த்தேன் ஆதி கவிதையை...
சந்த நயத்துடன்...கவிச் சிந்து பாடுகிறீர்கள்...
கவிதையின் எல்லாத் தளங்களிலும் நீங்கள் மிளிர்வதைக் காணுகிறேன்.
மன்றத்துக்குக் கிடைத்த பொக்கிஷங்களில் நீங்கள் ஒருவர் என்றால் மிகையாகாது தோழரே...
தொடரட்டும் உங்களின் கவிப் பயணம்...வாழ்த்துக்கள்...

பொக்கிஷங்களில் ஒருவரென என்னைக் குறிப்பிட்டத்திற்கு நன்றி சகோதரி..

இந்த இழையில் வந்தப் பின்னூட்டங்கள் என் கல்லூரி நாட்களை ஞாபகப்படுத்துகின்றன..

படித்தது வேதியலானாலும் பிடித்தது தமிழென்பதால், அதிகமாய் தமிழ்துறைப் படிக்கட்டுகளில்தான் உலவுவேன்..

புல்வெளி, நூலகம், தமிழ்துறை இவைதான் எனக்கு பிடித்தமான இடங்கள்..

தமிழ்துறையும் என்னை வாழ்த்தி வளர்த்தது..

பிழையோடுதான் எழுதுவேன் என்றாலும் பிரியமாய்தான் சொல்லி திறுத்துவர்..

அதற்கு காரணம் ஒரு தமிழ் தேர்வு..

தமிழ்தேர்வு எனில் எனக்கு தேன்மிட்டாய் தின்பது மாதிரி..

கற்பனைக்குதிரையை அவிழ்த்துவிடுவேன்.. விடைகளை சொல்லோவியங்களாய்தான் வரைவேன்..

அப்படி ஒரு பரிட்சையில்.. ஒரு 15 மதிப்பெண் கேள்வி எழுத நேரமில்லாததால் கவிதை எழுதிவைத்தேன்.. அதுவும் அது சிலப்பதிகாரக் கேள்வி..

சென்றவன் உரைத்தான்
தென்னவன் அழைத்தான்
வந்தவள் நின்றாள்
வடிவழகே நீயார் என்றான்

என ஒருகவிதை வடித்தேன், தமிழ்த்துறை முழுதும் பரவிவிட்டது அக்கவிதை.. தமிழ்துறை என்னைத் தத்தெடுத்துக்கொண்டது..

உனக்கு நல்ல வாய்ப்புகள் உள்ளது என அவர்கள் சொல்வார்கள், சிலக் காரணங்களால் நான் கவிதை எழுதுவதை நிறுத்தினேன்..

எல்லாம் என் கண்முன் வந்து நிற்கிறது சகோதரி..

மீண்டும் என் நன்றிகள்..

-ஆதி

ஆதி
05-12-2007, 05:03 PM
எதை எடுக்க எதை விட?
எனவே அத்தனையும் கோர்த்து விட்டேன்....
அதெல்லாம் சரி ஆதி,உங்களைப் பிடிக்காத ஒருத்திக்காக ஏன் சாக வேண்டும்?முரண் தொடையாய் முரண்டு பிடிக்கின்றீர்கள்....

காதலியின் இமைக் காற்றில் புயலடிக்கின்றது உங்கள் கற்பனை வான்மேகம்.

நன்றி jpl அவர்கட்கு..

சாக நினைப்பது சாகாதக் காதலுக்காய்..

ஆனால் எல்லாம் கற்பனைதானே.

மிக்க நன்றிகள் மீண்டும்..

-ஆதி

jpl
06-12-2007, 03:11 AM
சாக நினைப்பது சாகாதக் காதலுக்காய்..
சாகா வரம் பெற்ற காதல் வாழ்வது சாதலிலா ஆதி?

ஆதி
06-12-2007, 11:16 AM
சாகா வரம் பெற்ற காதல் வாழ்வது சாதலிலா ஆதி?

இதில் என்ன ஐயம்..

காவியங்கள் பல
கல்லறையால் தானே
மான்பு கொண்டன..

-ஆதி

ஆதவா
07-12-2007, 04:07 AM
இளசு அண்ணாவின் பாராட்டை மீறியும் ஏதும் சொல்வதற்கில்லை.

சில இடங்களில் மலைத்தேன்.... அவை மலைத்தேன்...

பெரும்பாலும் காதற் கவிதைகள் புனைவதிலும் சுணக்கம், படிப்பதிலும்... ஈங்கே அவ்வாறில்லை ஆதி. எலும்பைத் துளைத்து திணித்த உம் வரிகள் உடலெங்கும் பரவிற்று.
எந்த வரி எடுத்தாலும் ஒட்டி வரும் கவிதைத்தனம், கண்முன்னே நின்றாடும் கதக்களி. வார்த்தை மடிப்புகள், எதுகைத் துடிப்புகள் எல்லாமே சேர்த்தவையல்ல, சேர்ந்தவை.

ஆங்காங்கே காட்டப்படும் உவமை அணிகள், பொன் ரத்தினம்,. இறுதியில், உடன்பாடில்லா காசுமாலை.

வாழ்த்துகள் ஆதி... அட ஆதவா, இதுதான் கவிதை என்று சொல்லாமற் சொல்லுவதைப் போல இருந்தன...

வாழ்த்துகள்

ஆதி
09-12-2007, 04:49 AM

உச்சி குளிரும் பின்னூட்டம், பெருமிதம் விழிகளில் வந்து நின்று கர்வமாய் மீசை முறுக்கிவிட்டப் பொழுதில், வழக்கம் போல எனக்குள் இருப்பவன் வெளிவந்து, "பெருசா அப்படி என்ன நீ எழுதீட்ட, கவித எழுத முயற்சிதானப் பண்ணிக்கிட்டு இருக்க.. எனச் சொல்லி அவன் பாட்டுக்கு தன் வேலைக்கு திரும்புகிறான்.

மிக்க நன்றி ஆதவா..

-ஆதி

தீபா
09-12-2007, 07:03 AM
இத்தனைமுறையும்
வதைத்தபின்னும்

வாடகை கேட்டபின்னும்
தடைகள் போட்டபின்னும்

அறியா பயணமா?
அறியும் பயணமா?

தூறல்களில் நனையா உன்னை
தூக்கி நிறுத்துவது எப்படி - அட
தூக்கி நிறுத்துவது எப்படி?

மெதுவாக மாற்றவில்லை,
மெதுவாக மாற்றிக் கொண்டாய்
ஈரத்தில் ஈரம் பூசிக்கொண்டாய்

திறந்தாடும் விழிகளைத் நானா மூடினேன்?
மறந்தாலும் இதயத்தை நானா தேடினேன்

இளகாத பாறைகள் நீரால் பொடியும்
உளறும் உன்னிடமோ ஜொள்ளு வடியும்
பார்த்ததும் பழகிவிட
பனைமரத்துக் கள்ளா?
சிறுவர் விடும் உண்டி வில்லா?

விடியாத இரவு
விழியில்லாதவருக்குண்டு

விழியுள்ள உனக்கோ
இரவுகள் விடிவதில்லையோ?

ஆன்மாவில் இரண்டென்றால்
வாழ்விரண்டு உனக்கு

பிடிக்காத அவள்
மனையென்றால்

சாவாயோ நீ?

இலக்கியன்
09-12-2007, 10:27 AM
மிகவும் சிறப்பான சொல்லாட்சி தமிழின் புலமை வெளிப்படுத்தும் உங்கள்வரிகள் வாழ்த்துக்கள்

ஆதி
10-12-2007, 07:04 AM
இத்தனைமுறையும்
வதைத்தபின்னும்

வாடகை கேட்டபின்னும்
தடைகள் போட்டபின்னும்

அறியா பயணமா?
அறியும் பயணமா?

தூறல்களில் நனையா உன்னை
தூக்கி நிறுத்துவது எப்படி - அட
தூக்கி நிறுத்துவது எப்படி?

மெதுவாக மாற்றவில்லை,
மெதுவாக மாற்றிக் கொண்டாய்
ஈரத்தில் ஈரம் பூசிக்கொண்டாய்

திறந்தாடும் விழிகளைத் நானா மூடினேன்?
மறந்தாலும் இதயத்தை நானா தேடினேன்

இளகாத பாறைகள் நீரால் பொடியும்
உளறும் உன்னிடமோ ஜொள்ளு வடியும்
பார்த்ததும் பழகிவிட
பனைமரத்துக் கள்ளா?
சிறுவர் விடும் உண்டி வில்லா?

விடியாத இரவு
விழியில்லாதவருக்குண்டு

விழியுள்ள உனக்கோ
இரவுகள் விடிவதில்லையோ?

ஆன்மாவில் இரண்டென்றால்
வாழ்விரண்டு உனக்கு

பிடிக்காத அவள்
மனையென்றால்

சாவாயோ நீ?

நான் எழுதிய கவிக்கு எதிர்ப்பதமாய் உங்கள் கவிதை, பாலையில் அலறிக்கிடந்த ஆந்தையைப் பாட்டுக் குயிலாக மாற்றிப்போனவளை எண்ணி கவிதை நாயகன் கதறுகிறான்.. விட்டுப் போனவளை வசைப் பாடவில்லை.. அவள் கொடுத்துச்சென்ற சோகங்களின் இசைப் பாடல்தான் இவை.

பின்னூட்டக் கவிதைக்கு நன்றித் தென்றல் அவர்களே

சுகந்தப்ரீதன்
13-12-2007, 07:56 AM
அடிக்காதல் வேறுசெயதால் இனிமேல் மீண்டும் - உயிர்
ஆன்மா இன்னொன்று புதிதாய் வேண்டும் - என்னைப்
பிடிக்காத ஒருத்திக்காய் சாக ஒன்று - என்மேல்
பிரியமான ஒருத்திக்காய் வாழ மட்டொன்று.
- ஆதி
நண்பா... என்ன சொல்வதென்று தெரியவில்லை..! ஒவ்வொரு வரியும் உள்ளத்தை ஊடுறுவுகின்றன.. கற்பனை திறனுடன் கவிமொழித் திறமையும் முழுதாய் வாய்க்க பெற்றிருக்கிறது உங்களுக்கு... மேலும் பல படைத்து மன்றத்தையும் தமிழின் மாண்பையும் அலங்கரிக்க வேண்டுகிறேன்.. என் மனம் கனிந்த வாழ்த்துக்கள் நண்பா..!

ஆதி
13-12-2007, 08:40 AM
மிகவும் சிறப்பான சொல்லாட்சி தமிழின் புலமை வெளிப்படுத்தும் உங்கள்வரிகள் வாழ்த்துக்கள்

நன்றி இலக்கியன் அவர்கட்கு..

-ஆதி

வசீகரன்
13-12-2007, 09:19 AM
மிகச்சிறந்த படைப்பு....பல வரிகள் புதுமையானது.....
அபார கவித்திறம் தங்களுக்கு ஆதி அவர்களே....!
வாசிக்கும்போது பல தடவை....வியந்தேன் உண்மையாக......!

எனது மனமுவந்த பாராட்டுக்களை தெரிவித்துகொள்கிறேன்....!

ஆதி
14-12-2007, 07:47 AM
நண்பா... என்ன சொல்வதென்று தெரியவில்லை..! ஒவ்வொரு வரியும் உள்ளத்தை ஊடுறுவுகின்றன.. கற்பனை திறனுடன் கவிமொழித் திறமையும் முழுதாய் வாய்க்க பெற்றிருக்கிறது உங்களுக்கு... மேலும் பல படைத்து மன்றத்தையும் தமிழின் மாண்பையும் அலங்கரிக்க வேண்டுகிறேன்.. என் மனம் கனிந்த வாழ்த்துக்கள் நண்பா..!

நெகிழ்ச்சி தரும் வாழ்த்துக்கும் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி நண்பா..

-ஆதி

பூமகள்
14-12-2007, 12:02 PM
அச்சச்சோ..!
வெகு தாமதமாய் வந்து பார்த்துவிட்டேனே இக்கவியை...!!
அசர வைக்கும் தமிழாடல்..!
இனி நான் கவி எழுதுவதையே நிறுத்தி, உங்களைப் போல் ஜாம்பவான்கள் கவி மட்டும் படிக்கலாம். இது தான் உங்களுக்கு நான் செய்யும் உபகாரமாகும்.

அற்புதமான கவிதை ஆதி.
அசத்திவிட்டீர்கள். என்ன சொல்வதென்று புரியவில்லை இந்த மழலைக்கு..!

நன்றிகள் ஆதி.. கவியை சுட்டிக்காட்டிக் கொடுத்தமைக்கும் கவி படைத்ததற்கும்..!! :)

ஆதி
14-12-2007, 12:14 PM

"கிளையில் இருக்கும் கிளியின் மூக்கு
விடலைப் பெண்ணின் வெற்றிலை நாக்கு"

- வைரமுத்து - அலைப்பாயுதே - பச்சை நிறமே பச்சை நிறமே.

இதன் தாக்கம்தான் இந்த கவியின் பிற்ப்புக்கு பெரும்காரணம்..

உங்க அபிமானக் கவிஞரோட தாக்கத்தில் எழுதியதால்தான் உங்களைப் படிக்க வேண்டினேன்..

வாழ்த்துக்கு நன்றி பூமகள்.. உங்களை மழலை என்றேல்லாம் சொல்லாதீங்க..அது ரொம்ப ஓவர்.. :D (கவிதை எழுதுவதை மட்டுமே சுட்டிகாட்டுகிறேன்)

மன்றத்தில் நான் பலர்பேர்க்கிட்ட நிறையக் கற்றுள்ளேன் உங்களிடம் இருந்தும்தான் யாரும் யாரும் சலைத்தவர் அல்லர்..

-ஆதி

ஆதி
17-12-2007, 04:58 PM
மிகச்சிறந்த படைப்பு....பல வரிகள் புதுமையானது.....
அபார கவித்திறம் தங்களுக்கு ஆதி அவர்களே....!
வாசிக்கும்போது பல தடவை....வியந்தேன் உண்மையாக......!

எனது மனமுவந்த பாராட்டுக்களை தெரிவித்துகொள்கிறேன்....!

மனதை நெகிழ வைக்கிறப் பாராட்டு.. நன்றி வசீகரன்..

-ஆதி