PDA

View Full Version : முரளி முன்னாலே..! டெஸ்ட் போட்டியில்..!!



அன்புரசிகன்
03-12-2007, 05:43 AM
டெஸ்ட் துடுப்பாட்டத்தில் அதிக விக்கட்டுக்க்களை வீழ்த்திய சாதனையை முரளி தனதாக்கிக்கொள்கிறார்.

இலங்கையின் நட்சத்திர சுழல்பந்து வீச்சாளர் முத்தையா முராளீதரன் தனது 116 வது டெஸ்ட் துடுப்பாட்ட போட்டியின் போது (இங்கிலாந்திற்கு எதிரான) 709 விக்கட்டுக்களை வீழ்த்தி முதலில் டெஸ்டில் அதிக விக்கட்டுக்களை வீழ்த்தியிருந்த அவுஸ்திரேலிய சுழல்பந்துவீச்சாளரின் 708 என்ற சாதனையை முறியடித்துள்ளார்...

ரவிபோப்ரா வின் விக்கட் வீழ்த்தியபோது வோர்னின் சாதனைக்கு நிகராக வந்து கொலிங்வூட் இன் விக்கட்டின் மூலம் அவர் வோர்னின் சாதனையை முறியடித்துள்ளார்...

http://www.slcues.net/mantram/pics/murali 709.jpg

மதி
03-12-2007, 05:53 AM
வாழ்த்துக்கள் முரளி..

ஓவியன்
03-12-2007, 05:59 AM
முரளிக்கு என் வாழ்த்துக்களும்......

சோதனைகளை எல்லாம்
சாதனையாக்கும் வித்தை தெரிந்தவர்.....

முரளி விட்டுச் செல்லும் சாதனைகளை முறியடிப்பதென்பது எதிர்காலத்தில் மிகக் கடினமாக இருக்கும்....

தீபன்
03-12-2007, 06:15 AM
வாழ்த்துக்கள் முரளி....
(அங்கே மலையகத்து மைந்தன் நாட்டுக்கு பெருமைதேடித்தர, இங்கோ மலையக மைந்தர்களை நாயைப்பிடித்து ஏத்துவதுபோல ஏத்தி பூசாக்கு கொண்டுபோறாங்க...!)

பார்த்திபன்
03-12-2007, 06:32 AM
முரளி....
முன்னாலே..
முன்னேறிச்செல்ல
வாழ்த்துக்கள்...............



வாழ்த்துக்கள் முரளி....
(அங்கே மலையகத்து மைந்தன் நாட்டுக்கு பெருமைதேடித்தர, இங்கோ மலையக மைந்தர்களை நாயைப்பிடித்து ஏத்துவதுபோல ஏத்தி பூசாக்கு கொண்டுபோறாங்க...!)

கொழும்பில் நேற்று மட்டும் 3,000-க்கும் மேற்பட்டவர்கள் தமிழர் என்றகாரணத்தினால் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

அன்புரசிகன்
03-12-2007, 06:34 AM
வாழ்த்துக்கள் முரளி....
(அங்கே மலையகத்து மைந்தன் நாட்டுக்கு பெருமைதேடித்தர, இங்கோ மலையக மைந்தர்களை நாயைப்பிடித்து ஏத்துவதுபோல ஏத்தி பூசாக்கு கொண்டுபோறாங்க...!)

உண்மைதான் தீபன்..
-----------

இது நைன்எம்எஸ்என் http://wwos.ninemsn.com.au/share/img/hd2007b/ninemsn_logo5.gif இணையத்தில் வெளியாகியிருக்கும் ஒரு செய்தி. இதை இங்கு நேரடியாக பதிப்பதற்கு காரணம் இந்த செய்தியின் அடியில் தடித்த எழுத்துக்களில் உண்டு. அவுஸ்திரேலியாவிற்கான இந்த ninemsn என்பதை தத்ரூபமாக நிரூபித்து வெளியிட்டுள்ளது இந்த செய்தியை. :D




Have your say on Murali's effort in equalling Warne's record. (http://wwos.ninemsn.com.au/article.aspx?id=292289#comment)


Sri Lanka spinner Muttiah Muralitharan has beaten Shane Warne's world record for the most Test wickets on the third day of the First Test against England in his home town of Kandy.

Muralitharan bowled nine overs without luck before in the first session before the new ball was taken and he was given a rest. He wasn't off long before striking with a brilliant delivery which cleaned bowled Paul Collingwood to give him five wickets for the match and 709 test scalps in his career.

Fireworks went off seconds after the stumps rattled. Thousands of others waved flags amongst a deafening cacophony of drums, trumpets and bells.
A huge group of school children, many of them dressed in whites, from St Athony's college where Murali went to, stood on the bank to witness the historic moment.


Muralitharan's teammates ran from all parts of the ground to congratulate the off spinner.
The Sri Lankan could go on to take an astonishing 1000 test wickets but even if he were to stop now, it's a record which may never be broken. "Every time you play Murali in Sri Lanka it's going to be a big challenge - he's proven that he is a great bowler here and he always takes wickets," English batsman Ian Bell told reporters.
"He is the best bowler in the world because he makes things happen," he added.
"The important thing is that when you do get in you cash in, which makes it disappointing that I did not go on."
"We've just got to make sure he spends a lot of time bowling a lot of overs getting those wickets."
That goal was achieved in part with tailender, Ryan Sidebottom, batting resolutely and with good technique for a "number eight". He took the tourists from 6-186 at the start of the day to 7-242.
Murali beat the edge of his bat on several occasions but in the end he fell to paceman, Lasith Malinga.

Murali got a sixth wicket when he had Hoggard stumped for 15, 710 test wickets and counting.
Muralitharan, 35, had previously held the test wickets world record after surpassing West Indian Courtney Walsh (519 wickets) in 2004.
He suffered a shoulder injury later that year and was overtaken by Warne, who retired from test cricket in January with 708 wickets from 145 matches. Muralitharan reached the same milestone in his 116th game.
Renowned for extracting an incredible amount of turn from an unique rubber-wristed bowling action, Muralitharan holds several other records in test cricket including the most five-wicket hauls (60) and ten-wicket hauls (20).
Chaminda Vaas got the last wicket, Anderson trapped lbw, England all out for 281, a lead of 93 runs.
After the game the new world record holder said he was glad to reach the milestone in Kandy in front of his friends and family instead of Australia. "It was meant to be", he told Fox Sports.
He also admitted, there was a good reason Paul Collingwood was decieved to become the answer to a trivia question in the future, it didn't do what it was supposed to. "That's not meant to be becauase I tried to spin the ball and the ball went the other way, so these things happen in cricket and it's a special wicket,' he added.
Is it time to forget about Murali's action and salute a great cricketer?
Is it typical of his careeer that he will break the record at
home against weak opposition?
Is Murali the greatest bowler ever?


செய்திக்கான சுட்டி (http://wwos.ninemsn.com.au/article.aspx?id=292289)

வோர்ன் வீழ்த்திய விக்கட்டுக்கள் அனைத்தும் திறமையான விளையாட்டு வீரர்களுடன் தான் என்று எண்ணுகின்றனர்.. என்ன கொடுமை இது....

சிவா.ஜி
03-12-2007, 06:44 AM
முரளிக்கு வாழ்த்துகள்.(ஆஸ்த்ரேலியாகாரங்களுக்கு வயிற்றெரிச்சல்)

மனோஜ்
03-12-2007, 06:52 AM
ஒரு வகையில் இது தமிழர்களுக்கு ஒரு வெற்றி

தீபன்
03-12-2007, 06:57 AM
ஒரு வகையில் இது தமிழர்களுக்கு ஒரு வெற்றி

ஆனா அதை கொண்டாடவேண்டியவர்கள் சிறையிலல்லவா இருக்கிறார்கள்...!

அமரன்
03-12-2007, 09:48 AM
தொடர வாழ்த்துக்கள். திறமைகளை மதிக்கத்தெரிந்தவனே சிறந்த விளையாட்டு வீரன். லாராவின் அதிக டெஸ்ட் ஓட்டங்களை ஹெய்டன் , பலமான (!) சிம்மாவேக்கு எதிராக விளையாடுகையில் முறியடித்தார். அப்போது எகத்தாளக் கூச்சல் ஆஸ்திரேலியாவிலிருந்து கிளம்பியது. இங்கிலாந்துக்கு எதிராக ஆடி லாரா மீண்டும் சாதனை படைத்தபோது அதிக நேரங்கள் எடுத்துக்கொண்டார். அணியின்வெற்றியை சிதறடித்து விட்டார் என்றெல்லாம் புலம்பல். இவங்களைப் பற்றிப்பேசுவதே அசிங்கம்..

நேசம்
03-12-2007, 10:36 AM
அது எல்லாம் இனவெறி.விட்டு தள்ளுங்கள்

முறியடிக்கப்பட முடியாத சாதனை செய்த முரளிக்கு வாழ்த்துக்கள்

பாரதி
03-12-2007, 01:32 PM
முரளி சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எல்லாம் முன்மாதிரியாக விளங்க தகுதி படைத்தவர். வாழ்த்துக்கள் முரளி.

முறியடிக்கப்படாது முரளியின் சாதனை எந்நாளும்.!

ஓவியன்
03-12-2007, 02:05 PM
முரளி சாதனை புரிந்த தருணங்கள் இங்கே காணொளிக்காட்சியாக.....

பார்வையாளராக வந்து சாதனைமுறியடிக்கபடுகையில் கரகோசம் எழுப்பும் இலங்கையின் முன்னாள் அணித்தலைவர் அர்ஜூன ரணதுங்காவையும் காணலாம்.....

http://www.youtube.com/watch?v=vvogRJW8Q9s

அமரன்
03-12-2007, 03:45 PM
பார்வையாளராக வந்து சாதனைமுறியடிக்கபடுகையில் கரகோசம் எழுப்பும் இலங்கையின் முன்னாள் அணித்தலைவர் அர்ஜூன ரணதுங்காவையும் காணலாம்.....
பின்னே இருக்காதா.. கிரிக்கட்டில் தனது கார்ஃபாதருன்னு முரளியாலேயே சொல்லப்பட்டவரல்லவா அர்ஜுணரணதுங்க... முரளியின் பந்துவீச்சில் ஹெயார் தொடர்ச்சியாக பிழைபிடிக்க, ஒருகட்டத்தில் பொறுமை இழந்த ஹஷான் திலகரட்னே பிட்சின் குறுக்காகப் பாய்ந்து தடுத்து தனது எதிர்ப்பைக் காட்ட, ஒட்டு மொத்தவீரர்களுடன் வெளிநடப்புச்செய்த ரணதுங்கா முரளியின் சாதனைகண்டு கொண்டாடுவதில் வியப்பேது? உன்னத தருணத்தை காணவழிசெய்த ஓவியனுக்கு நன்றி.

ஓவியன்
03-12-2007, 03:58 PM
உண்மைதான் அமரன் டரல்ஹெயருடன் அர்ஜூன கருத்து மோதலீடுபடும் அந்த புகைப்படம் பிரபலமான ஒன்றாயிற்றே...

அந்த புகைப்படத்தை இலங்கையின் பிரபல ஆங்கிலப் பத்திரிகை ஒன்று "யூ ஆர் எ கங்காரு ஜட்ஜ்" ("You are a Kangaroo judge")என்ற தலையங்கத்தில் முகப்பு செய்தியாக வெளியிட்டது இன்றும் ஞாபகத்திலுள்ளது......!! :)

ஓவியன்
03-12-2007, 04:25 PM
இன்னும் ஒரு காணொளிக் காட்சி, இதில் முன்னர் முரளிக்கு வழங்கிய முறையற்ற பந்து என்ற தீர்ப்பும், அவரது பந்து வீச்சு அப்படித் தெரிவதற்கான காரணங்களும் அதன் பின்னால் நடந்த நிகழ்வுகளும் காட்சியாக்கப் பட்டுள்ளன...

http://www.youtube.com/watch?v=QgkHg3smMqM

அறிஞர்
03-12-2007, 04:45 PM
தமிழன் இன்னும் சாதிக்கட்டும்....

1000 விக்கெட்டுகளை எட்டுவது கடினம்.. எட்டினால் மகிழ்ச்சியே..

IDEALEYE
04-12-2007, 07:14 AM
கிரிக்கெட் டெஸ்ட் போட்டிகளில் அதிகூடிய விக்கெட்டுக்களைப் பெற்றவர் என்ற
உலக சாதனையை இலங்கையின் நட்சத்திர சுழல் பந்து வீச்சாளர் முத்தையா
முரளிதரன் இன்று நிலைநாட்டியுள்ளார். அவுஸ்திரேலியா பந்துவீச்சாளர் ஷேன்
வோர்னின் உலக சாதனையை முறியடித்தே இச்சாதனையை அவர் படைத்துள்ளார்.

145 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 708 விக்கெட்டுக்களைப் பெற்ற
அவுஸ்திரேலியா பந்துவீச்சாளர் ஷேன் வோர்னின் என்பவரின் சாதனையை முரளிதரன் நேற்று சமப்படுத்தினார். 116 போட்டிகளில் விளையாடி 710 விக்கெட்டுக்களை பெற்றதன் மூலம் இன்று அச்சாதனையை இவர் முறியடித்துள்ளார்.

இலங்கை இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் கிரிக்கட் டெஸ்ட் போட்டியின்
மூன்றாம் நாளான இன்று தமது சொந்த ஊரான கண்டி அஸ்கிரிய மைதானத்தில் வைத்தே இச்சாதனையை அவர் நிலைநாட்டியுள்ளமை சிறப்பம்சமாகும்.

இதேவேளை, டெஸ்ட் போட்டியில் முரளிதரன் உலக சாதனை நிகழ்த்தியதை முன்னிட்டு
இலங்கை தபால் திணைக்களம் முரளிதரனின் படத்தை தாங்கிய வட்ட வடிவிலான
முத்திரையொன்றை இன்று வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளது. இலங்கை வரலாற்றில்வட்ட வடிவிலான முத்திரையொன்று வெளியிடப்படுவது இதுவே முதல் முறையாகும்.

முரளிதரன் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெறுமுன்னர் 1000
விக்கெட்டுக்களை வீழ்த்துவார் என அவரது ரசிகர்கள் நம்பிக்கை
வெளியிட்டுள்ளனர்.இது தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள முரளிதரன், நான் இன்னும் 4அல்லது 5 வருடங்கள் விளையாடுவேன். எனவே அந்த 1000 விக்கெட் சாதனையை மிக இலகுவாக முறியடித்துவிடுவேன் என்று கூறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

அமரன்
04-12-2007, 07:23 AM
மன்றத்தில் ஏற்கனவே இச்செய்தி பகிரப்படுள்ளதால், அத்திரியுடன் இதை இணைக்கின்றேன். எதிர்காலத்தில் ஒருசெய்தி ஈரிடத்தில் இருப்பதைத் தவிருங்கள் ஐடியல்.

தீபன்
04-12-2007, 07:29 AM
இது தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள முரளிதரன், நான் இன்னும் 4அல்லது 5 வருடங்கள் விளையாடுவேன். எனவே அந்த 1000 விக்கெட் சாதனையை மிக இலகுவாக முறியடித்துவிடுவேன் என்று கூறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


முன்னர் 1000 விக்கட்டுக்கள் எடுத்து யாராவது சாதனை படைத்திருக்கிறார்களா..? இல்லைத்தானே.. அப்புறமெப்படி அந்த சாதனையை முறியடிக்கமுடியும்...? அப்படியொரு சாதனையை படைக்கத்தான் முடியும்..! அதற்கு எமது வாழ்த்துக்கள்.

சுகந்தப்ரீதன்
04-12-2007, 08:34 AM
கேட்பதற்க்கு இனிமையாக இருக்கிறது... சாதனையாளர் முரளிக்கு எனது வாழ்த்துக்கள்..!

அன்புரசிகன்
04-12-2007, 06:27 PM
முரளியின் சாதனையை சிறப்பித்து வெளியிடப்பட்ட தபால் முத்திரை.

இது இணையத்திலிருந்து பெறப்பட்டது.

http://www.slcues.net/mantram/pics/murali_stamp.jpg

அக்னி
05-12-2007, 04:40 PM
ஒரு தமிழனின் சாதனைக்கு,
ஒரு தமிழன் என்ற பெருமிதத்தோடு,
முத்தையா முரளிதரன் அவர்களின் சாதனைகள், மென்மேலும் தொடர,
வாழ்த்துக்கின்றேன்...

அன்புரசிகன்
06-12-2007, 03:43 AM
முரளீதரனின் பந்துவீச்சு பல சர்ச்சைகளுக்கு உள்ளானது உங்கள் அனைவருக்கும் தெரிந்ததே... இப்போது அவுஸ்திரேலியாவைச்சேர்ந்த ஒரு இணையம் கருத்துக்கணிப்பு நடாத்துகிறது...

இங்கே (http://www.news.com.au/heraldsun/story/0,21985,22866776-11088,00.html) சென்று உங்கள் வாக்கை நீங்கள் அளிக்கலாம்.

அமரன்
06-12-2007, 06:58 AM
நினைச்சேன்.. எங்கேடா குழம்புப்பிரியர்கள் கிளம்பக் காணலைன்னு. கிளம்பட்டிட்டாங்களா.. இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே முரளியை சாதனைவீரர் ஆக்கிட்டாங்கப்பா

ஓவியன்
07-12-2007, 10:41 AM
ம்ஹூம்...!!

விஞ்ஞான ரீதியில், மருத்துவ ரீதியில் நிரூபிக்கப் பட்ட பின்னருமா இப்படி ஒரு வாக்கெடுப்பு.....??!! :confused:

கமலன்
07-12-2007, 12:26 PM
முரளி படைத்தான் அழியா சாதனை
புரளி வென்று மீண்டது சோதனை

கண்டி தந்த நம்ம தரன்
தரனி இப்போ அவன் சரன்

தமிழ்நாடு ஈந்தது அவனுக்கு மதிமலர்
சுழர்நாடு இவனென புகழ்ந்தனர் பலர்

வீழ்த்தியவை வீரியமில்லா மட்டையாளரென்றார் வார்னே
சொன்னவை எல்லாம் கட்டுக்கதை அண்ணே

சட்டமில்லா பந்துவீச்சு உனதென்றார் நடுவர்
திட்டமிட்ட சூழ்ச்சியென எல்லோரும் அறிவர்

பெருமைகள் சேர்ப்பதே அவன் சத்தைய்யா
அருமை நாயகனே நம் முத்தய்யா.

ஆதவா
07-12-2007, 01:19 PM
வாருங்கள் கமலன்... உங்களைப் பற்றி அறிமுகப் பகுதியில் ஒரு அறிவிப்பு கொடுங்களேன்......

தாமரை அண்ணாவின் நண்பர் என்பதால் சற்று பொறாமையும் கூட.... பதிலாக நான் இருக்கக் கூடாதா என்று.....

ஓவியன்
07-12-2007, 02:29 PM
அடடே கமலன்....!!

முரளிக்கொரு வாழ்த்துக் கவி...
அசத்தலாக இருக்கிறது...

ஆதவா கூறியபடி அறிமுகம் செய்துவிட்டு
நம்மோடு ஐக்கியமாகிவிடுங்கள்.....

அப்படியே தாமரை அண்ணாவை மடக்கும் வழி வகைகளையும் சொல்லித் தாருங்கள்.....!! :icon_rollout:

பகுருதீன்
07-12-2007, 02:48 PM
உழைப்பிற்கு கிடைத்த வெற்றி. சாதனை தொடர வாழ்த்துகிறொம் (என்கேயொ கருகுகிர வாடை ஓ ஆஸ்திரேலியாகாரர்களின் வயிறு)

மயூ
07-12-2007, 03:38 PM
ஒரு தமிழன் சாதனை படைத்துள்ளான்... வாழ்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்்.