PDA

View Full Version : வைரஸ் பிரச்சனையா ? உதவி தேவை



தங்கவேல்
03-12-2007, 01:41 AM
சமீபத்தில் டிராஜன் வைரஸ் வந்ததால், பார்மட் செய்து புதிதாக ஓஎஸ் இன்ஸ்டால் செய்தேன். பான்டா ஆன்டி வைரஸை நிருவினேன். அது மெமரியை அதிகம் சாப்பிட்டதால், நீக்கி விட்டு, ஏவிஜி இலவச ஆன்டி வைரஸை நிருவினேன். இப்போது வைரஸ் ஸ்கேன் செய்யும் போது, கீழ்க்கண்ட வாறு ரிசல்ட் வருகிறது.

kernal32.dll - change
user32.dll - change
shell32.dll - change
ntoskrnl.exe - change

இது எதனால் என்று விளக்க முடியுமா ?

அன்புரசிகன்
03-12-2007, 05:19 AM
ஏதாவது பிரச்சனையை fix செய்யச்சொல்லுகிறதா?

இதயம்
03-12-2007, 05:30 AM
தங்கவேல் குறிப்பிட்டிருப்பவை வைரஸ் இல்லை. ஒரு ப்ரொக்ராம் செயல்படுவதில் DLL (Dynamic Link Library) கோப்புகள் மிக அவசியமானவை. அவை பழுது பட்டால் அந்த ப்ரொக்ராமே செயலிழக்க வாய்ப்பு இருக்கிறது. ஆபரேட்டிங் சிஸ்டத்தின் இந்த DLL கோப்புக்கள் பழுது பட்டதை போன்று தெரிகிறது. அதனால் தான் அவற்றை மாற்றவேண்டி சொல்கிறது. ஆனால், இது ஒரு பிரச்சினை இல்லை. இதை சரி செய்ய AVG Test Center-ஐ திறந்து F3 பட்டனை அழுத்தவும். பிறகு Accept the Changes என்பதற்கு அனுமதி தரவும்.

தங்கவேல்
03-12-2007, 11:56 AM
இதயம், நீங்க சொன்னா மாதிரி செய்தவுடன் சரி ஆகிவிட்டது...

இதயம்
03-12-2007, 12:12 PM
இதயம், நீங்க சொன்னா மாதிரி செய்தவுடன் சரி ஆகிவிட்டது...

அதே மாதிரி இன்னொன்னையும் சொல்றேன். அதையும் செய்யுங்க.. அப்பதான் உங்க கணினி தொடர்ந்து வேலை செய்யும்..!!

என் அக்கௌண்டில் சர்வீஸ் சார்ஜ் 2999/= ரூபாயை (1 ரூபா வரும் பொங்கல் தள்ளுபடி) கட்டிட்டு பேங்க் கௌண்டர்ல பில் வாங்கிக்கங்க..!

தங்கவேல்
06-12-2007, 08:15 AM
அடச்சே இப்போ பார்த்து இந்த கண்ணுக்கு என்ன ஆச்சுன்னு தெரியவில்லை.. ஒன்னுமே தெரியவில்லை. என்ன இதயம் அது ? புரியவில்லையே

மாதவர்
07-12-2007, 02:50 AM
அற்புத விளக்கம் நல்ல நகைசுவை