PDA

View Full Version : வைரமுத்து - நியூயார்க்நேசம்
02-12-2007, 07:26 PM
அமெரிக்கா சென்ற கவிப்பேராசு அங்கு நியூயார்க் சுற்றி பார்த்துவிட்டு எழுதிய கவிதை இது....

அறிவு
உறவை
டாலர்களாக பார்க்கும்
உணவை
வைட்டமின்களாய்ப் பார்க்கும்

நாற்பது வரைக்கும்
அவர்கள் சாப்பிட உணவு

நாற்பதுக்குப் பிறகு
அவர்களைச் சாப்பிடும் உணவு

வாரத்திற்கு ஐந்துநாள்
வாழ்க்கை விற்கப்படும்

வாரத்திற்கு இரண்டு நாள்
வாழ்க்கை வாங்கப்படும்

பாசம்
பாலிதின் பை

காதல்
கைதுடைக்கும் காகிதம்

அங்கங்கே
ரகசியக் குரலில்
கோஷம் கேட்கும்

வீட்டு கூரையில்
நிலா வேண்டுமா?
மாத்திரை போடு!

சூரியனில் நடக்க வேண்டுமா?
மாத்திரை போடு!

கிளியோபாட்ரவை
எழுப்பி தருகிறோம்
மாத்திரை போடு!

இப்படி
வீதி முனைகளில்
சுலபப் தவணைகளில்
தற்கொலை விற்கும்

பாப்கொர்ன் கொரித்துக்கொண்டே
பள்ளி மாணவி சொல்வாள்
"இன்றைக்கே
கலைத்து விடுங்கள் டாக்டர்
நாளை
பத்தாம் வகுப்பு பரிட்சை!"

ஓவியன்
03-12-2007, 12:31 AM
வாரத்திற்கு ஐந்துநாள்
வாழ்க்கை விற்கப்படும்

வாரத்திற்கு இரண்டு நாள்
வாழ்க்கை வாங்கப்படும்

அமேரிக்காவிற்கு மாத்திரமல்ல...
மாறிவரும் இன்றைய உலகில் எல்லா இடங்களுக்கும்
இந்தக் கவிதை பொருந்தி வருகிறது.........

பகிர்வுக்கு நன்றி நேசம்.........!!

mukilan
03-12-2007, 02:03 AM
அமெரிக்கா சென்ற கவிப்பேராசு அங்கு நியூயார்க் சுற்றி பார்த்துவிட்டு எழுதிய கவிதை இது....

அறிவு
உறவை
டாலர்களாக பார்க்கும்
உணவை
வைட்டமின்களாய்ப் பார்க்கும்

நாற்பது வரைக்கும்
அவர்கள் சாப்பிட உணவு

நாற்பதுக்குப் பிறகு
அவர்களைச் சாப்பிடும் உணவு

வாரத்திற்கு ஐந்துநாள்
வாழ்க்கை விற்கப்படும்

வாரத்திற்கு இரண்டு நாள்
வாழ்க்கை வாங்கப்படும்

பாசம்
பாலிதின் பை

காதல்
கைதுடைக்கும் காகிதம்

அங்கங்கே
ரகசியக் குரலில்
கோஷம் கேட்கும்

வீட்டு கூரையில்
நிலா வேண்டுமா?
மாத்திரை போடு!

சூரியனில் நடக்க வேண்டுமா?
மாத்திரை போடு!

கிளியோபாட்ரவை
எழுப்பி தருகிறோம்
மாத்திரை போடு!

இப்படி
வீதி முனைகளில்
சுலபப் தவணைகளில்
தற்கொலை விற்கும்

பாப்கொர்ன் கொரித்துக்கொண்டே
பள்ளி மாணவி சொல்வாள்
"இன்றைக்கே
கலைத்து விடுங்கள் டாக்டர்
நாளை
பத்தாம் வகுப்பு பரிட்சை!"

என்ன செய்ய இப்படி யாரேனும் வந்து சென்று விட்டு சற்றே மிகைப்படுத்தி, (அதுவும் கவிதைக்குப் பொய்யழகு என்று கூறிய கவிப்பேரரசிற்கு சொல்லவா வேண்டும்) எழுதி விடுகிறார்கள். நமது இளம் தலைமுறையினரின் மூளையில் இவ்வாறான பொய் பிம்பங்கள் நச் சென்று சம்மணமிட்டு அமர்ந்து விடுகின்றன. இதில் வைரமுத்துவை குறை கூற வரவில்லை. அவர் கண்ட நிகழ்ச்சிகளை அவர் அணுகிய விதம்தான் என் பார்வையில் குறையாகப் படுகிறது. இந்திய பற்றிய பிம்பம் சமீபம் வரை ஒரு பிச்சைக்கார நாடாகத்தான் இருந்த்தது. படித்த தலைமுறையினர் மட்டுமே இந்தியாவின் பலம் பலவீனம் கூட தெரிந்தவர்களாக இருக்கின்றார்கள்.

எடுத்துக்காட்டாக ஒரு ஆங்கிலக் கவிஞர் இந்தியாவின் ஏழைக்கிராமப் பகுதியை அதிலும் மழை பொய்த்த, நடந்தாய் வாழி காவிரி கர்நாடகாவில் சிறையெடுக்கப்பட்ட வருடத்தில் காவிரிப் படுகைப் பகுதியினை கண்டு இப்படி ஒரு கவிதையை வடிக்கிறார் என்றால் எப்படி இருக்கும்.

இந்தியனின் இரவு
உணவாக இங்கே எலிகள் சுவைக்கப்படும்!

இந்தியக் குழந்தைகள்
கிழிந்த ஆடையுடுக்கும்!

என்று மிகைப்படுத்தி பொத்தாம் பொதுவாக போகிற போக்கில் கொளுத்திப் போட்டால் எப்படி இருக்கும்.? அது போலத்தான் வைரமுத்து அமெரிக்காவாவைப் பற்றிய உடனடி அனுமானத்திற்கு வந்ததும். அங்கும் பாசம், ஒழுக்கம், தொழிலாளர் நலம் (இந்தியாவை விட அதிகம்) இருக்கத்தான் செய்கிறது.

நேசம்
03-12-2007, 02:09 AM
இருந்தால் சரிதான்.ஆனால் வைரமுத்து சொன்ன விஷயங்களில் இந்தியாவுடன் அமெரிக்காவை ஒப்பிட வேண்டாம்.

kavitha
03-12-2007, 07:34 AM
வாலு போய் கத்தி வந்தது கதை தான்.
பகிர்வுக்கு நன்றி நேசம்.

lolluvathiyar
03-12-2007, 12:03 PM
வைரமுத்து கவிதை நன்றாக இருந்தது. நான் அதிகமாக அவரின் கவிதைகளை படித்ததில்லை. காரனம் கவிதை ரசிக்கும் அற்றல் எனக்கு இல்லை. ஆனால் அவர் எழுதிய தன்னீர் தேசம், கள்ளிகாட்டு இதிகாசம் எனக்கு மிகவும் பிடித்தது. காரனம் வரிகள் மட்டும் அல்ல அதில் உள்ள கரு. பகிர்வுக்கு நன்றிஎன்று மிகைப்படுத்தி பொத்தாம் பொதுவாக போகிற போக்கில் கொளுத்திப் போட்டால் எப்படி இருக்கும்.?

இருக்கலாம், இந்தியர்களை பற்றி தவறாக உலக வல்லுனர்கள் சித்தரித்தது உன்மைதான் ஆனால் நாம் மேற்கத்தியவர்களை பற்றி ஓரளுவுக்கு சரிதான்.அங்கும் பாசம், ஒழுக்கம், தொழிலாளர் நலம் (இந்தியாவை விட அதிகம்) இருக்கத்தான் செய்கிறது.

அந்த ரேஸ் மக்களின் பாசத்தை ஆப்கானிஸ்தான், ஈராக், வியட்நாம், கொரியா, கம்போடியா (போல் பாட் பிரச்சனை) , மக்கள் நன்றாக தெரிந்து வைத்திருகிறார்கள்

அவர்கள் ஒழுக்கம் பங்களாதேஸ் விடுதலைக்காக பாக்கிஸ்தானுடன் நாம் சன்டையிட்ட போது நன்றாக வெளிபட்டது.

தொழிலாளர் நலம் கத்திரினா புயலின் போது நுயூ ஆர்லியன்ஸ் மக்களிடம் காட்டிய போது மெய் சிலிர்த்து போனோம்.

ஆதி
03-12-2007, 12:11 PM
இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல என்கிற தொகுப்பில் வந்த கவிதை இது..
அந்த தொகுதியில் இதுப்போல் நிறைய உயிருள்ள கவிதைகள் உண்டு..
கிடைத்தால் ஒன்றுவிடாமல் சுவைத்துவிடுங்கள்..

அணிந்துரை - பொன்மணி வைரமுத்து:-

வைகறை மேகங்களுக்கு பிறகு எனக்கு பிடித்த தொகுதி இது..
என்று அவர் மனைவியே சொல்லி இருக்கிறார்..

நன்றி நேசம் அவர்கட்கு..

-ஆதி

ஷீ-நிசி
03-12-2007, 04:00 PM
மிக அருமையான கவிதை!

ஏற்கெனவே படித்ததுதான் என்றாலும்... மீண்டும் ஒருமுறை படித்ததில் மிக சந்தோஷம்... நன்றி நண்பரே!

mukilan
03-12-2007, 11:16 PM
வாத்தியாரய்யா ஒரே ஒரு விசயம் நீங்கள் சொன்ன கருத்துக்களில் முதல் இரண்டோடு நான் ஒத்துப் போகவில்லை. அவை ஆட்சியாளர்கள் எடுத்த முடிவு மக்களின் முடிவல்ல. மக்கள் அவற்றை ஆதரிக்காததாலேயே ரிபப்ளிக் கட்சியின் செல்வாக்கு அதலபாதாளத்தில் இருக்கிறது. நியூ ஆர்லியன்ஸிலும் மும்பையிலும் ஏற்பட்ட இயற்கைச்சீற்றத்தை நாம் ஒரே அளவு கோலோடு பார்க்க இயலாது. இருப்பினும், இந்தியனின் மனிதநேயம் அதிகம்தான் என்பதில் நானும் பெருமைப் படுகிறேன்.

எல்லாவற்றிற்கும் மேலாக நண்பர் நேசம் இந்தக் கவிதையைப் பிடித்ததால் இங்கு பதிந்திருக்கிறார். எனவே இத்திரியை நாம் விவாதக் களமாக்க வேண்டாம். தான் பெற்ற இன்பத்தை நாம் பெற பதிந்திருப்பதால் அவருக்கு என் நன்றி!