PDA

View Full Version : இளம் தென்றல்



மனோஜ்
02-12-2007, 02:31 PM
இளம் தென்றல்


ஆழ்ந்த அவஸ்தையில்
ஆயிரம் மகிழ்ச்சியில்
ஆண்டவனின் அற்புத பாக்கியத்தில்
அகிலத்தில் அழகாய் பிறந்து


அடிஎடுத்து வைத்துப்பழக்கிய
அன்னையின் பாசம்
அரவணைத்த தந்தையும்
அன்பில் வாழ்ந்த காலம் போய்


அரும்பு மீசை
அழகாய் உதிக்க
ஆயிரம் ஆசைகள் உள்ளத்தில்
பூத்துகுலுங்கும் பூவுக்கும்
புதிய ஆசை
புதிய பரிமாணங்கள்


புகுந்து விளையாட
பூவுலகத்தில் புதிய பல
ஈர்ப்பு விசைகள்
ஈர்த்த பகுதி
நல்லதே கெட்டதே
முடிவேடுக்க மனமில்லை


வந்த வழியில்
கால்கள் செல்ல
மனம் தடுத்தாலும்
குணம் தடுத்தாலும்
சுதந்திரம்உண்டு என்று
சுற்றி திரியும் காலம்


மானமே போனாலும்
மனதின் சந்தோஷம் பெரிதென்று
மணிமணியான அறிவுரைகள்
மறந்து மறைந்து செல்லும் வயது


இந்த வயது இளம் வயது
உன் எதிர்காலத்தை
நிர்ணயிக்கும் வயது
சாத்தான் காட்டும்
உலக இன்பத்தில்
நேறி கெட்டு தறி கெட்டு
தாவிட நினைத்தால்


மாறிடும் வாழ்வு
மனது வைத்தாலும்
பின் மாறாது வாழ்வு
இளவயது கட்டுபடு


இறைவனின் அன்பு
இரண்டும் இணைந்தால்
இப்பொழுது கசக்கும்
பிற்பாடு இனிக்கும்
வாழ்க்கை மலரும்


மனதில் கொள் இனியவனே(ளே)
இனியில்லை கஷ்டங்கள்
உன் ஆழ்மனதில் ஆழப்பதித்திடு
இறைவனின் வார்த்தை
வழி வந்திடும்
வாழ்வு சுகம் பெறும்


ஒரு விசை சிந்தித்திடு
சிறந்தவனாய் மாறிடு
சிகரம் தொட்டு
சிறப்பாய் வாழ
வாழ்த்துக்கள் :icon_b:


-மனோஜ்

ஓவியன்
02-12-2007, 03:17 PM
வாழ்கையோ மிக சொற்ப காலம்...
அந்த சொற்பத்தில் அரைவாசியை நாம்
வாழ்வதற்கும் எந்த உத்தரவாதமுமில்லை......

அதற்குள் ஆடாத ஆட்டங்கள்
கூடாத கூட்டங்கள்.......

உணர்ந்து திருந்திடின்
நன்மை உனக்கு மட்டுமல்ல
உலகிற்கே தான்.....

பாராட்டுக்கள் மனோஜ்...!! :icon_b:

மனோஜ்
03-12-2007, 06:49 AM
மிக்க நன்றி ஓவியன்

சிவா.ஜி
03-12-2007, 07:00 AM
தறிகெட்டு ஓடும் இளமை, நெறிகெட்டு வீழுமுன்....சிந்திக்கவேண்டிய செய்தி சொன்ன கவிதை அழகு.நீண்ட நாட்களுக்குப் பிறகு மனோஜ்-ன் கவிதை.வாழ்த்துகள் மனோஜ்.

பூமகள்
03-12-2007, 11:58 AM
கவிதையின் வழி நெறி சொன்னவிதம் அருமை..!
நீளம் அதிகமானாலும் கருத்து அழகு..!

வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள் மனோஜ் அண்ணா. :)

மனோஜ்
04-12-2007, 07:00 AM
மிக்க நன்றி பூ

lolluvathiyar
04-12-2007, 01:23 PM
ஆகா என்ன அழகான கவிதை, ஒழுக்கமாக இருக்கவேண்டும் என்ற சின்ன அறிவுரையை அப்படி சொன்னால் யாரும் கேட்க மாட்டார்கள், அந்த கசப்பு மருந்தை கவிதை என்னும் தேனில் குலைத்து தந்து இருகிறீர்கள். பாராட்டுகள்.
உங்கள் கவிதையில் இடையில் சில எழுத்துகளை மட்டும் சிகப்பு கலரில் இருந்தது. அதற்க்கு ஏதாவது விசேச காரனம் இருக்குமே என்று தனியாக தொகுத்து பார்த்தேன். இப்படிதான் வந்தது
ரசெதோரைன்ணனை
007 புத்திய எல்லா இடத்துலயும் காட்டாதப்பா திட்டுவதற்க்குள் நான் ஜூட்

அறிஞர்
04-12-2007, 01:49 PM
வாழ்க்கையில் கட்டுப்பாடு....
இறைவனிடம் அன்பு....

இருந்தால்.. எல்லாம் செழிப்பாக அமையும்...
அருமை மனோஜ்

விகடன்
05-12-2007, 02:43 AM
குறும்புகள் நல்லதோ!
கெட்டதோ!
அந்தந்த வயதில் செய்யாவிட்டால் இருக்காது அவற்றிற்கு மரியாதை..

கவிதையில் எமது துடிதிடிப்பான அந்த சிறார் பருவத்தை கண்முன்னே கொண்டுவந்து காட்டிவிடீர்கள்.

அத்துடன் வாழ்க்கை சிறக்க கட்டுப்பாடும், பக்தியும் என்று சொல்லி முடித்திருப்பது "தத்துவம்"

பாராட்டுக்கள்

மனோஜ்
05-12-2007, 06:43 AM
வாழ்க்கையில் கட்டுப்பாடு....
இறைவனிடம் அன்பு....

இருந்தால்.. எல்லாம் செழிப்பாக அமையும்...
அருமை மனோஜ்

மிக்க நன்றி அறிஞர் அண்ணா

மனோஜ்
05-12-2007, 06:44 AM
குறும்புகள் நல்லதோ!
கெட்டதோ!
அந்தந்த வயதில் செய்யாவிட்டால் இருக்காது அவற்றிற்கு மரியாதை..

கவிதையில் எமது துடிதிடிப்பான அந்த சிறார் பருவத்தை கண்முன்னே கொண்டுவந்து காட்டிவிடீர்கள்.

அத்துடன் வாழ்க்கை சிறக்க கட்டுப்பாடும், பக்தியும் என்று சொல்லி முடித்திருப்பது "தத்துவம்"

பாராட்டுக்கள்

தத்துவம் என்று இல்லை விராடன் உண்மையும் அதுதானே
நன்றி விராடன்

மனோஜ்
05-12-2007, 06:49 AM
ஆகா என்ன அழகான கவிதை, ஒழுக்கமாக இருக்கவேண்டும் என்ற சின்ன அறிவுரையை அப்படி சொன்னால் யாரும் கேட்க மாட்டார்கள், அந்த கசப்பு மருந்தை கவிதை என்னும் தேனில் குலைத்து தந்து இருகிறீர்கள். பாராட்டுகள்.
மிக்க நன்றி லெல்லரே பெற்றேரும் தங்கள் பிள்ளைகளுக்கு கட்டாயபடுத்தாது அன்பாய் கருத்துகளை பரிமாறும் பொழுது வெறுப்பு பிள்ளைகளுக்கு வராது தவறான வழில் செல்லமாட்டாகள்



உங்கள் கவிதையில் இடையில் சில எழுத்துகளை மட்டும் சிகப்பு கலரில் இருந்தது. அதற்க்கு ஏதாவது விசேச காரனம் இருக்குமே என்று தனியாக தொகுத்து பார்த்தேன். இப்படிதான் வந்தது
ரசெதோரைன்ணனை
007 புத்திய எல்லா இடத்துலயும் காட்டாதப்பா திட்டுவதற்க்குள் நான் ஜூட்

உம் மை இதயம் பின்லேடனை புடிக்க சொன்ன இங்கவந்து எழுத்த புடிச்சுகிட்டு இருக்கீறீரா பொய் இதயத்தை தோடும் ஐயா:D:D

ஷீ-நிசி
05-12-2007, 04:29 PM
நல்ல கவிதை மனோஜ்! வாழ்த்துக்கள்!

வாலிபனே! உன் இளவயதில் உன் சிருஷ்டிகரை நினை!
வேதாகமத்தில் பிரசங்கி அதிகாரத்தில் வருகின்ற வசனம் அப்படியே உம் கவிதையாக!

விதைத்தாயிற்று!..... விளையுமென்றே நம்புவோம்!

அக்னி
05-12-2007, 05:37 PM
திசை தேடும் வயதில்,
திசையறியாவிட்டால்,
திசை மாறும் வாழ்க்கை...

உணர்ந்தால்,
இளமையில் மட்டும் கடினம்...
உணராவிட்டால்,
வாழ்க்கை முழுதும் கடினம்...

மிகுந்த பாராட்டுக்கள் மனோஜ்...

ஷீ-நிசி கூறியது போல,

விதைத்தாயிற்று!..... விளையுமென்றே நம்புவோம்!
நல்ல விளைச்சலை எதிர்பார்ப்போம்...

இளசு
05-12-2007, 07:40 PM
அதிகபட்ச உடல்பலம் உள்ள இளமை..
அதிகபட்ச மன ஈர்ப்பு/சிதறலும் அப்போதே..

சிதறல்கள் மீறி - ஒரு உள்ளொளி
நேர்க்கோட்டில் லட்சிய ஊருக்காய்..

போய்ச்சேர்ந்தவர்கள் பாக்கியவான்கள்!


போவோருக்கு எச்சரிக்கை அவசியமில்லை!
சிதறுவோர் இதைக் கேட்கப் போவதில்லை!


உலகின் பெரும் அவஸ்தை -
யாருக்கு அறிவுரை/வழிகாட்டல் அவசியமோ
அவர்கள்தான் அதை மறுதலிப்பதில்/உதறுவதில்
அதிமுன்னணியில் !


வாழ்த்துகள் மனோஜ்!

அமரன்
06-12-2007, 08:54 AM
முழுநெல்லிக்கனியை
மெல்லுகையில் கசக்கும்..
மென்றதும் தாகமெடுக்கும்..

நாவுடன் தண்ணீர்
உறவாடுகையில் இனிமை கிடைக்கும்..

வாய்ச்சுவர்களில்
பட்டுத்தெறிகையில் மேலும் அதுபெருகும்..

இளமையில் கட்டுப்பாடு, உழைப்பு
பெறுதியாக
முதுமையில் மென்மை இனிமை..
பாராட்டுக்கள் மனோஜ்.

நேசம்
06-12-2007, 10:02 AM
வாழ்க்கை வாழ்வதற்கு என்பதற்காக எப்படி வேண்டுமெண்றாலும் வாழமால் ஒரு கட்டுபாடுடன் வாழ வேண்டும் என்பதை உணர்த்தும் அழகான கவிதை.வாழ்த்துக்கள் - பாரட்டுக்கள் மனோஜ்

புள்ளி ராஜா மாதிரி ஆளுகளுக்கு இது கசப்பா இருக்கும்.