PDA

View Full Version : காதற் திணை

ஆதி
02-12-2007, 02:00 PM
காதலும் காதல் சார்ந்த இடமும்..

வெய்யில் இறப்ப தொய்யில் வானம்
மிதக்கும் சுணைநீர் மருங்கே; வரைவேன்
என தலைவன் நீங்க ஊரோர் அறியார்
அறியும் கருங்கால் வேம்பு இன்நிழலே..

-ஆதி

சங்கப் பாடல் போல் புனைய முயன்றேன்..

நன்றி.

-ஆதி

jpl
03-12-2007, 06:03 AM
எழுதியது சரி ஆதி,
அதன் அர்த்தம்,துறை,திணை எல்லாம் குறிப்பிட்டால் படிப்பவர்களுக்கு எளிதாக விளங்குமே....

தொய்யிற் வானம்
வண்ணக் கலவையால்(இயற்கை நறுமணப் பொருட்கள்,பூ,மரப் பொருட்களாலான சாறு) மார்பில் பெண்கள் சித்திரம் வரைவது தொய்யல் எனப்படும்.வானத்தின் வர்ணஜாலத்திற்கு அதனை குறிப்பிட்டு இருப்பது மிகவும் நன்றாக இருக்கின்றது.
தட்டச்சுப் பிழை என்று கருத இடந்தருகின்றது ஆதி. சீர் செய்ய வேண்டுகிறேன்.

ஆதி
03-12-2007, 11:21 AM

நன்றி jpl அவர்களே, பிழைதிருத்தம் செய்துவிட்டேன்..

-ஆதி

jpl
03-12-2007, 03:03 PM
தொய்யிற்(தொய்யற்)வானம் சரியே ஆதி. ஆனால் அதன் அடுத்த கையெழுத்துப் பகுதியில் பிழை கண்டேன்..
சமயத்தில் நான் தட்டச்சுச் செய்யும் போதும் பிழை ஏற்படும் தான்.

பென்ஸ்
03-12-2007, 03:33 PM
சத்தியமா புரியல... :)

ஆதி
03-12-2007, 03:48 PM
சத்தியமா புரியல... :)

வெய்யில் இறப்ப தொய்யல் வானம்
மிதக்கும் சுணைநீர் மருங்கே; வரைவேன்
என தலைவன் நீங்க ஊரோர் அறியார்
அறியும் கருங்காற் வேம்பு இன்நிழறே..

தலைவியோடு தனிமையில் இருந்த தலைவன்.. உன்னை மணந்து கொள்கிறேனென வாக்களித்துவிட்டு நீங்கினான், இருவரும் தனிமையில் இருந்ததால் அவன் தந்த வாக்குக்கு, வண்ணங்களை தன் மேனி எங்கும் வாரி இரைத்த அந்திப் பொழுதின் பிம்பம் விழும் சுணைநீர் அருகே இருவரும் பேசி அமர்ந்திருந்த வேப்பமர நிழலே சாட்சி என தலைவி கூறுகிறாள்..

இளசு
03-12-2007, 07:56 PM
லதா அவர்களைவிட இந்தப் பாடலை இங்கே விமர்சிக்க யாருண்டு?

தகுதியானவரிடம் பாராட்டு பெற்ற ஆதிக்கு என் வாழ்த்துகள்..

கொலாஜ், பாடிபெயிண்ட்டிங், மெஹன்ந்தி வொர்க் - எல்லாம் சட்டென புரியும் இக்காலத்துக்கு தொய்யலை மீள் அறிமுகம் செய்த பணிக்கு
சிறப்பு பாராட்டுகள்.. (மௌவல் மௌவல் போல..)

நெய்க்காரப்பட்டிக் கிழவி வாய்நிறைய வெற்றிலை போட்டுக் குதப்பி உமிழ்ந்ததால் - அந்திவானம் என ஒரு கவிதையான வசனம் வரும் - ''முதல் மரியாதை'' திரைப்படத்தில்..

இங்கே வண்ணக்கலைவையின் பெண்ணலங்காரம் என அழகிய உவமை..
(எனக்கு பரிச்சயமில்லாதது - முந்தி விளக்கியமைக்கு நன்றி லதா அவர்களே..)

சங்கப்பாடல் போல் புனைய ஓர் தகுதி வேண்டும்..
அது நிரம்பவே பெற்றவர் நீங்கள் ஆதி!

திணை, அதைச்சார்ந்த பொருட்கள்,மக்கள், துறைகள் என
நீங்கள் இன்னும் தொடரலாம்..

அதற்கான அழகான முன்னோட்டம் இங்கே -

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=12267

ஆதி
04-12-2007, 04:03 AM
லதா அவர்களைவிட இந்தப் பாடலை இங்கே விமர்சிக்க யாருண்டு?

தகுதியானவரிடம் பாராட்டு பெற்ற ஆதிக்கு என் வாழ்த்துகள்..

கொலாஜ், பாடிபெயிண்ட்டிங், மெஹன்ந்தி வொர்க் - எல்லாம் சட்டென புரியும் இக்காலத்துக்கு தொய்யலை மீள் அறிமுகம் செய்த பணிக்கு
சிறப்பு பாராட்டுகள்.. (மௌவல் மௌவல் போல..)

நெய்க்காரப்பட்டிக் கிழவி வாய்நிறைய வெற்றிலை போட்டுக் குதப்பி உமிழ்ந்ததால் - அந்திவானம் என ஒரு கவிதையான வசனம் வரும் - ''முதல் மரியாதை'' திரைப்படத்தில்..

இங்கே வண்ணக்கலைவையின் பெண்ணலங்காரம் என அழகிய உவமை..
(எனக்கு பரிச்சயமில்லாதது - முந்தி விளக்கியமைக்கு நன்றி லதா அவர்களே..)

சங்கப்பாடல் போல் புனைய ஓர் தகுதி வேண்டும்..
அது நிரம்பவே பெற்றவர் நீங்கள் ஆதி!

திணை, அதைச்சார்ந்த பொருட்கள்,மக்கள், துறைகள் என
நீங்கள் இன்னும் தொடரலாம்..

அதற்கான அழகான முன்னோட்டம் இங்கே -

உங்கள் ஊக்கத்திற்கு மிக்க நன்றி இளசு அவர்களே..

கபிலன், கார்கோ ஔவையார் போன்றப் பெரும் புலவர்களால் பாடப்பட்டது சங்கக் கவிதைகள்..

இதில் என்பாட்டு எறும்பின் வாயைவிட நுண்ணியதே..

இக்காலத்திற்கு தகுந்தாற் போற் எழுதக் கருதியே திணையைக் காதற் திணையென வைத்துக்கொண்டேன்..

துறை, உரிப்பொருள், இன்ன பிற வேண்டாமெனக் நினைக்கிறேன்.. பாடல் இக்காலதிற்கு தகுந்தாற் போற் எழுதுவே முயற்சிக்கிறேன்.. அதற்கான விளக்கமும் எழுதிவிடுகிறேன்..

என் சிறுமதிக்கு எட்டியதைப் சொன்னேன்.. பிழை இருந்தான் மன்னிக்கவும்..

நன்றி ஆதி

ஆதவா
07-12-2007, 03:58 AM
காதலும் காதல் சார்ந்த இடமும்..

வெய்யில் இறப்ப தொய்யல் வானம்
மிதக்கும் சுணைநீர் மருங்கே; வரைவேன்
என தலைவன் நீங்க ஊரோர் அறியார்
அறியும் கருங்காற் வேம்பு இன்நிழறே..

காதற் திணை என்பதே சற்றே சிந்திக்க வைத்தது.

தொய்யல் தான் என்னை தொய்ய வைக்கிறது.... ஆதி... தொய்யில் என்பது சரி என்று நினைக்கிறேன்

தொய்யல் - இளைத்தல் சோர்ந்து போதல்,
தொய்யில் - டாட்டு எனப்படும் உடல் ஓவியங்கள்.

பாவகைகளில் இப்பா சேராமை மட்டுமே குறை. அப்படி சேர்த்தியிருக்கலாம்... (ஆசிரிய/வெண்பா கச்சிதமாக இருக்கும்)

ஆனால் ஏனோ சங்கப் பாடலையே குடைந்து எடுத்ததைப் போல கருவும், வார்த்தைகளும்.

வித்தியாசப் படைப்பு... மேலும் தொடர்க..

ஆதி
07-12-2007, 07:01 AM

முந்திரிகளில் குறிப்பிட்டது போல, சங்கப்பா போல் பா எழுத்வேண்டும் என்கிற தாகத்தில் எழுத முயற்சித்தேன், அதற்கு இன்ன பிற காரணமும் உண்டு, சங்கப்பா போல் இக்கால நடை முறைகளை எழுதிப் பார்க்க வேண்டும் என்பது என் இன்னொரு ஆசை..

அதனால்தான் பழைய வார்த்தைகளை வைத்து ஒருப் பா எழுத முயன்றேன், உண்மையில் சென்னைத் திணை, கூவமும் கூவம் சார்ந்த இடமும், இவ்வாறு பல திணைக்களை குறிவைத்து கோலம் போட வைத்த முதல் புள்ளிதான் காதலும் காதல் சார்ந்த இடமும்.

தொய்யில் என்றுதான் முதலில் எழுதி இருந்தேன், தொய்யல் என மாற்ற நம் மன்ற உறவில் ஒருவர் கேட்டதற்கு இணங்கி தொய்யல் என மாற்றினேன்.

வார்த்தைகளை கைப்பற்றவும் உதவுவது மரபுக்கவிதைகள் தானே..

பின்னூட்டத்திற்கு நன்றி ஆதவா..

ஆதி