PDA

View Full Version : பாரதியார் கவிதைகள்.meera
02-12-2007, 01:43 PM
நல்லதோர் வீணை


நல்லதோர் வீணை செய்தே - அதை
நலங்கெடப் புழுதியி லெறிவ துண்டோ?
சொல்லடி சிவசக்தி!-எனைச்
சுடர்முகு மறிவுடன் படைத்து விட்டாய்.
வல்லமை தாராயோ-இந்த
மானிலம் பயனுறவாழ்வதற்கே?
சொல்லடி சிவசக்தி! - நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?

விசையுறு பந்தினைப் போல் - உள்ளம்
வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன்.
நசையறு மனங்கேட்டேன் - நித்தம்
நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்.
தசையினைத் தீசுடினும்- சிவ
சக்தியைப் பாடுநல் லகங்கேட்டேன்.
அசைவறு மதிகேட்டேன். - இவை
அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ?

.

ஆதவா
03-12-2007, 07:15 AM
அட!! நல்ல படைப்புகள் அவை சகோதரி.

கடவுளை ஒரு நண்பராக பாவித்து " வரம் கொடுப்பதில் தடை இருக்கிறதா? " என்று கேட்டிருப்பார்..

ஒவ்வொரு வரிகளும் ஆழமான எளிமையான வரிகள்>..

மேலும் தொடருங்கள்.....

meera
03-12-2007, 09:48 AM
அட!! நல்ல படைப்புகள் அவை சகோதரி.

கடவுளை ஒரு நண்பராக பாவித்து " வரம் கொடுப்பதில் தடை இருக்கிறதா? " என்று கேட்டிருப்பார்..

ஒவ்வொரு வரிகளும் ஆழமான எளிமையான வரிகள்>..

மேலும் தொடருங்கள்.....
தருகிறேன் ஆதவா.

பாரதியின் கவிதைகள் விரும்பாதோர் இருக்க முடியுமா??

சிவா.ஜி
03-12-2007, 09:56 AM
மீரா பின்னூட்டமிடாதற்கு மன்னிக்கவும்.முன்குறிப்போ,பின்குறிப்போ இல்லாததால்,நீங்கள் இந்த பாரதிக் கவிதைக்கு உங்கள் படைப்பாக எதுவோ தரப்போகிறீர்களென்று காத்திருந்தேன்.வரிசையாக தரப் போகிறீர்களா....அப்படியென்றால் மிகவும் நல்லது.சுவைக்க காத்திருக்கிறோம்.நீங்கள் சொன்னதைப் போல பாரதிக் கவிதையை விரும்பாதவர் யாருண்டு.அதுவும் இந்தக் கவிதை எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.நன்றி மீரா.

meera
03-12-2007, 10:13 AM
காணி நிலம்


காணி நிலம் வேண்டும் - பாரசக்தி
காணி நிலம் வேண்டும் - அங்குத்
தூணி லழகியதாய் - நன் மாடங்கள்
துய்ய நிறத்தினதாய் - அந்தக்
காணி நிலத்திடையே - ஓர் மாளிகை
கட்டித் தரவேண்டும் - அங்குக்
கேணி யருகிலே - தென்னைமரம்
கீற்றுமிள நீரும்.


பத்து பன்னிரண்டு - தென்னைமரம்
பக்கத்திலே வேணும் - நல்ல
முத்துச்சுடர் போலே - நிலாவொளி
முன்பு வரவேணும் - அங்கே
கத்துங் குயிலோசை - சற்றேவந்து
காதிற் படவேணும் - என்றன்
சித்தம் மகிழ்ந்திடவே - நன்றாயிளந்
தென்றல் வரவேணும்.

பாட்டுக் கலந்திடவே - அங்கே யொரு
பத்தினிப் பெண்வேணும் - எங்கள்
கூட்டுக் களியினிலே - கவிதைகள்
கொண்டு தரவேணும்; அந்தக்
காட்டு வெளியினிலே - அம்மா, நின்றன்
காவ லுறவேணும்; என்றன்
பாட்டுத் திறத்தாலே - இவ்வையத்தைப்
பாலித் திடவேணும்.

meera
03-12-2007, 10:18 AM
மீரா பின்னூட்டமிடாதற்கு மன்னிக்கவும்.முன்குறிப்போ,பின்குறிப்போ இல்லாததால்,நீங்கள் இந்த பாரதிக் கவிதைக்கு உங்கள் படைப்பாக எதுவோ தரப்போகிறீர்களென்று காத்திருந்தேன்.வரிசையாக தரப் போகிறீர்களா....அப்படியென்றால் மிகவும் நல்லது.சுவைக்க காத்திருக்கிறோம்.நீங்கள் சொன்னதைப் போல பாரதிக் கவிதையை விரும்பாதவர் யாருண்டு.அதுவும் இந்தக் கவிதை எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.நன்றி மீரா.
நன்றி சிவா.ஜி.

பாரதியின் கவியை வைத்து கவி எழுதும் அளவுக்கு எனக்கு திறமை இல்லை சகோதரா.

இது மன்ற நண்பர்களுக்காக கொடுக்க நினைத்து ஆரம்பித்தது.

நீங்களும் உங்களுக்கு பிடித்த பாரதியின் கவியை இங்கே பதிந்தால் எனக்கு மகிழ்ச்சி.

lolluvathiyar
03-12-2007, 11:51 AM
வந்தே மாதரம் என்போம் - எங்கள்
மாநிலத் தாயை வணங்குதும் என்போம்.

ஜாதி மதங்களைப் பாரோம் - உயர்
ஜன்மம் இத் தேசத்தில் எய்தின ராயின்
வேதிய ராயினும் ஒன்றே - அன்றி
வேறு குலத்தின ராயினும் ஒன்றே

ஈனப் பறையர்க ளேனும் அவர்
எம்முடன் வாழ்ந்திங் கிருப்பவர் அன்றோ?
சீனத்த ராய்விடு வாரோ? - பிற
தேசத்தர் போற்பல தீங்கிழைப் பாரோ?

ஆயிரம் உண்டிங்கு ஜாதி - எனில்
அன்னியர் வந்து புகல் என்ன நீதி? - ஓர்
தாயின் வயிற்றில் பிறந்தோர் - தம்முள்
சண்டைசெய் தாலும் சகோதரர் அன்றோ?

ஒன்று பட்டால் உண்டு வாழ்வே - நம்மில்
ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே
நன்றிது தேர்ந்திடல் வேண்டும் - இந்த
ஞானம் வந்தாற்பின் நமக்கெது வேண்டும்?

எப்பதம் வாய்த்திடு மேனும் - நம்மில்
யாவர்க்கும் அந்த நிலைபொது வாகும்
முப்பது கோடியும் வாழ்வோம் - வீழில்
முப்பது கோடி முழுமையும் வீழ்வோம்

புல்லடி மைத்தொழில் பேணிப் - பண்டு
போயின நாட்களுக் கினிமனம் நாணித்
தொல்லை இகழ்ச்சிகள் தீர - இந்தத்
தொண்டு நிலைமையைத் தூவென்று தள்ளி

ஆதி
03-12-2007, 02:47 PM
நல்லதோர் வீணைவிசையுறு பந்தினைப் போல் - உள்ளம்
வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன்.விசையுறு பந்தினைப் போல் - கவிதைகளில் அறிவியலைப் புகுதியவன் பாரதி.

பகிர்தலுக்கு நன்றி மீரா..

ஆதி
03-12-2007, 02:50 PM
காணி நிலம்


காணி நிலம் வேண்டும் - பாரசக்தி
காணி நிலம் வேண்டும் - அங்குத்
தூணி லழகியதாய் - நன் மாடங்கள்
துய்ய நிறத்தினதாய் - அந்தக்
காணி நிலத்திடையே - ஓர் மாளிகை
கட்டித் தரவேண்டும் - அங்குக்
கேணி யருகிலே - தென்னைமரம்
கீற்றுமிள நீரும்.


இந்த வரிகளில் தாஜ்மகால் ஒன்று கேட்கிறான் பாரதி சக்தியிடம்..

பகிர்தலுக்கு நன்றி மீரா..

-ஆதி

meera
04-12-2007, 01:04 PM
புல்லடி மைத்தொழில் பேணிப் - பண்டு
போயின நாட்களுக் கினிமனம் நாணித்
தொல்லை இகழ்ச்சிகள் தீர - இந்தத்
தொண்டு நிலைமையைத் தூவென்று தள்ளி


இதே போல் தொடர்ந்து தாருங்கள் சகோதரா நண்பர்களின் பார்வைக்கு.:icon_b:

meera
04-12-2007, 01:06 PM
இந்த வரிகளில் தாஜ்மகால் ஒன்று கேட்கிறான் பாரதி சக்தியிடம்..

பகிர்தலுக்கு நன்றி மீரா..

-ஆதி
விமர்சனத்திற்கு நன்றி ஆதி

lolluvathiyar
04-12-2007, 01:27 PM
இதே போல் தொடர்ந்து தாருங்கள் சகோதரா நண்பர்களின் பார்வைக்கு.:icon_b:

தருகிறேன் அதற்க்காக இப்படி முழு பாடலையுமா கோட் பன்னுவாங்க. ஒரிரு வரி மட்டும் வச்சுட்டு குறைத்து விடுங்கள்

meera
26-03-2008, 10:30 PM
அக்கினிக் குஞ்சு

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு-தழல்
வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று முண்டோ?
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்.

ஆதவா
27-03-2008, 05:11 AM
அக்கினிக் குஞ்சு

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு-தழல்
வேரத்திற் குஞ்சென்று மூப்பென்று முண்டோ?
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்.

அருமையான கவிதை பகிர்தலுக்கு நன்றி சகோதரி.

எனக்கு பாரதியின் பாடல்களிலேயே அதிக நினைவிருப்பதும் அதிகம் விரும்புவதும், அதிக ஆழமான கருத்துமான இப்பாடல் மிகவும் பிடித்தமான ஒன்று.....

இதைப் பாடும் போது அவரது கண்ணில் உள்ள வீரம் என் கண் முன்னே தெரிகிறது, எப்படியெல்லாம் தன் மனம் எரிந்தது என்பதை இதைவிட எந்த ஒரு கவிஞராலும் சொல்ல முடியாது. அந்த உணர்ச்சியை எந்த ஒரு கவிஞரிடமும் கண்டதில்லை.

இளம் ரத்தம் பயமறியாது என்பார்கள். அதையும் மீறிய கவிதை.

அந்த அக்கினிக் குஞ்சாக நான் இருக்க ஆசைப்படுகிறேன். என்றேனும் மரப்பொந்திடை வைத்திட பாவலன் இல்லாமலா போய்விடுவான்? நாளை எனக்கும் ஒரு அக்கினிக் குஞ்சு கிடைக்கும்.

வேரத்திற் இல்லை வீரத்தில்(ற்)

அன்புடன்
பாரதியின் நண்பன்.

meera
27-03-2008, 10:11 AM
அருமையான கவிதை பகிர்தலுக்கு நன்றி சகோதரி.


அந்த அக்கினிக் குஞ்சாக நான் இருக்க ஆசைப்படுகிறேன். என்றேனும் மரப்பொந்திடை வைத்திட பாவலன் இல்லாமலா போய்விடுவான்? நாளை எனக்கும் ஒரு அக்கினிக் குஞ்சு கிடைக்கும்.

வேரத்திற் இல்லை வீரத்தில்(ற்)

அன்புடன்
பாரதியின் நண்பன்.

ஆதவா இதை பதிக்கும் போது உன் நினைவு தான் வந்தது. கவலை வேண்டாம் ஆதவா நான் வேணா உன்னை மர பொந்திலே வைக்கவா?????:lachen001::lachen001::lachen001:

ஆதவா
27-03-2008, 10:33 AM
ஆதவா இதை பதிக்கும் போது உன் நினைவு தான் வந்தது. கவலை வேண்டாம் ஆதவா நான் வேணா உன்னை மர பொந்திலே வைக்கவா?????:lachen001::lachen001::lachen001:

:lachen001:

என் நினைவு வந்தமைக்கு நன்றி சகோதரி. நான் கூட நேற்று தங்களைப் பற்றி எண்ணினேன். :) . (அடடே என்னே ஒரு சகோதரப்பாசம் !! :icon_b:)

ஆதவன் ஏற்கனவே அக்கினிதானே! ஆனால் என்னை அடக்குவதற்கு எந்த மரப்பொந்தும் இருக்காது. :)

meera
27-03-2008, 11:04 AM
ஆஹா உனக்கும் என் நினைவு வந்ததா . நன்றி சகோதரா நன்றி.

உன்னை அடக்கும் ஆள் விரைவில் வருவார்கள். நான் அழப்புவிடுத்திருக்கிறேன்.:lachen001::lachen001::aetsch013:

ஆதவா
27-03-2008, 11:40 AM
ஆஹா உனக்கும் என் நினைவு வந்ததா . நன்றி சகோதரா நன்றி.

உன்னை அடக்கும் ஆள் விரைவில் வருவார்கள். நான் அழப்புவிடுத்திருக்கிறேன்.:lachen001::lachen001::aetsch013:

:traurig001::traurig001::traurig001::traurig001::traurig001::traurig001::traurig001:

ஓவியன்
28-03-2008, 11:59 AM
தொடருங்கள் மீரா..!!

மகாகவியின் மொத்தக் கவிதைகளின் கருவூலமாக இந்தத் திரி இனி விளங்கட்டும்..!!

meera
29-03-2008, 10:31 AM
நன்றி அண்ணா. நிச்சயம் தொடர்கிறேன்.

அமரன்
29-03-2008, 10:38 AM
மன்றத்தின் மூத்த உறுப்பினர் எம்பயர் அவர்கள்கூட பாரதியார் கவிதைகளின் தொகுப்பை திஸ்கியில் தந்துள்ளார். இப்போது மீரா அவர்கள் ஒருங்குறியில்.. பாராட்டுகள்.

சின்னதாக ஒரு வேண்டுகோள்.. கவிதைகளுக்கு பொழிப்புரையும் கொடுத்தால் (யாராகிலும்) இன்னும் சிறப்பாக இருக்குமே.. (சொல்றதை விட்டிட்டு செய்து காட்டேன் என்று எனது உள்மனது சாட்டை வீசுகிறது. முயல்கிறேன்.)

ஆதவா
29-03-2008, 11:10 AM
அக்கினிக் குஞ்சு

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு-தழல்
வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று முண்டோ?
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்.

அமரனுக்காக.........

பாரதியின் வீராவேசத்திற்கும், இலக்கியப் புலத்திற்கும் நல்ல எடுத்துக் காட்டாக அமைவதோடு மட்டுமல்லாமல் அதைப் படிக்கும்
ஒவ்வொரு மனிதருக்கும் அத்தகையை உணர்வைப் பொதியவைத்து எழுதியுள்ளார் என்பது விசேசம். கோபம் கொள்வது நியாயமா என்று
இன்று நாம் வாதிடலாம். பாரதியின் காலத்தில் முடியாது. பாரதியின் கோபத்திற்கு நியாயம் இருக்கிறது. பிரிட்டிஷ் காரர்கள் ஒரு
சாதாரண மனிதனின் (அதாவது எந்தவித அந்தஸ்தும், பதவியும் வகிக்காமல்) எழுத்துக்களைக் கண்டு பயந்து இருக்கிறார்கள் என்று
சொல்வதைவிட, அந்த சாதரண மனிதரின் கோபத்தைக் கண்டு பயந்திருக்கிறார்கள் என்றுதான் சொல்லவேண்டும்.

அக்கினிக் குஞ்சாக நான் நினைப்பது பாரதியை..... அவ்வாறெனில் இப்பாடலைப் பாடுவது பராசக்தி. பாரதி என்ற அக்கினியை உலகம் நிறைந்த காட்டின் பொந்தில் பொதிக்க பராசக்தி முயல்கிறாள். ஆம்.. பாரதியை பொந்திலே அடைக்கமுடியுமா? அவரின் கோபத்தை நெற்றியிலே அடக்கிடத்தான் முடியுமா? பாவம்.. வெந்து போய்விட்டது காடு......... வயிற்றுவலி வந்து வானைப் பார்த்திடாமல் இருந்திருந்தால் பாரதி என்ற எழுத்தாளனை, பன்முகத்தானை பிரிட்டிஷ் சும்மா வைத்திருக்காது. கத்தியைக் காட்டிலும் பேனா வலிமை மிக்கது என்பதை அறிந்தவர்கள் வெள்ளைக் காரர்கள்.

வீரத்திற்கு இளமை முதுமை என்ற பேதமில்லை. அதைத்தான் இறுதியாக சுட்டுகிறார்.. இளமையில் பொங்கு, இதுதான் பாரதி நமக்குச் சொல்லும் ஆணித்தரமான வாக்கியம். ரெளத்திரம் பழகு என்று சொல்வதற்கும் காரணம் இதுவே. ஒரு மனிதன் அக்கினிக் குஞ்சைப் போல ரெளத்திரம் நிறைந்த பிழம்பாக இருக்கவேண்டும்.

இக்கவிதையைப் பாருங்கள். "அங்கொரு காட்டிலோர் " எனும் போது வேறு சில காடுகளும் உண்டு என்ற பொருள் ஆகிறது. ஆனால் நன்று கவனித்துப் படியுங்கள். மிகச் சாதாரணமாக சொல்லுகிறார்..... "அங்கொரு காடு" என.. அவருக்கு அருகில் என்ன இருக்கிறதோ அதில் கொண்டு போய் வைக்கிறார்.. மகா காடு என்றோ அல்லது பெரும்பொருளைக் குறிப்பிடும் எந்த சொல்லும் இல்லை. ஒருவேளை நாம் ஒருவனைக் கண்டுபிடித்தாலும் அவனை தூக்கிவிடும்போது நமக்கு அருகில் என்ன கிடைக்கிறதோ அதையே பயன்படுத்தவேண்டும் என்கிறார்..

நான்கே வரிகள்... இப்படி ஒரு ஆழமான கருத்து பொதிய எழுத இன்னொரு பாரதி பிறக்கவேண்டும்...........

அக்கினிக் குஞ்சுகள் இந்த உலகக் காட்டில் ஏராளமாகக் காணக் கிடைக்கிறது. அதைக் கண்டெடுக்க ஆளில்லாமல் சுருண்டு மாண்டுபோகின்றன. ஆம்... பாரதி. உன்னைக் கண்டெடுத்த பராசக்திபோல இப்பூவுலகில் நியாய வெறியுடன் சுற்றும் பல அக்கினிக்குஞ்சுகளைக் கண்டெடுக்க வழி செய்..

ஆதவன்..........