PDA

View Full Version : அன்பே உன்னை

செல்வா
01-12-2007, 07:45 PM
பூ என்றேன்
பூக்களைவிட முட்களையே அதிகம் தந்தாய்
தேன் என்றேன்
தேனை விட தேனீக்களின் கொடுக்கையே சுவைக்கச் செய்தாய்
மேகம் என்றேன்
மழையை விட மின்னலும் இடியுமே தாங்கச் செய்தாய்
ம(ர)ணம் என்கிறேன்
நீ தரப்போவது சொர்க்கமா இல்லை நரகமா?
:icon_ush:

அமரன்
01-12-2007, 08:04 PM
கொடு கை அல்லநான்

தேனெடுக்க
கை கொடுக்குமென்றே
கொடுக்கைக் கொடுத்தேன்..!

முட்களைக் கொடுத்து
பாதுகாப்புக் கொடுத்தேன்..!

வழிகாட்டும்
வெளிச்சம் தந்தேன்..
வலிதாங்கும்
வலிமையும் ஈந்தேன்..!

இத்தனையும்
தந்தவித்தையால் வந்தது
சொர்க்கமா நரகமா?
அன்பே. அன்பே..
மனமணம் வீசிவிடு...!

நேசம்
01-12-2007, 08:06 PM
செல்வாவின் கவிதைக்கு அழகான பின்னூட்டம்.பாரட்டுக்கள் செல்வா மற்றும் அமரனுக்கு

சுகந்தப்ரீதன்
04-12-2007, 08:44 AM
ம(ர)ணம் என்கிறேன்
நீ தரப்போவது சொர்க்கமா இல்லை நரகமா?
:icon_ush:
இரண்டுமில்லை நண்பரே.. கிடைத்தால் ஆயுள் தண்டனை இல்லையெனில் தூக்கு தண்டனை.. ஆக மொத்தம் தண்டனை உறுதி செய்யப்பட்டுவிட்டது...காதலிக்க ஆரம்பித்த உடன்.. வாழ்த்துக்கள் செல்வா.. கிண்டலுக்காக அப்படி எழுதினேன்.. தொடர்ந்து எழுதுங்கள்..!

ஓவியன்
05-12-2007, 04:53 PM
முடியாததை முயன்று
பெறுவதில் தானே
பெருமை திறமை எல்லாமே....

காதலும் இதற்கு விதிவிலக்கல்லவே....

ஆதவா
07-12-2007, 06:02 AM
நான் சொல்லவந்ததை அமரன் முந்திக்கொண்டதில் பொறாமை..

செல்வா, உங்களுக்கு நல்ல கவிதைகள் வருகிறது.... எனினும் மேலும் முயற்சி செய்யவும்.... பக்க பலமாக நாங்கள் இருக்கிறோம்....

பூ - மலரினும் மென்மை - மகரந்த மனம்

தேன் - தேனின் சுவை - கூட்டின் வடிவம்

மேகம் - மேக மெத்தை - கெட்டிப்பட்டு அகப்படும் திடம்.

இன்னும் இன்னும் எத்தனையோ பரிமாணங்களை நுழைத்துப் பாருங்கள்....

வெற்றி நிச்சயம்

சிவா.ஜி
07-12-2007, 06:05 AM
காதலியின் சொல்லுக்கும் செயலுக்கும் எதிர் அர்த்தம் எடுத்துக்கொண்டால்...அந்த முட்கள்தான் மலர்,தேனீயின் கொடுக்கில் தேன்,இடி மின்னலுக்குப் பின் மனம் நனைக்கும் மழை....எனவே ஏன் மரணம்...நிச்சயம் நிகழும் மணம்.வாழ்த்துகள் செல்வா.

செல்வா
07-12-2007, 06:33 AM

ஹ ஹ ஹ ஹ... நன்றி சிவா.....

செல்வா
07-12-2007, 06:35 AM
நான் சொல்லவந்ததை அமரன் முந்திக்கொண்டதில் பொறாமை..

செல்வா, உங்களுக்கு நல்ல கவிதைகள் வருகிறது.... எனினும் மேலும் முயற்சி செய்யவும்.... பக்க பலமாக நாங்கள் இருக்கிறோம்....

பூ - மலரினும் மென்மை - மகரந்த மனம்

தேன் - தேனின் சுவை - கூட்டின் வடிவம்

மேகம் - மேக மெத்தை - கெட்டிப்பட்டு அகப்படும் திடம்.

இன்னும் இன்னும் எத்தனையோ பரிமாணங்களை நுழைத்துப் பாருங்கள்....

வெற்றி நிச்சயம்

கண்டிப்பாக முயற்ச்சி செய்கிறேன்... நன்றி பின்னூட்டத்திற்கு...

செல்வா
07-12-2007, 06:38 AM
முடியாததை முயன்று
பெறுவதில் தானே
பெருமை திறமை எல்லாமே....

காதலும் இதற்கு விதிவிலக்கல்லவே....

முயற்சிப்பதில்.... தவறு இல்லை ஆனால் நிலையில்லாத மனித மனங்களை நினைத்தால்..... முயற்ச்சியே தவறோ எனத்தோன்றுகிறது...

செல்வா
07-12-2007, 06:44 AM
கொடு கை அல்லநான்

தேனெடுக்க
கை கொடுக்குமென்றே
கொடுக்கைக் கொடுத்தேன்..!

முட்களைக் கொடுத்து
பாதுகாப்புக் கொடுத்தேன்..!

வழிகாட்டும்
வெளிச்சம் தந்தேன்..
வலிதாங்கும்
வலிமையும் ஈந்தேன்..!

இத்தனையும்
தந்தவித்தையால் வந்தது
சொர்க்கமா நரகமா?
அன்பே. அன்பே..
மனமணம் வீசிவிடு...!

நன்றி ... அமரன்...

செல்வாவின் கவிதைக்கு அழகான பின்னூட்டம்.பாரட்டுக்கள் செல்வா மற்றும் அமரனுக்கு

நன்றி நேசம்

இரண்டுமில்லை நண்பரே.. கிடைத்தால் ஆயுள் தண்டனை இல்லையெனில் தூக்கு தண்டனை.. ஆக மொத்தம் தண்டனை உறுதி செய்யப்பட்டுவிட்டது...காதலிக்க ஆரம்பித்த உடன்.. வாழ்த்துக்கள் செல்வா.. கிண்டலுக்காக அப்படி எழுதினேன்.. தொடர்ந்து எழுதுங்கள்..!

நீங்க எதுக்கு வாழ்த்துறீங்க.. ஆயுள்தண்டனைக்கா இல்லை தூக்கு தண்டனைக்கா?
ஹ...ஹ.... நன்றி... ப்ரீதன்