PDA

View Full Version : பலியாடு

ஆதி
01-12-2007, 02:20 PM
ஒப்புக்குதான் விளையாடப்
போகிறேன்
என்றாலும்,
ஒவ்வொரு ஆட்டத்திலும்
வெட்டப் படுகிற காயாய்
நான்..

-ஆதி

meera
02-12-2007, 11:04 AM
ஒப்புக்குதான் விளையாடப்
போகிறேன்
என்றாலும்,
ஒவ்வொரு ஆட்டத்திலும்
வெட்டப் படுகிற காயாய்
நான்..
-ஆதி

இனம்புரியாத வலி இந்த வரி.

செல்வா
02-12-2007, 11:32 AM
என் அனுமதி இன்றி
எடுக்கப்படும் உயிர்
முன் அனுமதி இன்றி
முடக்கப்படும் வாழ்வு
ஆட்டிற்கு மட்டுமல்ல பலநேரங்களில்
மனிதருக்கும் தான்....

சிவா.ஜி
02-12-2007, 12:03 PM
பலி ஆடு..........!
எத்தனைபேர், எத்தனை இடங்களில்...எத்தனை விதங்களில்.எப்போதும்,எங்கேயோ...யாரோ ஒருவர் பலியாடாக்கப்படுகிறார்கள்.சிந்திக்க வைக்கும் சிறுகவிதை.வாழ்த்துகள் ஆதி.

ஆதி
02-12-2007, 01:36 PM
இனம்புரியாத வலி இந்த வரி.

நன்றி மீரா..

வாழ்த்துக்கள்..

-ஆதி

ஆதி
02-12-2007, 01:38 PM
என் அனுமதி இன்றி
எடுக்கப்படும் உயிர்
முன் அனுமதி இன்றி
முடக்கப்படும் வாழ்வு
ஆட்டிற்கு மட்டுமல்ல பலநேரங்களில்
மனிதருக்கும் தான்....

பின்னூட்டக்கவிக்கு நன்றி செல்வா..

-ஆதி

ஆதி
02-12-2007, 01:40 PM
பலி ஆடு..........!
எத்தனைபேர், எத்தனை இடங்களில்...எத்தனை விதங்களில்.எப்போதும்,எங்கேயோ...யாரோ ஒருவர் பலியாடாக்கப்படுகிறார்கள்.சிந்திக்க வைக்கும் சிறுகவிதை.வாழ்த்துகள் ஆதி.

நிதமும் நடக்கிற நிகழ்வுகள்தான்.. யார் யாரோ யார் யாராலோ..

நன்றி சிவா.ஜி உங்கள் வாழ்த்துக்கும் பின்னூட்டத்திற்கும்..

-ஆதி

சாம்பவி
02-12-2007, 04:33 PM
இலக்கணமின்றி எழுதுகிறேன்
தலைக்கணமின்றி உலவுகிறேன்
நான்.. நான்..
செங்களிற் வடித்த சிலை..
செம்மணலிற் விழுந்த திவலை

-ஆதி

இலக்கணமில்லா எழுத்து பழுதில்லை....
எழுத்துப் பிழை பழுதாம்..,

கனக்கும் கணத்தில் கணக்கும்
கணத்தில் கனக்கும்.... !
ஒரே சுழியில்
சுழித்துப்போம் அர்த்தம் .... !

களிறு வடித்த சிலை நீரோ... ? ( யானைக் குட்டி..... ? ;) )
செங்கல்லோ செங்களிறோ... !
புணரா இடத்தில்
புணர்ச்சி விதியும் எதற்கோ... !
பாடல் நாயகன் வெட்டுப்படலாம்... !
பாடநாயகி வெட்டுப்படலாகுமோ.... !

தாமரை
02-12-2007, 04:47 PM

சரிதான் ஒண்ணுக்கு ரெண்டா இப்படி நாம கூத்தடிச்சா மன்றம் தாங்காதம்மா.. அப்ப நான் என் கடமையில் ஒண்ணைக் குறைச்சிக்க வேண்டியதுதான்.. ;)

meera
03-12-2007, 10:34 AM
பலி ஆடு..........!
எத்தனைபேர், எத்தனை இடங்களில்...எத்தனை விதங்களில்.எப்போதும்,எங்கேயோ...யாரோ ஒருவர் பலியாடாக்கப்படுகிறார்கள்.சிந்திக்க வைக்கும் சிறுகவிதை.வாழ்த்துகள் ஆதி.

எப்படி சிவா.ஜி பெங்களூர் சந்திப்பில் பென்ஸ் பலியாடானாரே அப்படியா?????????:aetsch013::aetsch013::lachen001:

பூமகள்
03-12-2007, 10:58 AM
ஒப்புக்கோ, நிஜமாகவோ
ஆட்டத்தில் இறங்கினாலே
பலி... பரி..!
இரண்டில் ஒன்று நிச்சயம்..!
ஏற்கும் பக்குவம்
வேண்டும் நித்தமும்..!

நல்ல கவிதை. வாழ்த்துகள் ஆதி. :)

ஆதி
03-12-2007, 11:17 AM
ஒப்புக்கோ, நிஜமாகவோ
ஆட்டத்தில் இறங்கினாலே
பலி... பரி..!
இரண்டில் ஒன்று நிச்சயம்..!
ஏற்கும் பக்குவம்
வேண்டும் நித்தமும்..!

நல்ல கவிதை. வாழ்த்துகள் ஆதி. :)

கவிதைப் பின்னூட்டத்திற்கும் வாழ்த்துக்கும் நன்றி பூமகள்..

-ஆதி

சுகந்தப்ரீதன்
04-12-2007, 08:40 AM
ஒப்புக்குதான் விளையாடப்
போகிறேன்
என்றாலும்,
ஒவ்வொரு ஆட்டத்திலும்
வெட்டப் படுகிற காயாய்
நான்..

-ஆதி
ஒவ்வொரு முறையும் வெட்டப் பட்டாலும் ஓய்ந்துவிடாமல் மீண்டும் ஆட வரும் உன் உறுதி உனக்கு தெரியவில்லையா..? இல்லை புரியவில்லையா..? ஆதியிலிருந்து வாழ்க்கை ஆட்டத்தில் வெட்டுவதும் வெட்டப்படுவதும் ஒன்றுதான் என்று இன்னும் நண்பர் ஆதிக்கு விளங்கவில்லையா..? வாழ்த்துக்கள் ஆதி.. ஆழமான கவிக்கு...!

அமரன்
04-12-2007, 08:51 AM
நானும் ரவுடிதான் என்ற வடிவேலு பாணியில் நானும் விளையாடுகின்றேன் என்று ஒன்றாமல் இறங்கக்கூடாது. மீறி இறங்கினால் சேதாரம் அதிகம்தான். நிதர்சனத்தின் மறுபக்கம். பாராட்டுக்கள் ஆதி.

ஆதி
04-12-2007, 11:10 AM
ஒவ்வொரு முறையும் வெட்டப் பட்டாலும் ஓய்ந்துவிடாமல் மீண்டும் ஆட வரும் உன் உறுதி உனக்கு தெரியவில்லையா..? இல்லை புரியவில்லையா..? ஆதியிலிருந்து வாழ்க்கை ஆட்டத்தில் வெட்டுவதும் வெட்டப்படுவதும் ஒன்றுதான் என்று இன்னும் நண்பர் ஆதிக்கு விளங்கவில்லையா..? வாழ்த்துக்கள் ஆதி.. ஆழமான கவிக்கு...!

பின்னூட்டத்திற்கு நன்றி சுகந்தப்ரீதன்..

வெட்டுப்பட்டாலும் வெட்டுப்பாடமல் கட்டங்களைக் கடப்போம் என்கிற நம்பிக்கையோடுத்தான் மீண்டும் மீண்டும் விளையாடப்போகிறான் கவி நாயகன்..

-ஆதி