PDA

View Full Version : தேவையோர் அகராதிசிவா.ஜி
01-12-2007, 01:49 PM
ஒரு கோடி சொற்களில் உன்
ஒற்றைச் சொல்
என் உலகம் மாற்றியது...
மீண்டும் நீ உதிர்த்த
மற்றொருச் சொல்
என் உயிரை உருவியது!

உயிரணையும் தருணத்தில்
ஒரேயொரு வேண்டுகோள்
காதலர்க்கென தேவையோர் அகராதி,
மறுத்தலெனும் அர்த்தம் தரா
வார்த்தைகள் அதிலெழுதி!

இளசு
03-12-2007, 07:00 PM
ஹாஹ்ஹ்ஹா!

கிடுக்கிப்பிடி போட்டு தப்பிக்கவிடாமல் அமுக்க
சர்வாதிகார அகராதி தேவையா கவிஞரே..

வந்தமர்ந்த பறவை - விளக்கம் சொல்லத் தேவையின்றி
பறந்து செல்லவும் சுதந்தரம் கொண்டதாய் இருக்கட்டும்..

நெருக்கம் இருக்கும்வரை இருக்கட்டும்.. தளர்ந்த பின் ''நெருக்க'' வேண்டாமே!

இரு இதயம் இணைத்த சுடர் அணையாமல் இருக்க வைப்பது இருவர் பொறுப்பு...

அணைந்துவிட்டால்???

அவரவர் வழிபார்த்துச் செல்வதே சிறப்பு!


வாழ்த்துகள் சிவா..!

சிவா.ஜி
04-12-2007, 03:37 AM
என்ன செய்வது இளசு.காதலில் விழுந்துவிட்டால் எதார்த்தம் மறந்துபோகிறது.மறுத்தலின் வேதனை மட்டுமே உணர்கிறது.மறுத்தலுக்குப் பிறகும் ஓர் உறுத்தலில்லா வாழ்வுண்டு என்பது கால மருத்துவனின் சிகிச்சைக்குப் பிறகே புரியத் தொடங்குகிறது.
மிக அருமையான பின்னூட்டம்.நன்றி இளசு.
(நான் மன்றம் சேர்ந்த நாளிலிருந்து ஒரு பதிவு இட்டபிறகு இத்தனை நீண்ட நாட்களுக்குப்(மூன்று)பிறகு முதல் பின்னூட்டம் கிடைப்பது இதுவே முதல் முறை.மக்கள் ரொம்ப பிஸி.

ஆதி
04-12-2007, 04:47 AM
ஒரு கோடி சொற்களில் உன்
ஒற்றைச் சொல்
என் உலகம் மாற்றியது...
மீண்டும் நீ உதிர்த்த
மற்றொருச் சொல்
என் உயிரை உருவியது!

உயிரணையும் தருணத்தில்
ஒரேயொரு வேண்டுகோள்
காதலர்க்கென தேவையோர் அகராதி,
மறுத்தலெனும் அர்த்தம் தரா
வார்த்தைகள் அதிலெழுதி!

இதயக்கூரையில்
அமர்ந்தப் புறா
இன்னுயிர் உண்டு
பறக்கும் பொழுதும்
வேண்டுகோள்தான்
விடுகிறது மனது..
வேதனைகளை
விருப்பங்களை மறைத்துக்கொண்டு..

அகராதி(திமிர்) மறைந்து
அகராதி வேண்டியொரு கவி

நற்கவிதை தந்த சிவா.ஜிக்கு வாழ்த்துக்கள்

-ஆதி

சிவா.ஜி
04-12-2007, 06:18 AM
இதயக்கூரையில்
அமர்ந்தப் புறா
இன்னுயிர் உண்டு
பறக்கும் பொழுதும்
வேண்டுகோள்தான்
விடுகிறது மனது..
வேதனைகளை
விருப்பங்களை மறைத்துக்கொண்டு..

-ஆதி

அசத்தலான பின்னூட்டக் கவிதை வரிகள்.

இன்னுயிர் ஈந்தாலும் இன்னுமுள்ள உயிர்களுக்காக விடும் வேண்டுகோள்தான் இது.நன்றி ஆதி.

அமரன்
04-12-2007, 07:01 AM
அப்புறம்
"குயிலைப்புடிச்சு கூண்டிலடைச்சு கூவச்சொல்கின்ற காதல்
மயிலைப்புடிச்சு காலை உடைச்சு ஆடச்சொகின்ற காதல்"
அப்படின்னு சொல்லுவாங்க.

பிரிவு என்பது வேதனையானது.
கட்டாய இணைப்பு,
அதையும் தாண்டி வேதனையானது.
மாற்றான் மனையில் சந்தர்ப்பவசத்தால் காதல்வசப்படும்போது, நீங்கள் கேட்கும் அகராதியில் மறுக்க,மறக்க ஏதாச்சும் சேர்க்கச்சொல்லுங்கள்.

வாழ்த்துகள் சிவா

பூமகள்
04-12-2007, 09:24 AM
ஒரு கோடி சொற்களில் உன்
ஒற்றைச் சொல்
என் உலகம் மாற்றியது...
மீண்டும் நீ உதிர்த்த
மற்றொருச் சொல்
என் உயிரை உருவியது!
நிதர்சன வரிகள்..! சூப்பர் சிவா அண்ணா. பாராட்டுகள். :)


காதலினை மறுத்துரைக்க அகராதியில்லையெனில்
நெருக்கம் பிறக்கும் செயற்கைப் பூஞ்சிரிப்பாய்..!
வாசனை இருக்காது.. வாழ்வு இனிக்காது..!
இயந்திரமாய் வார்த்தை செயல்புரியும்..!

கடைசியில் காதல் மட்டும் கதறியழும்..!

விரும்பேல் இறுக்கம் வேண்டாமே..!!

மறுக்கும் துயர் மறக்க வைக்கும் காலம்..!

காதலோடு காத்திருந்தால்..
நிச்சயம் இன்பம் வரும்..!
இம்முறை இயற்கையின் பூப்புன்னகையாக..!
வாசனையோடும், வாழ்வோடும்..!!:icon_b::)

அழகான கற்பனை..! வாழ்த்துகள் சிவா அண்ணா.:icon_rollout:

சிவா.ஜி
04-12-2007, 10:24 AM
பிரிவு என்பது வேதனையானது.
கட்டாய இணைப்பு,
அதையும் தாண்டி வேதனையானது.

மிகவும் சரியே அமரன்.ஆமென்று சொல்லி ஆண்டுகள் கடந்தபிறகு இல்லையென்ற சொல் ஈந்திடும் வேதனையால்தான் இல்லையென்ற சொல்லே இல்லாதுபோம் என்று ஒரு ரணப்பட்ட இதயம் மன்றாடுகிறது.ஆனால் எதற்கும் ஒரு மறுபக்கம் உண்டே ந்நீங்கள் காட்டியதைப் போல.நன்றி அமரன்.

சிவா.ஜி
04-12-2007, 10:28 AM
காதலோடு காத்திருந்தால்..
நிச்சயம் இன்பம் வரும்..!
இம்முறை இயற்கையின் பூப்புன்னகையாக..!
வாசனையோடும், வாழ்வோடும்..!!:icon_b::)[/COLOR][/FONT]
[/COLOR][/FONT]
மிக அழகான பின்னூட்டம்.வாசனையோடும் வாழ்வோடும் காதல் வரின்...அதைவிட வேறென்ன வேண்டும் காதல் நாடும் மனதுக்கு.
நன்றிம்மா பூ.