PDA

View Full Version : பங்குராசி டிசம்பர்



srimariselvam
01-12-2007, 01:46 PM
...............................................................பொன்மழை பொழியட்டும்......................................


மேஷம்
புத்தாண்டு விசேஷமாக அமைவதற்கான குறிப்புகள் இந்த மாதத்திலேயே தெரியத்துவங்கி மகிழ்ச்சிக்குள்ளாக்க வைக்கும். சந்தையில் சுபவரவை கடந்த மாதம் கண்டிருப்பீர்கள். சில குழப்பங்கள், சந்தேகங்கள் நீங்கி சந்தை குறிதத தெளிவும் ஏற்பட்டிருக்கும். கையிலிருக்கும் சில பங்குகளின் விலைநிலவரம் குறித்து கலக்கம் இருந்துவந்தாலும் அது வருங்காலங்களில் சரியாகிவிடுவதற்கான வாய்ப்புள்ளது.

டிச..3: தினசரி வர்த்தகம் செய்யலாம். மறுநாள் விற்பனை, ஒருவார விற்பனை போன்ற குறுகிய கால முதலீட்டிற்கான பங்குகளை தேர்ந்தெடுக்கலாம்.
டிச.4:தின வர்த்தகத்தில் ஈடுபடலாம்.
டிச.5: தின வர்த்தகத்தில் ஈடுபடலாம். எதிர்காலத்திற்கான முதலீடுகளில் ஈடுபடலாம்.
டிச.6: கையிலுள்ள பங்குகளை விற்று லாபம் பார்க்கும் நாளாகும்.
டிச.7: தினசரி வர்த்தகத்தை சற்று குறைத்து நடுத்தர, நீண்டகால முதலீட்டிற்கான வாய்ப்புகளை நாடுங்கள்.
டிச.10: இன்று மதியத்திலிருந்து சந்தை மீண்டும் உற்சாகத்தை தரும்.
டிச.11: தினவர்த்தகம் செய்யலாம்.
டிச.12: கையிருப்பு பங்குகளை விற்கலாம். தினசரி வர்த்தகத்திலும், நீண்டகால முதலீட்டிலும் ஈடுபடலாம்.
டிச.13,14: வர்த்தகம் பரபரப்பாக இருக்கும். அலைக்கழிப்பு இருந்தாலும் வெற்றிபெற வாய்ப்புண்டு.
டிச..17: இந்த வாரத்துவக்கத்திலிருந்தே நீங்கள் வர்த்தகத்தில் நிதானமாக இருப்பது நல்லது.
டிச.18: தின வர்த்தகத்தை தவிர்க்கவும்.
டிச.19: தின வர்த்தகத்தை தவிர்ப்பது நல்லது.
டிச.20: இன்று வர்த்தகம் மீண்டும் சூடுபிடிக்கத்ததுவங்கும். லாபம் அடைய வாய்ப்புள்ளது.
டிச.24: தினவர்த்தகம் செய்யலாம்.
டிச.26, 27: தினவர்த்தகம் செய்யலாம். நீண்டகால முதலீட்டிற்கு பங்குகளை தேர்ந்தெடுக்கவும்.
டிச.28: பங்கு வர்த்தகத்தில் உஷாராக இருக்கவேண்டிய நாள்.
டிச.31: புத்தாண்டு உற்சாகம் சந்தையிலும் கிடைக்கும்.

சாதகமான துறைகள்: விவசாயம், ரியல்எஸ்டேட், அலங்கார பொருட்கள் உற்பத்தி, சர்க்கரை, பதனநிறுவனங்கள், மின்துறை, பவுண்டரி.



ரிஷபம்
காற்றடிக்கும் காலத்தில் மாவு விற்கும் கதையாக பங்குவர்த்தகத்தில் உங்கள் அனுபவம் நடந்திருக்கலாம். இந்தமாதமும் நீங்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டிய மாதமாகும். நினைத்த நிறுவனங்களை வாங்க முடியாதது, கையிருப்பில் உள்ள பங்குகளின் விலை குறைந்துவருவது போன்ற நிலைகள் உருவாக வாய்ப்புள்ளது. எனவே, கவனத்துடன் வர்த்தகத்தில் ஈடுபடவேண்டியது அவசியமாகும். ஆனால், இந்த நிலைமையும் ஒருநாள் மாறுதலுக்குரியதுதான்.

டிச.3: தின வர்த்தகத்தை தவிர்க்கவும்.
டிச.4: சந்தையை நன்கு கவனிக்கவும்.
டிச.5: தினவர்த்தகத்தில் ஈடுபடலாம்.
டிச.6: தினவர்த்தகம் செய்யலாம். நீண்டகால முதலீட்டு திட்டங்களில் ஈடுபடலாம்.
டிச.7: கையிருப்பு பங்குகளை விற்கலாம். தினவர்த்தகம் நல்லது.
டிச.10: சந்தையை கவனிக்கவேண்டிய நாள்.
டிச.11,12: தினவர்த்தகத்தை தவிர்ப்பது நல்லது.
டிச.13,14: கையிருப்பு பங்குகள் சங்கடங்கள் தரலாம். தினவர்த்தகம் தவிர்க்கவும்.
டிச.17:கடந்தவாரத்தின் சோர்வு நீங்கி சந்தை உற்சாகத்தை தரும்.
டிச.18: தினவர்த்தகம், கையிருப்பு பங்குகள் விற்பது லாபம் தரும்.
டிச.19: தினவர்த்தகம் செய்யலாம்.
டிச.20: முதலீட்டு திட்டங்கள் தாமதமாகும்,
டிச.24: சந்தை மிரட்டலாம் உஷாராக இருகவேண்டும்.
டிச.26: சந்தை மீண்டும் உற்சாகம் தரும். தினவர்த்தகம் செய்யலாம்.
டிச.27: தினவர்த்தகம் செய்யலாம்.
டிச.28: சந்தையை கவனியுங்கள்.
டிச.31: தினவர்த்தகத்தில் எச்சரிக்கையுடன் ஈடுபடுங்கள்

சாதகமான துறைகள்: கல்வி, வர்த்தகம், தகவல்தொடர்பு.


மிதுனம்
நினைத்தவிலை கிடைக்கவில்லையே என்று பங்குகளை ஏக்கத்துடன் வைத்திருந்து பின் நல்லவிலைக்கு விற்று சம்பாதித்துள்ள மிதுன ராசி வாசகர்களே, உங்கள் முதலீட்டிற்கு ஏற்ற பலன்வரும் காலம் கனிந்துகொண்டே வருகிறது. இந்தமாதம் பணவரவில் சற்று முன்னேற்றம் ஏற்படும். முதலீட்டிற்கு முன் நன்கு ஆலோசித்து செயல்படுவது நன்மை தரும்.

டிச.3,4:வர்த்தகம் பரபரப்பாக இருக்கும். நிதானமாக செயல்படுங்கள்.
டிச.5: நீங்கள் விரும்பிய விலை இன்றைக்கு கிடைத்துவிட வாய்ப்பு ஏற்படும்.
டிச.6: நீண்டகால திட்டங்களுக்கு முதலீடு செய்யலாம்.
டிச.7: கையிருப்பு பங்குகளும் காலியாகும். தினவர்த்தகம், குறுகியகால முதலீடுகளுக்கு ஏற்ற நாள்.
டிச.10: கையிருப்பு பங்குகளுக்கு நல்லவிலை கிடைக்கும். தினவர்த்தகமும் நல்லது.
டிச.11: தினவர்த்தகம் செய்யலாம்.
டிச.12: தினவர்த்தகமும், எதிர்கால முதலீட்டு திடட்ங்களையும் மேற்கொள்ளலாம்.
டிச.13,14: சந்தையை கவனியுங்கள்.
டிச.17:எதிர்கால முதலீட்டு திட்டங்களில் ஈடுபடுங்கள்.
டிச.18,19:தினவர்த்தகம், முதலீட்டு திட்டங்களுக்கு ஏற்ற தினங்கள்.
டிச.20: பங்குச்சந்தை சாதகமாக அமையும்.
டிச.24: சந்தையை நன்கு கவனிக்கவும்.
டிச.26: கையிருப்பு பங்குகளை விற்க சிறந்ததினம்.
டிச.27,28: தினவர்த்தகத்தில் ஈடுபடலாம்.
டிச.31: சந்தையை கவனியுங்கள்.

சாதகமான துறைகள்: உணவுப்பொருட்கள், அலங்காரப்பொருட்கள், நகை நிறுவனங்கள், சர்க்கரை நிறுவனங்கள், ஜவுளித்துறை, ரியல்எஸ்டேட்.


கடகம்
கையிருப்பு பங்குகளை கொஞ்சம் கொஞ்சமாக எதிர்பார்த்த விலைக்கு விற்கத்துவங்கியுள்ள கடக ராசி அன்பர்களே. பங்குமுதலீட்டில் நீங்கள் இம்மாதம் கவனமாக ஈடுபடவேண்டும்.. தினவர்த்தகத்தை குறைத்துக்கொண்டு நீண்டகால திட்டங்களில் முதலீடு செய்வதற்கான பங்குகளை தேர்ந்தெடுப்பதில் ஆர்வம் காட்டுங்கள்.

டிச.3: தினவர்த்தகத்தில ஈடுபடலாம்.
டிச.4,5: தினவர்த்தகம் செய்யலாம். கையிருப்பு பங்குகளையும் விற்கலாம்.
டிச.6: தினவர்த்தகத்தை கவனமாக செய்யவும்.
டிச.7:நீண்டகால முதலீட்டு திட்டங்களை தேர்ந்தெடுக்கலாம்.
டிச.10: தினவர்த்தகத்தில் ஈடுபடலாம்.
டிச.11,12:தினவர்த்தகம் பலன்தரும். கையிருப்பு பங்குகளையும் விற்கலாம்.
டிச. 13: தினவர்த்தகம் சாதகமாகும்.
டிச.14:தினவர்த்தகம் சாதகம் தரும். கையிருப்பு பங்குகளை வாங்கலாம். எதிர்பார்த்த விலைக்கு பங்குகள் வாங்கலாம்.
டிச.15: சந்தையை கவனிக்கவும்.
டிச.16, 17: தினவர்த்தகத்தை தவிர்க்கவும்.
டிச.18,19,20: கையிருப்பு பங்குகளை விற்கலாம். சந்தையில் பரபரப்பாக இயங்குவீர்கள்.
டிச. 24: தினவர்த்தகம் தவிர்க்கவும்.
டிச.26:,27: தினவர்த்தகம், எதிர்கால முதலீட்டிற்கான பங்குகளை வாங்குவதற்கு சாதகமாக இருக்கும்.
டிச.28: தினவர்த்தகம் தவிர்க்கவும்.
டிச.31:தினவர்த்தகம் செய்யலாம்.

சாதகமான துறைகள்: ஜவுளி, உரம், வேதிப்பொருள், நுகர்பொருள் தயாரிப்பு, விவசாயபொருட்கள்.




சிம்மம்
உற்சாகம் தரும்வகையில் பங்குச்சந்தை உங்களுக்காக மாறிவிட்டதைப்போன்று இருக்கும். கையிருப்பு பங்குகளின் விலையேற்றம் சந்தோஷத்தை தரும்வகையில் அமைந்திருக்கும். நீங்கள் நினைத்த விலைக்கு வாங்கி நினைத்த விலைக்கு விற்றிருப்பீர்கள். இம்மாதமும் சந்தோஷம் தொடரவுள்ளது.

டிச.3,4: தினவர்த்தகத்தை தவிர்ப்பது நல்லது.
டிச.5: தினவர்த்தகம் செய்யலாம். கையிருப்பு பங்குகளை விற்கலாம்.
டிச.6,7: தினவர்த்தகத்திற்கு நல்லது. நீண்டகால முதலீட்டு திட்டங்களை ஆலோசிக்கலாம்.
டிச.10: தினவர்த்தகத்திற்கு உகந்தநாள். குறுகியகால முதலீடு நன்மை தரும்.
டிச.11,12: தினவர்த்தகம் செய்யலாம்
டிச.13,14: தினவர்த்தகம் செய்யலாம். குறுகியகால முதலீட்டு திட்டங்களை தேர்ந்தெடுக்கலாம்.
டிச.17: தினவர்த்தகத்தை தவிர்க்கவும்.
டிச.18: சந்தையை கவனியுங்கள்.
டிச.19: சந்தையில் உஷாராக இருக்கவும். தினவர்த்தகம் தவிர்ப்பது நல்லது.
டிச.20: கடந்த சில தினங்களாக இருந்த சங்கடங்கள் நிவர்த்தியாகி சந்தோஷம் எட்டிப்பார்க்கும்.
டிச.24: சந்தை உங்களுக்கு சாதகமாக அமையும்.
டிச.26,27: சந்தையில் உஷாராக இருக்கவும்.
டிச.28,31: சந்தையை கவனியுங்கள். தினவர்த்தகத்தை தவிர்ப்பதுநல்லது.

சாதகமான துறைகள்: மீடியா, ஜவுளி, நுகர்பொருட்கள், ரியல்எஸ்டேட், ஐடி, வங்கி.


கன்னி
சந்தைமீதிருந்த சங்கடங்கள் கொஞ்சம் கொஞ்சமாக நீங்கத்துவங்கியிருக்கிறது. ஆனாலும் சந்தையில் சம்பாதிக்க உங்கள் உழைப்பையும், நேரத்தையும், ஆலோசனையையும் கூடுதலாக தரவேண்டியதிருக்கும். பணவரவும், எதிர்கால முதலீட்டு திட்டங்களையும் ஊக்கமுடன் தொடர்ந்து செய்யுங்கள்.

டிச.3,4: தினவர்த்தகம் செய்யலாம்.
டிச.5: சந்தை உங்களுக்கு சாதகமாக இருக்கும்.
டிச.6: குறுகிய நீண்டகால முதலீட்டிற்கு உகந்தநாள்.
டிச.7: கையிருப்பு பங்குகளை விற்கலாம். தினவர்த்தகம் செய்யலாம்.
டிச. 10: தினவர்த்தகம் பரபரப்பாக இருக்கும்.
டிச. 11: பங்குகள் உங்கள் விலை வருவதற்கு நேரம் எடுத்துக்கொள்ளும்.
டிச.12: தினவர்த்தகம் குறைவாக செய்யவும்.
டிச. 13,14: தினவர்த்தகம் தவிர்ப்பது நல்லது.
டிச.17:தினவர்த்தகம் செய்யலாம்.
டிச.18,19: தினவர்த்தகம் செய்யலாம். கையிருப்பு பங்குகளை விற்கலாம்.
டிச.20: தினவர்த்தகத்தில் உஷாராக இருக்கவும். கையிருப்பு பங்குகளை விற்கலாம்.
டிச.24: தினவர்த்தகம் தவிர்க்கவும்.
டிச.26,27: தினவர்த்தகம் செய்யலாம். குறுகிய, நீண்டகால முதலீட்டு திட்டங்களை மேற்கொள்ளலாம்.
டிச.28:தினவர்த்தகம் தவிர்க்கவும்.
டிச.31: தினவர்த்தகம் செய்யலாம்.

சாதகமான துறைகள்: ஜவுளி, நகைநிறுவனங்கள், ப்ளாஸ்டிக், கெமிக்கல், மருந்து நிறுவனங்கள், வங்கி.


துலாம்
கடந்தமாதம் சிலநாட்களில் உணர்ச்சிவசப்பட்டு வர்த்தகம் செய்திருப்பீர்கள். இம்மாதம் ஊகமாகவும், உற்சாகமாகவும் சந்தை நிகழ்வுகள் உங்களுக்கு சாதகமானதாகவே இருக்கும். தினவர்த்தகம், நீண்டகால முதலீடு என்று சந்தை பணிகளை தொடர்வீர்கள்.

டிச.3,4: தினவர்த்தகத்தை தவிர்க்கவும்.
டிச.5: இன்றைய தினத்தின் பிற்பகுதி வர்த்தகம் சிறப்பாக அமையும்.
டிச.6: தினவர்த்தகம் செய்யலாம்.
டிச.7: தினவர்த்தகம் செய்யலாம். கையிருப்புபங்குகளை விற்கலாம்.
டிச.10,11,12: தினவர்த்தகம் சூடுபிடிக்கும். கையிருப்பு பங்குகளும் லாபம் தரும். குறுகியகால முதலீட்டு திட்டங்களை மேற்கொள்ளலாம்.
டிச.13,14: தினவர்த்தகத்தை தவிர்ப்பது நல்லது.
டிச.17,18,19: தினவர்த்தகம் செய்யலாம். குறுகியகால முதலீட்டு திட்டங்கள் பலன்தரும்.
டிச.20: கையிருப்பு பங்குகளை விற்று லாபம் பார்க்கலாம். தினவர்த்தகம் பலன்தரும்.
டிச.24: தினவர்த்தகம் தவிர்ப்பது நல்லது.
டிச.26,27:தினவர்த்தகம் செய்யலாம்.
டிச. 28:தினவர்த்தகம் செய்யலாம். கையிருப்பு பங்குகளை மேற்கொள்ளலாம்.
டிச.31: தினவர்த்தகத்தை தவிர்ப்பது நல்லது.

சாதகமான துறைகள்: ஜவுளி, இரும்பு, எண்ணெய் நிறுவனங்கள், மருந்து, கெமிக்கல்.


விருச்சிகம்
சந்தை இருபதாயிரம் தொட்டாலும், விட்டாலும் நீங்கள் சமாளித்து கையிருப்புகளை விற்று, தின வர்த்தகத்தில் ஈடுபட்டு லாபமீட்டி நஷ்டங்களை சமாளித்து சந்தையோடு தொடர்ந்து வருகிறீர்கள். இம்மாதமும் சந்தையுடனான வர்த்தக உறவு சந்தோஷமாக தொடரவுள்ளது.

டிச.3,4: தினவர்த்தகத்திற்கு ஏற்றது.
டிச.5: தினவர்த்தகத்தில் சற்று கவனம் தேவை. குறுகியகால முதலீட்டிற்கு ஏற்றநாள்.
டிச.6,7: தினவர்த்தகத்தை குறைத்து கையிருப்பு பங்குகளை விற்கலாம்.
டிச.10: தினவர்த்தகம் செய்யலாம்.
டிச.11,12,13,14: கையிருப்பு பங்குகள் பணமாகும். தினவர்த்தகம் செய்யலாம்.
டிச.17:சந்தையை கவனியுங்கள்.
டிச.18,19: தினவர்த்தகம் உஷாராக செய்யவும்.
டிச.20: தினவர்த்தகம் குறைத்து கையிருப்புகளை விற்க உகந்தநாள்.
டிச.24: தினவர்த்தகத்தை தவிர்க்கவும்.
டிச.26,27,28: கையிருப்பு பங்குகளின் விலை ஆறுதல் அளிக்கும். தினவர்த்தகம் குறைந்தளவில் செய்யவும்.
டிச.31: தினவர்த்தகம் செய்யலாம்.

சாதகமான துறைகள்: ஐடி,மீடியா,ஜவுளி, ரியல்எஸ்டேட்


தனுசு
அவசரம், பதட்டத்தினால் கையிருப்பில் பங்குகள் அதிகமாக சேர்ந்திருக்கலாம். எனவே, முதலீடு செய்வதற்கு முன் கம்பெனிகளின் அடிப்படையை அலசி ஆராய்ந்து முடிவெடுங்கள். சந்தை உங்களுக்கு சாதகமானதாகவே இருக்கும்.

டிச.3,4,5:தினவர்த்தகம் செய்யலாம். குறுகியகால முதலீட்டு திட்டங்களை தேர்ந்தெடுக்கலாம்.
டிச.6,7: தினவர்த்தகம் செய்யலாம். கையிருப்பு பங்குகளை விற்கலாம். குறுகிய கால முதலீட்டு திட்டங்களில் ஈடுபடலாம்.
டிச.10: தினசரி வர்த்தகத்தை தவிருங்கள்.
டிச.11.12: தினசரி வர்த்தகம் தொடரலாம்.
டிச.13,14: சந்தையை கவனியுங்கள்.
டிச.17: தினசரி வர்த்தகத்தை குறைத்து கையிருப்பு பங்குகளை விற்கலாம்.
டிச.18,19: தினசரி வர்த்தகம் தவிர்க்கவும்.
டிச.20: தினசரி வர்த்தகத்தை குறைத்துக்கொள்ளவும். கையிருப்பு பங்குகள் விலையேற்றம் பெறும்.
டிச.24:தினவர்த்தகம் தவிர்க்கவும்.
டிச.26,27,28:சந்தையை கவனிக்கவும்.
டிச.31:தினவர்த்தகம் செய்யலாம். கையிருப்பு பங்குகள் விலையேற்றம் பெறும்.

சாதகமான துறைகள்: ஜவுளி, மீடியா, வங்கி, நுகர்பொருட்கள்.


மகரம்
சந்தையில் ஊக்கத்துடன் பணி தொடர்ந்துவரும் நீங்கள் இம்மாதமும் செவ்வனே முதலீட்டு திட்டங்களை தொடர்வீர்கள். கையிருப்பு பங்குகள் கொஞ்சம் கொஞ்சமாக விலையேற்றம் பெற அவற்றைகொண்டு நிதிநிலைமையை சீராக்கமுடியும்.

டிச.3,4:தினவர்த்தகம் குறைவாக செய்யவும், கையிருப்பு பங்குகள் விலையேற்றம் பெறும்.
டிச.5,6:தினவர்த்தகம் செய்யலாம்.குறுகிய கால முதலீட்டு திட்டங்களை தேர்ந்தெடுக்கலாம்.
டிச.7:தினவர்த்தகம் செய்யலாம். கையிருப்பு பங்குகளை விற்கலாம்.
டிச.10:தினவர்த்தகம் செய்யலாம்.
டிச.11,12: சந்தையை கவனியுங்கள்.
டிச.13,14:தினவர்த்தகம் செய்யலாம்.
டிச.17,18,19:தினவர்த்தகம் செய்யலாம். கையிருப்புகளை விற்கலாம்.
டிச.20:தினவர்த்தகத்தை குறைத்துக்கொள்ளுங்கள்.
டிச.24: தினவர்த்தகம் செய்யலாம்.
டிச.26,27: தினவர்த்தகம் செய்யலாம். கையிருப்பு பங்குகள் விலையேற்றம் பெறும்.
டிச.28:தினவர்த்தகம் தவிர்க்கவும்.
பூச.31: தினவர்த்தகம் குறைவாக செய்யவும். கையிருப்பு பங்குகளின் விலை ஆறுதல் தரும்.

சாதகமான துறைகள்: ரியல்எஸ்டேட், விவசாயபொருட்கள், நுகர்பொருட்கள், வங்கி, ஐடி.


கும்பம்
சந்தையில் தயக்கம், தடுமாற்றம் எல்லாம் மாறி பங்குகளை தேர்ந்தெடுப்பதில் கவனம் கொள்வீர்கள். சந்தைநிலைமையை உங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ள சற்று நிதானத்துடனே செயல்படுங்கள். முதலீட்டு அளவையும் குறைத்துக்கொள்ளுங்கள்.

டிச.3,4: தினவர்த்தகத்தை தவிருங்கள்.
டிச.5,6,7:கையிருப்பு பங்குகள் நல்லவிலைக்கு கைமாறும்.
டிச.10,11,12: தினவர்த்தகம் செய்யலாம். குறுகியகால முதலீட்டு திட்டங்களை தேர்ந்தெடுங்கள்.
டிச.13,14,17,18,19:தினவர்த்தகத்தை தவிருங்கள்.
டிச.20:தினவர்த்தகம் சாதகமாக அமையும்.
டிச.24: சந்தையை கவனியுங்கள்.
டிச.27:தினவர்த்தகம் செய்யலாம். கையிருப்பு பங்குகளை விற்கலாம்.
டிச.28: தினவர்த்தகம் தவிர்க்கவும்.
டிச.31: தினவர்த்தகம் தவிர்க்கவும்.

சாதகமான துறைகள்: வங்கி, ஐடி, நிதிநிறுவனங்கள், மீடியா.


மீனம்
லாபத்தை கருத்தில்கொள்ளாமல் சந்தையின்மேல் ஈடுபாடு கொண்டு வர்த்தகத்தை தொடர்ந்துவருகிறீர்கள். லாபமீட்ட வேண்டுமென்ற ஒரு எண்ணம் உள்மனதில் இருப்பதன்விளைவுதான் இது. உங்கள் உழைப்புக்கேற்ற பலனும் கிடைத்துத்தான் வருகிறது. இந்தமாதமும் சந்தைபலனை அனுபவிக்கத்தான் போகிறீர்கள்.

டிச.3,4: தினவர்த்தம் செய்யலாம். குறுகிய கால முதலீட்டுதிட்டங்களை தேர்ந்தெடுக்கலாம்.
டிச.5,6,7: தினவர்த்தகம் தவிர்ப்பது நல்லது. நீண்டகால முதலீட்டு திட்டங்களை தேர்ந்தெடுக்கலாம்.
டிச.10,11,12:தினவர்த்தகம் சூடுபிடிக்கும். குறுகிய கால முதலீடுகள் தேர்ந்தெடுக்கலாம். பங்குகளை விற்று வாங்கலாம்.
டிச.13,14:தினவர்த்தகம் செய்யலாம். பங்குகளை விற்று வாங்கலாம்.
டிச.17,18,19: தினவர்த்தகம் செய்யலாம். குறுகியகால முதலீட்டு திட்டங்களை தேர்ந்தெடுக்கலாம்.
டிச.20:தினவர்த்தகம் செய்யலாம்.
டிச.24:தினவர்த்தகம் தவிர்க்கவும்.
டிச.26,27:தினவர்த்தகத்தை குறைத்துக்கொள்ளவும். கையிருப்புகளின் விலை ஆறுதல் தரும்.
டிச.28:தினவர்த்தகம் செய்யலாம்.
டிச.31:தினவர்த்தகம் செய்யலாம். கையிருப்புகள் நல்லவிலைக்கு கைமாறும்.

சாதகமான துறைகள்: ஜவுளி, ப்ளாஸ்டிக், நுகர்பொருள், மீடியா, மருந்துநிறுவனங்கள்.



படித்துப்பார்த்து பலனெப்படின்னு சொல்லுங்க

saguni
16-12-2007, 07:55 AM
வந்துட்டாங்கய்யா...வந்துட்டாங்க...புதிய தொழில் யுக்தி அருளியதற்கு நன்றி! நல்ல எதிர்காலம் பங்குச்சந்தைக்கு மட்டுமல்ல... இதுபோல் ஆரூடம் அளிக்கும் தொழிலுக்கும்தான். முயற்சித்துப்பார்த்துவிட்டு சொல்கிறேன்

srimariselvam
19-01-2008, 12:53 PM
சகுனி சார், முயற்சி திருவினையானதா???????

ஆர்.ஈஸ்வரன்
19-01-2008, 01:10 PM
இப்போதுதான் பார்க்கிறேன். டிசம்பர் மாதம் முடிந்து ஜனவரியும் முடியப்போகிறது. பிப்ரவரியைச் சொல்லுங்கள் பார்க்கலாம்