PDA

View Full Version : தள்ளாத சுவாசம்...



அக்னி
01-12-2007, 12:42 PM
என் உள்மூச்சை நீ தந்தாய்...
உன் உள்மூச்சை நான் தந்தேன்...
சுவாசப்பைகளின் இயக்கம் கூட,
எம்மிடைவெளி நீக்கும்...
இயைந்து போனால்...

சிவா.ஜி
01-12-2007, 01:00 PM
மூச்சிலும் கலந்த காதல்,உள்ளும் புறமும் ஓடிக்கொண்டிருக்கையில்...ஒரு சுவாசப்பையின் இயக்கத்தை மறு சுவாசப்பை தீர்மானிக்கிறதே...இது எந்தவகை விஞ்ஞானம்....?
அருமையானக் குறுங்கவி அக்னி.வாழ்த்துகள்.

அக்னி
01-12-2007, 01:04 PM
இது எந்தவகை விஞ்ஞானம்....?
அருமையானக் குறுங்கவி அக்னி.வாழ்த்துகள்.
இது விஞ்ஞானம் அல்ல...
மெய்ஞானம்...

சுவாசத்தில் ஒற்றுமை இருந்தால்,
உடல்களிடை வெளி வருமன்றோ...
உள்சுவாசமும் வெளிச்சுவாசமும்
இடம்மாறினால்,
சுருதியோடு இணையும்
சுவாச லயம்...

மிக்க நன்றி சிவா.ஜி...

சிவா.ஜி
01-12-2007, 01:08 PM
லயத்தோடு இணைந்த இல்லற ராகம்.....இனிய சுகம்.

அமரன்
01-12-2007, 06:40 PM
என் உள்மூச்சை நீ தந்தாய்...
உன் உள்மூச்சை நான் தந்தேன்...
சுவாசப்பையின் இயக்கம் கூட,
எம்மிடைவெளி நீக்கும்...
இயைந்து போனால்...
ஓருவரை ஒருவரை
கொல்லும் நோக்கத்துடன்
சேர்ந்திருப்பதுதான்
இல்லறம் என்கின்றீர்களா...?

உயிர்வாயுவை பிரித்தெடுப்பது
அவரவர் கடமை என்கின்றீர்களா?

அக்னி
01-12-2007, 06:57 PM
ஓருவரை ஒருவரை
கொல்லும் நோக்கத்துடன்
சேர்ந்திருப்பதுதான்
இல்லறம் என்கின்றீர்களா...?

வெளிச்சுவாசமும் வாழவைக்கும்,
சிற்றிடைவெளியும் ஆளை வதைக்கும்...
(வேறெந்த கவிதையையும் மேற்கோளிட்டு, மாட்டிவைக்கக் கூடாது...:))

அமரன்
01-12-2007, 06:59 PM
வெளிச்சுவாசமும் வாழவைக்கும்,
சிற்றிடைவெளியும் ஆளை வதைக்கும்...
(வேறெந்த கவிதையையும் மேற்கோளிட்டு, மாட்டிவைக்கக் கூடாது...:)
)

வெவரமான ஆளுதானுங்கோ... :)
விவகாரமான ஆளுங்கூடங்கோ..:lachen001:

அக்னி
01-12-2007, 07:03 PM
லயத்தோடு இணைந்த இல்லற ராகம்.....இனிய சுகம்.
அனுபவப் பாடமோ...:confused:


வெவரமான ஆளுதானுங்கோ... :)
விவகாரமான ஆளுங்கூடங்கோ..:lachen001:
தெரியுமில்லே... மேற்கோள் காட்டப் போறீங்கன்னு...

அமரன்
01-12-2007, 07:07 PM
தெரியுமில்லே... மேற்கோள் காட்டப் போறீங்கன்னு...
சேச்சே..அப்படி எல்லாம் செய்யமாட்டேன்...

இருவரில் ஒருவரை
மரமென்று சொல்கின்றீர்கள்..
யாரென்று சொன்னால்
வசதியாக இருக்குமுங்கோ...!

இப்படியும் கேட்பேன்..

சிற்றிடைச்சிங்காரி
வாட்டி வதைக்குறாளான்னு
அக்கறையாவும் கேட்பேன்..!

ஏன்னா நீங்க
எனது பெஸ்டு பிரன்டு.

அக்னி
01-12-2007, 07:14 PM
இருவரில் ஒருவரை
மரமென்று சொல்கின்றீர்கள்..
யாரென்று சொன்னால்
வசதியாக இருக்குமுங்கோ...!
ஏம்பா கவிதையையே திசைமாத்திறேள்... உங்களுக்கே நல்லாருக்கா..?
சரி சரி... சமாளிப்போம்...

இரவின் மர மனம்...
இருவருக்கும்...


இப்படியும் கேட்பேன்..

சிற்றிடைச்சிங்காரி
வாட்டி வதைக்குறாளான்னு
அக்கறையாவும் கேட்பேன்..!

ஏன்னா நீங்க
எனது பெஸ்டு பிரன்டு.
வாட்டி வதைப்பது... தனிமை...

லூட்டி அடிப்பதா உங்கள் கடமை..?

சுகந்தப்ரீதன்
04-12-2007, 08:49 AM
பெருமூச்சே வந்துவிட்டது எனக்கு.. இயைந்து போகாவிட்டால் என்னவாகுமென்று நினைத்து பார்த்து.. இல்லறவியல் பாடம் நடத்தும் அக்னியாருக்கு எனது வாழ்த்துகளும் பாராட்டுகளும்..! கவிதை நெஞ்சாங்கூட்டிலிருந்து நேராக மன்றம் வந்தது போல் இருக்கிறதே..!

அக்னி
05-12-2007, 10:01 AM
இல்லறவியல் பாடம் நடத்தும் அக்னியாருக்கு எனது வாழ்த்துகளும் பாராட்டுகளும்..! கவிதை நெஞ்சாங்கூட்டிலிருந்து நேராக மன்றம் வந்தது போல் இருக்கிறதே..!
ஒரே ஒரு கவிதை, அதுவும் குறுங்கவிதை போட்டதற்கு, பாடம் நடத்துவதாகச் சொல்லுவது நியாயமா சுகந்தப்ரீதன்..?
சரி இருக்கட்டும்...
அதென்ன நெஞ்சாங்கூட்டிலுருந்து மன்றம் வந்தது போல இருக்கே... என்று ஒரு காமெண்ட்...
போங்க... வெட்கமா இருக்கு...

எல்லாம் அனுபவங்களிலிருந்து வருவனதான்... ஆனால், சில, கற்பனை அனுபவங்களிலிருந்து...
இது நிஜமாவது சந்தோஷமா, வேதனையா என்று, யாரும் சொல்லி ஏற்றுக்கொள்ளப் போவதில்லை யாருமே... அவர்களில் ஒருவன் நானுமே...

நன்றி ப்ரீதா...

ஆதி
05-12-2007, 10:04 AM
என் உள்மூச்சை நீ தந்தாய்...
உன் உள்மூச்சை நான் தந்தேன்...
சுவாசப்பையின் இயக்கம் கூட,
எம்மிடைவெளி நீக்கும்...
இயைந்து போனால்...

அழகிய கவிதை அக்னி, வாழ்த்துக்கள்.

-ஆதி

அக்னி
05-12-2007, 10:59 AM
அழகிய கவிதை அக்னி, வாழ்த்துக்கள்.

-ஆதி
நன்றி ஆதி அவர்களே...

பூமகள்
06-12-2007, 10:03 AM
என் உள்மூச்சை நீ தந்தாய்...
உன் உள்மூச்சை நான் தந்தேன்...
சுவாசப்பையின் இயக்கம் கூட,
எம்மிடைவெளி நீக்கும்...
இயைந்து போனால்...
சுவாசங்களின் ஒத்திசைவு
நேசத்தின் உள்ளசைவு
காதலின் மெல்லிசை
இசைந்தால் பிறக்கும்
காவியப் பண்பிசை..!

நல்ல கருத்துள்ள குறுங்கவி..!:icon_b:
வாழ்த்துகள் அக்னி அண்ணா.:)

அமரன்
06-12-2007, 10:24 AM
ஏம்பா கவிதையையே திசைமாத்திறேள்... உங்களுக்கே நல்லாருக்கா..?
சரி சரி... சமாளிப்போம்...

இரவின் மர மனம்...
இருவருக்கும்...

வாட்டி வதைப்பது... தனிமை...

லூட்டி அடிப்பதா உங்கள் கடமை..?

மனம்
மரத்துப்போகுமளவுக்கு
மனதாரக் காதலித்தார்களா..

லூட்டி அடிப்பதல்ல எனது டூட்டி
ஊட்டுவதும், கூட்டுவதுமே என்டூட்டி

அக்னி
06-12-2007, 07:02 PM
சுவாசங்களின் ஒத்திசைவு
நேசத்தின் உள்ளசைவு
காதலின் மெல்லிசை
இசைந்தால் பிறக்கும்
காவியப் பண்பிசை..!


இணைந்த சுவாசங்களின் சந்தம்,.
ஜதி சேர்க்கும்...

நன்றி பூமகள்...

அக்னி
06-12-2007, 07:07 PM
மனம்
மரத்துப்போகுமளவுக்கு
மனதாரக் காதலித்தார்களா..

மனம் மரத்துப் போகுமட்டுமல்ல...
பசும் மரத்துப் பதிவாக...

இரவு மரம் தரும் உயிர்வாயு போன்று,
அவன்/ள் சுவாசங்கள் அவரவருக்கு உயிர்வாயு...

ஆதவா
07-12-2007, 05:51 AM
என் உள்மூச்சை நீ தந்தாய்...
உன் உள்மூச்சை நான் தந்தேன்...
சுவாசப்பையின் இயக்கம் கூட,
எம்மிடைவெளி நீக்கும்...
இயைந்து போனால்...

அக்னி... என்னய்யா ஆள் நீர்?உப்படி மூச்சை கொடுத்துக்கொண்டிருக்கிறீர்....

யாரவள்?

இளசு
10-12-2007, 09:04 PM
சுவாசகதியில் ஏற்றம் போல் ஒரு லயம்...
ஒரு மூச்சு வெளியே - அதே மூச்சு உள்ளே....!
காதலின் உச்சத்தில்
காண்பதெல்லாம் அன்புமயம்..
கேட்பதெல்லாம் ஒரே லயம்..!

சேவலைக் கூவாதே என்றும்
நிசியை போகாதே என்றும்
ஆதவனை வாராதே என்றும்
ஆர்ப்பரித்து இ(ஒ)ரு மனமலையும்

இந்த அன்புமயக்க நிலையும் வேண்டியதே இம்மாநிலத்தே!

இருந்து வரட்டும் அக்னி!

இனிய வாழ்த்துகள் தம்பிக்கு!

ஷீ-நிசி
11-12-2007, 03:12 AM
என் உள்மூச்சை நீ தந்தாய்...
உன் உள்மூச்சை நான் தந்தேன்...
சுவாசப்பையின் இயக்கம் கூட,
எம்மிடைவெளி நீக்கும்...
இயைந்து போனால்...

நல்ல கவி அக்னி வாழ்த்துக்கள்!

அனைவரின் விமர்சனமும் அழகு!

யவனிகா
11-12-2007, 03:23 AM
ரெண்டு பேரும் பிராணாயாமம் பண்றாங்களோ...அடிக்க வராதீங்க ஷீ−நிசி...அழகுக் கவிதை, ஆழமான கவிதை...வாழ்த்துக்கள்...

ஓவியன்
19-12-2007, 09:12 AM
அவள்
பேச்சிலே மூச்சிருக்கும்
காலம் கடந்து
அவள்
மூச்சிலே மூச்சிருக்கும்
கவிதை படைத்த
அக்னி வரிகள் அருமை...!! :icon_b:

தம்பி
19-12-2007, 09:16 AM
அவள்
பேச்சிலே மூச்சிருக்கும்
காலம் கடந்து
அவள்
மூச்சிலே மூச்சிருக்கும்
கவிதை படைத்த
அக்னி வரிகள் அருமை...!! :icon_b:

சிலேடையாக சொல்கிறீர்களோ?

அவள்
பேச்சிலே மூச்சிருக்கும்
காலம் கடந்து...

அவள்
மூச்சிலே மூச்சிருக்கும்.

பேச்சு மூச்சில்லாமல் இருக்க
மூச் என்று
இதழ்களுக்குக் குறுக்காக
அவள் ஒத்தை விரல்..

காச்சுமூச்சென்று
கத்தலில் அவள் காட்டுக்குரல்..

ஓவியன்
19-12-2007, 09:19 AM
அவள்
மூச்சிலே மூச்சிருக்கும்
பேச்சு மூச்சில்லாமல் இருக்க*
மூச் என்று
இதழ்களுக்குக் குறுக்காக*
ஒத்தை விரல்

மூச்.......!! :icon_ush:

ஆர்.ஈஸ்வரன்
15-01-2008, 10:35 AM
தள்ளாத சுவாசத்திலும் ஒரு சுகம்.

சாராகுமார்
15-01-2008, 11:07 AM
அக்னி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
அருமையான கவி.
சுவாசமே சுவாசமே
நீயே என் வாசமே.

அக்னி
21-02-2008, 02:58 AM
பாராட்டிய அனைவருக்கும் எனது நன்றிகள்...

அனுராகவன்
21-02-2008, 03:35 AM
நல்லதொரு கவிதை அக்னி..
என் வாழ்த்துகள்

அக்னி
21-02-2008, 04:07 AM
நல்லதொரு கவிதை அக்னி..
என் வாழ்த்துகள்
வாழ்த்துக்கு நன்றி அனு அவர்களே...

நாகரா
21-02-2008, 05:27 AM
என் உள்மூச்சை நீ தந்தாய்...
உன் உள்மூச்சை நான் தந்தேன்...
சுவாசப்பையின் இயக்கம் கூட,
எம்மிடைவெளி நீக்கும்...
இயைந்து போனால்...

உன் உயிரை நான் தந்தேன்
என் உயிரை நீ தந்தாய்
ஒன்றிய நம் மெய்யின்
அன்பு வெளிச்சம்
இரவில் கலக்க....

உணர்வைத் தூண்டிய நல்லதோர் கவிதைக்கு நன்றி, அக்னி.