PDA

View Full Version : நிஜமா நிழலா



mdjmeeran
01-12-2007, 10:03 AM
நிஜமா நிழலா
நிழல்
நிஜமானது தான்
நிழல்
இன்னொரு நிஜத்தின் அடையாளம்
நிழல்
நாம் காண்பது நிஜத்தின்
நிழல்
கருப்பு நிறமானது கவரக்கூடியது
நிழல்
அனைவரையும் அரவணைக்கக்கூடியது
நிழல்
நம்மையே நமக்கு பல கோணங்களில் காட்டக்கூடியது
நிழல்
நிஜத்தின் பல பரிணாமங்கள் தான்
நிழல்

உனக்கு ஏன் நிழலின் மேல் இவ்வளவு மோகம் !?

பல புனை பெயர்களில் வாழும் தமிழின் நானும் ஒரு
நிழல்

நாம் நிழல் ஆம்
நிஜத்தின் நிழல்

தமிழ் நிஜம்
நிஜத்திலிரிந்து பிரிக்கமுடியாத
நாம் தமிழ் நிழல்

- அன்புடன்
மீரான்

பகுருதீன்
01-12-2007, 10:10 AM
நிஜத்த்தில் உங்கள் பாதிப்பு தெரிகிறது கவிதை அருமை தொடருங்கள்

அக்னி
01-12-2007, 10:23 AM
மன்றத்தில் இரண்டாவது பதிவாக, முதலாவது கவியாக வந்த தந்த அழகிய தமிழ்...
மிகுந்த பாராட்டுக்கள்...

நிழல்...
நிஜத்தினைப் பிரியாத
பிரிய முடியாத
தொடர்...

இருளாலும்
மறைக்க முடியுமே தவிர
அழிக்க முடியாது...

அனைத்தினதும்
முடிவு வரையான,
இணைபிரியாத பிரதிபலிப்பு,
நிழல்...

கவி அழகு...
அடிக்கடி வரும் நிழல், இருள் படரவைக்கின்றது கவியில்...
தவிர்த்திருந்தால், பளிச்சிடும்... நிழல்...

மீண்டும் பாராட்டுக்கள் மீரான் அவர்களே...

மன்றத்தின் முதற்கவிக்காக அன்புடன் 250 iCash.

வசீகரன்
01-12-2007, 10:42 AM
நல்ல கவியுடன் வந்திருக்கிறீர்கள் மீரான்....!
வாழ்த்துக்கள்....!நிஜமாக நன்றாக இருக்கிறது.....!

நேசம்
01-12-2007, 12:59 PM
இரண்டாவது பதிவாக கவிதை.வாழ்த்துக்கள் மீரான் பாய்.தொடர்ந்து தாருங்கள்

சிவா.ஜி
01-12-2007, 01:15 PM
நிழலைப் பற்றி வந்திருக்கும் இந்தக்கவிதையை படிக்கும்போது எப்போதோ படித்த கவிதை நினைவுக்கு வருகிறது

\"உன் நிழலின் வண்ணத்திலேயே
நானிருப்பதால்தான்
என்னை உனக்குப் பிடித்திருக்கிறதோ?\"

அருமையான கவிதை.பாராட்டுகள் மீரான்.

meera
02-12-2007, 10:45 AM
வரவேண்டும் மீரான்.நல்ல கவிதை.நிஜத்தின் பிரதிபலிப்பு நிழல்.